மக்களுக்கு சேவை செய்ய ஆகும் செலவினம்.



 நமக்கு சேவை செய்வதாகக் கூறி மக்களிடம் வாக்குகளை பெற்று சட்டப்பேரவையில் மேசையை தட்டும்,
வெளிநடப்பு செய்யும் ,கூச்சலிட்டு காலம் கழிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களைப் பற்றியும் அவர்கள் அனுபவிக்கும் வசதிகள் பற்றியும் ஒரு பார்வை பார்க்கலாம்.


சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாதச் சம்பளம், 8,000 ரூபாய்;
 ஈட்டுப்படி7,000 ரூபாய்
; தொலைபேசி படி, 5,000;
 தொகுதிப்படி 10 ஆயிரம்;
 அஞ்சல் படி,2500
 தொகுப்பு படி, 2,500; வாகனப் படி, 20 ஆயிரம்
என்று ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு மாதத்திற்கு மொத்தம், 55 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது .
 மேலும் சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டால், நாள் ஒன்றுக்கு, 500 ரூபாய் தினப்படியாக வழங்கப்படுகின்றன. 
இது மேசையை தட்டி கூச்சலிட்டாலும் உண்டு.
வெளிநடப்பு செய்தாலும் உண்டு.
வெளியெ தாழ்வாரத்தில் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டு அப்படியே வீட்டுக்குப் போனாலும் உண்டு.

மாநில அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில், எம்.எல்.ஏ.,க்கள் தனியாகவோ, குடும்பத்தினருடனோ பயணம் செய்ய, இலவச அனுமதிச் சீட்டு வழங்கப்படுகின்றன,
வெளியிடங்களுக்கு செல்ல, ரயில் பயணப்படியாக, ஆண்டுக்கு இரண்டு தவணையாக, 20 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகின்றன.
 சட்டசபை கூட்டத்தொடர் காலத்தில், எம்.எல்.ஏ., அவருடன் செல்லும் குடும்பத்தினருக்கான, ரயில் கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். எம்.எல்.ஏ., ஹாஸ்டல், வீட்டிற்கு இலவச தொலைபேசி இணைப்பு, அரசு மருத்துவமனையில் தனி அறை சிகிச்சை, வெளியில் வாங்கும் மருந்துகளும் இலவசம் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

மேலும், மத்திய அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனையில், இதயம், சிறுநீரகம், உடலின் வேறு ஏதாவது பாகம் தொடர்பான அறுவை சிகிச்சைக்கு, எம்.எல்.ஏ.,க்களுக்கு, அரசு நிதியுதவி பெற உரிமையுள்ளது.
ஆண்டுக்கு, 1,500 பெரிய கடித தாள்கள்; 3,700 சிறிய கடித தாள்கள் [லெட்டர் பேடு]; 
பெரிய கவர்கள், 750; சிறிய கவர்கள், 1,500;
 ஹீரோ பேனா ஒன்று; 
டைரி ஒன்று; 
காலண்டர் இரண்டு வழங்கப்படுகின்றன.
இது தவிர எம்.எல்.ஏ., வாக பதவியேற்றவுடன் ஒவ்வொருவருக்கும், ஒரு சிறிய கைப்பெட்டி வழங்கப்படுகின்றன.
அதில், இந்திய அரசியல் அமைப்பு சட்ட பிரதி - தமிழ் மற்றும் ஆங்கிலம், திருக்குறள் புத்தகம், எம்.எல்.ஏ., கையேடு, காமன்வெல்த் பாராளுமன்ற சங்கம் - தமிழ்நாடு கிளை குறித்த, சிறு கையேடு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவை விதிகள், 1986ம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினர்களின் விதிகள் (கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மையாக்குதல்), எம்.எல்.ஏ.,க் களின் சொந்த விவரங்கள் மற்றும் போட்டோவுடன் கூடிய, 'யார் எவர்' எனும் வெளியீடு, எம்.எல்.ஏ., குறிப்பிடும், இரு வாகனங்களுக்குரிய, 'ஹாலோகிராம்' பதிக்கப்பட்ட வாகன அனுமதிச் சீட்டுகள், அதில் இடம்பெற்றிருக்கும்.
மேலும் சட்டசபை கூடும் நாட்களில், எம்.எல்.ஏ., விரும்பும் இரு நாளிதழ்கள், சென்னையில் உள்ள எம்.எல்.ஏ., குடியிருப்பில் வழங்கப்படும்;
எம்.எல்.ஏ., ஆனதும் வழங்கப்படும்; 'பிரீப்கேஸ்'சில், 11 ஆவணங்கள் இருக்கும். மற்றபடி கிடைக்கும் பிரிப்கேஸ் கள் இந்த கணக்கில் வராது.

எம்.எல்.ஏ., ஒருவர், தொகுதிக்கு வெளியே எதிர்பாராதவிதமாக இறக்க நேரிட்டால், சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கான வாகனத்தின் வாடகை, அரசால் வழங்கப்படுகிறது.
 பதவிக்காலத்தில் இறந்த எம்.எல்.ஏ.,க்களின் குடும்பத்திற்கு, பதவிக்காலம் முழுமைக்கும், மாதத்துக்கு, 1,000 ரூபாய், குடும்ப படியாக வழங்கப்படுகிறது. அக்குடும்பத்திற்கு, ஒட்டுமொத்த படியாக இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
மரணமடைந்த எம்.எல்.ஏ.,க்களின் குடும்பத்திற்கு, ஓய்வூதியாக, மாதம், 6,000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு, மாதத்துக்கு, 12 ஆயிரம் ரூபாய் வீதம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
முன்னாள் எம்.எல்.ஏ., குடும்பத்தினருடன், அடையாள அட்டையை பயன்படுத்தி, அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்.
 அரசு மருத்துவமனையில், 'அ' அல்லது 'ஆ' பிரிவில் இலவசமாக தங்கி, சிகிச்சை பெறலாம்.
மேலும், ஆண்டுக்கு, 12 ஆயிரம் ரூபாய் மருத்துவப் படியாக வழங்கப்படுகிறது.
இவை அனைத்தும் அவர்கள் ஆற்றும் மக்கள் சேவைக்காகவே வழங்க்கப்படுகிறது.
இனி 2011 அதாவது இந்த சட்டமன்ற பதவி ஆரம்பக்காலம் முதல் இன்றுவரை தமிழக சட்டமன்றத்தில் நடந்த கூத்துக்களை அதுதாங்க நடவடிக்கைகளை பார்ப்போம்.
234 எம்.எல்.ஏ.,க் களில், முதல்வர், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், அரசு தலைமை கொறடா ஆகியோர், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுவதில்லை.
 சட்டசபைக் கூட்டம் நடந்த, 159 நாட்களும், 45 எம்.எல்.ஏ.,க்கள் சபைக்கு தவறாது வந்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஐந்து நாட்கள்;
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், 56 நாட்கள்;
 தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், 27 நாட்கள்;
 புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, 153 நாட்கள்;
ச.ம.க., தலைவர் நடிகர் சரத்குமார், 75 நாட்கள்;
ம.ம.க., ஜவாஹிருல்லா, 146 நாட்கள் வருகை புரிந்துள்ளனர்.
எதிர் கட்சி வரிசையில் புதிய தமிழாக்கம் கிருஷ்ண சாமி அதிக நாட்கள் வந்து சென்றுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில், 2011 மே 23ம் தேதி, முதல் முறையாக கூடியது.
அதன்பின், 2011 ஜூன் 8ல், தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக, முதன் முறையாக, 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு வெளியானது.
 அதே நாளில், மொத்தம் நான்கு அறிவிப்புகள் வெளியாயின.
கடந்த 2011ல், 21 முறை, 2012ல், 43 முறை, 2013ல், 45 முறை, 2014ல், 41 முறை, என, நான்கு ஆண்டுகளில், 110 விதியை பயன்படுத்தி, 150 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கு சென்ற பின்னர் பன்னீர் செல்வம் முதல்வராக இருக்கிறார்.இவர் இதுவரை ஒரு முறை கூட 110 விதியின் கீழ் பேசவில்லை.
முதல்வருக்கான இருக்கையிலும் இவர் அமரவில்லை.முதல்வர் பெயர் பலகையும் இவர் அறையில் வைக்கப்படவில்லை.காரணம் இவர் மக்களின் முதல்வரில்லை என்பதுதான்.
முதல் சட்டசபைக் கூட்டம், 2011 மே 23ல் கூடியது;
கவர்னர் உரையுடன் முதல் கூட்டத்தொடர், எட்டு நாட்கள் நடந்தன;
 முதல் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகம், 25 நாட்கள் நடந்தன.
இரண்டாம் கூட்டத்தொடர் ஒருநாள் மட்டுமே நடந்தது;
மூன்றாம் கூட்டத்தொடர், 2012 ஜன., 30ல், கவர்னர் உரையுடன் துவங்கி, ஆறு நாட்கள் நடந்தன.
நான்காம் கூட்டத்தொடர், 32 நாட்களும்,
 ஐந்தாம் கூட்டத்தொடர் ஐந்து நாட்களும்,
ஆறாம் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் துவங்கி, 41 நாட்களும்,
 ஏழாம் கூட்டத்தொடர், ஏழு நாட்களும் நடந்தன.
 எட்டாம் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் துவங்கி, 31 நாட்கள் நடந்தன. முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், ஒன்பதாம் கூட்டத்தொடர் மூன்று நாட்கள் நடந்தன.
இந்த கூட்டத் தொடர்களின் போது , தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வெளிநடப்பு செய்துள்ளன;
 ஒரே நாளில், இருமுறை, நான்கு முறை கூட வெளிநடப்பு செய்துள்ளனர்.
இதில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 43 முறை;
 தே.மு.தி.க., 25 முறை;
புதிய தமிழகம், 24 முறை;
பா.ம.க., ஏழு முறை;
காங்., 12 முறை;
இ.கம்யூ., எட்டு முறை,
 மார்க்.கம்யூ., 11 முறை;
 ம.ம.க., எட்டு முறை வெளிநடப்பு செய்துள்ளன.
ஆக மொத்தமாக சட்டசபை பதிவில், மொத்தம், 147 முறை வெளிநடப்பு பதிவாகி உள்ளன.

கடந்தாண்டு டிசம்பர் வரை, ஒன்பது கூட்டத்தொடர், 159 நாட்கள் நடந்தன.
மே 2011 முதல், 2015 பிப்., 12ம் தேதி வரையிலும், சட்டசபை நடக்கும் போது பயன்படுத்தப்பட்ட ஜெனரேட்டருக்கு, 5 லட்சத்து 4,000 ரூபாய் வாடகையாக வழங்கப்பட்டு உள்ளது.
சட்டசபைக் கூட்டத்தின் போது, எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்பட்ட மினரல் வாட்டருக்கு, 1 லட்சத்து 21 ஆயிரத்து 58 ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?