த[டம்]டு மாற்றம்.



"வேளாண் அலுவலர் முத்து குமார சாமி தற்கொலை அ .தி.மு.க ,வினரால் ஏற்பட்டதல்ல.
அவர் குடும்ப பிரச்னை வருமான வரித்துறை நோட்டிசால்,கடனால்  உண்டானது"
என்று ஒரு காட்சியை உருவாக்க அதிமுக அரசால் நியமிக்கப்பட்ட சி.பி.சி.ஐ.டி ,யினர் கடுமையாக முயற்சிக்கின்றனர்.
அதிமுகவினர் வசம் உள்ள சிபிசிஐடி பின்னர் எப்படி இருக்கும்,இயங்கும்.?
இதற்குத்தானே சி.பி.ஐ.விசாரணை கேட்கப்பட்டுள்ளது.
ஒரு மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் முறைகேடுகளை அவர்கள் கையில் இருக்கும் புலனாய்வுத்துறையே விசாரித்தால் என்ன உண்மை வெளிவரும்.
அ தற்குத்தானே சி.பி.ஐ.விசாரணை கேட்கப்பட்டுள்ளது.
முத்துக்குமாரசாமியின் மரணத்துக்கு பின்னணியில், ரியல் எஸ்டேட் நிறுவனத்தில், அவர் முதலீடு செய்திருந்த பணத்துக்கு, வருமானவரித் துறையினர், கணக்கு கேட்டு விசாரணைக்கு அழைத்தனர். அந்த மன உளைச்சலில் தான், அவர் தற்கொலை செய்துக் கொண்டார் என்பது போல, அதிமுகவினரின் கைகளில் உள்ள சிபிசிஐடியினர் செய்தி வெளியி ட்டுள்ளனர்..
 2012ம் ஆண்டு வரை, நெல்லை, என்.ஜி.ஓ., காலனியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தான், முத்துக்குமாரசாமி குடியிருந்தார்.
 நெல்லை திருமால் நகர், என்.ஜி.ஓ., ஏ காலனியில், தனக்கிருந்த ஒரு கிரவுண்டு நிலத்தில் புதிய வீடு கட்ட, எல்.ஐ.சி.,யில், 13.5 லட்சம் ரூபாய்க்கு கடன் பெற்றார்;
வீட்டை கட்டித் தரும் பொறுப்பை, பக்கத்திலேயே உள்ள என்.ஜி.ஓ., காலனியில், அலுவலகம் நடத்தி வரும் பாலாஜி புரமோட்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தை அணுகினார்.
அவர்கள், 1,350 சதுரடியில் வீடு கட்டிக் கொடுப்பதற்காக, 13.5 லட்சத்தை பெற்று மொத்தம் 23 லட்சம் ரூபாய்க்கு வீடு கட்டிக் கொடுத்தனர். இதற்காக, எல்.ஐ.சி., யில் இருந்து வாங்கியக் கடனை, புரோமோட்டர்சிடம் கொடுத்தார், முத்துக்குமாரசாமி.
 இரு ஆண்டுகளில் வீடு கட்டி முடிக்கப்பட்டு, 2012 ஜூன் 3ம் தேதி, கிரஹப்பிரவேசம் செய்து, புது வீட்டுக்கு குடி வந்தார், முத்துக்குமாரசாமி. இறப்பது வரை13 ஆயிரம் ரூபாய் என, எல்.ஐ.சி., கடனுக்கான தவணைத் தொகையை, முத்துக்குமாரசாமி செலுத்தி வந்தார்.
 முத்துக்குமாரசாமியை போல, மொத்தம், 47 நபர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் பணியில், 2011 - 12ல் ஈடுபட்டிருந்த பாலாஜி புரமோட்டர்ஸ், நிறுவனம், கிட்டத்தட்ட அந்த பணிக்காக,2.5 கோடி வரை பணபரிமாற்றம் செய்தது; அதை வருமானவரித் துறைக்கும் தெரிவித்திருந்தது.
 இதை சரிபார்க்கும் எண்ணத்தில், சம்பந்தப்பட்ட, 47 நபர்களுக்கும், கடந்த பிப்., 16ம் தேதி, 'நோட்டீஸ்' அனுப்பி, 20ம் தேதி, சம்பந்தப்பட்ட ஆவணங்களோடு விசாரணைக்கு வருமாறு, வருமான வரித்துறை அழைத்திருந்தது. விசாரணைக்கு அழைத்தது சாட்சியாகத்தானே தவிர, குற்றம்சாட்டப்பட்டு அல்ல. ஆனால், வழக்கு விசாரணைக்காக வீட்டுக்கு வந்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், வருமானவரித் துறையினர் அனுப்பிய நோட்டீசை வாங்கிச் சென்றனர். அந்த விவரங்களை வைத்து, முத்துக்குமாரசாமி, ஏதோ தப்பான நபர் போல சித்தரிக்க முயல்கின்றனர்.
முத்துக்குமாரசாமிக்கு வீடு கட்டிக்கொடுத்த  பாலாஜி புரமோட்டர்ஸ் நிறுவனத்தினர்  கூறியதாவது:
" எங்கள் நிறுவனத்தில் வருமானவரித் துறையினர், வழக்கமான விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நாங்கள் வீடு கட்டிக் கொடுத்த, 47 நபர்கள் குறித்த பட்டியலை சமர்ப்பித்திருந்தோம்.
அந்த, 47 பேரையும் சாட்சியாக கொண்டு, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். வீடு கட்டியவர்களுக்கு, பணம் எங்கிருந்து வந்தது என்பது போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்; அவ்வளவு தான். இதில், முத்துக்குமாரசாமியின் வீடு, 23 லட்சத்தில் கட்டப்பட்டது;
அதற்கான முன் தொகை, 13.5 லட்சத்தை, அவர், எல்.ஐ.சி., மூலம் கடனாகப் பெற்று காசோலையாக வழங்கியிருந்தார்.
அவர் பெயரில் வீடு கட்டியதால், அரசு ஊழியர் என்ற முறையில் அதற்கான அனுமதியையும், அரசிடம் இருந்து பெற்றிருந்தார்;
அவர் மட்டுமல்ல நாங்கள் வீடு கட்டிக்கொடுத்த 47 பேரில், 25க்கும் மேற்பட்டோர் அரசு ஊழியர்கள்.அவர்களையும் சாட்சிகளாக விசாரிக்க வருமான வரித்துறையினர் கூப்பிட்டனர்".என் று சிபிசிஜடியினரிடம் கூறியுள்ளனர்.
ஆனால் காவல் துறையினர் செய்தியை திரித்து வெளியிட்டு விசாரணையை மடை மாற்றி விட முயற்சிக்கின்றனர்.
 உண்மையில் கடந்த இரு மாதங்களில், முத்துக்குமாரசாமி, 600 'போன்கால்'கள் செய்திருப்பதாக, தகவல்களை வெளியில் பரப்பி இருக்கின்றனர்.
ஆனால் அவருக்கு, யார் யாரிடம் இருந்தெல்லாம் போன் வந்தது என்ற தகவல்களை கண்டறிந்தும், அவர்கள் வெளியில் சொல்ல மறுக்கின்றனர்.
குறிப்பாக, உள்ளூர், அ.தி.மு.க.,வினர் ஐவர், தொடர்ச்சியாக, முத்துக்குமாரசாமியை துரத்தி துரத்தி மிரட்டி இருக்கின்றனர்.
அது பற்றிய எந்த விசாரணையையும், இதுவரையில் செய்யாத, சி.பி.சி.ஐ.டி., போலீசார், பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
 வேளாண் துறையில் தலைமை பொறியாளராக இருந்தவர், ஏழு ஓட்டுனர் பணியிடங்களை நிரப்பியது குறித்து, முத்துக்குமாரசாமிக்கு தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்ததை, என்னிடமே சொன்னார். 'துறையில் இருக்கும் உயரதிகாரிக்கு, தகவலைக் கொண்டு போங்கள்' என்று சொன்னேன்;
 'அவர்தான் உயரதிகாரி; அவர் மீதே புகார்... அதை யாரிடம் சொல்வது'
என, கேட்டவர், நடந்தவைகள் அனைத்தையும், மாவட்ட கலெக்டரிடம் தெள்ளத் தெளிவாக சொல்லி விட்டார்.
 உண்மையை அறிய வேண்டும் என, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விரும்பியிருந்தால், மாவட்ட கலெக்டரிடம் விசாரித்து இருக்க வேண்டும்; ஆனால், இன்று வரை அதை செய்யவில்லை; 
தலைமை பொறியாளர் செந்திலை, இதுநாள் வரை விசாரிக்கவில்லை.
கடந்த 5ம் தேதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
அன்றைய தினத்தில், தற்போது உதவி செயற்பொறியாளர் பொறுப்பு வகிக்கும், சேரன் மகாதேவியை சேர்ந்த அதிகாரி வெள்ளையன், சில அதிகாரிகளை முத்து குமாரசாமி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
 'நடந்தது நடந்து போச்சு... என் தந்தை குடும்பப் பிரச்னையில் தான் தற்கொலை செய்து கொண்டார்; எனவே, எம்.இ., படித்துள்ள எனக்கு, எல்காட் துறையில் பணி வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்' என, எழுதித் தருமாறு, முத்துக்குமாரசாமி மகனை வலியுறுத்திக் கேட்டுள்ளார். அனால் எங்கள் தந்தையை கொன்ற இந்த அரசிடம் வேலை பார்ப்பதா?வேண்டாம் .நாங்கள் அப்படி பொய் சொல்ல வெண்டிய கட்டாயம் இல்லை.நாங்கள் இருவரும் மென்பொருள் துறையில் கை னியாரிய சம்பாதிக்கிறோம் .அது போதும் என்று மகன்கள் கூறி விட்டனர்.இப்படி எங்கள் குடும்பத்தினரிடம் அமைச்சருக்கு ஆதரவாக,அதிமுகவினருக்கு அடியாள் வேலை பார்த்த ,கேட்ட, வெள்ளையன் குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் சொல்லியும், அவர்கள், இன்று வரை வெள்ளையனையும் விசாரிக்கவில்லையே, ஏன்?இவ்வாறு, அவர் குடும்பத்தினர் அரசுக்கும்,சிபிசிஐடி யினருக்கும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இதிலிருந்து இந்த வழக்கை தமிழக அரசு நிர்வாகத்தில் உள்ள எந்த அமைப்பும் விசாரித்தால் உண்மை வெளிவராது.ஆட்சியாளர்களை காக்கும் விதமாகத்தான் அது இருக்கும்.
அவர்கள் விசாரணையின் முடிவு" முத்து குமாரசாமி தற்கொலைக்கு அவர் ஒட்டி சென்ற வண்டியில் பெட்ரோல் காலியானதால் உண்டான மன  உளைச்சல் தான் காரணமாக இருந்தது "என்று கூட அமைந்து விடும் அபாயம் உள்ளது.
குற்றம் இல்லா விட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட என்ன தயக்கம்.?
முடிவு அமைச்சரும்,அதிமுக வினரும் குற்றமற்றவர்கள் என்று வந்து விட்டால் அக்ரி போன்றவர்கள் மீண்டும் அமைச்சர்கள் ஆவார்கள்.ஆட்டம் இன்னமும் தாளாமுடியாமல் போய் விடும்.இன்னமும் பல நேர்மையான அலுவலர்கள் வேலையையோ,உயிரையோ விடுவார்கள்.
அல்லது தங்கள் நேர்மையை கூட விட்டு விடுவார்கள்.அதானால் சீரழியப் போவது தமிழ் நாடுதான்.அதன் மக்கள் தான்.
ஆட்சி செய்வோரின் இந்த சித்து வேலைகள் முடிவடையாது.
அதிகரிக்கத்தான் செய்யும்.
இப்படி எல்லாம் பணம் சேர்த்தால்தான் வரும் தேர்தலில் வாக்குக்கு 1000 ரூபாய் கொடுத்து மீண்டும் பதவியில் அமர முடியும்.
அதை வாங்கி கொண்டு வாக்களிக்கத்தான் தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்களே.
=========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?