மேம்படுத்தப்பட்ட லாலிபாப் 5.1.



 கூகுள் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0. மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அறிமுகப்படுத்திய போது, அது மொபைல் பயன்பாட்டில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வரும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
 அப்படித்தான் அது அறிமுகமானது.

 புதிய தோற்றத்தினை தரும் எனக் காத்திருந்த நிலையில், அது சற்று ஏமாற்றத்தினையே தந்தது. மிக மெதுவாக இயங்கியது.
 நிறைய பிழைக் குறியீடுகள் காணப்பட்டு பல்வேறு சிக்கல்கள் தோன்றின.
இவை அனைத்தையும் கவனத்தில் இருத்திக் கொண்ட கூகுள், தற்போது ஆண்ட்ராய்ட் 5.1 பதிப்பினை மிக நேர்த்தியானதாக வெளியிட்டுள்ளது.


அதிகமான எண்ணிக்கையில் காணப்பட்ட பிழைக் குறியீடுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி, கூடுதலாக சில பயனுள்ள வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 
இந்த கூடுதல் வசதிகள், லாலிபாப் 5.1 ஐ சிறப்பாகக் காட்டுகின்றன. அவற்றை இங்கு காணலாம்.

மேம்படுத்தப்பட்ட வை பி மற்றும் புளுடூத்


முதன் முதலில், லாலி பாப் அறிமுகமானபோது நோட்டிபிகேஷன்ஸ் பிரிவில் இருந்த Quick Settings சில வரைமுறைகளுக்குட்பட்டே இருந்தது. செட்டிங்ஸ் பேனல் செல்ல, அதற்கான வழிகளீல் செல்ல வேண்டியதிருந்தது. 
வை பி அலைவரிசையை மாற்ற வேண்டும் என எண்ணினாலும், சுற்றிப் பல வழிகளில் செல்ல வேண்டியதிருந்தது. ஆனால், லாலிபாப் 5.1ல், ட்ராப் டவுண் மெனுவின் வழியாகச் சென்று, எளிதில் வை பி நெட்வொர்க் அல்லது புளுடூத் மாற்றத்தினை மேற்கொள்ளலாம். 
நாம் செய்ய வேண்டியதெல்லாம், பட்டியலில் உள்ள அம்புக் குறியைக் கிளிக் செய்து செல்ல வேண்டியதுதான்.

ஒலி அமைப்பு:


 லாலி பாப் சிஸ்டத்தில் ஒலி அமைப்பில், நாம் அமைக்கக் கூடிய திட்ட வகைகள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இருந்தன. 
அலாரம் ஒன்று அமைக்க வேண்டும் என்றால், குறைந்தது 12 மணி நேரத்திற்கு முன்னாலேயே அமைக்க வேண்டும். 
இல்லை எனில் அமைக்க முடியாது. இது தற்போது மாற்றப்பட்டு பல ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

சாதனப் பாதுகாப்பு:


 மொபைல் போன்கள் திருடு போவது இன்னும் அதிகமாகவே இருந்து வருகிறது. எனவே, லாலிபாப் 5.1ல், போனுக்கான பாதுகாப்பு அம்சங்கள் நிறைய தரப்பட்டுள்ளன. 
திருடியவுடன், போனை அதன் பேக்டரி செட்டிங்கில் அமைக்க முடியாது. பல திருடர்கள் மாறா நிலை தொழிற்சாலை அமைப்பிற்கு போனைக் கொண்டு சென்று, நாம் அமைத்த திருட்டுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயலிழக்கச் செய்வார்கள்.
 இனி, லாலிபாப் 5.1 வைத்திருந்தால், நாம் கூகுள் அமைப்பில் கொடுத்த பாஸ்வேர்டைக் கொடுக்காமல் எந்த மாற்றங்களையும் மேற்கொள்ள முடியாது. 
தற்போதைக்கு இந்த பாதுகாப்பு வசதி, நெக்சஸ் 6, நெக்சஸ் 9 மற்றும் லாலிபாப் 5.1 இயங்கும் போன்களில் மட்டுமே உள்ளது.

அறிவிப்புகள் மாற்றம்:


 லாலிபாப் சிஸ்டத்தில் அறிவிப்புகள் கிடைப்பது நாம் வரவேற்கும் ஓர் அம்சமாகவே இருந்து வந்தது. 
ஆனால், அவற்றை நிறுத்த நமக்குத் தரப்பட்ட ஆப்ஷன்கள் மிகவும் குறைவே. ஓர் அறிவிப்பு மறையும் வரை காத்திருக்க வேண்டும்.
 அல்லது, அதில் டேப் செய்து, அந்த அப்ளிகேஷனை இயக்கி, அல்லது ஸ்வைப் செய்து மொத்தமாக எல்லாவற்றையும் நீக்க வேண்டும்.
 ஆனால், இப்போது, ஓர் அறிவிப்பினை, அதன் பெட்டிக்குள் மீண்டும் அனுப்பலாம். 
இது ஒரு சிறிய அளவிலான உதவி என்றாலும், நம் எரிச்சலை நீக்கும் வசதி ஆகும்.

வை பி தேர்வு


ஆண்ட்ராய்ட் 5.1 பதிப்பில் அனைவரும் விரும்பும் ஒரு வசதி, வை பி இணைப்பு சார்ந்ததாகும்.
 நம் போன், மிக மோசமாகச் செயல்படும், இணைய இணைப்பைத் தராமல் செயல்படும், ஒரு வை பி நெட்வொர்க்கில் இணைந்து விட்டால், அதனை சிஸ்டம் உணர்ந்து கொண்டு, மீண்டும் அந்த நெட்வொர்க்கில் இணையாமல் பார்த்துக் கொள்கிறது.
 இலவச வை பி இணைப்புகள் உள்ள இடங்களில் நாம் செல்லும்போது, இந்த வசதி நமக்கு உதவியாக இருக்கும்.
========================================================================
உங்களுக்கு தெரியாததல்ல.
==========================
இருப்பினும் ஒரு நினைவூட்டல்.
=============================
Firewall : 

நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட)கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் அடுத்தவரின் முயற்சியைத் தடுக்கும் ஒரு சாப்ட்வேர் அல்லது சிறிய ஹார்ட்வேர் சாதனம்.

Internet Telephony: 


வழக்கமான டெலிபோன் இணைப்பில்லாமல் இன்டர்நெட் மூலம் தொலைபேசி தொடர்பு கொண்டு பேசும் முறைக்கு இந்த பெயர்.

Mother Board:


 (மதர் போர்டு)பெர்சனல் கம்ப்யூட்டரில் இருக்கும் எலக்ட்ரானிக் சர்க்யூட் போர்டு. இதன் மூலம் தான் கம்ப்யூட்டரின் அனைத்து பாகங்களும் (மானிட்டர், கீ போர்டு, மவுஸ், பிரிண்டர் போன்றவை) இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுகின்றன. 

Hardware:


கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து சாதனங்களும் இந்த சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. மதர்போர்டு, சிப், மவுஸ், கீ போர்டு, பிரிண்டர், மோடம், ரௌட்டர் என அனைத்தும் இந்த சொல்லில் அடங்கும்.

Bandwidth: 


இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிக பட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அளவை இது குறிக்கிறது. இது டேட்டா பயணிக்கும் வேகம் அல்ல.

Client: 


கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும். 

Doc: 


இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவான பைல் என்பதனை இது குறிக்கிறது.

Domain Name: 


இன்டர்நெட்டில் உள்ள தகவல் தளங்களை இச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். அந்த தளத்தின் பெயரை இது குறிக்கிறது. 

Download: 


கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம்.
 இருப்பினும் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் இறக்கிப் பதியப்படுவதனையே இது பெரும்பாலும் குறிக்கிறது.
==================================================
இன்று,

=====

ஏபரல் -09
.
=======



  • .அமெரிக்க அணுசக்தி கழகம் அமைக்கப்பட்டது(1945)
  • அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீரர்கள் 7 பேரின் பெயர்களை நாசா அறிவித்தது(1959)
  • ஜார்ஜியா, சோவியத் ஒன்றியத்தின் விடுதலையை அறிவித்தது(1991)
  • வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முதல் 3டி திரைப்படத்தை வெளியிட்டது(1953)
                      எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்.

அவருக்கு வயது 81’

 சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.




இன்று(8-4-2015) இரவு கே.கே நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.


சிறுகதை, நாவல், உரைநடை, சினிமா என எல்லாத் தளங்களிலும் முத்திரை பதித்தவர். 

இவரது பல நாவல்கள் திரைப்படமாகி உள்ளன.



இவரே மூன்று திரைப்படங்கள் இயக்கியுள்ளார். 

சாகித்ய அகாடமி, பத்மவிபூஷன், ஞானபீடம் என பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

கம்யுனிஸ்டாக தன் இலக்கிய  வாழ்வைத்துவக்கிய ஜெயகாந்தன் ஆனந்த விகடன் மூலம் பரவலாக வெளிப்பட்டார.

தனதுமுத்திரை கதைகள் மூலம் சிறுகதை இலக்கிய உலகில் முத்திரை பதித்தார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------
செம்மரம் படுகொலைகள்,
சில கேள்விகள்?


. பத்து நாட்களுக்கு முன்பே `கண்டதும் சுட உத்தரவு’ உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு அரசால் வழங்கப்பட்டது உண்மையா? இந்தச் செய்தி தமிழக அரசுக்கும் தெரியுமாமே ! மெய்யா?

 கடந்த இரு வாரமாக ஆந்திர , தமிழக காவல்துறையினர் கூட்டாக வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள சில கிராமங்களில் தேடுதல் வேட்டை நடத்தியது உண்மையா? 
மேலும் அந்தக் கிராமமக்களை ஆந்திர எல்லையில் நுழைந்தால் சுட்டுக்கொல்வோம் என எச்சரித்ததும் மெய்யா? பொய்யா ?

 செம்மரக் கடத்தலில் ஈடுபடும் இரு பெரும் புள்ளிகளுக்கு இடையில் உள்ள வியாபாரப் பகையால் வெடித்த சம்பவம் இது என்பது உண்மையா ?

 முன்னாள் ஆளும் கட்சிப் பிரமுகரும் இப்போது சிறையிலிருந்தாலும் அங்கிருந்தபடியே கடத்தல் குழுவை இயக்கும் கெங்கிரெட்டி என்பவரின் கடத்தல் குழுவினரோடு சம்பந்தப்பட்டதாகக் கருதப்படுகிறவர்களே சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பது சரியா? 
இந்தக்குழு கடப்பாவழி செயல்படுகிறது என்பது சரியா?

 இப்போது ஆளுங்கட்சியைச் சார்ந்தவரும் - ஆந்திர முதல்வரின் பூர்வீக மான சந்திரகிரியை வழியாகக் கொண்டு செயல்படும் ஒரு நாயுடுகாரின் கையை வலுப்படுத்த - காவல்துறையும் இவர்களும் சேர்ந்து திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட வெறியாட்டம் இது என்கிற தகவலில் உண்மை உண்டா? இல்லையா?

 கடத்தப்பட்ட செம்மரங்கள் தமிழக துறைமுகம் வழியாகவே வெளிநாடு செல்கிறது என்பது ஊரறிந்த ரகசியமல்லவா? தமிழக காவல்துறைக்கு இதெல்லாம் தெரியாதா?

 கொல்லப்பட்டது கூலிக்கு வேலைசெய்யும் பழங்குடிகளல்லவா? வயிற்றுப் பாட்டுக்காக இத்தொழிலில் நிர்பந்திக்கப்பட்டவர்களல்லவா இவர்கள் ? இவர்களுக்கு வாழ்வுரிமையை, வாய்ப்பை உறுதி செய்யத் தவறிய தமிழக அரசும் குற்றவாளி அல்லவா?

 இந்த பெருங்கொள்ளையில் பெரும்பங்கைச் சாப்பிடும் பெரியமனிதர்களை அவர்கள் வசதியாக வாழும் பண்ணைவீடுகளில் சென்று சுட்டுக்கொல்ல வேண்டாம். கைது செய்யவாவது அரசுகளுக்கு தைரியம் உண்டா?
============================================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?