இடுகைகள்

ஜூன், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

'தம் படங்கள் ' எனும் 'செல்பி'

படம்
இன்றைய காலத்தில்  'செல்பி' எனப்படும் தம்படங்கள் எடுத்துக்  கொள்வது வெறித்தனமாய்ப் பரவி வரும் பழக்கமாக உள்ளது.  இதனாலேயே, எந்த ஒரு மொபைல் போனிலும் முன்பக்கமாய் ஒரு கேமரா இருப்பது அவசியமான ஒரு அம்சமாக மாறிவிட்டது.  அனைத்து மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும், முன்பக்க கேமரா, அதன் மெகா பிக்ஸெல் தன்மை குறித்து அவசியம் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.  ஸ்மார்ட் போன் வாங்குபவர்களும், செல்பி கேமரா குறித்து அறிந்த பின்னரே ஒன்றை வாங்குவது குறித்து முடிவு எடுக்கின்றனர்.  அதே சமயத்தில், செல்பி படம் எடுப்பது என்பது ஒழுக்கமற்ற நாகரிகத்தையும்,ஒருவித அச்சுறுத்தும் பழக்கமாக மாறி வருகிறது.விருப்பமில்லாதவர்களையும் தன்னுடன் இணைத்து படங்கள் எடுப்பது எந்தவகையில் நாகரிகம்.? இந்த பழக்கத்தை ஒட்டி நமக்கு வந்த தகவல்களை இங்கு காணலாம். அண்மையில் சிங்கப்பூரைச் சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவர், தன்னைத் தானே மொபைல் போனில் படம் எடுக்கும் முயற்சியில் இரண்டு மீட்டர் உயரத்தில் இருந்து கடலுக்குள் விழுந்து உயிரை விட்டார்.  இது நடந்தது இந்தோனேஷியாவில் பாலி என்ற இடத்தில்.  இதே போன்ற இன்னொரு விபத்தில

வெளிநாடுகளிலிருந்து அதிகமான நிதியை பெறுவது ?

படம்
இந்தியாவில் செயல்படும் அரசு சாரா நிறுவனங்களில், ஆர்.எஸ்.எஸ்.-தான், வெளிநாடுகளிலிருந்து அதிகமான நிதியைப் பெறுகிறது என்றதகவல், அமெரிக்காவைச் சேர்ந்த பிரச்சார அமைப்பு வெளியிட்ட அறிக் கையின் மூலம் தெரியவந்துள்ளது. இப்படி வெளிநாடுகளில் இருந்து திரட்டும் நிதியைக் கொண்டு, இந்தியாவில் மதவாதத்தையும், வெறுப்பு அரசியலையும் வளர்க்கும் வேலையை ஆர்எஸ்எஸ் செய்து வருவதாகவும் கூறியுள்ள அந்த பிரச்சார அமைப்பு, அமெரிக்காவில் ஆர்எஸ்எஸ்-க்கு நிதி அளிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. நரேந்திர மோடி பதவி ஏற்றதிலிருந்து, இந்தியாவில் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப் பட்டது. இவ்வமைப்புகள் வெளிநாடுகளின் நிதியைப் பெற்றுக் கொண்டு, இந்தியாவில் பல்வேறு சீர்குலைவு வேலைகளில் ஈடுபடுவதாகஉளவுத்துறை மூலம் குற்றம் சாட் டப்பட்டு, அவற்றின் அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்டதுடன், பணப் பரிவர்த்தனைகளும் முடக்கப்பட்டன. இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிகமானநிதியைப் பெறுவது ஆர்எஸ்எஸ் தான்

தனியாரிடம் தள்ளிவிடப்படும் ரெயில்வே.

படம்
எதிர்பார்த்தது போலவே பிபேக் தேப்ராய் கமிட்டி இந்திய ரயில்வேயை பல பிரிவுகளாக பிரித்து தனியார்மயப்படுத்த வேண்டும் என பரிந்துரைத்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.  இதனை தனியார்மயம் என அழைப்பதற்கு பதிலாக “அரசின் பிடியிலிருந்து விடுதலைமயம்”என நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது.  இந்த அறிக் கையை விமர்சிப்பவர்களை தேவையில்லாமல் கிலியை ஏற்படுத்தும் இடதுசாரிகள் எனவும் காலாவாதியான நேரு காலத்திய சோசலிச கருத்துகளை உடையவர்கள் எனவும் பா.ஜ.க. அரசாங்கமும் அதன் கார்ப்பரேட் துதிபாடிகளும் விமர்சிக்கக்கூடும்.  உண்மையில் அறிக்கையை உருவாக்கியவர்களுக்கும் அதன்ஆதரவாளர்களுக்குமே இந்த விமர்சனம் பொருந்தும். ஏனெனில் இந்த அறிக்கைமுன்வைக்கின்ற தீர்வுகளும் அதற்கான காரணிகளும் நவீன தாராளமய சூத்திரங்களுக்கு முற்றிலும் இசைந்தவையாக உள்ளன.  ரயில்வேயின் குறைகள் அனைத்திற்கும் காரணம் அது அரசுத்துறையாக இருப்பதுதான் எனவும்இக்குறைகளுக்கு சர்வரோக நிவாரணி தனியார்மயம்தான் எனவும் அறிக்கை கூறுகிறது.பிரிட்டன் ரயில்வேயை தனியார்மயப்படுத் தியதால் ஏற்பட்ட படுபாதகமான விளைவுகளை யும் அல்லது ஐரோப்பாவில் ரயில்வேயை அரசுத்துறையே இயக்குவதின்

1,068 பக்கங்களில் என்ன இருக்கிறது ?

படம்
முழு விவரம் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதிக் களமாக உச்ச நீதிமன்றம் இருக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த 22-ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டுவிட்டது. இதே வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த ஆச்சார்யா இப்போது மனுதாரர். ஆச்சார்யாவின் சார்பில் வழக்கைத் தாக்கல் செய்துள்ளவர் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில். 1,068 பக்கங்கள் கொண்ட மேல்முறையீட்டு மனுவில், 1,002 பக்கங்கள் வரை வழக்கின் வரலாறும், நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பின் மொத்த நகலும் இணைக்கப்பட்டுள்ளது. 1,003-ம் பக்கத்தில் இருந்துதான் மேல்முறையீட்டுக்கான காரண காரியங்களை ஆச்சார்யா அடுக்கி உள்ளார். அதன் உள்ளடக்கத்தைப் படிக்கும்போது திகிலாக இருக்கிறது. நீதியை கல்லறைக்கு அனுப்பிய தீர்ப்பு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில், ஆவணங்களின் முக்கியத்துவம், ஆதாரங்களின் உறுதி, சாட்சிகளின் நேர்மை முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு உள்ளன. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல்

ஊழலற்ற

படம்
மே 26 அன்று தனது ஓராண்டு ஆட்சியின் நிறைவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அனைத்துமொழி நாளேடுகளி லும் தனதுஆட்சியின் சாதனைபற் றிய விளம்பரங்களை வெளியிட்டிருந்தார். அதில், ”ஊழலற்ற, வெளிப்படையான தன்மைகொண்ட, கொள்கை அடிப்படையிலான நிர்வாகம், வேகமாக முடிவெடுத்தல் ஆகியவை தான் எங்கள் அடிப்படைக்கொள்கை ” என்று பிரகடனப்படுத்தினார்.  உத்தரப்பிரதேசம், மதுரா மாவட்டம் நாக்லாசந்த்ரபான் கிராமத்தில் ஒருபொதுக்கூட்டத்தில், “கடந்த ஓராண்டில் ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை அளித்துள்ளோம்.  கடந்த 60ஆண்டுகளாக நாட்டைக்கொள்ளையடித்தவர்களுக்கு (அடல் பிகாரி வாஜ்பேயி பிரதமராக இருந்த பாஜகவின் 6 ஆண்டுகள் உட்பட?) முடிவு கட்டியுள்ளோம்”என்று முழங்கினார்.  உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் தன்பங்குக்கு அதைவழிமொழிந்தார். நிதிஅமைச்சர் அருண்ஜெட்லியோ,” கடந்த ஓராண்டில் ஊழலற்ற அரசை அளித்ததே மாபெரும் சாதனை” என்று பூரித்தார். சென்னையில் மே 26 அன்று பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி, ”கடந்த ஓராண்டில் ஊழல்கள் ஏதும்நடக்கவில்லை என்றுபிரதமர் பெருமைப்பட்டுக் க