ஈழத்துரோகி



கருணாநிதி?

"ஈழத்தமிழர்களுக்காகத் தனது சுட்டு விரலைக் கூட அசைக்க கருணாநிதி தயாராக இருந்ததில்லை என்பதுதான் வரலாற்று உண்மை" - பழ. நெடுமாறன், 

"தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் விடுதலைப் புலிகளுக்குக் கருணாநிதி எல்லா வசதிகளும் செஞ்சு கொடுத்தா. விடுதலைப் புலிகள் இங்கே பெட்ரோல் பங்க் நடத்துனா. கோயம்புத்தூரில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கிற தொழிற்சாலை வெச்சிருந்தா. எல்.டி.டி.ஈ.க்கு யூனிஃ
பார்ம் தைச்சுக் கொடுத்தா. இதைப்பத்தி எல்லாம் எனக்கு ரிப்போர்ட் வந்தது. நான்தான் சந்திரசேகர்கிட்ட எடுத்துச் சொல்லி, 'கருணாநிதி தீவிரவாதிகளுக்கு சப்போர்ட்ட பண்றா, அவா அரசைக் கலைச்சிடுவோம்னு' சொன்னேன்." - சுப்பிரமணியன் சுவாமி, 'விகடன் மேடை' - 04.07.2012

மேற்காணும் இரு கூற்றுகளும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறானவையாக உள்ளன. ஈழ மக்களுக்காகத் தன் சுட்டு விரலைக் கூடக் கலைஞர் அசைக்கவில்லை என்கிறார் ஒருவர். தன் ஆட்சி அதிகாரம் முழுவதையும் அவர்களுக்காக அவர் பயன்படுத்தினார் என்கிறார் மற்றொருவர்.


இவை இரண்டும் எதிரெதிர்க் கருத்துகளாக இருந்தாலும், கருத்துகளை வெளியிட்டுள்ள இருவருக்கும் நோக்கம் ஒன்றுதான். கலைஞரைத் தாக்கி அழிக்க வேண்டும் என்பது மட்டுமே இருவரின் விருப்பமும் ஆகும். எதிரெதிர்த் திசைகளில் நின்று கலைஞரைத் தாக்கும் இருமுனைத் தாக்குதல் இது.

ஒருவர் ஈழ விடுதலையை முழுமையாக ஆதரிப்பவர். மற்றவர் ஈழ விடுதலையை முழுமையாக எதிர்ப்பவர். ஆனால் அவர்கள் இருவரும் ஒருவரோடொருவர், மோதிக்கொள்ள மாட்டார்கள். இருவரும் இணைந்து கலைஞருடன் மட்டுமே மோதுவார்கள். இது வெகுநாள்களாக நடந்துகொண்டிருக்கும் குள்ளநரித்தந்திரம்.

அ.தி.மு.க.வின் துரோகத்தைக் கண்டித்தும், ஈழத்தமிழர் பிரச்சினையில் தி.மு.க. எடுக்கும் எல்லா நடவடிக்கையும் முழுமையாக ஆதரித்தும் அன்று அறிக்கை விட்ட அதே நெடுமாறன் அவர்கள்தான், "எம்.ஜி.ஆர். அப்போது நல்லது செய்தார் என்றும், கலைஞர் துரோகம் செய்தார்" என்றும் முற்றிலும் நேர் மாறாக இன்று பேசுகிறார். துரோகம் செய்த ஒரு கட்சிக்கா நெடுமாறன் தன் முழு ஆதரவையும் வழங்குவார்?

"அ.தி.மு.க. அரசு துரோகம் இழைக்கிறது" என்னும் தலைப்பின் கீழ் உள்ள இணைத்துள்ள பேட்டியின் கடைசிக் கேள்வி-பதிலை நன்றாகக் கவனிக்க வேண்டும். இதோ அந்தக் கேள்வி-பதில்:

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகத் தி.மு.க. போராட்டம் நடத்த உள்ளதே?

நெடுமாறன் : அதை வரவேற்கிறேன். அவர்கள் பணியை அவர்கள் செய்கிறார்கள். மற்ற கட்சிகளும் இது போன்று போராட வேண்டும். எங்கள் கட்சியும் இதுபற்றி விரைவில் கூடி முடிவெடுக்கும்.

அது மட்டுமின்றி, எல்லாக் கட்சிகளும், இலங்கைப் பிரச்சினையில் தி.மு.க.வைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறுகின்றார். எல்லாவற்றையும் தாண்டி "தன் கட்சியே இனிமேல்தான் முடிவெடுக்க உள்ளது" என்கிறார். எனவே, நெடுமாறன் அவர்கள் கட்சிக்கே, ஈழப் பிரச்சினையில் தி.மு.க. தான் வழிகாட்டியாக இருந்திருக்கிறது என்பது அவரே தரும் செய்தி.

இன்று தி.மு.க.வையும், கலைஞரையும் கடுமையாகத் தாக்கும் நெடுமாறன், அன்று எம்.ஜி.ஆர். அரசு ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைப்பதாகவும், தி.மு.க. தன் பணியைச் சரியாகச் செய்வதாகவும் கூறியிருப்பது மிகப் பெரும் முரண்பாடு இல்லையா? ஏன் இந்த முரண்பாடு? விடை மிக எளியது. அன்று அவர் தி.மு.க. கூட்டணியில் இருந்தார். 1984 இறுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், எம்.ஜி.ஆரை விட்டுப் பிரிந்து வந்து தி.மு.க.வுடன் அவர் கட்சி கூட்டணி அமைத்துக் கொண்டது.

அப் பொதுத் தேர்தலில், ஒரு நாடாளுமன்றத் தொகுதியும் (பழனி), மதுரை மத்தி, மானாமதுரை, லால்குடி, நத்தம், திருவையாறு உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளும் அவர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டன. அப்போதே ஈழம் பற்றிப் பேச, அவருக்கு நாடாளுமன்றம் செல்ல ஒரு வாய்ப்பிருந்தது. அங்கு சென்று தன் தரப்பு வாதத்தை அழகாக அழுத்தம் திருத்தமாக மத்திய அரசாங்கத்திற்கு எடுத்து வைத்திருந்திருக்க முடியும். ஆனால் அதை தட்டி கழித்துவிட்டு பழனி பாராளுமன்ற தொகுதியில் அவர் போட்டியிடாமல், எஸ்.ஆர்.வேலுச்சாமி என்பவரை அத்தொகுதியில் வேட்பாளராக நிறுத்திவிட்டுத் தான் மதுரைச் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு ஏறத்தாழ இரண்டாயிரம் வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

எனவே நெடுமாறன் அவர்களின், ஈழம் பற்றிய கருத்துகள், அவர் அவ்வப்போது சார்ந்திருக்கும் கூட்டணியைப் பொறுத்ததாகவே இருந்து வருகின்றன என்பது தெளிவாகின்றது. இதில் கலைஞரை குறை கூறுகிறார்.

இன்று தமிழகத்தில் ஈழ வியாபாரிகள் சீமான் [எ]சைமன் ,வேல்முருகன்,பழ.நெடுமாறன்,போன்றோருக்கு தமிழர்களை கொன்று குவித்த ராஜ பக்சேவை திட்டுவதை விட,பிரபாகரனை கைது செய்து தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவை திட்டுவதை விட ஈழத்தமிழர் பிரச்னைக்காக இருமுறை பதவியை இழந்த ராஜீவ் காந்தி கொலையான போது எதோ இவர்தான் கொன்றது போல் கடும் அடக்குமுறைக்கு ஆளான கருணாநிதியை திட்டுவதும்-புழுதி வாரி தூற்றுவதும் எளிதாக இருக்கிறது.வாங்கிய காசுக்கு விடுதலைப் புலிகளுக்கு,மாவீரன் பிரபாகரனுக்கு  எதிரானவரை ஈழத்தாய் என்பதிலேயே அவர்களின் வியாபரத்தந்திரம் வெட்ட வெளிச்சமாகி விட்டது.

இப்போது கனி மொழி கூறியதாலேயே விடுதலைப்புலிகள் துப்பாக்கியை விட்டு விட்டு சரணானதாக புதுக்கரடி வந்துள்ளது.இவ்வளவு நாள் கழித்து வரக் காரணம்  ரா.கி.நகர் இடைத்தேர்தல் .
என்னவோ விடுதலைப்புலிகள் பிரபாகரனை விட கனி மொழியின் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்கள் போல் இந்த கரடி கத்திக்கொண்டிருக்கிறது.
எம்.ஜி.ஆருக்கு இணக்கமாக இருந்த பிரபாகரன் கடைசிவரை கருணாநிதியை கண்டு கொள்ளவே இல்லை.
டெசோ மாநாடு நடத்தி ஈழப் போராளிகளுக்கு நிதி வழங்கிய போது கருணாநிதியிடம் இருந்து நிதி வாங்க மறுத்தவர் பிரபாகரன்.
கருணாநிதிதான் ஈழப் போராட்டத்துக்கு தமிழினம் என்ற ஒரே காரணத்துக்காக வலிய சென்று ஆதரவினை அளித்து ராஜீவ் கொலையால் அசிங்கப்பட்டு பதவியையும் இழந்தார்.
ஆனால் விடுதலைப்புலிகள் கருணாநிதியை அவர் ஆதரவை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.அதுவும் உலகறிந்த உண்மை.
அப்படி பட்ட புலிகள் கருணாநிதி மகள் என்ற காரணத்தால் கனி மொழி அறிவுரைப்படி நடந்து கொண்டார்கள்,சரணடைந்தார்கள் என்பது இந்த நூற்றாண்டின் இணையற்ற நகைச்சுவை,அல்லது புளுகு என்பது வெளிப்படை.

இந்த அளவுக்கு கருணாநிதி மீது சேற்றை அள்ளி வீசக் காரணம்.

அவர் இந்த 92 வயதிலும் தமிழினத்தலைவராக இருப்பதுதான்.
அவரைக் கண்டு இன்னமும் தமிழின விரோதிகள் பயப்படுகிறார்கள் என்பதுதான்.
கருணாநிதியை சுற்றித்தான் இன்னமும் தமிழக அரசியல் சுழலுகிறது என்பதையே இந்த புளுகுகள் சுட்டிக்காட்டுகின்றன.

வேறு காரணம்.
இப்போதைக்கு இல்லை.
==================================================
அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின் காரணமாக, எவரெஸ்ட் மலைச்சிகரம் மூன்று செண்டிமீட்டர் தென்மேற்காக நகர்ந்துள்ளது என சீனாவிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் அந்த மலையின் உயரத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை என சீனாவின் தேசிய கணக்கெடுத்தல், வரைபடங்கள் மற்றும் புவிசார் தகவல்களுக்கான நிர்வாகம் அறிவித்துள்ளது.
நேபாளத்தில் 7.8 ரிக்டர் அளவுகொண்ட அந்தக் கடுமையான நிலநடுக்கத்தின் காரணமாக எட்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். உடமைகளுக்கு பெரும் சேதமும் அழிவும் ஏற்பட்டன.
அந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஏராளமான நிலச்சரிவுகளும், பனிசரிவுகளும் ஏற்பட்டன.
இதே வேளை தலைநகர் காட்மாண்டு நகரமும்கூட தெற்கு நோக்கி இரண்டு மீட்டர்கள் நகர்ந்துள்ளது என நேபாள விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட இந்தக் கடுமையான நிலநடுக்கத்துக்குப் பிறகு எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் மீதும் ஏறும் நடவடிக்கைகள் தடைபட்டுள்ளன.
========================================================================
இன்று,
ஜூன்-17.
  • சர்வதேச தந்தையர் தினம்
  • ஐஸ்லாந்து தேசிய தினம்(1944)
  • இந்திய விடுதலை போராட்ட வீராங்கனை ராணி லட்சுமிபாய் இறந்த தினம்(1858)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் வாஞ்சிநாதன் இறந்த தினம்(1911)
  • சுதந்திரதேவி சிலை நியூயார்க் துறைமுகத்தை வந்தடைந்தது(1885)


========================================================================

ஜெயா விடுதலை :-

 மண்டபத்தில் எழுதப்பட்ட தீர்ப்பு


ருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்தது மற்றும் கூட்டுச் சதி ஆகிய கிரிமினல் குற்றங்களுக்காக ஜெயாவிற்கும் அவரது பினாமிகளான சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் நான்கு ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பை முற்றிலுமாக ரத்து செய்து குற்றவாளிகள் நால்வரையும், அவர்களது பெயரில் இருக்கும் சொத்துக்களையும் விடுவித்து தீர்ப்பளித்திருக்கிறது, கர்நாடகா உயர்நீதி மன்றம்.
நீதிபதி குமாரசாமி
நீதிபதி குமாரசாமி : கத்துக்குட்டியா, ஜெயாவின் கைக்கூலியா?
நீதிபதி குமாரசாமி அளித்துள்ள இத்தீர்ப்பு பிழையானது, மோசடியானது எனக் கூறுவதற்கு பெரிய சட்ட அறிவெல்லாம் தேவையில்லை, சாதாரண கூட்டல் கழித்தல் தெரிந்திருந்தாலே போதும். ஜெயாவும் அவரது பினாமிகளும், அக்கும்பல் உருவாக்கி வைத்திருந்த லெட்டர் பேடு கம்பெனிகளும் அரசு வங்கிகளில் வாங்கிய கடன்களின் கூட்டுத் தொகையை 10,67,31,274 ரூபாய் எனக் காட்டுவதற்குப் பதிலாக, அதனை 24,17,31,274 ரூபாயாகத் தனது தீர்ப்பில் (பக்.852) காட்டி, அதனை அடிப்படையாகக் கொண்டுதான் ஜெயா-சசி கும்பலை நீதிபதி குமாரசாமி விடுதலை செய்திருக்கிறார்.
வரியைக் கட்டாமல் ஏய்க்கும் பண முதலைகள் அனைவரும் அதற்காக வருமானத்தைக் குறைத்து, செலவுகளைக் கூட்டிக் காட்டும் உள்குத்து வேலைகளைச் செய்வது வாடிக்கையான ஒன்று. அதனையொத்த உள்குத்து வேலையைத் தலைகீழாகச் செய்துதான் – ஜெயாவின் செலவுகளைக் குறைத்து, வருமானத்தை அதிகரித்துக் காட்டியும்தான் நீதிபதி குமாரசாமி ஜெயா-சசி கும்பலை விடுவித்திருக்கிறார். ஜெயாவின் வருமானத்தை அதிகரித்துக் காட்டுவதற்கு குமாரசாமி நம்பியிருந்த முக்கியமான துருப்புச் சீட்டு, அக்கும்பல் பெற்ற கடன்கள்தான். அந்த இடத்தில்தான், ஜெயா-சசி கும்பல் பெற்ற மொத்தக் கடன் 10,67,31,274 கோடி ரூபாய் என்பதற்குப் பதிலாக 24,17,31,274 கோடி ரூபாய் என மாற்றிப் போட்டு தனது கைவரிசையைக் காட்டியிருக்கிறார், குமாரசாமி.
ஜெயா-சசி கும்பல் வாங்கிய கடன்களைக் கூட்டிப் போடுவதில் மட்டும் மோசடி நடைபெறவில்லை. அதனையும் தாண்டி கடன்களை வருமானமாகக் காட்டும் விசயத்தில் ஏகப்பட்ட தகிடுதத்தங்களைத் தெரிந்தே செய்திருக்கிறார், குமாரசாமி. மூன்றாவது குற்றவாளியான சுதாகரன் தனக்கு 1.57 கோடி ரூபாய் கடன் அளிக்குமாறு இந்தியன் வங்கி, அபிராமபுரம் கிளைக்கு விண்ணப்பம் செய்ததில், அவருக்கு 1.33 கோடி ரூபாய் கடன் அளிக்கப்பட்டது. ஆனால், நீதிபதி குமாரசாமியோ வங்கி அளித்த கடன் தொகைக்கு மாறாக, சுதாகரன் கடனாகக் கோரியிருந்த 1.57 கோடி ரூபாயை வருமானமாகக் காட்டியிருக்கிறார்.
முதல் குற்றவாளியான ஜெயா, அதே இந்தியன் வங்கிக் கிளையிடமிருந்து ஆகஸ்டு 1996-இல் 90 இலட்ச ரூபாய் கடன் பெற்றார். வழக்கு காலத்திற்கு பிறகு பெறப்பட்ட கடனை வழக்கு காலத்தில் கிடைத்த கடனாகக் காட்டி, அதனை வருமானத்தில் சேர்த்திருக்கிறார் குமாரசாமி. இவ்வளவு கேவலமாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் கணக்குப் போட்டு ஜெயா-சசி கும்பலை விடுவித்திருக்கும் இந்தத் தீர்ப்பில், இந்தக் கணிதப் பிழைகளைத் தாண்டியும் அதிர்ச்சி அளிக்கும் அம்சங்கள் பல உள்ளன.
குமாரசாமி: நீதிபதியா, ஜெயா விசுவாசியா?
“சொத்துக் குவிப்பு வழக்கு அரசியல் பழி வாங்கும் நோக்கத்தோடு தி.மு.க.வால் போடப்பட்ட வழக்கு” என்பதுதான் ஜெயா-சசி கும்பலின் வாதம். இந்த வழக்கை பெங்களூருக்கு மாற்றியபொழுதே அ.தி.மு.க. கும்பலின் இந்த வாதத்தை உச்சநீதி மன்றம் புறக்கணித்துவிட்டது. ஆனால், நீதிபதி குமாரசாமி குப்பையைப் போல ஒதுக்கித் தள்ளப்பட்ட இந்த வாதத்தை மீண்டும் கிளறி, “சட்டப் போராட்டம் என்ற போர்வையில் அரசியல் இலாபங்களுக்காக வழக்குத் தொடுப்பதை ஊக்குவிக்கக் கூடாது” எனக் (பக்.739) குறிப்பிட்டு, ஜெயா கும்பலின் அவதூறுகளுக்கு அங்கீகாரம் அளித்திருக்கிறார்.
ஜெயா மற்றும் அவரது பினாமிகள் சசிகலா, சுதாகரன், இளவரசி.
பிரம்மஸ்ரீ கிரிமினல் ஜெயா மற்றும் அவரது பினாமிகள் சசிகலா, சுதாகரன், இளவரசி.
2001-ல் தமிழக முதல்வராக ஜெயா பதவியேற்றவுடனேயே, சென்னையில் நடந்துவந்த சொத்துக்குவிப்பு வழக்கைக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியில் இறங்கினார். அதன் ஒரு பகுதியாக, அவ்வழக்கு விசாரணையில் ஜெயாவுக்கு எதிராகச் சாட்சியம் அளித்தவர்கள் அனைவரும் மிரட்டப்பட்டு பிறழ்சாட்சியாக மாற்றப்பட்டனர். இந்த நிலையில்தான் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமென அன்பழகன் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். உச்சநீதி மன்றம் இவ்வழக்கை பெங்களூருவுக்கு மாற்றியபொழுதே பிறழ் சாட்சியங்களை மீண்டும் விசாரிக்குமாறு அறிவுறுத்தியது. இந்த அடிப்படையில் பிறழ் சாட்சியங்கள் மீண்டும் விசாரிக்கப்பட்டு, ஜெயா-சசி கும்பலின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.
நீதிபதி குமாரசாமி இது குறித்து தனது தீர்ப்பில், “சாட்சிகளைப் பிறழ் சாட்சிகளாகக் கருதாமல், அவர்கள் மீண்டும் அழைக்கப்பட்டு, குறுக்கு விசாரணை செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வழக்குரைஞர்கள் கூறுகிறார்கள். அந்த சாட்சிகளிடம் தங்களுக்குச் சாதகமான முறையில் அரசுத் தரப்பு கேள்வி கேட்டுள்ளது. சாட்சிகள் வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு விதமாக சாட்சி அளித்தால் அவர்கள் மீது நம்பிக்கை வைப்பது நல்லதல்ல. இப்பிறழ் சாட்சியங்களைக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமான அம்சங்களில் ஒன்றாகக் கருத வேண்டும்” எனக் குறிப்பிடுகிறார்.
தங்க, வைர நகைகள்
தங்க, வைர நகைகளாக மாறிய ஊழல் பணம்.
இப்படிச் சுற்றிவளைத்து சொல்வதற்குப் பதிலாக வழக்கை பெங்களூருக்கு மாற்றியதே தவறு என்று குமாரசாமி கூறியிருக்கலாம். ஏனென்றால், அவரது தீர்ப்பின் இந்த அம்சம் வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டதன் அடிப்படையையே தகர்க்கிறது. இதன் மூலம், “நான் பத்து பவானி சிங்கிற்குச் சமம்” எனக் காட்டியிருக்கிறார், நீதிபதி குமாரசாமி.
கட்டிடச் செலவு
நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் 1991-96 காலக் கட்டத்தில் ஜெயா-சசி கும்பலின் ஒட்டுமொத்த செலவு – புதிய பங்களாக்களைக் கட்டியது, பழைய பங்களாக்களை நவீனப்படுத்தியது, வளர்ப்பு மகனின் திருமணச் செலவு, தமிழகமெங்கும் நிலங்களை வாங்கிக் குவித்தது என்ற வகையில் 55,02,48,215 ரூபாயாக மதிப்பிட்டிருந்தார். இதில் சரிபாதி வளர்ப்பு மகனின் ஆடம்பர திருமணத்திற்கும், தோழிகள் உல்லாசமாக ஓய்வெடுப்பதற்கு பையனூர், கோடநாடு, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் பங்களாக்களைக் கட்டுவதற்கும், புதுப்பிப்பதற்கும் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வீடு, கடைகள் எனப் பல்வேறு வகையான கட்டிடங்களைக் கட்டுவதற்கும் புதுப்பிப்பதற்கும் செலவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக இலஞ்ச ஒழிப்புத் துறை தனது குற்றப் பத்திரிகையில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்களைக் கட்டுவதற்கும், புதுப்பிப்பதற்கும் ஜெயா-சசி கும்பல் அந்த ஐந்தாண்டுகளில் கிட்டதட்ட 27,79,88,945 ரூபாய் செலவழித்திருப்பதாகக் குற்றஞ்சுமத்தியிருந்தது. முதல் குற்றவாளியான ஜெயா இக்கட்டிடச் செலவுகளுக்கு 3,62,47,700 ரூபாய் மட்டுமே தான் செலவழித்ததாக வாதாடினார். இரண்டு தரப்பு சாட்சியங்களையும் பரிசீலித்த நீதிபதி குன்ஹா அரசுத் தரப்பு அக்கட்டிடங்களில் பதிக்கப்பட்டிருந்த கிரானைட் மற்றும் மார்பிள் கற்களை 1999-ம் ஆண்டு விலையில் மதிப்பீடு செய்திருந்ததைத் தள்ளுபடி செய்து, இந்தச் செலவை 22,53,92,344 ரூபாய் என நிர்ணயம் செய்தார்.
ஆனால், நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் கட்டிடச் செலவை வெறும் 5,10,54,060 ரூபாயாக நிர்ணயித்திருக்கிறார். நீதிபதி குன்ஹாவின் மதிப்பீட்டை வெட்டுவதற்கு அவர் குறிப்பிட்டுள்ள காரணம் வேடிக்கையானது மட்டுமல்ல, குதர்க்கமானதுமாகும். “அரசுத் தரப்பு பொதுப்பணித்துறையின் மதிப்பீட்டின்படி கட்டிடச் செலவை நிர்ணயித்திருக்கிறது. பொதுவாகவே, பொதுப்பணித்துறை, ஒப்பந்ததாரர்களுக்குக் காலம் தாழ்த்தி பணம் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, தனது மதிப்பீட்டை அதிகமாகவே நிர்ணயிக்கும்” எனக் கூறியிருக்கும் குமாரசாமி தனது மதிப்பீட்டை எப்படி நிர்ணயித்தார் என்பதைத் தீர்ப்பில் சொல்லவில்லை. அவர் சொல்லாவிட்டாலும், ஜெயா காண்பித்த செலவும், குமாரசாமி நிர்ணயித்துள்ள செலவும் நெருக்கமாக இருப்பது மட்டும் பளிச்செனத் தெரிகிறது.
திருமணச் செலவு
சுதாகரன் திருமணம்
சுதாகரன் திருமணம் : ஜெயா-சசி கும்பல் அடித்த கொள்ளையின் பகிரங்க சாட்சி
ஜெயா, மூன்றாவது குற்றவாளியான சுதாகரனின் திருமணத்தை நடத்துவதற்கு 6,45,04,222 ரூபாய் செலவழித்ததாகப் பல்வேறு சாட்சியங்களின் அடிப்படையில் குற்றஞ்சுமத்தியது, தமிழக இலஞ்ச ஒழிப்புத் துறை. ஆனால், ஜெயாவோ இத்திருமணத்திற்கு 28,67,520 ரூபாய் மட்டுமே தான் செலவழித்ததாகவும், மற்ற செலவுகளை மணமகள் வீட்டாரான சிவாஜி குடும்பத்தாரும், தனது கட்சிக்காரர்களும் கவனித்துக் கொண்டதாக ஒரு பச்சைப் பொயைத் துணிந்து சொன்னார்.
நீதிபதி குன்ஹா, தனது தீர்ப்பில் மணமகள் வீட்டார் மணமகனுக்கான 22 கோட்-சூட்டுகள் தைப்பதற்கு 1,41,025 ரூபாய் செலவழித்ததைத் தாண்டி வேறெந்த செலவையும் செயவில்லை என்பதைத் தக்க ஆதாரங்களுடன் நிறுவியிருக்கிறார். குறிப்பாக, சிவாஜியின் மூத்த மகனும், மணமகளின் தாய் மாமனுமான ராம்குமார், “இந்தத் திருமணத்திற்காகத் தனி வங்கிக் கணக்கு தொடங்கி, அதன் வழியாக 90 இலட்ச ரூபாய்க்கு மேல் தான் செலவழித்ததாக”ச் சாட்சியம் அளித்தார். ஆனால், ராம்குமார் அந்த வங்கிக் கணக்கின் ஒரிஜினல் பாஸ்புக்கைக்கூட நீதிமன்றத்திடம் சாட்சியமாக அளிக்கவில்லை. மாறாக, வங்கிக் கணக்கு எண்கூடத் தெரியாத அளவிற்கு ஏதோவொரு பாஸ்புக்கின் ஜெராக்ஸ் காப்பியை சாட்சியமாக அளித்து, நீதிமன்றத்தை ஏமாற்ற முனைந்தது, ஜெயா கும்பல். ஜெயா கும்பலின் இந்த தகிடுதத்தங்களையெல்லாம் அம்பலப்படுத்தி ஒதுக்கித் தள்ளிய நீதிபதி குன்ஹா, தனது தீர்ப்பில் இத்திருமணத்திற்கு முதல் குற்றவாளியான ஜெயா செலவழித்த தொகை மூன்று கோடி ரூபாய் என நிர்ணயம் செய்தார்.
ஆனால், நீதிபதி குமாரசாமியோ வருமான வரித்துறையிடம் ஜெயா திருமணச் செலவாகக் காட்டிய இருபத்தெட்டு இலட்ச ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்டு, மற்ற கோடிக்கணக்கான ரூபாய் பெறுமான செலவுகள் அனைத்தையும் மணமகள் வீட்டாரும், அ.தி.மு.க. தொண்டர்களும்தான் செய்ததாகத் தீர்ப்பு எழுதியிருக்கிறார். திருமணச் செலவுகளை மணமகள் வீட்டார்தான் செய்தனர் என்பதற்கு அவர் எவ்வித ஆதாரத்தையும் காட்டவில்லை; கேட்கவுமில்லை. மாறாக, இந்து மத கலாச்சராம், பழக்கவழக்கங்களின்படி மணமகள் வீட்டார்தான் திருமணச் செலவுகளைச் செய்வார்கள் என மட்டை அடியாக அடித்து ஜெயா கும்பலைக் காப்பாற்றிவிட்டார்.
ஜெயா கும்பல், ராம்குமாரை முன்னிறுத்தி சிறப்பு நீதிமன்றத்தை ஏமாற்ற முனைந்ததைப் பற்றிப் பேசாத நீதிபதி குமாரசாமி, பந்தல் அலங்காரச் செலவுகளை அரசுத் தரப்பு அளவுக்கு மீறி மிகைப்படுத்திக் காட்டியிருப்பதாகக் குறிப்பிடுகிறார். “அரசுத் தரப்பு திருமணப் பந்தல்களை நேரடியாகப் பார்த்து மதிப்பீடு செய்யவில்லை. பந்தல்களின் வரைபடங்களை வைத்துக்கொண்டு செலவு கணக்கை மதிப்பீடு செய்துள்ளனர். வரைபடங்களின்படிதான் பந்தல்கள் அமைக்கப்பட்டிருக்கும் என நிச்சயமாகக் கூறமுடியுமா?” எனத் தனது தீர்ப்பில் குமாரசாமி பாயிண்டுகளை அடுக்கியிருக்கிறார்.
சுதாகரன் திருமணம் 1995-ல் நடந்தது. சொத்துக்குவிப்பு வழக்கு 1996-ல் பதியப்பட்டு அதன் பிறகுதான் விசாரணை தொடங்கியது. இந்த நிலையில் பந்தலை நேரடியாகப் பார்த்து மதிப்பீடு செய்யவில்லை என ஒரு நீதிபதி கூறினால், அவருடைய தர்க்க அறிவு நம்மைத் திடுக்கிடத்தான் வைக்கிறது.
பரிசுப்பொருள்
கோடநாடு எஸ்டேட் மற்றும் பங்களா
ஜெயா-சசி கும்பலால் வளைத்துப் போடப்பட்ட கோடநாடு எஸ்டேட் மற்றும் பங்களா
இலஞ்சத்தின் இன்னொரு பெயர்தான் அன்பளிப்பு என்பது ஊரறிந்த உண்மை. அப்படிபட்ட அன்பளிப்புகளை வருமானமாக எடுத்துக் கொள்ளலாம் எனத் தனது தீர்ப்பில் கூச்சமின்றிக் கூறியிருக்கிறார், நீதிபதி குமாரசாமி.
1992-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் நாள் தனது 44-வது பிறந்த நாளைக் கொண்டாடியபொழுது, தனது கட்சியின் தொண்டர்கள் பணமாகவும் பொருட்களாகவும் ஏராளமான அன்பளிப்புகளைத் தனக்கு வழங்கிய வகையில் 2,15,00,012 ரூபாய் வருமானம் வந்தது. மேலும், வெளிநாட்டில் வசித்த ஒருவர் தனக்கு 77,52,059 ரூபாயை வங்கி வரைவுக் காசோலை மூலம் அன்பளிப்பாக அளித்தார். இந்த அன்பளிப்புகளுக்கு உரிய வருமான வரியைச் செலுத்தியிருக்கிறேன்.எனவே, இந்த அன்பளிப்புகளை வருமானமாகக் கருத வேண்டும் என்பது குற்றவாளி ஜெயா தரப்பு வாதம்.
“பொது ஊழியராக இருப்பவர் அன்பளிப்புகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டால், இலஞ்சம் வாங்குவதற்கு சட்டம் உருவாக்கி வைத்துள்ள தடைகளை அன்பளிப்பு என்ற வழியில் எளிமையாகக் கடந்துவிடுவார்கள்” என்ற வாதத்தைத் தனது தீர்ப்பில் முன்வைத்து ஜெயா-சசி கும்பலின் இந்த ‘வருமானத்தை’ ஒதுக்கித் தள்ளிய நீதிபதி குன்ஹா, ஜெயா பெற்ற அன்பளிப்புகள் குறித்து பலத்த சந்தேகத்தையும் தனது தீர்ப்பில் பதிவு செய்துள்ளார்.
“1987-88 முதல் 1992-93 வரையிலான ஆண்டுகளுக்கான தனது வருமான வரிக் கணக்கை, 1992 நவம்பரில் ஜெயா தாக்கல் செய்தபொழுது, அதில் தனது 44-வது பிறந்தநாளில் பரிசாகக் கிடைத்த ரொக்கம், நகைகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. சில ஆண்டுகள் கழித்துதான், தனக்குப் பிறந்த நாள் பரிசுகள் கிடைத்த விவரத்தைக் குறிப்பிட்டு வருமான வரித்துறைக்குக் கடிதம் எழுதி தெரியப்படுத்தி இருக்கிறார். அந்த சமயத்திலும்கூட எந்த பிறந்த நாளில் எவ்வளவு பரிசுகள் கிடைத்தன என்பது பற்றிய விவரங்களைக் குறிப்பிடவில்லை. ‘இந்த வருமானங்களை எந்த வழியில் வந்தது என்று தெரியாத வருமானங்கள்’ என வருமானவரித் துறை பதிவு செய்திருக்கிறது. மேலும், ஜெயாவிற்கு வெளிநாட்டிலிருந்து வந்ததாகக் கூறப்படும் 77 இலட்ச ரூபாய்க்கான காசோலை குறித்து வழக்கும் நடந்து வருகிறது” எனத் தனது தீர்ப்பில் விவரித்துள்ள நீதிபதி குன்ஹா, இவற்றின் அடிப்படையில், “பரிசுப் பொருட்களாக வந்திருந்தாலும், அவற்றுக்குச் சரியான ஆதாரங்கள் இருந்தாலும்கூட, அவற்றை ஜெயலலிதா பெற்று தனது உடமையாக்கிக் கொண்டது ஊழல் தடுப்புச் சட்டப்படி குற்றம்தான்” என அறிவித்தார்.
சுதாகரன் திருமணப் பந்தல்நீதிபதி குன்ஹாவின் வாதங்களில் ஒன்றுக்குக்கூட நீதிபதி குமாரசாமி பதில் அளிக்கவில்லை என்பது மட்டுமல்ல, பரிசுப் பொருட்கள் பற்றித் தாமதமாக வருமான வரித் துறைக்குத் தெரிவித்திருப்பதெல்லாம் ஒரு விசயமே இல்லை என்ற முறையில் இந்த அன்பளிப்பு விவகாரத்தை அலட்சியமாகக் கையாண்டுள்ளார். மேலும், வெளிநாட்டில் இருந்து 77 இலட்ச ரூபாய் பரிசாக வந்தது தொடர்பாக சி.பி.ஐ. தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் இருப்பதையும் அலட்சியப்படுத்திவிட்டு, ஜெயாவுக்கு 44-ஆவது பிறந்த நாளுக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களில் இருந்து ஒன்றரைக் கோடி ரூபாயை வருமானமாகக் கணக்குக் காட்டியிருக்கிறார்.
நமது எம்.ஜி.ஆர்.
பரிசுப் பொருள் விவகாரத்தைவிடப் பலமடங்கு மோசடிகள் கொண்டது நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை டெபாசிட் திட்டம். சொத்துக் குவிப்பு வழக்கு தம் மீது பாய்ந்த பிறகு, அதிலிருந்து தப்பிக்கும் நோக்கத்தோடுதான் இப்படியொரு டெபாசிட் திட்டத்தை உருவாக்கியது, ஜெயா- சசி கும்பல். இதன் மூலம் தமக்கு 14 கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் வந்ததாக ஜெயா-சசி கும்பல் வாதாடி வந்தது. இதற்குரிய ஆதாரங்கள் எதையும் காட்டாமல், துணிந்து வருமான வரித் துறைக்கு இந்த வசூல் தொடர்பான கணக்கினைக் கொடுத்தது. வருமான வரித்துறை அதிகாரிகள் உரிய ஆதாரங்களைக் கேட்டபொழுது, அதற்குரிய ரசீதுகளை காரில் கொண்டுவரும்பொழுது தொலைந்து போவிட்டதாக ஒரு அண்டப்புளுகை அவிழ்த்துவிட்டதோடு, இது தொடர்பாக புகாரும் பதியப்பட்டிருப்பதாக கதையளந்தது. பின்னர், மோசடிக்கு மேல் மோசடியாக, காணாமல் போன ரசீதுகள் திரும்பக் கிடைத்துவிட்டதைப் போல போலியான ரசீதுகளைத் தயாரித்து வருமான வரித் துறையிடம் அளித்தது.
இந்த மோசடிகள் ஒவ்வொன்றையும் ஆதாரங்களோடு நிரூபித்த நீதிபதி குன்ஹா, இந்த டெபாசிட் திட்டமே போலியானது எனத் தீர்ப்பில் உறுதிப்படுத்தினார். மேலும், 1991-96 கால கட்டத்தில் ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் மூலம் தமக்கு 4.19 கோடி ரூபாய் வருமானமாகக் கிடைத்தது என ஜெயா-சசி தரப்பு வாதாடியது. இந்த வருமானத்தை நிரூபிப்பதற்குத் தரப்பட்ட வரவு-செலவு அறிக்கையும் போலியானது என விசாரணையின் போது நிரூபணமானதால், இந்த வருமானத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் தள்ளுபடி செய்தார் நீதிபதி குன்ஹா.
நீதிபதி குமாரசாமி நமது எம்.ஜி.ஆர். டெபாசிட் திட்டத்தின் மூலம் கிடைத்ததாகச் சொல்லப்பட்ட 14 கோடி வருமானத்தைக் கணக்கில் கொள்ளவில்லையென்றாலும், இது தொடர்பான குற்றவாளிகள் தரப்பு சாட்சியங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும் என ஜெயா கும்பலுக்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறார். மேலும், ஜெயா பப்ளிகேஷன்ஸ் மூலம் 4 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்ற குற்றவாளிகளின் தரப்பு வாதத்தை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளார்.
“வருமான வரித் துறைக்குக் கணக்கு தாக்கல் செய்து, வரியைக் கட்டிவிட்டார்கள்” என்ற ஒற்றை வாதத்தை முன்வைத்தே, ஜெயா-சசி கும்பலின் தில்லுமுல்லு கணக்குகள் அனைத்தையும் தனது தீர்ப்பில் வெள்ளையாக்கிவிட்டார், நீதிபதி குமாரசாமி. சுதாகரன் பெயரில் தொடங்கப்பட்ட சூப்பர் டூப்பர் நிறுவனம் ஆறே மாதத்தில் கடையைக் காலிசெய்துவிட்டது. ஆனாலும், அந்த நிறுவனம் தனது சந்தாதாரர்களிடமிருந்து வசூலித்ததாகச் சொல்லப்பட்ட ஒரு கோடி ரூபாயையும்; ஜெயாவும் சசியும் பங்குதாரர்களாக இருந்து நடத்தி வந்த ஜெராக்ஸ் கடையான சசி எண்டர்பிரைசஸ் மூலம் 25 இலட்ச ரூபாயும்; ஹைதராபாத் திராட்சை தோட்டத்திலிருந்து 52,50,000 ரூபாயும் வருமானமாக வந்ததாகக் கணக்குக் காட்டியிருக்கிறார், அவர்.
லெட்டர் பேடு கம்பெனிகள்
நீதிபதி மைக்கேல் டி குன்ஹா
ஜெயா-சசி கும்பலின் மோசடி வரவு-செலவு கணக்குகளை அம்பலப்படுத்தி, அவர்களை ஊழல் குற்றவாளிகள்தான் என நிறுவி தீர்ப்பளித்த நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.
1991-ம் ஆண்டில் தமிழக முதல்வராக ஜெயா பதவியேற்றபொழுது, ஜெயா-சசிகலா இருவரும் சேர்ந்து இரண்டு நிறுவனங்களை – ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ் – மட்டும்தான் நடத்திவந்தனர். அதன் பிறகு கம்பெனிகளின் எண்ணிக்கை தடாலடியாக 32 ஆக அதிகரித்தது. புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் திட்டமிட்டே ஜெயாவைத் தவிர்த்த மற்ற மூன்று குற்றவாளிகளைப் பங்குதாரர்களாகக் கொண்டு தொடங்கப்பட்டன. இந்த நிறுவனங்களின் பெயரில் 52 வங்கிக் கணக்குகளும் தொடங்கப்பட்டன.
சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான காலகட்டத்தில் (1991-96) ஜெயா பப்ளிகேஷன்ஸ், நமது எம்.ஜி.ஆர். மற்றும் புதிதாகத் தொடங்கப்பட்ட கம்பெனிகளுள் குறிப்பிட்ட ஆறு நிறுவனங்களுக்கு இடையே இலட்சக்கணக்கில் பணப்பரிவர்த்தனைகள் குறுக்குநெடுக்குமாக நடந்தன. இதன் மூலம் இந்த நிறுவனங்கள் ஏதோ மிகப்பெரிய வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததைப் போலத் தோற்றம் உருவாக்கப்பட்டது.
நமது எம்.ஜி.ஆர்., ஜெயா பப்ளிகேஷன்ஸ், ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ், வினோத் வீடியோ விஷன், மஹாசுப்புலெட்சுமி கல்யாண மண்டபம் ஆகியவற்றின் வங்கிக் கணக்குகளில் நடந்துள்ள பல கோடி ரூபாய் மதிப்புடைய பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வரவு-செலவு அறிக்கைகள், இலாப நட்டக் கணக்குகள் அனைத்தும் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என்பது ஆடிட்டர்கள் அளித்த வாக்குமூலங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டது.
சசிகலாவுக்கும் இளவரசிக்கும் ஆடிட்டராக இருந்த பாலாஜி, “இந்த நிறுவனங்கள் எந்தக் காலகட்டத்திலும் எதையும் உற்பத்தி செய்யவுமில்லை. பொருட்களை வாங்கி விற்கவுமில்லை. ஆனால், நிறுவனங்களின் கணக்குகளில் மட்டும் பணப்பரிவர்த்தனைகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தன” எனச் சாட்சியம் அளித்தார்.
போயசு தோட்டத்து வீட்டிலிருந்துதான் ஒவ்வொரு முறையும் இலட்சக்கணக்கான ரூபாய் பணம் பைகளிலும் சூட்கேஸ்களிலும் அடைக்கப்பட்டு வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதும், போயஸ் தோட்டத்தில் டிரைவராக வேலை பார்த்த ஜெயராமன்தான் வங்கிக்குச் சென்று இந்தப் பணத்தைப் போட்டிருப்பதும், சசிகலாதான் ஜெயராமனிடம் இந்த வேலைகளை ஒப்படைத்தார் என்பதும் சிறப்பு நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்பட்டது.
03-caption-2இவற்றுக்கெல்லாம் அப்பால், வடக்குக் கடற்கரை துணை பத்திரப் பதிவாளரும், தோட்டக்கலைத் துறை அதிகாரி ராதாகிருஷ்ணனும் அளித்துள்ள சாட்சியத்தில், போயஸ் தோட்டத்து வீட்டில் வைத்து பதிவு செய்யப்பட்ட ஆறு பத்திரங்கள் யார் வாங்குகிறார் என்ற விவரம் இல்லாமல், விதிமுறைகளை மீறிப் பதிவு செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினர்.
இவற்றின் அடிப்படையில்தான், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூன்று குற்றவாளிகளும் முதல் குற்றவாளியான ஜெயாவின் பினாமிகளாகச் செயல்பட்டனர்; குற்றவாளிகள் நால்வரும் கூட்டுச் சதியில் ஈடுபட்டனர் என நிரூபித்தார், நீதிபதி குன்ஹா. “குற்றவாளிகள் நால்வரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர் எனக் கூறுவதற்கு இடமில்லை. ஜெயா மற்ற மூவரையும் தனது வீட்டில் மனிதாபிமான அடிப்படையில் தங்க அனுமதித்தார் என எடுத்துக் கொள்ளவும் முடியாது. மாறாக, ஜெயாவின் சொத்துக்களுக்கு பினாமியாகச் செயல்படுவது என்ற சதித் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கத்தின் அடிப்படையில் மட்டும்தான் குற்றவாளிகள் மூவரும் முதல் குற்றவாளி வீட்டில் தங்கி வந்தனர்” என்ற முடிவுக்கு வருகிறார், நீதிபதி குன்ஹா.
குன்ஹாவின் இந்த தர்க்க நியாயத்திற்குப் பதில் அளிக்காத நீதிபதி குமாரசாமி, “சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் தனித்தனியாகத் தேசிய வங்கிகளிடமிருந்தும் தனியாரிடமிருந்தும் கடன்களை வாங்கியுள்ளனர். இந்தக் கடன்கள் வழியாகத்தான் தங்களது பெயர்களில் சொத்துக்களை வாங்கியுள்ளனர். அவர்களுக்குப் பணம் வந்த வழியும் சட்டபூர்வமானது, அவர்களது நோக்கமும் சட்டபூர்வமானது. எனவே, இவர்கள் மூவரும் ஜெயாவிற்கு பினாமியாகச் செயல்படவுமில்லை; கூட்டுச் சதியிலும் ஈடுபடவுமில்லை. குற்றவாளிகள் மூவரும் முதல் குற்றவாளியுடன் ஒரே வீட்டில் வசித்தனர் என்பதைக் கொண்டு கூட்டுச் சதியில் ஈடுபட்டனர் என முடிவு செய்ய முடியாது” எனக் குறிப்பிட்டு குற்றவாளிகள் நால்வரையும் விடுவித்துள்ளார்.
கருப்புப் பண முதலைகள் அனைவரும் சட்டத்திற்குப் புறம்பாகத் தாம் சம்பாதித்த சொத்துக்களை வெள்ளையாக்குவதற்குக் கடன் என்ற வழியைப் பயன்படுத்திக் கொள்வது இன்று சர்வசாதாரணமாக நடந்துவரும் நிலையில், நீதிபதி குமாரசாமி குருட்டுத்தனமாக சசிகலாவும், சுதாகரனும், இளவரசியும் வாங்கிய கடன்களைக் காட்டி, அவர்கள் ஜெயாவின் பினாமிகள் அல்ல என வாதிடுகிறார்.
அரசு அதிகாரிகளை போயசு தோட்டத்துக்கு வர உத்தரவிட்டு, பெயர் குறிப்பிடாமல் ஆறு பத்திரங்களைப் பதிவு செய்ததை நீதிபதி குன்ஹா பினாமி குற்றத்துக்கும், கூட்டுச் சதிக்கும் ஆதாரமாகக் காட்டுகிறார். ஆனால், நீதிபதி குமாரசாமியோ, “யார் வாங்குகிறார்கள் என்ற விவரம் இல்லாமல் பத்திரப் பதிவு நடந்திருப்பதை, சொத்துக்கள் குறைந்த மதிப்பில் பதிவு செய்யப்பட்டிருப்பதை”க் குற்றங்களாக, சதியாகக் கருதாமல், அவை குறித்து சம்மந்தப்பட்ட துறைதான் விசாரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு நழுவிக் கொள்கிறார்.
1970-களில் உச்சநீதி மன்றம் கிருஷ்ணானந்த் அக்னிகோத்ரி என்பவர் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் “ஒரு பொது ஊழியருக்கு 10 சதவீதம் வரை கணக்கில் வராத வருமானம் இருக்கலாம்” என வழங்கப்பட்ட தீர்ப்புக்குப் பொருந்தும் வகையில் தனது தீர்ப்பை எழுதியிருக்கும் நீதிபதி நீதிபதி குமாரசாமி, அதற்காகவே ஜெயாவின் வருமானத்தையும் செலவுகளையும் தன்னிச்சையாக மாற்றி அமைத்திருக்கிறார்.
தேசிய வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட 10 கோடி ரூபாய் கடன்களைப் பட்டியல் போட்டுவிட்டு, அதனை மிகவும் அலட்சியமாக 24 கோடி ரூபாய் எனப் பிழையாகக் கூட்டிப் போடுகிறார். இலஞ்சக் குற்றச்சாட்டு வழக்குகளில், குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பு தமது வருமானத்திற்கு வரி கட்டிவிட்டோம் என வாதிடுவதை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை எனப் பல முன்னுதாரணமான தீர்ப்புகள் இருந்தும், நீதிபதி குமாரசாமி அவற்றையெல்லாம் குப்பையைப் போல ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஜெயா-சசி கும்பலுக்குத் தனிச் சலுகை அளித்து, அவர்களது இலஞ்சப் பணத்தை வருமானங்களாகச் சேர்த்துக் கொள்கிறார்.
ஜெயா-சசி கும்பல் தம் மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடுக்கப்பட்டவுடன், தமது வருமானத்தை அதிகரித்துக் காட்ட நமது எம்.ஜி.ஆர். டெபாசிட் திட்டம் உள்ளிட்டுப் பலவகையான போலியான, மோசடியான வரவு-செலவு அறிக்கைகளைத் தயார் செய்தது போலத்தான் இந்தத் தீர்ப்பும் தயாரிக்கப்பட்டுள்ளது. நாலும் மூனும் எட்டு என்ற கூட்டுப் பிழை நீதிபதி குமாரசாமியைக் கத்துக்குட்டித்தனமான கணக்குப் பிள்ளை எனக் காட்டிவிட்ட போதும், அப்பிழை ஒரு நீதிபதியின் பேனாவிலிருந்து வந்துவிட்டதால் சட்டபூர்வ தகுதியைப் பெற்றுவிட்டது.
                                                                                                                                            – செல்வம்

நன்றி:-
புதிய ஜனநாயகம், 
ஜூன் 2015

=======================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?