செ[ஜெ]ஞ்சோற்றுக்கடன்.

தா. பாவின்  செஜெஞ்சோற்றுக்கடன்.
---------------------------------------------------------------------------------
செஞ்சோற்றுக்க்கடனைக்கழிப்பதில் புராணத்தில் வரும் கர்ணனை அய்யா தா.பாண்டியன் விஞ்சி விட்டார்.
ஜெயலலிதா  காட்டும் வேட்பாளரை வெற்றி பெற வைக்கவே அனைத்து தடாலடி வேலைகளையும் காவல் துரை,அதிகாரிகள்,தேர்தல் ஆணையம்,பணம்,அடியாட்கள் துணையுடன் செய்யும் அதிமுகவினர் தங்கள் தலைவி ஜெயலலிதாவே தேர்தலில் இடைத்தேர்தலில் நின்றால் என்ன வரத்து வருவார்கள்.
எதிர்த்து நிற்பவர் தனது வாக்கைக்கூட தனக்கு போடவிட மாட்டார்களே.
இவரகள் விதி மீறல்களை யாரிடம் சொல்லி அழ முடியும்.காவல்துறையிடமா.அது  ஜெயலலிதா ஊழல் செய்து உள்ளே போனதுக்கு கருப்புச்சின்னம் அணிந்து கடமையாற்றிய கிளைக்கழகம்.
தேர்தல் ஆணையம் அது இந்திய அளவு அதிமுக ஆதரவாணையம்.அதிமுகவினர் பணம் கொடுக்கவும்,அதை தடுக்க திமுகவினர் வந்தால் கைது செய்யவுமே 144 போட்ட அமைப்பு.அதிமுகவினர் பணம் கொடுத்து கையுங்களவுமாக மாட்டிக்கொண்டால் அதை பிடித்த திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யும் கடமை தவறா கழகம்.
இந்த நிலைகளை எண்ணித்தானே.திமுக உடபட பல கட்சிகள் இந்த இடைத்தேர்தலை கை விட்டது.
ஜெயலலிதா போட்டியின்றி தேர்வாவார் என்று எண்ணிய நிலையில் டராபிக் ராமசாமி போட்டியிட மனு செய்தார்.அவர் எல்லா கட்சிகளின் ஆதரவையும் கேட்டார்.திமுக அவருக்கு உள்ளூர ஆதரவு கொடுக்கும் நிலை.அதே போல் பல கட்சிகள் தங்கள் ஆதரவை தர எண்ணிய நிலையில் மூக்கு வேர்த்த ஜெ ஆதரவு   தா.பாண்டியன் டிராபிக் ராமசாமி காப்புத்தொகை வாங்கி விட்டால் தனது தலைவிக்கு அசிங்கம் என்று எண்ணி ஆளுக்கு முந்தி தனது பினாமி தலைவர் முத்தரசன் மூலம் சிபிஐ போட்டியிடும் என்று அறிவித்து விட்டார்.
அதற்கு மற்றொரு ஜெ ஆதரவு ஜி.ராம கிருஷ்ணன் ஆதரவையும் தெரி வித்து விட்டார்.
சம்பத்துக்கு இனொவா,தா.பா மகனுக்கு பலகலைப் பதவி.
முதலில் ரா.கி.நகர் தொகுதி முன்பு சிபிஐ போட்டியிட்ட இடம் அல்ல.அங்கு கட்சியினர் எண்ணிக்கையும் அளவுக்கதிகம் இல்லை. தொழிற்சங்கம் பலமும் அமைப்புகளும் அங்கில்லை. ஜெயலலிதா வெற்றி முதல்வர் பதவிக்கு மிகவும் அவசியம்.அதற்காக அதிமுகவினர் என்னவென்றாலும் செய்யும் நிலை.பின் எதற்கு சிபிஐ அங்கு போட்டி?
டிராபிக் ராமசாமி எந்த கட்சியின் ஆதரவுமின்றி காப்புத்தொகையை இழக்க வேண்டும்.அதன் மூலம் தனது ஜெ விசுவாசத்தை ஜெயாவுக்கு உணர்த்த வேண்டும்.தனது மகனுக்கு பல்கலைக் கழகத்தில் ஜெ தந்த பதவிக்கு அதன் மூலம் நன்றி செலுத்த வேண்டும்.
இரண்டாவது கட்சியில் தனக்கு எதிராக பலம் பொருந்திய தலைவராக வளரும் எதிரி மகேந்திரனை இங்கு வேட்பாளராக நிறுத்தி  தெருத்தெருவாக அலைய விட்டு கடைசியில் கேவலமாக காப்புத் தொகை இழந்து அசிங்கப்பட வைக்க வேண்டும்.
அதுவும் டிராபிக் ராமசாமியை விட குறைவான வாக்குகளைப்பெற்று.
 மொத்ததில் தா.பாண்டியன் சிகப்புத்துண்டணிந்த சகுனி.கம்யுனிஸ்ட் என்று சொல்லித்திரியும் ஜெ அடிமை.
அவரை இன்னமும் சிபிஐ கட்சியினர் நம்பித்திரிவதுதான் கொடுமை.
மாதர் சங்கங்கள் மூடச்சொல்லுகின்றன.
தான் மீண்டும் மாநிலச் செயலாளராக வரமுடியாது என்பது தா.பா-வுக்கு தெரியும். அதனால் தனக்குப் பதிலாக இரா.முத்தரசனை செயலாளராக்க அவர் முடிவெடுத்தார். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தானும் போட்டியிடப் போவதாகச் சொன்னார். ‘அவர் போட்டியிடாமல் இருக்க வேண்டுமானால் இப்போதுள்ள கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர்கள் ஆறு பேர் உட்பட நாங்கள் குறிப்பிடும் 12 நபர்களை கவுன்சிலுக்கோ கட்டுப்பாட்டுக் குழுவுக்கோ தேர்வு செய்யக் கூடாது’ என்று தா.பாண்டியன் தரப்பினர் நிபந்தனை வைத்தனர்.
கட்டுப்பாட்டுக் குழுதான் தா.பா. மீது சொல்லப்பட்ட புகார்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது. ஆக, மகேந்திரனுக்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடிய 12 பேரை மாநிலக் குழுவுக்கு வரவிடாமல் முன்கூட்டியே தவிர்த்து விட்டனர்.
 வாக்கெடுப்பில்
முத்தரசனுக்கு 63 ஓட்டுகளும் மகேந்திரனுக்கு 61 ஓட்டுகளும் கிடைத்தன. இரண்டு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப் போனார் மகேந்திரன்.
மாநாட்டுக்கு வராதவர்களையும் கவுன்சில் உறுப்பினர்களாக தேர்வு செய்யலாம் என்ற கட்சியின் துணை விதியை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மாநாட்டுக்கு வராத சிலரையும் கவுன்சில் உறுப்பினர்களாக ஆக்கினார்கள்.
 எப்படியாவது தா.பாண்டியனை மீண்டும் பதவிக்கு வரவிடாமல் தடுத்தால் போதும் என்பதால் அவர் தரப்பு விதித்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு மற்றவர்கள் போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்கள்.
 இவ்வாறு அந்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அப்படியானால் இனி மகேந்திரனின் நிலை என்ன?
 தா.பாண்டியனால் பதவிக்கு வந்த முத்தரசனின் நடவடிக்கைகள் சுதந்திரமாக இருக்குமா என்று அவர்களைக் கேட்டபோது, “மகேந்திரன் இப்போதுள்ள மாநில துணைச் செயலாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார். நல்லகண்ணுவும் தா.பாண்டியனும் இப்போது தேசிய செயற்குழு உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
 இவர்களுக்குப் பதிலாக முத்தரசனும் மகேந்திரனும் நியமிக்கப்படலாம். தா.பாண்டியன் ஆதரவில் பதவிக்கு வந்திருந்தாலும் முத்தரசனால் எதையும் மூடி மறைக்க முடியாது’’ என்று அவர்கள் தெரிவித்தனர்.
========================================================================
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு தொழிற்சங்கத்துக்குச் சொந்தமாக திருச்சியில் இருந்த 5,000 சதுர அடி பரப்பளவு கொண்ட ரூ.3 கோடி சந்தை மதிப்புகொண்ட நிலத்தை, ரூ.20 லட்சத்துக்கு அக்கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த தா.பாண்டியன், சென்னையைச் சேர்ந்த ரபீக் என்பவருக்கு விற்றுள்ளார்.
அதற்கு அப்போது கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதேநேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் தா.பாண்டியனின் செயலைக் கண்டித்ததுடன், இதுகுறித்து கட்சியின் அகில இந்திய தலைமையிடம் புகார் செய்திருந்தனர்.
தா.பாண்டியன் மீது நில மோசடி புகார். 
இந்நிலையில், முறைகேடாக நடந்த நில விற்பனையை ரத்து செய்யக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க அமைப்பான ஏஐடியூசி-யின் திருச்சி மாவட்ட செயலாளர் மணி, திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.சேகர், திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் நேற்று புகார் மனு அளித்தார்.
அதில், சவுத் மெட்ராஸ் எலெக்ட்ரிசிட்டி ஒர்க்கர்ஸ் யூனியன் என்ற அமைப்புக்குச் சொந்தமான, திருச்சி பழைய குட்ஷெட் சாலையில் உள்ள 5,000 சதுர அடி நிலத்தை, சென்னை பெரம்பூரில் வசிக்கும் ரபீக் அகமது என்பவருக்கு ரூ.20 லட்சத்துக்கு 22.03.2012 அன்று தா.பாண்டியன் கிரயம் செய்து கொடுத்துள்ளார். இதற்கு தென்னூர் இணை சார்பதிவாளர் உடந்தையாக இருந்துள்ளார். மேலும் ஆவண எழுத்தர் எஸ்.ஜூலியன் செபாஸ்டியன் என்பவர் சாட்சிக் கையெழுத்திட்டு மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
எனவே, திட்டமிட்டு கூட்டுச் சதி செய்து போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி கிரய நடவடிக்கை மூலம் தொழிற்சங்க சொத்தை அபகரித்த தா.பாண்டியன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” என அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.
=======================================================================
10% ஊழல் செய்ய அனுமதியா?

ஜெயலலிதாவின் சொத்துக்கள் அவரது வருமானத்தைவிட 200 சதவீதம் அதிகம் என்று ஜெயலலிதாவின் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராக இருக்கும் கர்நாடக அரசின் சிறப்பு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா கூறினார்.
இதுதொடர்பாக ஜூன் 5 `தி எகனாமிக் டைம்ஸ்’ நாளேட்டில் அவரது நேர்காணல் வெளிவந்துள்ளது. 
அதில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:

நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்வதில் தாமதம் ஏன்?

பொதுவாக ஒரு சிறப்பு விடுப்பு மனுதயார் செய்திட ஓரிரு வாரங்கள் ஆகலாம். மேலும், இப்போது உச்சநீதிமன்றத்திற்கு கோடைக்கால விடுமுறை. எனவேவிடுமுறையில் பணியாற்றும் அமர்வாயம், எங்கள் மனுவை ஓர் அவசர முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதாது.எங்கள் மனுவை ஏற்காமல் போகலாம்.எனவே அநேகமாக ஜூலை 1க்குப் பின்னர் எங்கள் மனுவைத் தாக்கல் செய்வோம்.
ஆனால் மேல்முறையீடு செய்வது தொடர்பாக கர்நாடக அரசாங்கம் இழுத்தடித்ததே?

மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தீர்மானித்தால், அரசாங்கத்தின் சட்டச் செயலாளர்தான் அதுதொடர்பான முடிவினை எடுக்க முடியும். ஆனால், இந்த வழக்கில் ஒரு முதல்வர் சம்பந்தப்பட்டிருப்பதால் கர்நாடக முதல்வரும், கர்நாடக அமைச்சரவையும் அமர்ந்து ஒரு கூட்டு முடிவு எடுத்திருக்கிறது. இது தொடர்பாக நிச்சயமாக நான் சந்தோஷப்படுகிறேன். சட்டத்திற்கு உட்பட்டு இது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கில் எந்த அளவிற்கு அரசியல் நிர்ப்பந்தம் இருக்கிறது?

சட்ட வல்லுநர்களின் அறிவுரையின்படி இந்த வழக்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறதேயொழிய, வேறெந்தக் காரணத்தினாலேயும் அல்ல. உச்சநீதிமன்றத்தால் இந்த அரசுக்கு அளிக்கப்பட்டிருந்த பொறுப்பை அது நிறைவேற்றாமல் இருந்திருந்தால்தான் அது தன் கடமையிலிருந்து நழுவியதாகக் கருதப்பட்டிருக்கும். 
குற்றம்சாட்டப்பட்டவர் தமிழக முதல்வராக இருந்தார் என்பதற்காகஎந்தச் சலுகையும் காட்டப்படவில்லை. காங்கிரசில் ஒரு பிரிவினர் மேல்முறையீட்டுக்கு எதிராக முதல்வருக்கு அறிவுறுத்தினார்கள். 
ஆனாலும் மற்றவர்கள் இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று எனக்கே கூட கடிதம் எழுதினார்கள்.

இந்த வழக்கில் வாதிடுவதற்கு உங்களுக்கு அடிப்படையாக இருப்பவை என்ன? 

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புரையில் சட்டரீதியாகவும், உண்மைகளின் அடிப்படையிலும், கணிதரீதியாகவும் பிழைகள் இருக்கின்றன. குற்றம்சாட்டப்பட்டவரால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள வருமானங்களுக்கான ஆதாரங்களை நாம் வெறுமனே கூட்டிப்பார்த்தாலேகூட, அவரது வருமானத்தைவிட 200 சதவீதத்திற்கும் அதிகமாக அவருக்கு சொத்துக்கள் இருப்பது தெரியவரும். 
அவருக்கான கடன்களைச் சேர்த்ததில் பிழைகள் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. 
இவையன்றி, கட்டுமானத்திற்குச் செலவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் கூறியிருப்பதிலும் ஏராளமான முரண்பாடுகள் காணப்படுகின்றன.
 ஜெயா பப்ளிகேஷ ன்ஸ் நிறுவனத்திலிருந்து வருமானம் என்பது, எங்களிடம் உள்ள கணக்கின்படி, ஒன்றுமேஇல்லை. 
ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர் அது 1.15 கோடி ரூபாய் என்று கூறியிருக்கிறார். ஆயினும் தீர்ப்புரையில் இந்தத்தொகை 4 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 
அதாவது குற்றம்சாட்டப்பட்டவரே கூறியதைவிட 2 கோடியே 85 லட்சம் ரூபாய் அதிகம்.

குற்றம்சாட்டப்பட்டவரின் சொத்தின் மதிப்பு அவரது வருமானத்தைவிட மிகையாக இருப்பது 10 சதவீதத்திற்குக் குறைவுதான் என்றும், கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி வழக்கின்படி அது அனுமதிக்கப்படக் கூடியதே என்றும் கூறப்படுவது குறித்து என்ன கூறுகிறீர்கள்?

அக்னிஹோத்ரி வழக்கை எல்லா வழக்கிற்கும் ஒரு கணித சூத்திரம் போன்றோ அல்லது அறிவியல் சூத்திரம் போன்றோ பிரயோகிக்க முடியாது. ஒருவரின் வருமானம் 10 ஆயிரம் கோடிரூபாயாக இருந்து, அதற்கும் மிகையாக அவர் 900 கோடி ரூபாய் வைத்திருக்கிறார் என்றால், அதனை அனுமதிக்கப்படக்கூடியதே என்று நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? 
அது 40 ஆயிரம் ரூபாய் அல்லது 50 ஆயிரம் ரூபாய் என்கிற அளவிற்கு இருப்பின், அதனை மிகச்சிறிய அளவிலானது என்றோ புறக்கணிக்கத்தக்கது என்றோ கூறலாம். 
மேலும் ஒருவர் 10 சதவிகிதம் ஊழல் செய்து கொள்ளலாம் என்று தீர்ப்பே வழங்குவது நீதித்துறை ஊழலுக்கு எதிராக கண்டிப்புடன் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிரானது அல்லவா.
இதனையும் சிறப்பு விடுப்பு மனுவில் நாங்கள் எழுப்பிட இருக்கிறோம், உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிராகவும் வாதிட இருக்கிறோம்.

எவ்வளவு விரைவில் உங்கள் சிறப்பு விடுப்பு மனுமீது தீர்ப்பு கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

இதனை நாம் ஊகித்துணர முடியாது. 
விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெறுவதற்கு 18 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நான்கே மாதங்களில் முடிவுக்கு வந்துவிட்டது. 
ஆயினும், லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள் விரைவாக நடத்தப்பட்டு முடிக்கப்பட வேண்டும் என்கிற விழிப்புணர்வு இப்போது ஏற்பட்டிருக்கிறது.
========================================================================
இன்று,
ஜூன்-06.

  • சுவீடன் தேசிய தினம்
  • இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது(2004)
  • ஒய்.எம்.சி.ஏ., லண்டனில் அமைக்கப்பட்டது(1844)
  • குயின்ஸ்லாந்து என்ற பெயரில் புதிய குடியேற்ற நாடு, நியூசவுத்வேல்ஸில் இருந்து பிரிக்கப்பட்டது(1859)


========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?