பூண்டு-அற்புத மருந்து

கடுமையான வாசனையின் காரணமாக பூண்டு எல்லோருக்கும் பிடிப்பதில்லை. 
பூண்டு அற்புதமான மருந்துப் பொருள் என்பது அவர்களுக்கு தெரியாது.  இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது. பூண்டின் மருத்துவ குணங்களால் ஸ்பெயின்,  இத்தாலி, சைனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. 
பூண்டில் அதிகளவு தாதுக்களும் வைட்டமின்களும்  அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துகளும் இருக்கின்றன. பூண்டின் மணத்துக்குக் காரணம் அதில் உள்ள சல்பரே. 

 100 கிராம் பூண்டில்என்ன இருக்கிறது? 

ஆற்றல்                      149 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட்    33.06 கிராம்
கொழுப்பு                      0.5 கிராம்
புரதம்          6.36 கிராம்
வைட்டமின் சி       31.2 மி.கி.
கால்சியம்                     181 மி.கி.
ரிபோஃப்ளேவின்       0.11 மி.கி.

தினமும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வோருக்கு பலவித வியாதிகள் விலகிச் செல்கின்றன என்கிறார் பிரபல சமையல் கலை நிபுணர்  மல்லிகா பத்ரிநாத். 
பூண்டின் மகத்துவங்களைப் பட்டியலிட்டபடியே, பூண்டை வைத்து அசத்தலான மூன்று உணவுகளையும் செய்து காட்டுகிறார் அவர். ‘‘நோய் எதிர்ப்புத் திறனைக் கொண்டிருக்கும் உணவுகளில் பூண்டு முதன்மை இடம் வகிப்பது. சளி, இருமல் போன்றவற்றை குணப்படுத்தும்.பூண்டு இருக்கும்போது பாக்டீரியாக்கள் சீக்கிரம் பெருகாது.
 (Antibacterial activity) இது விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
 தினமும் உண்ணும்போது ஜீரண சக்தியை தூண்டும். 
வாயு சுலபமாக வெளியேற உதவி புரியும். 
மலச்சிக்கல் வராது. 
இது உஷ்ணத்தை கொடுக்கும் என்பதால் அளவுடன் சாப்பிட வேண்டும். பச்சையாக சாப்பிடும்போது அதிக பலன்களைப் பெறலாம்.
இதன் தோலில் ‘அல்லிசின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. தோலை உரிக்காமல் லேசாக சிதைத்து போடும்போது நமக்கு முழுமையான பலனைத்  தரும். கொழுப்பினால் அடர்த்தியான ரத்தத்தை அதனுடைய தன்மைக்கு கொண்டு வருவதில் இதற்கு இணையான உணவே இல்லைஎனலாம்.  அதனால் இதய நோயை தடுக்கும் வல்லமை உண்டு. 
ஆஸ்துமா மட்டுமின்றி நமது நுரையீரல் சம்பந்தப்பட்ட பல நோய்களுக்கு மருந்தாகவும்  பயன்படும். 
ஆயுர்வேதம், யுனானி, சித்தா போன்றவற்றில் கஷாயம், லேகியம், மாத்திரை, மருந்துகள் மட்டுமின்றி விஞ்ஞான முறைப்படியும்  இதனுடைய நற்குணங்களைக் கண்டு மாத்திரை வடிவில் சுலபமாக எங்கும் எடுத்துச் செல்லும்படியும் கிடைக்கிறது.

தமிழ்நாட்டில் தினமும் இதை ரசத்தில் தட்டிப் போடுபவர்கள் அதிகம். பசியை தூண்டும். ஜீரணமாகும். இப்படிப் போடும்போது அதிக நேரம் வேகவைக்க  மாட்டார்கள். 
தோலுடன் சிதைக்கும்போது அதிக பலன்களை தரும். பூண்டு துவையல் இருந்தால் பலருக்கும் குழம்பே வேண்டாம் என்ற அளவுக்கு  சாப்பிடுவர். சட்னி, குருமா வகைகள், குழம்பு, பிரியாணி போன்றவை மட்டுமின்றி அசைவ உணவுகளில் இஞ்சி-பூண்டு அரவை இல்லாத செய்முறை  குறிப்பு களே குறைவு. பொடி வகைகளில் தனியா பொடி, பருப்பு பொடி, பூண்டு பொடி, தேங்காய் பொடி என பல விதமான பொடிகளிலும்  பச்சையாகவே சேர்த்து பொடி செய்வது வழக்கம்.

குழந்தை பெற்ற தாய்மார்கள் தினமும் உட்கொண் டால் நன்கு பால் சுரக்கும் என நம்பப்படுகிறது. இந்தப் பூண்டை அதிகம் உட்கொண்டால்  உணர்ச்சிகள் தூண்டப்படும் என நம்பப்பட்டதால், நமது முன்னோரில் சிலர் மட்டுமே இதை உண்டார்கள். இப்போது இதன் மருத்துவ குணம்  மட்டுமல்ல... ருசியும் பலருக்கும் பிடித்துப் போனதால் அதிகம் உபயோகிக்கின்றனர். 
சரியானபடி உபயோகிக்க தெரிந்தவர்கள் நல்ல பலனைப்  பெறுகிறார்கள். நமது முன்னோர் இதை உணவாக உட்கொள்வதை விட மருந்தாகத் தான் அதிகம் உபயோகித்தார்கள். 
காது குடைச்சல், வலி  இருந்தால் ஒரு பூண்டு பல்லை பஞ்சில் சுற்றி காதில் சொறுகினால் நல்ல பலன் தெரியும்.
சிறு வயதில் இதைப் போல பெரியவர்கள் நமது வீடுகளில் செய்வதை பார்த்து இருக்கிறோம். இப்போது எங்கள் வீடுகளில் இதைப் போல  உபயோகப்படுத்துகிறோம். 
பாலில் பூண்டை வேகவைத்து மஞ்சள் தூள் சேர்த்து சளி, இருமல், ஜுரம் இருக்கும்போது தந்தால் சீக்கிரம் குறையும். கை,  கால் சுளுக்குக்கு பூண்டு சாற்றை தடவி உருவி விடுவார்கள்.
 உடனே குணம் தெரியும். இதைப் போல பாட்டி வைத்தியம் பலவுண்டு. சொன்னால்  சொல்லிக் கொண்டே போகலாம். 
முகப்பரு, காய்ச்சல், வயிறு உப்புசம், வெண்குஷ்டம், மூலம், வாயு உபாதை, கட்டிகள், ஜன்னி, இடுப்பு வலிக்கு இடிச்ச  பூண்டோடு நாட்டு மருந்துகள் சேர்த்து உபயோகிக்கும்போது நல்ல பலன் கிடைக்கும்.

நமது பெரியவர்களிடமிருந்து நாமும் பலவற்றை தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றோம். 
ஒரு சிலர் இன்னமும் இதை உபயோகிக்கும் முறை தெரிந்து  பலன் பெறுகின்றனர். 
நம் உணவில் இதை இஞ்சியுடன் சேர்க்கும்போது பூண்டின் வாசனை நன்கு குறைக்கப்படும்.

இஞ்சி பூண்டு லேகியம்

இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பனங்கற்கண்டை பொடி செய்து கொள்ளவும்.
பூண்டை தோல் நீக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.
கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து மிக்ஸ்யில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
அந்த கலவையுடன் பனங்கற்கண்டு சேர்த்து கலந்து கொள்ளவும்.
கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் அந்த கலவையை சேர்த்து கிளறி இறக்கவும்.
நன்றி:தினகரன்.
========================================================================
இன்று,
ஜூலை-17.


  • சர்வதேச நீதி தினம்
  • தென்கொரியா அரசியலமைப்பு தினம்
  • கலிபோர்னியாவில் டிஸ்னிலாந்தின் ஆரம்ப நிகழ்வுகள் டிவி மூலம் காண்பிக்கப்பட்டது(1955)
  • கிழக்கு தீமோர், இந்தோனேஷியாவுடன் இணைக்கப்பட்டது(1976)

========================================================================
 ஸ்மார்ட் போன் வைரஸ் 

தற்போது ஸ்மார்ட் போன்களை புதிய ரக வைரஸ் ஒன்று தாக்கி வருவதாக ஈசெட் ஆண்டிவைரஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது. 
பலருடைய பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்படுவதாக எழுந்த பிரச்சினையை சோதித்து பார்த்ததில், ஸ்மார்ட் போனை தாக்கியிருக்கும் இந்த புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இது போன்ற வைரஸ்கள் நம் ஸ்மார்ட் போனில் நுழைய முக்கிய காரணமாக, செயலிகளை குறிப்பிடுகின்றனர் இணைய ஆராய்ச்சியாளர்கள். 

கேம், கல்வி, பொழுதுபோக்கு போன்ற அம்சங்கள் கொண்ட செயலிகளை நாம் நமது ஸ்மார்ட் போனில் தரவிறக்கி செயல்படுத்தும் போது, கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். 
கூகிள் பிளே அல்லாத சில இணையதளங்களிலிருந்து நாம் இறக்குமதி செய்யும் செயலிகள் ஒரு வேளை வைரஸ் தன்மை நிறைந்ததாக இருக்கலாம். 

இவை சத்தமில்லாமல் உங்கள் போனுக்குள் இறங்கி, நீங்கள் செய்யும் வேலைகள் எல்லாவற்றையும், அதன் உரிமையாளருக்கு அனுப்பி கொண்டிருக்கும். 

இதில் முக்கியமாக நீங்கள் எடுக்கும் போட்டோ, பேஸ்புக், ஈ மெயில் போன்றவற்றின் கடவுச்சொற்கள் போன்றவை ஹாக்கர்கள் வசம் சிக்குவது இப்படிதான். 

அதனால், கூகிள் பிளே ஸ்டோரில் மட்டும் செயலிகளை தரவிறக்கம் செய்யுங்கள் 
செயலிகளை தரவிறக்கம் செய்யும் போது, மற்றவர்களின் கருத்துகளை பாருங்கள் 
இன்ஸ்டால் செய்யும் போது, செயலி உங்களிடம் என்னென்ன அனுமதிகள் கேட்கின்றன என்பதை தெரிந்து ok பட்டனை அழுத்துங்கள். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?