மின் தடை நீடிக்க காரணம்?

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமைப் பொறுப்பில் நீண்ட காலம் இருந்த சில அதிகாரிகள், தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து அபரிமிதமான விலை கொடுத்து மின்சாரம்
வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்கள் !
“டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில், “The matter relates to a PIL filed by C. Selvaraj, who said a group of officers during their long stint at the helm, prevented new projects from taking off and delayed completion of those already under construction to maintain artificial power-shortage in Tamil Nadu. After delaying projects and stalling generation in existing units for several months, the officers signed power purchase agreements with private companies at exorbitant prices, he said.” 
- அதாவது - 
சென்னை உயர் நீதி மன்றத்தில் சென்னையைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற மின்வாரியப் பணியாளர், த செல்வராஜ் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனு ஒன்றில், “தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமைப் பொறுப்பில் நீண்ட காலம் இருந்த சில அதிகாரிகள், தமிழகத்தில் செயற்கையான முறையில் மின்சாரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில், புதிய மின் திட்டங்கள் உருவாவதைத் தடுத்தார்கள்; ஏற்கனவே பணிகள் நடைபெற்று வந்த மின்திட்டங்களைத் தாமதப்படுத்தினார்கள்; இப்படி அரசின் மின் உற்பத்தித் திட்டங்களைத் தாமதப்படுத்தியும், தடுத்தும் செயற்கையான மின் பற்றாக்குறையைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தி விட்டு, அதைச் சரிக்கட்ட, தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து அபரிமிதமான விலை கொடுத்து மின்சாரம்
வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்கள்” என்று அந்த நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மனுதாரர் தனது வழக்கில், “¬Additionally, state-owned power generators at three places were shut down intermittently to create artificial power demand so as to ensure inflated private power purchase for eternity” the PIL said, adding that as against the state production cost of Rs. 3 per unit of power, the state paid Rs. 15 per unit to private producers, it added”- அதாவது “தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து, நீண்ட காலத்திற்கு, மின்சாரம் வாங்குவதற்காக, மாநில அரசுக்குச் சொந்தமான மூன்று மின் உற்பத்தி நிலையங் களில் இடையிடையே மின் உற்பத்தியை நிறுத்தி, மின் பற்றாக்குறையைச் செயற்கையாக உருவாக்கியிருக்கிறார்கள். 
மேலும், அரசு மின் உற்பத்தி நிலையங்களில் ஒரு யூனிட் மின்சாரம் 3 ரூபாய்க்கு உற்பத்தி செய்ய முடியும். ஆனால் அதே ஒரு யூனிட் மின்சாரத்தை 15 ரூபாய்க்குத் தனியாரிடமிருந்து அரசு வாங்கியுள்ளது” என்றெல்லாம் தனது புகார் மனுவில் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
மின்சார வாரிய மெகா ஊழல் தொடர்பான இந்தப் பொதுநல மனுவுக்கு தமிழக அரசு உயர் நீதி மன்றத்தில் உரிய விளக்கம் அளித்திடும் அதே வேளையில், முதலமைச்சர் ஜெயலலிதா மக்கள் மன்றத்தின் முன் இதற்கான விளக்கத்தை அளிக்க முன் வருவது தான், “மக்கள் முதலமைச்சர்” என்று சில நாள் தன்னை அழைத்துக் கொண்டாரே, அதற்குப் பொருத்தமாக இருக்கும்!
“காற்றாலை மின் பிரிவின் மூலமாக மட்டும் 24,309 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளது. அந்தக் கையாடல் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மின்சார மீட்டர்கள் வாங்குவதில் 6,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன. அந்த முறைகேடுகளுக்குப் பிறகு 4,500 கோடி ரூபாய்க்கு மின்சார மீட்டர்களைக் கொள்முதல் செய்திருக்கிறார்கள்.
இந்த முறைகேடுகளின் மூலம் செயற்கையாக மின்சார மீட்டர் பற்றாக்குறையை ஏற்படுத்தினார்கள்” என்றெல்லாம் புகாரில் தெரிவிக்கும் அந்த மின்வாரிய அலுவலர், முடிவாகக் கூறும்போது, “Describing it as Tamil Nadu’s biggest scandal so far, the PIL sought constitution of an SIT comprising eminent citizens to minotor/probe the Rs. One Lakh Crore Scam”- தமிழகத்தில் நடைபெற்றிருக்கும் மிகப் பெரிய ஊழல் - ஒரு இலட்சம் கோடி ரூபாய் ஊழல் இதுதான் என்பதால், அதன் மீது சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை ஏற்படுத்தப் படவேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார். 
மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு அலுவலரே உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், இப்படியெல்லாம் பகிரங்கமாகவும், தைரியமாகவும், ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக கூறியிருப்பதைப் பார்த்துத் தான்,
அவற்றில் பூர்வாங்க ஆதாரங்கள் இருப்பதால், சென்னை உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி மேதகு கவுல் அவர்களும், நீதியரசர் மேதகு சிவஞானம் அவர்களும், தணிக்கைத் துறைத் தலைவர் மின்சார வாரியத்தின் நடவடிக்கைகள் குறித்து என்ன அறிக்கை கொடுத்துள்ளார்,
 எந்த அளவுக்கு மின்வாரியத்தின் விளக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பன போன்ற ஏராளமான கேள்விகளை எழுப்பியதோடு, சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் உயர் நீதி மன்ற ஆய்வுக்காக ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறார்கள்.

உண்மை இவ்வாறிருக்க,“முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றிலே மறைப்பதைப் போல” முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் மின்வாரியத்தில் தனது ஆட்சியில் ஏராளமான சாதனைகளைச் செய்திருப்பதாக அறிக்கை கொடுத்திருப்பது தான் வேடிக்கையாகவும், வினோதமாகவும் இருக்கிறது. 
மின்சார வாரிய மெகா ஊழல் தொடர்பான இந்தப் பொதுநல மனுவுக்கு தமிழக அரசு உயர் நீதி மன்றத்தில் உரிய விளக்கம் அளித்திடும் அதே வேளையில், முதலமைச்சர் ஜெயலலிதா மக்கள் மன்றத்தின் முன் இதற்கான விளக்கத்தை அளிக்க முன் வருவது தான், “மக்கள் முதலமைச்சர்” என்று சில நாள் தன்னை அழைத்துக் கொண்டாரே, அதற்குப் பொருத்தமாக இருக்கும்! 
                                                                                                                                 -கலைஞர் 
========================================================================

இன்று,
ஜூலை-09.


  • ஆஸ்திரேலிய அரசியலமைப்பு தினம்
  • அர்ஜென்டீனா விடுதலை தினம்(1816)
  • பாகிஸ்தான் தனது முதலாவது அஞ்சல் தலையை வெளியிட்டது(1948)
  • ஆப்ரிக்க ஒன்றியம், அடிஸ் அபாபாவில் அமைக்கப்பட்டது(2002)
  • அக்னி 3 ஏவுகணை ஒரிசாவில் சோதிக்கப்பட்டது(2006)

========================================================================
உலகின் நான்காவது மிகச் சிறிய நாடான துவாலு பூமியில் இருந்து மறைவதை தடுக்க ஐரோப்பிய நாடுகள் உதவுமாறு பிரதமர் எனலே ஸ்போகா அழைப்பு விடுத்துள்ளார். 
வருகின்ற டிசம்பர் மாதம் பாரிசில் நடக்கவுள்ள உலக வானிலை மாற்றம் குறித்த மாநாட்டில் துவாலுவை காப்பாற்ற ஐரோப்பிய நாடுகள் ஆதரிக்க வேண்டும் என்று கேட்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். 
சில தீவுகளை உள்ளடக்கிய இந்த துவாலுவில் 10,000- க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 
வானிலை மாற்றத்தினால் இந்த தீவு கடலுக்கு அடியில் மூழ்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தை குறைக்க ஐரோப்பா  நாடுகள் உறுதி மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 
விஞ்ஞானிகள் கூறிய 2C  இலக்கை விட ஒரு பாதுகாப்பான எல்லையான 1.5C கீழே உலக வெப்பமயமாதல் உள்ளது. ஆனால் கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தவில்லை என்றால் வெப்பமயமாதல் அளவு உயரும் நிலை ஏற்படும். 
இதனால் கடல் நீரின் அளவு அதிகரித்து துவாலு முற்றிலுமாக கடலுக்கும் மூழ்கும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?