வெறும் 3770 கோடிகள்

2014 ஆம் ஆண்டு தேர்தலில் நரேந்திர மோடி வெளிநாடுகளில் 85 லட்சம் கோடி கருப்பு பணத்தை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் தான் ஆட்சிக்கு வந்தால் உடனே அந்த பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்து மக்களுக்கு பிரித்து தரப்போவதாகவும் பரப்புரை செய்தார்.
ஆனால் இப்போது கருப்பு பணம் என்று வந்துள்ளது வெறும் 3770 கோடிகள் மட்டும்.மீதி என்னவாயிற்று?
இந்தியர்கள் தமது கருப்புப்பணத்தை அரசாங்கத்திடம் தாமக முன்வந்து தெரிவிப்பதற்கான மத்திய அரசின் திட்டம் ஒன்று முடிவுக்கு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
அந்த திட்டத்தின் கீழ் 638 இந்தியர்கள் தம்மிடம் இருந்த 3770 கோடி கருப்புப்பணத்தை இந்திய அரசிடம் வெளியிட்டிருப்பதாகவும் அதில் 60 சதவீதம் அரசுக்கு அபராதத்தொகையாக கிடைக்கும் என்றும் ஊடக்ங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்தியர்களின் கருப்புப்பணம் சுமார் 80 லட்சம் கோடி வெளிநாடுகளில் இருப்பதாகவும் தான் ஆட்சிக்கு வந்தால் அதைக் கைப்பற்றி மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டுவரப் போவதாகவும், அதன் மூலம் ஒவ்வொரு இந்தியருக்கும் 15 லட்ச ரூபாய் கொடுக்க முடியும் என்று கூறினார் என்றும் எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.
அந்த பின்னணியில் தற்போது அரசிடம் கணக்கு காண்பிக்கப்பட்டிருக்கும் கருப்புப்பணத்தின் தொகை என்பது மிக மிக குறைவு என்றும் மத்திய அரசின் முயற்சி தோல்வியில் முடிந்திருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
மத்திய அரசு எதிர்பார்த்த அளவு கருப்புப்பணம் வெளியில் வராததற்கு என்ன காரணம் என்று சென்னையைச் சேர்ந்த பொருளாதார ஆய்வாளர் அருண்குமார் தவேயிடம் தொடர்புகொண்டு கேட்டபோது மொத்த கருப்புப்பணத்தின் அளவு என்று இந்திய அரசியல் வாதிகள் கூறும் தொகை ஊதிப் பெரிதாக்கப்பட்ட தொகை என்று அவர் கூறினார்.
அத்துடன், வெளிநாடுகளில் இருந்ததாக கருதப்பட்ட கருப்புப்பணத்தில் பெருமளவு ஏற்கனவே இந்தியாவுக்குள் பல்வேறு வகைகளில் திரும்ப கொண்டுவரப்பட்டுவிட்டதாகவும், இனிமேல் இந்தியாவுக்குள்ளோ, இந்திய அரசிடம் கணக்கு காட்டும் அளவுக்கோ பெரிய அளவில் கருப்புப்பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருப்பது சந்தேகமே என்றும் கூறினார் அருண்குமார் தவே.
மேடை கிடைத்தால் வாய்ப்பந்தல் போடுவதும்,காமிரா கிடைத்தால் முன்னாள் வந்து அடுத்தவரை தள்ளி விட்டு பொஸ் கொடுப்பதும்,இந்தியாவில் ஒரு நாள் மட்டும் இறங்கி விட்டு நாடு,நாடாக சுற்றுப்பயணம் போவதுமே மோடியின் அன்றாட  பிரதமர் பணியாகி விட்டது.
================================================================
இன்று,
அக்டோபர்-05.

  • சர்வதேச ஆசிரியர்கள் தினம்.
  • இந்தோனேஷிய ராணுவ தினம்.
  • இந்தியாவின் சன்மார்க்க சிந்தனையாளர் ராமலிங்க அடிகளார்(வள்ளலார்) பிறந்த தினம்(1823).

  • வள்ளலார் பிறந்த தினம்
1823 - அக்டோபர் 5:கடலுார் மாவட்டம், மருதுாரில், ராமையா பிள்ளை - சின்னம்மையாருக்கு, ஐந்தாவது மகனாக பிறந்தவர் ராமலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட, திருஅருட் பிரகாச வள்ளலார்.
ஜீவகாருண்யம், பசியாற்றுவித்தல், ஜாதி மத வேறுபாடின்மை, ஆன்மநேய ஒருமைப்பாடு ஆகிய நான்கையும் வலியுறுத்திய வள்ளலார், சன்மார்க்க சங்கத்தை உருவாக்கி, சத்திய தரும சாலை, சத்திய ஞான சபை, சித்தி வளாகம் ஆகியவற்றை வடலுாரில் நிறுவினார். 
பசித்தவர்களுக்கு ஜாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும் என்று, வடலுாரில் அணையாத அடுப்பை பற்ற வைத்தார்!

யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், இவர் மீது, மான நஷ்ட வழக்கு தொடுத்தார்; வள்ளலார், நீதிமன்றத்துக்கு வந்தபோது, ஆறுமுக நாவலர் எழுந்து நின்று வணங்கினார். இதைப் பார்த்த, ஆங்கிலேய நீதிபதி, 'எதிரிகளாலும் வணங்கத்தக்க வள்ளலார், ஒருபோதும் தவறாகப் பேசியிருக்க மாட்டார்' என்று, வழக்கை தள்ளுபடி செய்தார். 

கடந்த, 1874 நவம்பர் 30ம் தேதி, தைப்பூச நன்னாளில், சித்தி அடைந்தார்.அவர் ஒரு அறைக்குள் சென்றதும் ஜோதி எழும்பி அவர் அதற்குள் கலந்து விட்டார் என்று சொல்லப்பட்டாலும்.
அவர் இந்து மதத்துக்கு எதிராக செயல்படுவதாக கூறி வந்தவர்கள் வள்ளலாரை அவரின் உதவியாளர்களை வைத்தே அறைக்கு தீ வைத்து எரித்து கொன்று விட்டு வள்ளலார் கூறிய அருட் பெரும் ஜோதியிலே கலந்து விட்டதாக கூறி மக்களை ஏமாற்றியதாக தெரிகிறது..
========================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?