இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

திங்கள், 5 அக்டோபர், 2015

இளமையுடன் வாழ.!.வேர்க்கடலை..? நமது வீட்டு சமையலறையில் முக்கிய அங்கம் வகிப்பது கடலை எண்ணெய். 
வேர்க்கடலை விதையில் இருந்து இந்த எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.  
இதன் மகத்துவத்தை நாம் அறிவதற்கு முன்னர், இதன் ‘தாயகம்’ பற்றி நாம்  அறிவது அவசியம். வேர்க்கடலையின் தாயகம் தென் அமெரிக்கா.  
அங்கிருந்து பிறகுதான் உலகிலுள்ள மற்ற நாடுகளுக்கும் பரவியது. 
இதில் பல ரகங்கள் உள்ளன. இந்தியாவில் சிகப்பு ரகம், பட்டாணி ரகம்,  கொடிக்காய் ரகம் போன்றவை பயிரிடப்படுகிறது. 
இதை மானாவாரியாகவும், தண்ணீர் பாய்ச்சியும் பயிர் செய்யப்படுகிறது. வேர்க்கடலைக்கு மருத்துவ  குணங்களும் உண்டு. 

நோய் எதிர்ப்பு சக்தி 
நம் நாட்டில் வேர்க்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயல்களில், செடியின் வேர்களில் கடலை வளரும் பருவம் வரை வயலில் எலிகள்  அவ்வளவாக இருக்காது. 
ஆனால் காய் பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். வேர்க்கடலை செடியை  சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியை சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவதை காணலாம். 
வேர்க்கடலையில்  போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை  சீராக செயல்படுவதுடன் கர்ப்பப்பைக்கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப்பேறும் உடன் உண்டாகும் என்கிறார்கள் மருத்துவர்கள். 
பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என கருதுகிறோம். 
அதைவிட வேர்க்கடலையில்தான் அளவுக்கதிகமான சத்துக்கள்  இருப்பது தெரிய வந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் வேர்க்கடலைக்கு உண்டு.

நன்மைகள் 

நீரழிவு நோயை தடுக்கும் வேர்க்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ், சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய  பங்காற்றுகிறது. குறிப்பாக பெண்கள் வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.

பித்தப்பை கல்லை கரைக்கும்
வேர்க்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதை தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட  ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. 

இதய நோயை தடுக்கும் 

வேர்க்கடலை சாப்பிட்டால் எடைபோடும் என்று நாம் நினைக்கிறோம். அது உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்கவேண்டும்  என்று நினைப்பவர்களும் வேர்க்கடலை சாப்பிடலாம். வேர்க்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்தும் நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை  பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.
இளமையுடன் வாழ...

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. வேர்க்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. 
இது நமக்கு நோய் வருவதை  தடுப்பதுடன் இளமையுடன் இருக்கவும் வழி வகுக்கிறது. 

ஞாபக சக்தி அதிகரிக்கும்

வேர்க்கடலை மூளை வளர்ச்சிக்கு மிகவும் உகந்ததாகும். இதில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை  வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. மேலும் இதில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ  அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப்பொருள் உற்பத்திக்கு  பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மன அழுத்தத்தை போக்குகிறது. வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன  அழுத்தம் நீங்கும். 

புற்றுநோய் வராமல் தடுக்கும்

பீட்டா sitoserol (எஸ்ஐடி) என்று phytosterol ஒரு வடிவம் வேர்கடலை உள்ளிட்ட சில தாவர எண்ணெய்கள், விதைகள், மற்றும் பருப்பு வகைகளில்  அதிகளவு காணப்படுகிறது. இதனால் இதய நோய், புற்றுநோய் வராமல் தடுக்கும். 

கொழுப்பை குறைக்கும்

வேர்க்கடலை சாப்பிட்டால் கொழுப்புச்சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக  மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்புதான் வேர்க்கடலையில் உள்ளது. வேர்க்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது  உடலில் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் வேர்க்கடலையில் 24 கிராம் மோனோ அன்  சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது. இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை  செய்வதாகும். பாதாமை விட வேர்க்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. 

கருப்பை கோளாறு

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை வேர்க்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன்  பெண்களுக்கு மார்பகக்கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம்,  துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் வேர்க்கடலையில் நிறைந்துள்ளது. இதன்காரணமாக பெண்களுக்கு  கர்பப்ைப கட்டிகள்,  நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

கடலை எண்ணெய்
கடலை எண்ணெய் அதிக ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடலை எண்ணெயில் உடலுக்கு 884 கலோரிகள் ஆற்றல் கிடைக்கிறது. அதிக அளவில்  லிப்பிடுகள் நிறைந்தது. பூரிதமான கொழுப்புகள் உடலில் சேரவும், கெட்டக்கொழுப்பான கொலஸ்டிரால் உடலில் சேராமல் காக்கவும் இவை உதவும்.  கடலை எண்ணெயில் விட்டமின் E மிகுந்துள்ளது. 100 கிராம் எண்ணெயில் 15.69 மில்லிகிராம் ஆல்பா டோகோபெரல், 15.91 மில்லிகிராம் காமா  டோகோபெரல் உள்ளது. ‘ரெசவராடால்’ எனும் நோய் எதிர்ப்பு பொருள் கடலை எண்ணையில் காணப்படுகிறது. நோய்த் தொற்றுகளை தடுப்பதிலும்  மற்றும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் ஏற்படாமல் காப்பதிலும் பங்கு வகிக்கிறது.

நீண்டகாலம் கெட்டுப் போகாத தன்மை கொண்டது என்பதால் பல நாட்களுக்கு வைத்திருந்து பயன்படுத்தலாம். ஆனால் சிலருக்கு வாந்தி போன்ற  ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால் மருத்துவரின் ஆலோசனைக்குப்பின் பயன்படுத்துவது நல்லது. வேர்க்கடலையை வேக வைப்பதாலும்,  வறுப்பதாலும் தனது சத்துக்களை இழந்து விடுகிறது. பச்சையாக ஊறவைத்து சாப்பிடுவதே நன்று. -

=====================================================================================================================நஞ்சான காய்கறிகள்...?
அன்றாட உணவில் காய்கறிகள், கீரைகள், பழங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. உடலுக்கு தேவையான வைட்டமின்கள், நார்ச்சத்து  உள்ளிட்டவை இவைகள் மூலமாகத்தான் கிடைக்கின்றன. 
மேலும், பல்வேறு நோய்களை தடுக்கும் மருந்தாகவும் பச்சைக் காய்கறிகள், கீரைகள்  பரிந்துரைக்கப்படுகின்றன. 
ஆனால் தற்போது இந்த கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களிலேயே, உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயன  நச்சுப்பொருட்கள் கலந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. 
விதைகளை பதப்படுத்துவது தொடங்கி விளைந்து விற்பனைக்கு வரும்  வரை ரசாயனமே பிரதானமாக உள்ளது. 

கடந்த 7 ஆண்டுகளை காட்டிலும், காய்கறிகள், பழங்கள், இறைச்சி, மற்றும் நறுமணப்பொருட்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட  நச்சுப்பொருட்களின் அளவு தற்போது 2 மடங்கு அதிகரித்துள்ளதாக வேளாண்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 
கடந்த 2008-09ம் ஆண்டு உணவு  பொருட்களில் இருந்த ரசாயன நச்சுப்பொருட்ளின் அளவு 1.4 சதவீதமாக இருந்தது. 
இது 2014-15ம் ஆண்டில் 2.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.  காய்கறிகளில் 56 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட அளவில் உள்ளது. 
முக்கியமாக பச்சை மிளகாய், காலிபிளவர், முட்டைகோஸ், கத்தரிக்காய், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லி உள்ளிட்டவற்றில் நச்சுப்பொருட்கள்  அதிகளவு கலந்துள்ளது தெரியவந்துள்ளது. 
இதில், டெல்லியில் நச்சுப்பொருட்களின் அளவு அபாயக் கட்டத்தில் உள்ளது. 
சுமார் 41 மாதிரிகளை  ஆய்வுக்கு உட்படுத்தியதில் அனுமதித்த அளவை விட அதிக அளவில் நச்சுப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது. 
இவற்றில் 31 மாதிரிகள்  காய்கறிகளாகும். 

டெல்லியில் கிடைக்கப்பெறும் பெரும்பாலான காய்கறிகள் யமுனா ஆற்றிற்கு அருகில் உள்ள பகுதிகளில் விளைவிக்கப்பட்டவை ஆகும். இதேபோல்  குர்கானில் 24 மாதிரிகளில் நச்சுப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றில் 11 மாதிரிகள் காய்கறிகளாகும். 
மும்பையில் 38 மாதிரிகளில்  25லிலும், ஐதராபாத்தில் 51 மாதிரிகளில் 27லிலும்,  ஜெய்ப்பூரில் 10 மாதிரிகளில் 7லிலும் நச்சுப்பொருட்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:தினகரன்.

===================================================================================
இன்று,
அக்டோபர் -06.

  • எகிப்து ராணுவ தினம்
  • ரோம் இத்தாலியின் தலைநகரானது(1870)
  • பிஜி குடியரசானது(1987)
  • முதல் பேசும் படமான தி ஜாஸ் சிங்கர் வெளியானது(1927)

===================================================================================ஒருநாள் இல்லை ஒருநாள் இந்த இந்தியாவை என்னிடம் கெஞ்ச வைக்காமல் விடப்போவதில்லை இது சத்தியம் --சீமான்....