இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

திங்கள், 19 அக்டோபர், 2015

கொடநாடும் ,வெளிநாடும்

சமீபகாலங்களாக அத்தியாவசியபொருட்களின் விலைதொடர்ந்து உயர்ந்துவருவதைமத்திய-மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருப்பதுகவலைஅளிக்கிறது. 
மாநிலத்தில் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டிய மாநில அரசு கொடநாட்டில் ஓய்வெடுக்கிறது.அவ்வளவு பணிகளை இரவு பகலாக பார்த்து களைத்து பொய் விட்டது.
இந்தியா முழுக்க கண்காணிக்க வேண்டிய மத்திய அரசோ நாடு,நாடாக சுற்றுப்பயணம் மேற் கொண்டு ம்,மாட்டிறைச்சி அரசியலும் செய்து கொண்டிருக்கிறது.
விலை உயர்வைகட்டுப்படுத்தாமல் இருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக உணவுப் பொருட்களின் விலைஅறுவடைக் காலங்களில் குறைந்தும் அதன்பிறகுகாலப்போக்கில் உயர்ந்தும் காணப்படுவது இயல்பு.
ஆனால் அறுவடைக்காலம் அல்லதுஅறுவடைக்குபிந்தையகாலம் என்றுஎவ்விதவேறுபாடுகளும் இல்லாமல் தொடர்ந்துஉயர்ந்துகொண்டேபோகிறது. 
பெரும் சூப்பர் மார்க்கெட்டுகள் நடத்தும் அம்பானி,ஐ.டி.சி,போன்ற பெரும் முதலாளிகள்தான் இந்த பருப்பு கொள்முதல்-பதுக்கலில் உள்ளனர் என்பது தெரிந்தும் கண்டு கொள்ளாமல்  ஜெயா ,மோடி அரசுகள் இருக்கின்றன.அவர்களுக்கு அந்த முதலாளிகள் கொட்டிக்கொடுக்கின்றனர்.ஆனால் மக்கள் அம்பானி,அதானிக்களுக்கு தங்கள் இருப்பையே கொடுக்கின்றனர்.
இதனால் சாதாரணஏழை-எளிய நடுத்தரமக்களை இந்தவிலைஉயர்வுபெரிதும் பாதிக்கிறது. நாங்கள் ஆட்சிக்குவந்தால் விலைஉயர்வைக் கட்டுப்படுத்துவோம் என்றுமோடியும் உடனடியாகதடுத்துநிறுத்துவோம் என்று ஜெயலலிதாவும் வாய் கூசாமல் வாக்குறுதிதந்துஆட்சிக்குவந்தார்கள். 
ஆனால் விலை வாசி உயர்வு விண்ணை முட்டுகிற போது இவர்கள் வாய் மூடி மவுனியாக இருப்பதன் ரகசியம் என்ன? 
பருப்பு,எண்ணெய், புளி, மிளகாய்,அரிசி,காய்கறிகள் எனஅனைத்துஉணவுப் பொருட்களின் விலையும் மிகக் கடுமையாகஉயர்ந்துள்ளது.கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பருப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுஎன்றும், நியாய விலைக் கடைகளில் பருப்பு கிடைக்கவில்லை என்றும் புகார்கள் எழுந்த போது உணவு த்துறை அமைச்சர் ஆர். காமராஜ் நியாய விலைக் கடைகளை ஆய்வு செய்து விட்டேன். 
எல்லாக் கடைகளிலும் பருப்பு உள்ளது என்று கூறினார்.புகாரையும் மறுத்தார். இப்போது பருப்புதட்டுப்பாடுமற்றும் விலைஉயர்வுகுறித்து என்னசொல்லப்போகிறார்?எண்ணெய் வகைகள் ரூ.150,மிளகாய் ரூ.140,காய்கறிகள் ரூ.50 எனவிலைஉயர்வுநாளுக்குநாள் அதிகரித்துகொண்டேபோகிறது. 
நவராத்திரி, ஆயுதபூஜை,தீபாவளி,கிறிஸ்துமஸ் எனதொடர்ந்துவரும் பண்டிகைக் காலங்களில் இது போன்றதாறுமாறானவிலைஉயர்வுபெரிதும் பாதிக்கிறது. ஆன்லைன் வர்த்தகம் என்றபெயரில் உணவுப்பொருட்களைஒட்டுமொத்தமாகபதுக்கிவைப்பதேவிலைஏற்றத்துக்கான காரணம் என வியாபாரிகள் சங்கம் புகார்தெரிவித்துள்ளது.
அதேபோல் துவரம் பருப்பையும்,உளுந்தம்பருப்பையும் ஒரேநேரத்தில் அதிகளவிற்குகொள்முதல் செய்திடதமிழகஅரசுஒப்பந்தம் கோரியதும் விலைஏற்றத்திற்கு காரணம் என்றுசொல்லப்படுகிறது.கடந்த 25 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த இரண்டுமாதங்களாகபருப்பு வகைகள் விலை இரு மடங்குஉயர்ந்துள்ளது. 
ஆப்பிரிக்க நாடான தான்சானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் துவரம் பருப்பு மூடை விலை ரூ.13,000 லிருந்து ரூ.16,000 ஆகஉயர்ந்துள்ளது. இந்த வகை துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.140 லிருந்து ரூ.170 ஆக கூடியுள்ளது. 
பாக்கெட் பருப்புரூ.150 லிருந்து ரூ.180 ஆக உயர்ந்துள்ளது.
(இதில் பாசிப்பருப்புவிலைகுறித்துகணக்கீடுசெய்யப்படவில்லை)துவரம் பருப்புவிலையைகட்டுக்குள் வைக்கஆப்பிரிக்கநாடுகளிலிருந்து 5000டன் பருப்பு இறக்குமதிசெய்யப்படும் என்றுமத்தியஅமைச்சர்அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மேலும் தேவைப்படும்பட்சத்தில் கூடுதலாக 2000டன் இறக்குமதி செய்வதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள் ளார். துவரம் பருப்பு விலையை போல உளுந்தம் பருப்பு விலையும் அதிகரித்துக் கொண்டேவருகிறது. 
கடந்தவாரம்100 கிலோ எடைகொண்டஉளுந்தம் பருப்பு மூடைரூ. 16,200 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 
தற்போது அதன் விலைரூ.17,200 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ உளுந்தம் பருப்பு ரூ.170 லிருந்து ரூ.180 ஆகவும் பாக்கெட் உளுந்தம் பருப்புரூ.180 லிருந்துரூ.200 ஆகவும் உயர்ந்துள்ளது. 
தமிழகத்திற்கு குஜராத்,மத்தி யப்பிரதேசம்,உத்தரப்பிரதேசம்,மகாராஷ்டிரா,கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்க ளிலிருந்து பருப்பு விறபனைக்குவருகிறது. இந்தமாநிலங்களில் விளைச்சல் பாதிப்பால் வரத்துஅடியோடுகுறைந்துள்ளதுஎன்பதும் விலைஉயர்வுக்குகாரணம் என்றுசொல்லப்படுவதைமுழுமையாகஏற்றுக்கொள்ளமுடியாது. கடந்த 2014-2015ல் பருப்புஉற்பத்தி 12சதவிகிதம் சரிந்து உள்ளதுஎன்று அரசுதெரிவித்துள்ளது. 
அப்படி இருந்தாலும் படிப்படியாகஅதுவும் அசுர வேகத்தில் விலைநாள்தோறும் உயர்வதற்குசாத்தியமில்லை. இத்தகையவிலை உயர்வுகளுக்கு யார் காரணம்? 
அரசா? 
வியாபாரிகளா? 
பதுக்கல்காரர்களா? 
ஆன்-லைன் வர்த்தகமா? 
இங்குதான் அரசு மவுனம் சாதிக்கிறது. 
மத்திய-மாநில அரசுகளின் மவுனம் கலைந்து விலை உயர்வுக்கான அடிப்படைக் காரணங்களை வெளிக் கொண்டு வந்து அதை தடுப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுத்திட வேண்டும்.
கொடநாடும் ,வெளிநாடும் சுற்றுப்பயணம் செல்லும் மக்கள் பிரதிநிதிகள் இருவரும் மக்கள் தங்களுக்கு எதற்காக வாக்களித்தார்கள் என்பதை உணர்ந்து செயல்பட்டு விலைகளைகட்டுப்படுத்தவேண்டும் .
இல்லை என்றால் நிரந்தரமாக ஓய்வெடுக்க இதே மக்கள் அனுப்பி வைத்து விடுவார்கள்.
================================================================================
செயலற்ற மின்சாரத் துறை
மின்சாரத் துறையே செயலற்றுப் போய்விட்டது என்பதற்கு இந்தக் காலிப் பணியிடங்கள் நிரப்பப் படாமல் இருப்பதே தக்க உதாரணமாக உள்ளது.
ஒரு உதாரணம், 15ஆம் தேதிய “தினமலர்” நாளேட்டிலேயே “மின் பணிகள் பாதிப்பு : ஜப்பான் கோபம்” என்ற தலைப்பிலே ஒரு செய்தி வந்துள்ளது. 
இதுவும் முதலமைச்சர் ஜெயலலிதாவினால் 25-4-2013 அன்று 110வது விதியின் கீழ் ஒரு நீண்ட அறிக்கையைப் படித்தார். அந்த அறிக்கையில் “ஜப்பான் சர்வதேசக் கூட்டுறவுநிறுவனத்தின் நிதி உதவி மூலம், 2,750 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 புதிய 400 கிலோ வோல்ட் திறன் கொண்ட துணை மின் நிலையங்கள் மற்றும் அதற்குரிய மின் தொடர் பாதைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். 
இது மட்டுமல்லாமல், 822 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 230 கிலோ வோல்ட் திறன் கொண்ட 14 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள் ளப்படும்” என்றும் மேற்காணும் நடவடிக்கைகள் மூலம், தமிழகம் விரைவில் மின் மிகை மாநிலமாக மாறும் என்பதோடு, மின் நுகர்வோருக்கு தடையற்ற சீரான மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்தார். 
அறிவித்து இரண் டரை ஆண்டுகளாகின்றன. இந்தத் திட்டங்கள் தான் ஜப்பான் நிதி உதவியுடன் செய்யப்பட்டு வந்ததாகவும், ஆனால் இந்தத் தொடரமைப்பு திட்டத்தில், முக்கியமான நிர்வாக இயக்குனர், மின் இயக்க இயக்குனர், தொடரமைப்பு திட்ட இயக்குனர் ஆகிய பதவிகள் காலியாக உள்ளதாகவும், அதனால் ஜப்பான், ஜெர்மனி நிதி உதவியில் சுணக்கம் ஏற்பட்டிருப்ப தாகவும் செய்தி வந்திருக்கிறது. 
இது குறித்து துறை அதிகாரிகள் கூறும் போது, “மின் இயக்க இயக்குனர் பதவி, இரண்டு மாதங்களாக காலியாக உள்ளது. நிர்வாக இயக்குனர், இயக்குனர் பதவிகளைச் சேர்த்து கவனித்த அதிகாரி கடந்த மாதம் ஓய்வு பெற்றார்.
இந்தப் பதவிகளை மின் உற்பத்தி மற்றும் மின் திட்ட இயக்குனர்கள் கூடுதலாகக் கவனிக்கின்றனர். அதனால் அவர்களுக்குக் கூடுதல் பணிச்சுமை. சமீபத்தில் சென்னை வந்த ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 
அப்போது பணிகளைக் கவனிக்கப் போதுமான இயக்குனர்கள் இல்லாததைப் பார்த்து கடும் அதிருப்தி தெரிவித்தனர். உடனடியாக நிரப்புமாறு அறிவுறுத்திச் சென்றுள்ளனர்”என்று தெரிவித்திருக்கிறார்கள். 
அ.தி.மு.க. ஆட்சியில் எதுவும் முறையாகச் செய்யப்படவில்லை, அதுவும் மின்சாரத் துறையே செயலற்றுப் போய்விட்டது என்பதற்கு இந்தக் காலிப் பணியிடங்கள் நிரப்பப் படாமல் இருப்பதே தக்க உதாரணமாக உள்ளது.
                                                                                                                                                  -  கலைஞர் 
===================================================================================

சமீபத்தில் ரிசர்வ் வங்கி இதர வர்த்தக வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கு வட்டி வீதம் 7.25சதவீதமாக இருந்ததை 6.75 சதவீதமாக குறைத்தது.
, இதனால் நுகர்வோர் கடன்களுக்கு வட்டி வீதம் குறையும் என்றும் விற்காமல் கிடக்கும் அடுக்கு மாடி வீடுகள், (வீடற்றோராக சில கோடி மக்கள் வாழும் டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னை போன்ற பெருநகரங்களில் 2 லட்சம் வீடுகள் விற்காமல் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன) கார்கள், இரு சக்கர வாகனங்கள் விற்றுவிடும், பண்டிகை காலமானதால் விலையை குறைய விடாமல் தடுக்க ஆலை முதலாளிகள் ஸ்டாக்காக வைத்திருக்கும் பல ஆயிரம் டன் சர்க்கரை, மற்றும் மக்களின் வாங்கும் சக்தி குறைவால் தேங்கி கிடக்கும் ஜவுளி, பட்டாசு மற்றும் நொறுக்குத் தீனி ஆகியவற்றின் வர்த்தகம் செழிக்கும், தொழில் முனைவோருக்கு கடன் குறைந்த வட்டி வீதத்தில் கிடைப்பதால் தொழில் வளர்ச்சி வேகப்படும் என்றெல்லாம் சில நிபுணர்கள் எழுதியும் சொல்லியும் மக்களுக்கு கிளுகிளுப்பை உண்டாக்கினர். 
அதோடு இந்த ஊடகங்கள் நிற்கவில்லை இந்த வட்டி குறைப்பை கொண்டு வர மறுத்த ரிசர்வ் வங்கி கவர்னரோடு போராடி, வாதாடி, பொது புத்தியை அறிவுறுத்தி பெற்று தந்த மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை மாவீரனாக சித்தரித்தனர்.
உள்ளது உள்ளபடிஉள்ளதை உள்ளபடி பார்க்கும் நிபுணர்கள் கூறுவதென்ன? 

இந்த வட்டி குறைப்பு என்பது ரிசர்வ் வங்கி இதர வர்த்தக வங்கிகளுக்கு கடன் கொடுக்க நேர்ந்தால் விதிக்கிற வட்டி (இதனை ரிப்போ ரேட் என்று குறிப்பிடுவர்), இது பண ஓட்டத்தையும் பண வீக்க வேகத்தையும் சீராக வைக்க ரிசர்வ் வங்கி வைத்திருக்கும் ஏற்பாடுகளில் ஒன்று, அது போல் வங்கிகளில் மக்களின் டெபாசிட் அளவிற்கு மீறி திரண்டு தேங்கினால் அந்த பணத்தை ரிசர்வ் வங்கி பெற்று வட்டிகொடுக்கும் (இதனை ரிவர்ஸ் ரிப்போ ரேட் என்பர்), இந்த ஏற்பாட்டால் பணப் புழக்கம் முடிந்த வரை நெருக்கடியை விளைவிக்காமல் சீராக சுழலவைப்பதே நோக்கமாகும். 
இதனால் வீடு, கார் மற்றும் நுகர்பொருள் வாங்குவோருக்கு விலை குறையும் தொழில் முனைவோருக்கும் வட்டி குறையும் என்று சொல்ல முடியாது, அவர்களுக்கான வட்டியை தீர்மானிப்பது வர்த்தக வங்கிகளே, வங்கிகளை கேட்டால் வட்டி வீதம் சந்தை போட்டி தொழிலின் தன்மையை பொறுத்தும் நிர்ணயமாகிறது என்று கதை விடுவர், (அவர்கள் நினைத்தால் வங்கியின் லாபத்தை பெருக்க வட்டி வீதத்தில் கோல்மால் செய்யமுடியும் என்பதை விபரம் அறிந்தோர் அறிவர், சில ஆண்டுகளுக்கு முன் லண்டன் வங்கி ஒன்று வட்டி வீத நிர்ணயிப்பில் கோல் மால் செய்ய வைத்த லிபர் ஊழல் உலகையே குலுக்கிய நிகழ்வு உண்டு.
விளைவுகள்
இந்த வட்டி வீத குறைப்பால் கந்து வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்வோருக்கும் சில்லரை வர்த்தகர்களுக்கும் நிச்சயம் பலன்தரப் போவதில்லை. 
அதாவது கடனை சார்ந்தே வாழும் 90 சதவீத பாமரர்களுக்கு இந்த வட்டி குறைப்பு ஒரு ஆரோக்கியமான செயல்  அல்ல, 
ஆனால் நிச்சயமாக வர்த்தக வங்கிகள் வாடிக்கையாளர்களின் டெபாசிட்டிற்கு வட்டியை குறைத்துவிடும், நிச்சயமற்ற வருவாய் உள்ள தொழில்களுக்கு வட்டி கூடினால் ஆச்சரியப்படவேண்டாம், வட்டி குறைப்பால் நமது நாட்டில் இயங்கும் தனியார் வங்கிகள் குறைந்த வட்டியில் பணம் கிடைக்கிறதே என்று வாங்கி மியுட்சுவல் ஃபண்ட் மூலம் பங்குச் சந்தை விளையாட்டில் கூடுதலாக முதலீடு செய்ய முயன்றால் தங்கம், வெள்ளி விலைகள் முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் உயர்ந்து ஊசலாடும் வாய்ப்புண்டு.
 யாருக்கு பயன்பின் இந்த வட்டி குறைப்பு யாருக்குத்தான் பயனளிக்கும்? இது பங்கு சந்தையில் மியுட்சுவல் ஃபன்ட் மூலம் விளையாடும் வங்கிகளும், அந்த மியுட்சுவல் ஃபண்ட்டில் டெப்பாசிட் செய்திருக்கும் பெரும்தனக்காரர்களும், அரசியலை சொத்துசேர்க்கும் தொழிலாக மாற்றும் ஆற்றல் படைத்தோரும் சிறிது காலம் பயன் பெற வாய்ப்புண்டு, 
அவர்களது தீரா பணத் தாகத்திற்கு சில மில்லி கிடைப்பதால் அவர்கள் உற்சாகமடைவர் என்று எதார்த்தத்தை பிட்டு வைக்கின்றனர். 
எனவே அருண்ஜெட்லியின் வட்டி குறைப்பால் பெருகும் மூலதன சுழற்சி உள்நாட்டு விவசாயத்திலும், பன்முகமாக வளர வேண்டிய தொழில்களிலும் சிறு அசைவைக் கூட ஏற்படுத்தாது, மாறாக மியுட்சுவல் ஃபண்ட் மூலம் பங்குச் சந்தையில் விளையாடும் அரசியல் தலைவர்களின் பணம் மலைபோல் பெருகி தேர்தல் காலங்களில் கை கொடுக்கும்.வங்கிகளுக்கான வட்டி வீதங்களும் பணக்கார நாடுகளும்வர்த்தக வங்கிகளுக்கு வட்டி வீத நிர்ணய ஏற்பாடு எல்லா நாடுகளும் பின் பற்றுகிற நடைமுறையாகும், உற்று கவனித்தால் இந்த வட்டி வீதம் நாட்டிற்கு நாடு வேறுபடுவதைக் காணலாம். பணக்கார நாடுகளில் அந்தந்த நாட்டின் பொருளாதார அடிப்படை பலத்திற்கும் மக்களின் பண்பாட்டிற்கும் ஏற்ப வேறுபடுவதை காணலாம். சான்றாக அமெரிக்காவின் ரிப்போ ரேட் வெறும் கால் சதமே (0.25சதவீதம்) ஆஸ்திரேலியா 2 சதவீதம், ஸ்விஸ் வங்கி ரிவர்ஸ் ரிப்போ ரேட் மட்டுமே 0.75 சதவீதம் ஐரோப்பிய வங்கி 0.05சதவீதம். 
ஜப்பான் 0.1சதவீதம், சீனா 4.6.சதவீதம், இந்தியா 6.75சதவீதம். இந்த புள்ளி விபரம் சர்வதேச செல்வாக்குள்ள நாணயங்களுக்கு ரிப்போ ரேட் சைபருக்கு பக்கத்திலே இருப்பதை காட்டுகிறது.ஏன் பணக்கார நாடுகளில் ரிப்போ ரேட் பெயரளவிலே இருக்கிறது.
 வளரும் நாடுகளில் ரிப்போ ரேட் கூடுதலாக உள்ளது. 
வளரும் நாடுகளில் பணக்கார நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய வங்கிகள் தாராளமாக கடன்கொடுக்கவே இந்த ஏற்பாடு, இந்தியா போன்ற வளரும் நாடுகளை சுரண்ட இந்த குறைந்த வட்டிவீதம் உதவுகிறது. 
ஆனால் வளரும் நாடுகளோ உள் நாட்டு பண ஓட்டத்தை சீராக வைக்க வட்டி வீதத்தை கூடுதலாக வைக்க தள்ளப்படுகின்றன. இந்த உண்மையை அந்நிய நிதி முதலீட்டிற்கு அமெரிக்காவிற்கு போய் கார்ப்பரேட் நிறுவனங்களின் வாசலில் பிச்சை எடுப்பதை கவுரமாக கருதும் மோடியும், வட்டி குறைப்பு மாவீரன் அருண்ஜெட்லியும் உணர்வார்களா? 
இந்திய தொழில்முனைவோரும் நிபுணர்களும் இந்தியாவில் தொழில் நடத்துவது சிரமம் என்று சிங்கப்பூருக்கும், துபாய்க்கும் ஓடுவதின் காரணம் என்ன என்பதை அறிவார்களா? 
வங்கி அமைப்பை பொருளாதார வளர்ச்சி கருவியாக ஆக்காமல் வட்டித் தொழிலாக மட்டுமே நடத்துகிற ஆதி கால லேவாதேவி குல பண்பாடு நீடிக்கிற வரை ரிசர்வ் வங்கி வட்டியை கூட்டினாலும் குறைத்தாலும் நெருக்கடியே விளையும் என்பதை மக்கள் உணர்ந்தால் நல்லது.
===================================================================================
இன்று,
அக்டோபர்-19.
  • நியுயே - அரசியலமைப்பு தினம்(1974)
  • மார்டின் லூதர் டாக்டர் பட்டம் பெற்றார்(1512)
  • சோ ஓயு மலையின் உச்சி முதன் முறையாக எட்டப்பட்டது(1954)
வறுத்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துகள்!
நேற்றைய பதிவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் மோதிய நாசர்,விஷால் -சரத் குமார் ,ராதாரவி தலைமையிலான அணியில் நாசர் அணியினர் எதிர் கொள்ளவேண்டிய கள்ளத்தனமான உறுப்பினர் சேர்க்கையைப் பற்றி சொல்லி அதை மீறி வெல்வது சற்று கடுமையான செயல் என்று சுட்டி காட்டியிருந்தோம்.

ஆனால் நாசர்-விஷால் அணியினர் சரத்குமார் அணியினரின் முறைகேடுகளையும் மீறி வென்று காட்டியுள்ளனர்.

இளைய  அணியின் பின்னால் இருந்து வழி நடத்திய கமல்ஹாசன் உடனிருந்த சிவகுமார் என்ற பண்பட்ட நடிகர்கள்தான் நாடக நடிகர்கள் வாக்குகள் முழுமையாக நாசர் அணிக்கு விழும் வாய்ப்பை உண்டாக்கிய கலைஞர்கள்  என்பதை மறைக்க முடியாது.

எனினும் கடுமையான முறைகீடுகளையும் மீறி வென்றுகாட்டிய விஷால் பொறுப்பினாலான அணிக்கு வாழ்த்துக்கள்.

நாசர் ,கார்த்தி போன்றவர்களை விட எதிர்தரப்பு சரத்குமார்-ராதாரவி ஆகியோரால் அதிகமாக கண்டு கொள்ளப்பட்டு,வறுத்தெடுக்கப்பட்டவர்கள் விஷால் ,கமல்ஹாசன் மற்றும் சிவகுமார் ஆகியோர்தான்.
.ஆகவேதான் விஷாலுக்கு வாழ்த்து.

கூடவே  கமல்ஹாசனுக்கும் -சிவகுமாருக்கும்.

நாம் எதிர் பார்த்த அணியினர் வென்றதில் நமக்கு மகிழ்ச்சி.
இவர்கள் தேர்தலினால் ,வெற்றியினால் மக்களுக்கு ஒரு நன்மையையும் இல்லை என்றாலும் இன்றைய அன்றாட கவலைகளை மறக்க மக்களை மகிழ்விக்கும் திரைத்துறை என்பதினால் வாழ்த்துக்கள்.

===================================================================================