இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

புதன், 7 அக்டோபர், 2015

"தொப்பை" to "சிக்ஸ்பேக்"!

ஒருவர் தன் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டியது, சரியான உடற்பயிற்சியுடன், உணவுகளும் தான்.
எனவே நீங்களும் உங்கள் தொப்பையைக் குறைத்து ஃபிட்டாக இருக்க வேண்டுமெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ளதை முதலில் பின்பற்றுங்கள். குறிப்பாக இவை சிக்ஸ் பேக் வைப்பதற்கு தொப்பையைக் குறைக்க மேற்கொள்ளும் அடிப்படை உடற்பயிற்சிகள். 
ஜப்பானிய மக்கள் தொப்பை இல்லாமல் இருப்பதன் ரகசியம் தெரியுமா?
சிட்-அப்ஸ் : 
கால்களை அகல வைத்துக் கொண்டு ஒரு 7-10 கிலோ எடைக்கல்லை இருக்கைகளால் முன்புறம் பிடித்துக் கொண்டு, முதுகை வளைக்காமல் அப்படியே உட்கார்ந்து எழ வேண்டும். இம்மாதிரி 12 முறை என 3 செட்டுகள் செய்ய வேண்டும்.
06-1444118081-1-exercise

க்ரஞ்சஸ் (Crunches) : 
உங்களுக்கு சிட்-அப்ஸ் செய்வதற்கு வசதியாக இருக்கும் போது, சற்று சவாலான உடற்பயிற்சிகளான க்ரஞ்சஸ் மேற்கொள்ள ஆரம்பியுங்கள். 
அதுவும் தரையில் படுத்துக் கொண்டு, கைகளை தலைக்கு பின் வைத்துக் கொண்டு, முழங்கால்களை மடக்கி, முன் உடலை மேலே தூக்க வேண்டும். 
இப்படி ஒரு செட்டிற்கு 12 என்ற வீதம் 3 செட் செய்து வர வேண்டும். 2 நாட்களுக்குப் பின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு இப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். 
இதனால் அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரையும்.
06-1444118086-2-crunches

லெக் லிப்ட்ஸ் (Leg Lifts) : 
ஒரு கம்பியில் தொங்கிக் கொண்டு, முழங்கால்களை மடக்கி, மார்பகத்தை தொடும் வகையில் தூக்க வேண்டும் அல்லது கால்களை மடக்காமல், இடுப்பளவில் கால்களை முன்னோக்கித் தூக்க வேண்டும். 
இது ஒரு ஆப்ஸ் உடற்பயிற்சி மற்றும் இப்படி செய்வதன் மூலம் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்புக்கள் குறையும்.
06-1444118093-3-hanging-leg-raise

உடலைத் தாங்குதல் : 
இந்த உடற்பயிற்சிக்கு புஷ்-அப் போன்று படுத்துக் கொண்டு, கைகளால் உடலைத் தாங்காமல், முழங்கையால் உடலைத் தாங்க வேண்டும். 
அப்படி தாங்கும் போது, உடலும், காலும் ஒரே நேராக இருக்க வேண்டும். 
இந்நிலையில் 1 நிமிடம் என 3 முறை செய்து வந்தால், வயிற்றில் இருக்கும் கொழுப்புக்கள் கரையும்.
06-1444118100-4-static-holds

அளவுக்கு அதிகமாக வேண்டாம்
தொப்பையை வேகமாக குறைக்க வேண்டுமென்று, ஆர்வக்கோளாறில் அளவுக்கு அதிகமாகவோ அல்லது நீண்ட நேரமோ உடற்பயிற்சியில் ஈடுபடுவதை முதலில் தவிர்க்க வேண்டும்.06-1444118106-5-exercise4-600
 
குறிப்பு : 
இப்படி அன்றாடம் செய்து வந்தால், நீங்களும்  சிக்ஸ் பேக் உடலுடன் அழகாகத் திகழலாம். ஏனெனில்  இப்படி சிம்பிளான உடற்பயிற்சிகளைத் தான் ஜப்பானியர்கள்  அன்றாடம் செய்து தொப்பை இல்லாமல் இருக்கின்றனர்.
நன்றி;சி.என்.என்,

===================================================================================
இன்று,
அக்டோபர்-7.
  • ஜேம்ஸ் குக், நியூசிலாந்தை கண்டுபிடித்தார்(1769)
  • ஜெர்மன், ஜனநாயகக் குடியரசு உருவாக்கப்பட்டது(1949)
  • இஸ்ரேலிய அரசு, டேவிட் பென் கூரியன் என்பவரால் அமைக்கப்பட்டது(1951)
  • ரால்ஃப் வெட்ஜ்வூட் என்பவரால் கார்பன் தாளுக்கான காப்புரிமம் பெறப்பட்டது(1806)
 இயற்பியலுக்கான நோபல் பரிசு 
நியூட்ரினோ துகள்
 குறித்த ஆய்வுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
ஜப்பானை சேர்ந்த டகாகி கஜிதா மற்றும் கனடாவைச் சேர்ந்த ஆர்தர் பி.மெக்டொனால்டு ஆகிய இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இவர்களின் நியூட்ரினோவுக்கும் நிறை உண்டு என்ற ஆய்வு நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
நியூட்ரினோ என்பது அடையாளம் காண முடியாத அணுவை விட சிறிய துகள். இதை இன்னும் முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை. பெருவெடிப்பு ஏற்பட்டு பால்வெளி வீதி (கேலக்சி) உருவான போதே நியூட்ரினோ உருவாக துவங்கியது. பால்வெளியில் நட்சத்திரக் கூட்டங்கள் மோதும் போதும், வெடித்து சிதறும் போதம் நியூட்ரினோ உருவாகிறது. சூரியனின் எரிசக்தி உருவாக்கத்தின் போதும் சோலார் நியூட்ரினோ வெளிப்படுகிறது. ஒளியை விட கூடுதல் வேகத்தில் பயணிக்கும் ஆற்றலுடையது நியூட்ரினோ துகள்.
நியூட்ரினோக்கள் எலக்ட்ரான் பண்பை ஒத்தவை. மனித உடலில் ஒரு நொடிக்கு 50 டிரில்லியன் என்ற அளவுக்கு ஊடுருவி வெளி வருகின்றன. பூமி உருவான அடிப்படை மூலக்கூறுகளில் நியூட்ரினோவும் அடங்கியுள்ளது.அணுதுகள்கள் குறித்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியே நியூட்ரினோ ஆய்வு. பிரபஞ்சம் உருவானதற்கான அடிப்படை ஆராய்ச்சியும் இது தான். இந்த ஆராய்ச்சியின் மூலம் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே கண்டறியலாம்.

நியூட்ரினோ 
*நியூட்ரினோ கண்ணுக்கு தெரியாமல் எங்கும் நிறைந்து காணப்படுகிறது. இது பல்வேறு விதங்களில் உருவாகிறது.
*சூரியனில் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் இணைந்து ஹீலியத்தை உருவாக்குவதால் சோலார் நியூட்ரினோக்கள் வெளிப்படுகின்றன.
*வளிமண்டலத்தில் சூப்பர்நோவா மற்றும் காற்று மூலக்கூறுகள், காஸ்மிக் கதிர்கள் மோதலால் நியூட்ரினோ வெளிப்படுகிறது.
*அணுஉலைகளில் அணுக்கரு இணைவின் போதும் நியூட்ரினோக்கள் உருவாகின்றன.
* அமெரிக்காவில் "டீப் அண்டர்கிரவ்ண்ட் நியூட்ரினோ எக்ஸ்பரிமென்ட்' என்ற ஆய்வு மையம் தெற்கு டகோடாவில் அமைக்கப்பட்டுள்ளது.

* ஹைபர் கமியோகாண்டே எனும் உலகின் பெரிய நியூட்ரினோ ஆய்வு மையம் ஜப்பானின் கமியோகா பகுதியில் உள்ளது.

* சீனாவில் "ஜிங்மேன் அண்டர்கிரவ்ண்ட் நியூட்ரினோ அப்சர்வேட்ரி' எனும் ஆய்வு மையம் 700 மீட்டர் ஆழத்தில் பாறையை தோண்டி அமைக்கப்பட்டுள்ளது.

* "இந்தியா பேஸ்டு நியூட்ரினோ அப்சர்வேட்ரி' தேனி அருகே அம்பரப்பர் மலையில் அமைக்கப்பட்டு வருகிறது.

===================================================================================
தமிழ்த் தட்டச்சு 
மென்பொருள்கள்.
கணினி மற்றும் இணையத்தில் தமிழில் தட்டச்சு செய்ய உதவும் 5 சிறந்த இலவச மென்பொருள்களைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
எ-கலப்பைவிண்டோஸ்
கணினிகளில் தமிழை தட்டச்சு செய்ய உதவும் ஓப்பன் சோர்ஸ் மென்பொருள். 
யுனிகோட் எழுத்துருவில் தட்டச்சு செய்ய பழைய மற்றும் புதிய தட்டச்சு விசைப் பலகை, தமிழ் 99, ஆங்கில பேச்சு வழக்கின் ஒலிக்குறியீடு அடிப்படையிலான பொனடிக், இன்ஸ்கிரிப்ட், பாமினி ஆகிய 5 வகை முறைகளில் எது உங்களுக்குத் தெரிந்த முறையோ அதனைத் தேர்வு செய்து பயன்படுத்த முடியும். எளிமையான, முற்றிலும் இலவசமாகக் கிடைப்பதும், தற்போதுள்ள அனைத்து விண்டோஸ் இயங்குதளத்திலும் இயங்கக்கூடியது.இதனை பதிவிறக்கம் செய்ய:
http://thamizha.org/

குறள் தமிழ்ச் செயலி
அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றும் கலை கந்தசாமி அவர்கள் தன்னார்வலராக வேலை நேரம் போக மீதி நேரங்களில் பல்வேறு மென்பொருள்களை தயாரித்து இலவசமாக வழங்கி வருகிறார். அவ்வாறு தமிழை கணினியில் தட்டச்சு செய்வதற்காக 2001ஆம் ஆண்டு இச்செயலியை வெளியிட்டார். கணினி மாற்றங்களுக்கு ஏற்ப புதிய வசதிகளை சேர்த்து தற்போது 5வது பதிப்பு பயன்படுத்துவதற்கு கிடைக்கிறது.
இது விண்டோஸ் 10 சிஸ்டம் உட்பட, விண்டோஸ் 7, 8, 8.1 சிஸ்டங்களில் 32 மற்றும் 64 பிட் சிஸ்டம் என அனைத்திலும், எந்த சிக்கலும் இல்லாமல், இயங்குகிறது. விண்டோஸ் எக்ஸ்பி எனில் சர்வீஸ் பேக் 3 நிறுவப்பட்டிருக்கவேண்டும்.குறள் தமிழ்ச் செயலியைப் பயன்படுத்தி, யுனிகோட், திஸ்கி, டாம், டாப், லிபி மற்றும் பழைய தமிழ் எழுத்துக் குறியீடு கட்டமைப்புகள் வழங்கும் தமிழை உள்ளீடு செய்திடலாம். தட்டச்சு முறைகளில், ஒலியியல் (பொனடிக்), தமிழ்99, புதிய மற்றும் பழைய தமிழ் தட்டச்சு விசைப் பலகை முறைகளைப் பயன்படுத்தி தட்டச்சு செய்ய வசதிகள் தரப்பட்டுள்ளன. 
இம்மென்பொருளைக் கொண்டு யுனிகோட் எழுத்துருவுடன் திஸ்கி, டேப், டேம், ஸ்ரீலிபி, பழைய தமிழ் எழுத்துருக்களை தட்டச்சு செய்யும் வசதியும் இணைந்துள்ளது. 
குறுக்கு விசை வசதி உள்ளது. இம்மென்பொருளை பதிவிறக்கம் செய்ய:
http://kuralsoft.com/kural-tamil-software.html

இனிய தமிழ்
இது தமிழ்க் கணினி உலகிற்கு புதுவரவாகும்.
 புதுச்சேரி, சின்னக் காளப்பட்டு அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் முத்துகருப்பன் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள் இது. 
இம்மென்பொருளின் முகப்புப் பக்கம் தமிழின் முதல் எழுத்தான ‘அ’ வடிவில் அமைத்துள்ளது சிறப்பாகும்.
இம்மென்பொருளில் யுனிகோட் எழுத்துருவுடன் டேஸ்16 (வகை எழுத்துரு மற்றும் டேம் எழுத்துருக்களையும் தட்டச்சு செய்யக்கூடியது. 
விசைப்பலகை முறைகளில் பழைய, புதிய தட்டச்சு, தமிழ் 99, பொனடிக் ஆகியவை உள்ளன.ஆன்ஸ்கிரீன் கீபோர்டு வசதியும் இதில் உள்ளது. ஈஸி தமிழ் என்ற எழுத்திலக்கண மரபுப்படி அமைந்த விசைப்பலகையுடன் பொனடிக், டைப்ரைட்டர், தமிழ்99 ஆன்ஸ்கிரீன் கீபோர்டுகளும் உள்ளன. இம்மென்பொருளில் கூடுதல் வசதியாக மாற்றி என்ற பெயரில் தமிழ் எழுத்துரு மாற்றி ஒன்றும் தரப்பட்டுள்ளது. 
இதனைப் பயன்படுத்தி யுனிகோட், இன்டோவேர்ட், ஸ்ரீலிபி, அனு செந்தமிழ், டேம், டேப், பாமினி, வானவில், திஸ்கி, டேஸ்16 எனப் பல்வேறு முன்னணி எழுத்துரு வகைகளுக்கு ஒன்றிலிருந்து மற்றொரு வகைக்கு எளிதாக மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் டூல்ஸ் பிரிவில் எண்களை எழுத்தாக மாற்றும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, 74 என்ற எண்ணை தட்டச்சு செய்தால் எழுபத்து நான்கு என்று எழுத்தாக மாற்றிக் காட்டும். இதுமட்டுமல்லாது கால், அரை, முக்கால் அளவுகளும், காப்புரிமை குறியீடு, இந்திய ரூபாய் குறியீடு, தமிழ் எண்கள் என நாம் தேடித் தேடி அலையும் முக்கியமான குறியீடுகள் தொகுக்கப்பட்ட சிறு செயலியும் உள்ளது. இனியதமிழ் பதிவிறக்கம் செய்ய
http://www.iniyatamil.com/

என்எச்எம் ரைட்டர்
சிறிய அளவிலான மென்பொருள். 
10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளை தட்டச்சு செய்யலாம். 
குறிப்பாக தமிழில் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. யுனிகோட் எழுத்துருவுடன் டேம், டேப், ஸ்ரீலிபி, பாமினி, வானவில் போன்ற பிற எழுத்துரு வகைகளையும் தட்டச்சு செய்யக்கூடியது. 
விசைப் பலகை தட்டச்சு முறைகளில் பழைய மற்றும் புதிய தட்டச்சு, தமிழ் 99, பொனடிக், இன்ஸ்கிரிப்ட், பாமினி ஆகிய 6 வகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 
எளிதாக பதிவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும்.இதன் புதிய பதிப்பு 2.9 விண்டோசின் அனைத்து இயங்குதளங்களிலும் இயங்கக் கூடியது. 
இம்மென்பொருளை பதிவிறக்கம் செய்ய
http://software.nhm.in/products/writer

அழகி
யுனிக்கோட் மட்டுமல்லாது டேம், டேப், டிஸ்கி, பாமினி, சாய் இந்திரா ஆகிய பிற வகை எழுத்துருக்களையும் தட்டச்சு செய்யக் கூடியது.
ஒலியியல்(பொனடிக்), தமிழ்99, பழைய தட்டச்சு, இன்ஸ்கிரிப்ட் ஆகிய விசைப்பலகை முறைகளில் தட்டச்சு செய்யலாம். 
இம்மென்பொருளைக் கொண்டு திஸ்கி எழுத்துருவை யுனிகோடிற்கு மாற்றும் வசதியும் உள்ளது. விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 10 வரையிலான அனைத்து இயங்குதளங்களிலும் செயல்படக்கூடியது. 
பென் டிரைவ்களில் எடுத்துச் செல்ல வசதியாக போர்ட்டபிள் வடிவத்திலும் கிடைக்கிறது. இம்மென்பொருளை பதிவிறக்கம் செய்ய:
http://www.azhagi.com
======================================================================================
அதிமுகவோடு கூட்டணி சேர வேண்டும் என்று முன்னாள் டிஜிபி ராமானுஜம் பேச்சைக் கேட்டு ஜவாஹிருல்லா செல்வாரேயானால், பிளவு உறுதி என்கின்றன உளவுத்துறை வட்டாரங்கள். மனிதநேய மக்கள் கட்சியில் கணிசமான பகுதியினர் திமுவோடு சேர வேண்டும் என்று விரும்புகையில், தான் அடைந்த தனிப்பட்ட பலன்களுக்காக, மொத்த கட்சியையும், ஜெயலலிதாவின் காலில் அடகு வைக்க முயல்கிறார் ஜவாஹிருல்லா என்று அவர் மீது பலமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இன்று ஏற்பட்டுள்ள ஒற்றுமை நிலைக்குமா இல்லையா என்பது வெகு விரைவில் தெரிந்து விடும்.

Shankar A
முன்னாள் டிஜிபி ராமானுஜத்தின் கைப்பிடிக்குள் இருக்கிறார் வைகோ. அதிமுக எதிர்ப்பு வாக்கு வங்கிகளை பிரித்து, அதிமுகவை வெற்றி பெற வைப்பதே அவருக்கு இடப்பட்டிருக்கும் பணி.
அந்தப் பணியின் முதற்கட்டமாகவே நான்கு கட்சி கூட்டணியை அறிவித்து தனியாக தேர்தலை சந்திக்கப் போவதாக அறிவிப்பு.
நான்கு கட்சி கூட்டணி தேர்தலில் வெற்றி பெறப்போகிறதே இல்லையோ.... அந்த நாலு பேரும் சேர்ந்து, மதிமுகவை பாடையில் தூக்கிச் செல்லப் போவது நிச்சயம்.
Shankar A இன் புகைப்படம்.
Shankar A

விஜய்ணா, தனக்கு புலி படத்தில் கிடைத்த 33 கோடி ரூபாயை, எய்ட்ஸ் வந்த புலிகளைக் காப்பாற்றுவதற்காக தானமாக கொடுத்துள்ளார்.
நன்கொடை ரசீதுகளை பார்த்த வருமான வரி அதிகாரிகள் அதிர்ச்சி.

=====================================================================================