இவவசம் இல்லை,கடன் சுமைதான்...



2011ல் தமிழகத்தில் ஆட்சி பொறுப்புக்கு வந்த ஜெயலலிதா முன்பிருந்த அரசு அமல்படுத்திய சில இலவசதிட்டங்களுடன் புதிதாக சில திட்டங் களையும் அறிவித்தார்.
20 கிலோ இலவச அரிசி திட்டம்; மிக்சி,கிரைண்டர், ஃபேன் வழங்கும் திட்டம்; ஏழை பெண்கள் திருமண உதவி என்ற வகையில் 4 கிராம் தங்கம் மற்றும் உதவித்தொகை வழங்கும் திட்டம்; 
இலவச ஆடு கள், செம்மறி ஆடுகள், கறவை மாடுகள் வழங்கும் திட்டம்; மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம் ஆகியவை சிறப்பு திட்டத்தில் இடம் பெறுபவை.
இந்த திட்டங்கள் யாவும் ஏழைகளுக்கு ஓரளவு உதவிடும் திட்டங்கள் என்பதில் ஐயமில்லை. 
ஆனால் இதற்கான நிதி ஆதா ரத்தை எவ்வாறு கையாண்டது என்பது தான் கேள்வி?
இந்த 5 ஆண்டு காலத்தில் மாநில அரசுஇந்த இலவச திட்டங்களுக்கு செல வழித்த மொத்த தொகை எவ்வளவு? 
இக்காலத் தில் மாநில அரசு கூடுதலாக எவ்வளவு கடன் வாங்கியுள்ளது என்பதை கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, புதிதாக வாங்கியகடனில் ஒரு பகுதிதான் இந்த இலவச திட் டங்களுக்கு செலவழிக்கப்பட்டுள்ளது என்று கருதினால் அது தவறல்ல.
2015-16-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பட்ஜெட் சமர்ப்பிக் கும்போது மாநில அரசின் கடன் பற்றி குறிப்பிடும்போது அதிமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு, கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 79,687 கோடி கூடுதலாக கடன் வாங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். 
இதற்கு முந்தைய ஆட்சி (திமுக)காலத்தில்ரூ. 1,31,796 கோடி கடன். 
தற்போது அது ரூ.2,11,483 கோடியாக பெருகியுள்ளது என்கிறது அவரது கணக்கு.இவர்கள் ஆட்சிக்கு வந்த புதிதில் முந்தைய திமுக ஆட்சியாளர்கள் பெரும் கடன் சுமை வைத்துவிட்டு சென்று விட்டனர் என்று புலம்பியது வேறு கதை.
ஓரிரு வருடங்கள் அதை காரணம் காட் டியே மக்களுக்கு சால்ஜாப்பு கூறியதும் நினைவிற்கு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் மாநிலஅரசு பெற்ற கட னைக் காட்டிலும் மிகக்குறைவாகவே இலவச திட்டங்களுக்கு அரசு செலவு செய்துள்ளது என்பதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 
இதுவன்றி மதுபான விற்பனை மூலம் அடித்த கொள்ளை தனிக்கதை.
அதிமுக அரசு 2011ல் ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 5 ஆண்டுகளில் நிதிநிலை அறிக்கையில் 5 இலவச திட்டங்களுக்கும் ஒதுக்கிய தொகை விவரம் வருமாறு:
கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக அரசு புதிதாக அறிவித்த இலவச திட்டங் களுக்கு ஒதுக்கிய தொகை ரூ. 44,397 கோடிமட்டுமே. இதுவும் ஒதுக்கிய தொகை தானே தவிர, உண்மையாக செலவழித்த தொகை குறைவாகவே இருக்கும்.
உதாரணத்திற்கு ஆடுகள்/செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கு 2013-14ஆம் ஆண்டில் அரசு ஒதுக்கிய தொகை 198.25 கோடி. 
ஆனால் செலவழித்த தொகையோ ரூ. 76.50 கோடி மட்டுமே.5 ஆண்டுகளில் மொத்தமாக 60,000கறவை மாடுகளும், 7 லட்சம் குடும்பங் களுக்கு ஆடுகளும் வழங்கப்போவதாக அரசு இலக்கு, தமிழ்நாட்டில் உள்ள 1.5 கோடி குடும்பங்களில் இது ஒரு சிறு பகுதியினருக்கே உதவிடும். 
இருப்பினும் இதற்கான ஒதுக்கீட்டில் குறைவாகவே செலவு செய்யப்பட்டுள்ளது என்பது கவனத்தில் கொள்க.பொதுவிநியோக இலவச அரிசி திட்டத்திற்கு முந்தைய திமுக ஆட்சி காலத்தில் ஏற்கெனவே ஆண்டுதோறும் சராசரியாக செலவழித்து வந்த ரூ. 4000 கோடி தொகையினை ஒப்பிடும்போது இந்த ஆட்சியில் கூடுதலாக இலவச அரிசி திட்டத்திற்கு ரூ. 1000 கோடிக்கும் சற்று அதிகமாக செலவிடப்படுகிறது என்பதே உண்மை.
அதிமுக ஆட்சி காலத்தில் கடன் வாங்கி அமல்படுத்திய இலவச திட்டங்களுக்கான கூடுதல் கடன் சுமை அடுத்து வரும் ஆட்சியாளர்கள் தலையில்தான் விழும்.புதிதாக ஆட்சிக்கு வரும் ஒரு அரசுசில புதிய சலுகை திட்டங்களை அறிவிப்பதும் மக்களின் எதிர்பார்ப்பிற்கு உகந்தது தான். 
ஆனால் அத்தகைய இலவச திட்டங் களுக்கான நிதியை அரசு தனது வருவாயி லிருந்து உருவாக்க வேண்டுமே அல்லாது கடனை வாங்கி செலவு செய்துவிட்டு, அடுத்து வருபவர்கள் சுமக்கட்டும் என்றுவிட்டுவிடக்கூடாது. அவ்வாறு கடன் வாங்கி செலவு செய்துவிட்டு தனது அரசின் சாதனையாக தம்பட்டம் அடித்துக் கொள்வதிலும் நியாயமில்லை. 
அதற்கு பதிலாக கிரானைட் ஊழல், தாதுமணல் கொள்ளை ஆற்று மணல் அக்கிரமங்களையெல்லலாம் தடுத்து நிறுத்தி தனியாருக்கு சென்று கொண் டிருக்கும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை அரசின் நிதி வருவாயாக மாற்றி அதன் மூலம் இந்த நலத்திட்டங்களை செயல்படுத்தி இருந்தால் வரவேற்கலாம். 
ஆனால் நடந்தது வேறு.கடன் ஒருபுறமிருக்க, கடந்த 5 ஆண்டுகாலத்தில் அதிமுக அரசு ஏழை குடும்பங்களின் வாழ்வைக் கெடுத்து மது பானம் விற்றதின் மூலம் அடித்த கொள்ளைவிற்பனை வரி மற்றும் எக்ஸைஸ் வரி ஆகியவகையில் மொத்தமாக ரூ. 119022 கோடி.ஆண்டு வாரியாக விவரம் வருமாறு:
(கோடிகளில்) 2011 - 12 18081 2012 - 13 21680 2013 - 14 23401 2014 - 15 26188 2015 - 16 29672 (எதிர்பார்ப்பு)மொத்தம் 1,19,022
மதுபானம் விற்றதின் மூலம் கிடைத்த ரூ. 119000 கோடி வருமானத்திற்கும் மேல்ரூ. 79,687 கோடி கூடுதலாகக் கடன் வாங்கித்தான் அதிமுக அரசு அதில் ஒரு சிறுபகுதியை இலவச திட்டங்களுக்கு ஒதுக்கி சாதனை செய்துள்ளதாக தம்பட்டம் அடிக்கிறது.
அதிமுக ஆட்சிக்கு வந்த துவக்கத்தி லேயே மின் கட்டணம், பஸ் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வு மூலம் தனக்கு வாக்களித்த மக்களை பதம் பார்த்தது. மின் கட்டணம் மூலம் ஆண்டுக்கு 8000 கோடியும், பஸ் கட்டணம் மூலம் ஆண்டுக்கு 2200 கோடியும் மக்கள் மீது சுமை ஏற்றியது.கடந்த 4 ஆண்டுகளில் இதன் மூலம் மட்டுமே ரூ. 40,000 கோடிக்கு மேல்அதிமுக அரசு மக்களை கொள்ளை யடித்தது.
அதிமுக ஆட்சி கொடுத்தது ரூ. 45,000 கோடி என்றால் மக்களிடமிருந்து எடுத்தது ரூ. 2,50,000 கோடி.
நாலரை ஆண்டு கால ஆட்சி சாதனை பற்றி என்னத்த சொல்ல? 
மக்களிடம் இவற்றினை விளக்கினால் எது சாதனை என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

இலவச திட்டங்களுக்கான செலவு (தொகை கணக்கு கோடிகளில்)
இலவச திட்டங்கள் 2011-12 2012-13 2013-14 2014-15 2015-16இலவச அரிசி திட்டம் 4,500 4,900 4,900 5,300 5,300ஃபேன், மிக்சி, கிரைண்டர் திட்டம் 1,250 2,000 1,500 2,000 2,000ஆடுகள்/கறவை மாடுகள் வழங்கும் திட்டம் 191 244 250 242 242லேப்டாப் வழங்கும் திட்டம் 912 1,500 1,500 1,100 1,100ஏழை பெண்கள் தாலிக்கு தங்கம் திருமண உதவி திட்டம் 574 748 750 757 703 7,367 9,392 8,900 9,393 9,345மொத்தம் 44,397 கோடி.
ஆனால் வாக்களித்த மக்களுக்கு செய்த நன்மை என்று பார்த்தால் அதிமுக ஆட்சிக்கு வந்த துவக்கத்திலேயே மின் கட்டணம், பஸ் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வு மூலம் தனக்கு வாக்களித்த மக்களை பதம் பார்த்தது. மின் கட்டணம் மூலம் ஆண்டுக்கு 8000 கோடியும், பஸ் கட்டணம் மூலம் ஆண்டுக்கு 2200 கோடியும் மக்கள் மீது சுமை ஏற்றியது.மட்டும்தான்.
ஒவ்வொரு தமிழ் நாட்டு மக்கள் மீதும் 23ஆயிரம் கடன் சுமை உள்ளது.மத்திய அரசு கடன் வெறு.
=======================================================================================
இன்று,
நவம்பர்-27.
  • போலந்து அரசியலைப்பு பெறப்பட்டது(1815)
  • கின்னஸ் உலக சாதனை புத்தகத்தை ஆரம்பித்த ரொஸ் மாக்வேர்ட்டர் இறந்த தினம்(1975)
  • ரத்மலானை விமான நிலையத்திற்கு முதலாவது விமானம் மதராசில் இருந்து வந்திறங்கியது(1935)
  • பாரிசில் ஆல்பிரட் நோபல், நோபல் பரிசு திட்டத்தை தெரிவித்தார்(1895)


========================================================================
================
எத்தனையாவது அவதூறு?

ஜெயலலிதா என் மீது தொடுத்திருக்கும் எத்தனையோ அவதூறு வழக்குகளில் இதுவும் ஒன்று என்பதால், சட்ட நியாயத்தை நிலைநாட்டிட இந்த வழக்கையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.
அவதூறாக தகவல்களை வெளியிட்டதாகக் கூறி தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா என் மீது அவதூறு வழக்கு தொடுத்திருக்கிறாராம்! அப்படி என்ன இந்த ஆட்சியாளர்களை விட அவதூறாகவா நாம் எதுவும் கருத்து வெளியிட்டு விட்டோம் என்று பார்த்த போது, “ஆனந்த விகடன்” இதழில், ஜெயலலிதா நான்காண்டு காலத்தில் சாதித்தது என்ன என்று வெளி வந்த கட்டுரை ஒன்றின் ஒரு பகுதியை நான் அப்படியே எடுத்து வெளியிட்டிருந்தது தெரிந்தது. நடுநிலை இதழ் என நாட்டினரால் கருதப்படும் ஒன்றில் வெளி வந்த கட்டுரையை எடுத்துக் காட்டியதற்காக, என் மீது அவதூறு வழக்காம்! இந்த ஆட்சியில் என் மீது போடப்பட்ட எத்தனையாவது அவதூறு வழக்கோ இது?
இவர்களது கட்சிக்காரர்கள் மற்றும் அ.தி.மு.க. அமைச்சர்கள் ஆகியோரை விடவா வேறொருவர் அவதூறாகப் பேசிட முடியும். எதிர்க் கட்சியினரைப் பற்றி, குறிப்பாக என்னைப் பற்றி அ.தி.மு.க. வினரும், அவர்களது அதிகாரப் பூர்வமான நாளேடும் செய்யாத தரக் குறைவானதும் அவதூறு நிறைந்ததுமான விமர்சனமா? அரசியலுக்கு வந்தால் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ளும் பக்குவமும், சகிப்புத்தன்மையும் வேண்டும் என்பதை உணர்ந்தவன் நான்.
ஜெயலலிதாவின் அவதூறு நடவடிக்கை வந்தவுடன் “ஆனந்த விகடன்” எழுதியுள்ள பதிலில், “கடந்த தி.மு.க. ஆட்சியின் போதும் கருணாநிதி தலைமை யில் இருந்த அமைச்சர்கள் அனைவரைப் பற்றியும் இதே போல் தொடர்ந்து எழுதி வந்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளது. அப்போதெல்லாம் தி.மு. கழக அரசு அந்தப் பத்திரிகை மீது அவதூறு வழக்கு தொடுத்து விடவில்லை.
பொதுவாக “ஆனந்தவிகடன்” இதழ் வியாழக்கிழமை காலையிலேயே வந்து விடும். அந்த இதழில் வெளி வந்த செய்தி அவதூறானது என்றால், அப்போதே, அன்றையதினமே அரசின் சார்பில் மறுப்பு தெரிவித்திருந்தால், மற்றவர்கள் அதையெடுத்து எழுத வாய்ப்பில்லாமல் போயிருக்குமல்லவா? அதைச் செய்யாமல், பத்திரிகையைப் பல்லாயிரக்கணக்கானோர் படித்தறிந்த பிறகு, வழக்கு தொடுப்பதில் என்ன பயன்? அந்தக் கட்டுரையில் வந்த செய்திகள் உண்மைக்கு மாறானவை என்றால், அரசு தரப்பில் அதற்கு விளக்கமாக பதில் அளிக்கலாமே? ஜனநாயகத்தில் வழக்கமாகக் கடைப்பிடிக்கப் பட்டு வரும் முறை தானே அது?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?