இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

செவ்வாய், 3 நவம்பர், 2015

வைரஸ் தாக்குதலில் இருந்து பிரவுசரை காப்பாற்றிட,உ ங்கள் கம்ப்யூட்டரில் செயல்படும் பிரவுசர் செயலியை வைரஸ் புரோகிராம்கள் கைப்பற்றலாம்; செயல்படவிடாமல் முடக்கிப் போடலாம். பிரவுசர் புரோகிராம்களில் உள்ள பிழையான குறியீடுகள் வழியாக, ஹேக்கர்கள் வைரஸ் அனுப்ப முயற்சிக்கலாம். 
அல்லது பிரவுசர்களில் பயன்படுத்தும் ப்ளக் இன் புரோகிராம்கள் வழியாகவும் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, உங்கள் கம்ப்யூட்டரைச் செயல் இழக்கச் செய்திடலாம். இந்த முயற்சிகளை முறியடிக்கும் வகையில் நாம் சில முன்னேற்பாடான செயல்பாடுகளை எப்போதும் மேற்கொள்ள வேண்டும். அவற்றை இங்கு காணலாம். 

பிரவுசரை எப்போதும் மேம்படுத்தவும்
உங்கள் கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் பிரவுசர் செயலிக்கு மேம்படுத்தப்படும் பைல்களை, பிரவுசர் வழங்கிய நிறுவனம் அனுப்பினால், அவற்றை உடனடியாகத் தரவிறக்கம் செய்து, பிரவுசரை மேம்படுத்தவும். கூடுமானவரை, மேம்படுத்துதலை பிரவுசர் தானாக மேற்கொள்ளும் வகையில் ”automatic updates“ என்பதனைச் செயல்படுத்தியே வைக்கவும். 
எடுத்துக் காட்டாக, பலர் மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கிய பழைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினையே பயன்படுத்தி வருவார்கள். அல்லது விண்டோஸ் செயல்பாட்டில் இயங்கும் பழைய ஆப்பிள் சபாரியைப் பயன்படுத்துவார்கள். இது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். 
கூகுள் குரோம் அல்லது மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசரைத் தானாக அப்டேட் செய்திடும் வகையில் செட்டிங்ஸ் மேற்கொண்டு அமைக்கவும். புதிய விண்டோஸ் சிஸ்டத்திற்கு மாறினால், அதற்கேற்ற புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பினைப் பயன்படுத்தவும். 
விண்டோஸ் 10 சிஸ்டத்திற்குக் கம்ப்யூட்டரை அப்கிரேட் செய்திருந்தால், எட்ஜ் பிரவுசரையே பயன்படுத்தவும். விண்டோஸ் 7, 8 மற்றும் 8.1 இவற்றில் ஒன்றைப் பயன்படுத்தினால், அதற்கேற்ற பிரவுசரை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தவும். 
கிளிக் டு ப்ளே ப்ளக் இன் புரோகிராம்கள்
உங்கள் இணைய பிரவுசரில் பல ப்ளக் இன் புரோகிராம்கள் கிளிக் செய்து இயக்கும் வகையில் தரப்பட்டிருக்கும். இவற்றை நீங்கள் இயக்கி வைக்க வேண்டும். 
இதனால், இணைய தளங்கள் வேகமாக உங்கள் கம்ப்யூட்டருக்கு இறக்கம் செய்யப்படும். இதனால், சி.பி.யு.விற்கு அதிக வேலைப்பளு இருக்காது. 
லேப்டாப் கம்ப்யூட்டர் எனில், அதன் பேட்டரி பவர் மிச்சப்படும். அது மட்டுமின்றி, இவை பாதுகாப்பு தரும் வழிகளாகவும் இயங்கும். 
உங்கள் பிரவுசரின் பின்னணியில், ப்ளக் இன் புரோகிராம்கள் செயல்பட்டால், ஹேக்கர்கள், பிரவுசரின் பிழைக் குறியீடுகளைக் கண்டறிந்து அவற்றைப் பயன்படுத்த முடியாது. 

தேவையற்ற ப்ளக் இன் புரோகிராம்கள்
உங்கள் இணைய பிரவுசரைப் பாதுகாப்பாக வைத்திருக்க, உங்களுக்குத் தேவையற்ற ப்ளக் இன் புரோகிராம்களை, கம்ப்யூட்டரிலிருந்து நீக்கிவிடவும். 
இதற்கு, பிரவுசரில் பதிந்து வைக்கப்பட்டுள்ள ப்ளக் இன் புரோகிராம் பட்டியலைப் பெற்று, தேவையற்றவற்றை அழித்துவிடலாம். 
இவற்றில் ஜாவா புரோகிராம்கள் மிகவும் ஆபத்தானவை. எனவே, அவை தேவை இல்லை எனில், முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கிய 'சில்வர்லைட்' போன்ற புரோகிராம்கள் தேவையற்றவையாய் மாறிவிட்டன.
 எனவே இவற்றை நீக்கிவிடலாம். அதே போல, ப்ளாஷ் புரோகிராம் தேவை இல்லை எனில், நீக்கிவிடலாம். இதனால், பிரவுசர் செயல்பாடு பாதிக்குமோ என்ற கவலை வேண்டாம். 
எப்போது வேண்டுமானாலும், கட்டாயமாகத் தேவைப்படும் நிலையில், மீண்டும் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

ப்ளக் இன் புரோகிராமினை மேம்படுத்தவும்: 
குறிப்பிட்ட ப்ளக் இன் புரோகிராம்களை மட்டும் வைத்துக் கொள்வது குறித்து மேலே பார்த்தோம். நமக்குத் தேவையான ப்ளக் இன் புரோகிராம்களை மட்டும் வைத்துக் கொள்ளும் சூழ்நிலையில், அவற்றை அவ்வப்போது மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். 
அடோப் நிறுவனத்தின், ப்ளாஷ் ப்ளேயரை நீங்கள் பதிந்து வைத்துப் பயன்படுத்திக் கொண்டிருந்தால், அது தானாகவே அப்டேட் செய்திடும் வகையில் அமைத்துக் கொள்ளவும். கூகுள் குரோம் பிரவுசர், தனக்கென ப்ளாஷ் செயலியை அமைத்துக் கொண்டு வழங்கி வருகிறது. 
தானாகவே, அதனைப் புதுப்பித்தும் வருகிறது. விண்டோஸ் 10ல் இயங்கும் எட்ஜ் பிரவுசரும் தனக்கென ப்ளாஷ் பிளேயரைக் கொண்டுள்ளது.
 ஆனால், அதனை நாம் தான் தானாக அப்டேட் செய்து கொள்ளும் வகையில் அமைக்க வேண்டும். 
அதே போல், நாம் பயன்படுத்தும் அனைத்து ப்ளக் இன் புரோகிராம்களும், தாமாக அப்டேட் செய்திடும் வகையில் அமைக்க வேண்டும்.

64 பிட் பிரவுசரைப் பயன்படுத்தவும்: 
பிரவுசர்களில், 64 பிட் அளவில் இயங்கும் பிரவுசர்கள், வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாப்பு தரும் வகையில் இயங்கும் தன்மை கொண்டவையாய் உள்ளன. 
நீங்கள் 64 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துபவராக இருந்தால், 64 பிட் பிரவுசர் தான் உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும். கூகுள் குரோம் பிரவுசர் 32 மற்றும் 64 பிட் அளவில் இயங்கும் வகையில் கிடைக்கிறது. ஆனால், பலர் 32 பிட் பிரவுசரையே பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். இவர்கள், 64 பிட் பிரவுசருக்கு மாறிக் கொள்வது நல்லது. பயர்பாக்ஸ் பிரவுசரைப் பொறுத்த வரை, நிலையாக எந்தச் சிக்கலும் இன்றி செயல்படும் வகையில், 64 பிட் பிரவுசர் பதிப்பு இல்லை. ஆனால், சோதனை முறைப் பதிப்பு கிடைக்கிறது. 
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எட்ஜ் பிரவுசர் 64 பிட் அமைப்பிலேயே செயல்படும் வகையில் உள்ளது. அதே போல, 64 பிட் பதிப்புகளாகக் கிடைக்கும் மேக் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் இயங்கும் இணைய பிரவுசர்கள் அனைத்தும் 64 பிட் பிரவுசர்களாகவே உள்ளன.

ஆண்ட்டி எக்ஸ்ப்ளாய்ட் புரோகிராம்:
 இந்த வகை புரோகிராம்கள், பிரவுசருக்கான பாதுகாப்பினை வழங்குகின்றன. இவை ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் அல்ல. பிரபலமான சாப்ட்வேர் புரோகிராம்கள், பல லட்சக் கணக்கில் குறியீடு வரிகளைக் கொண்டிருக்கும். 
இவற்றில் சில பிழையான குறியீடுகளைக் கண்டறிந்து ஹேக்கர்கள் தங்களுடைய வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம்களை அனுப்புகின்றனர். இவற்றைப் பெற்ற சில புரோகிராம்கள், வைரஸ் தாக்குதலினால், வழக்கமான செயல்பாட்டிற்கு மாறாகச் செயல்படுகையில், ஆண்டி எக்ஸ்ப்ளாய்ட் புரோகிராம், அதனைப் புரிந்து கொண்டு பிரவுசருக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு தருகின்றன. வைரஸ்களை அழிப்பதில் இது ஈடுபடாது. 
இத்தகைய புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்து இயக்கி வைப்பது பிரவுசர் பாதுகாப்பிற்கு நல்லது. இந்த வகையில் Malwarebytes Anti-Exploit என்ற ஆண்டி எக்ஸ்ப்ளாய்ட் புரோகிராம் சிறப்பாகச் செயல்படுகிறது. 
இதனைப் பெற https://www.malwarebytes.org/antiexploit/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். இந்த புரோகிராம் முற்றிலும் இலவசமே. 
ஏன் இதற்கு எதிராக ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்தக் கூடாது? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். நாம் 
எப்போதும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களில் செயல்பாட்டில் நம்பிக்கை வைத்து செயல்பட முடியாது. சாப்ட்வேர் புரோகிராம்களில் உள்ள பிழைக்குறியீடுகளைப் பயன்படுத்த முடியாத வகையில் இந்த ஆண்ட்டி எக்ஸ்ப்ளாய்ட் புரோகிராம்கள் பாதுகாப்பு தருவது நல்லது தானே.

பிரவுசர் எக்ஸ்டன்ஷன்கள்
பிரவுசர்களில், கூடுதல் வசதி தரும் வகையில் நீட்சியாக சில செயலிகள் தரப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம், இணையத்தில் செயல்பாடு மிகவும் எளிதாகவும் விரைவாகவும் மேற்கொள்ளப்படும். 
ஆனால், இவற்றைப் பயன்படுத்துவதில் நாம் அதிகக் கவனம் கொள்ள வேண்டும். சில கெடுதல் விளைவிக்கும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், விளம்பரங்களை நாம் பயன்படுத்தும் இணைய தளங்களில் இடைச் செருகி, நாம் அழுத்தும் கீகளை அப்படியே பெற்று, இந்த மோசமான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களைத் தயாரித்து அனுப்பியவருக்கு அனுப்பி வைக்கும். 
இதன் மூலம் நம் தனிப்பட்ட வகை தகவல்கள் திருடப்பட்டு நமக்கு, நிதி இழப்பு ஏற்படலாம். எனவே, நமக்குத் தேவையான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை மட்டும் பயன்படுத்தவும். 
எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை மதிப்பிட்டு அவை நல்லவை தானா என்று அறிந்து பயன்படுத்துவது நன்மை தரும்.

மோசமான தளங்கள்
பிரவுசரின் பாதுகாப்பிற்கு மேலே கூறப்பட்ட வழிகளை நாம் பின்பற்றினாலும், நம்மை சிக்கலில் சிக்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட மோசமான தளங்களை, இணையத்தில் சென்று பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும். 
பல இணைய தளங்கள் மோசமான சாப்ட்வேர் சங்கதிகள், படங்கள் மற்றும் தகவல்களைத் தரவிறக்கம் செய்திட நம்மைத் தூண்டும். 
அவை மிக அபாயமான விளைவுகளை நம் கம்ப்யூட்டரில் ஏற்படுத்தும் புரோகிராம்களாக இருக்கும். எனவே, இது போன்ற தளங்களை அணுகிப் பார்க்கும் ஆசையை அறவே ஒழித்திட வேண்டும்.
நன்றி:தினமலர்,
===================================================================================
மைக்ரோசாப்ட் டின்  சீன தேடல்

சீனாவில், கூகுள் தேடல் சாதனத்திற்குப் பதிலாக இயங்கும் 'பைடு' (Baidu) சர்ச் இஞ்சினைத் தயாரித்து வழங்கும் பைடு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, அதனைத் தன் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மாறா நிலை தேடல் சாதனமாக இணைத்துள்ளது.
 விண்டோஸ் 10 சிஸ்டத்தினை, உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற தன் இலக்கிற்காக, இந்த ஒப்பந்தத்தினை மைக்ரோசாப்ட் மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கனவே பைடு தேடல் சாதனம், விடியோ, க்ளவ்ட் சேவை ஆகியவற்றைப் பயன்படுத்தி வரும் சீன வாடிக்கையாளர்கள் 60 கோடி பேர், 

இதன் மூலம் விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு எளிதாக மாறிக் கொள்வார்கள். 

இதற்கென பைடு "Windows 10 Express" என்னும் ஒரு சேனலை வழங்குகிறது. 

இதனால், மைக்ரோசாப்ட் தன் தேடல் சாதனமான 'பிங்' சர்ச் இஞ்சினை, எட்ஜ் பிரவுசரில், சீனாவில் விட்டுக் கொடுக்கிறது. 

ஏற்கனவே, சீனா நிறுவனங்களான Tencent, Lenovo, and Xiaomi ஆகியவற்றுடன் மைக்ரோசாப்ட் பல பணிகளுக்கென ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. 

இதன் மூலம், கூகுள் சீனாவில் விட்டுவிட்ட இடத்தை, மைக்ரோசாப்ட் பிடித்துவிட முயற்சிக்கிறது.

=====================================================================================
இன்று,
நவம்பர்-03.
  • பனாமா விடுதலை தினம்(1903)
  • பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது (1838)
  • பாம்பே டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயர் மாற்றம் .(1861)
  • போலந்து விடுதலை அடைந்தது(1918)


=====================================================================================