இணைய வதந்தி: பரவல்[வைரல் ]



இந்தியா முதலிடம்

இணையப் பயனாளர்கள் எண்ணிக்கையில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.  அனைவரும் அறிந்ததே. 
அதனால் தான், பன்னாட்டு இணைய மற்றும் தகவல் தொடர்பு நிறுவனங்கள் பல, இந்தியாவில் தங்கள் வர்த்தகத்தினை மேற்கொள்ள தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகின்றன. 
இந்திய இணைய பயனாளர்கள் தற்போது இன்னும் ஒரு 'நல்ல பெயரினைப்' பெற்றுள்ளனர். 
தகவல் தொடர்பு நிறுவனமான டெலினார் (Telenor) அண்மையில் “இணையத்தில் மேற்கொள்ளப்படும் மோசமான பழக்கங்கள்” என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை சில நாடுகளில் மேற்கொண்டது. 
இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தவறான வதந்திகளை இணையத்தில் பரப்புவதில், இந்தியர்கள் அதிகம் ஈடுபடுகிறார்கள் என்ற உண்மை இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
பன்னாட்டளவில், 40% இந்தியர்கள் இந்த மோசமான பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். 
வதந்திகளைப் பரப்பும் பழக்கத்திற்கு அடுத்தபடியாக, இணையத்தில் இயங்கும் மற்றவர்களை, ஆன்லைன் விளையாட்டுக்கள் விளையாடுமாறு அழைப்பதிலும் இந்தியர்களே முன்னணியில் உள்ளனர். இந்த வகையில், 34% பேர் இடம் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். 
அதே போல, தொடர்பற்ற தகவல்களைப் பகிர்ந்து அனுப்புவதிலும், இந்தியர்களே (30%) முதலிடம் பெற்றுள்ளனர்.
இந்த ஆய்வில் மேலும் பல ருசிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகமாக செல்பி படங்களை எடுத்து இணையத்தில் பதிவு செய்பவர்களை வெறுப்பவர்களாக 33% இந்தியர்கள் உள்ளனர். ஆய்வில் கலந்து கொண்டவர்களில், 65% பேர், இணையப் பழக்கத்திற்கு அடிமைகளாக உள்ளனர். 
இதிலும் இந்தியாவே முதலிடம் பெற்றுள்ளது. 
இந்த கருத்தினை ஆண், பெண் என இரு பாலரும் ஒத்துக் கொண்டாலும், பெண்களே அதிக அளவில் அடிமைகளாக உள்ளனர். ஆண்களைக் காட்டிலும், 21% அதிக நேரத்தைப் பெண்கள் இணையத்தில் செலவிடுகின்றனர். 
தனிப்பட்ட விருப்பங்களுக்காக, தினந்தோறும் சராசரியாக இரண்டு மணி நேரம் செலவழிக்கின்றனர். இது ஆண்டுக்கு 730 மணி நேரம் ஆகிறது (அம்மாடியோவ்!). 
ஆனால், ஆண்கள், தொடர்ந்து குறிப்பிட்ட நேரங்களில், இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். தங்கள் பணிகள் சாராத வேலைகளில், 89% பேர் இணையத்தை, ஒரு நாளில் பலமுறைப் பயன்படுத்துகின்றனர்.
அடுத்தபடியாக, பேஸ்புக்கில், தங்கள் மீது மற்றவர்கள் இரக்கம் கொள்ள வேண்டும் என்ற வகையில் 30% பேர் பதிவுகளை இடுகின்றனர்.
மற்றவர்களின் கோபத்தினைத் தூண்டும் வகையில், வேண்டும் என்றே, மற்றவர்கள் மனது புண்படும்படியான தகவல்களைப் பதிபவர்கள் 18% பேர் ஆக உள்ளனர்.
தங்கள் மீது மற்றவர்கள் இரக்கம் கொள்ள வேண்டும் என்ற வகையில், தகவல்களைப் பதிவர்களைப் பெரும்பாலானவர்கள் வெறுக்கின்றனர். 
28% பேர் இது தங்களுக்கு எரிச்சலைத் தருவதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். 
எரிச்சல் ஊட்டும் பழக்கங்களில், இதனையே முதல் இடத்தில் வைத்துக் காட்டுகின்றனர் இந்தியர்கள்.
இ கார்ட் என்னும் வாழ்த்து அட்டைகளை அனுப்பும் பழக்கத்தினை, இந்தியர்கள் அதிகம் கொண்டுள்ளனர்.
மற்ற நாடுகளில், இது 13% அல்லது 14% ஆக இருக்கையில், இந்தியாவில் இது 23% ஆக உள்ளது. 
உணவுப் பண்டங்களின் படங்களைப் பதிவு செய்வதில், இணையப் பயனாளர்கள் இந்த நாடுகளில் ஆர்வம் கொண்டுள்ளனர். 
இதில் 31% பேர் பெண்களாகவும், 23% பேர் ஆண்களாகவும் உள்ளனர்.
செல்பி எனப்படும் தம் படங்களைப் பதிந்து வெளியிடுவோர், இந்த ஆய்வினைக் கருத்தில் கொள்ள வேண்டும். தங்கள் படங்களைப் பதிவதில் பெண்களே முதல் இடத்தில் உள்ளனர். 
ஆனால், 'நீங்கள் வெறுக்கக் கூடிய பழக்கம் எது?' என்ற கேள்விக்கு, பெரும்பாலானவர்கள், தம் படங்களையே சுட்டிக் காட்டியுள்ளனர். 
எரிச்சலூட்டுவதில், இந்தப் பழக்கம் 33% இடத்தைக் கொண்டுள்ளது.
டிஜிட்டல் உலகில், ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்க, டெலிநார் நிறுவனம் இந்த ஆய்வினை மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம், இணையப் பயனாளர்கள் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதையும் அறிய முடிந்தது.
என்ன தான் எரிச்சலூட்டும் விஷயங்கள் இணையத்தில் இருந்தாலும், இணையத்தைப் பயன்படுத்தும் இந்தியர்களில் 94% பேர், இணையம் தங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். 
ஆய்வு நடத்தப்பட்ட நாடுகளிலேயே, இந்த வகையில் இக்கருத்தைத் தெரிவித்த அதிக அளவிலானவர்கள் இந்தியர்களே. இணையம் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட தளமாக இருக்க வேண்டும் என்பதைப் பெரும்பாலான இந்தியர்கள் விரும்புவதாக, டெலிநார் நிறுவன தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். 
அரசாங்க விதிமுறைகளும் பெற்றோர்களின் கட்டுப்படுத்தும் வழிகளும், இணையப் பதிவுகளை நெறிப்படுத்தலாம் என்று பெரும்பாலான இந்தியர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசு, கல்விக் கூடங்களில், இணைய நெறிமுறைகள் குறித்து வளரும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.
இந்த ஆய்வினை, டெலிநார் நிறுவனத்திற்காக, சிங்கப்பூரைச் சேர்ந்த Penn Schoen Berland என்னும் நிறுவனம் மேற்கொண்டது. 
இந்தியாவில் 100, மலேசியாவில் 100, தாய்லாந்தில் 101 மற்றும் சிங்கப்பூரில் 100 பேர் எனத் தன் ஆய்விற்கு இந்த நிறுவனம் எடுத்துக் கொண்டது. 
பல விஷயங்களில், ஆசிய நாடுகளில் இணையப் பயன்பாடு ஒரு தனித்தன்மை கொண்டதாக உள்ளது. இணையத்தில் வரும் பாலியல் சமாச்சாரங்களை, இந்தியர்கள் அதிக வெறுப்புடன் கருதவில்லை. 4% பேரே இது குறித்து எரிச்சல் கொண்டதாகத் தெரிகிறது. 
ஆனால், தாய்லாந்தில் 43% பேரும், மலேசியாவில் 39% பேரும் இது குறித்து வருத்தமடைந்து கருத்து தெரிவித்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டில், அனைவருக்கும் இணையம் என்ற இலக்கு நிறைவேறும் என்று டெலிநார் நிறுவனம் எதிர்பார்க்கிறது. 
தொடர்ந்து இணையம் பயன்படுத்துவோர் 20 கோடியாக உயரும்போது, அதில் பலர், முதல் முறையாக இணையம் பயன்படுத்துவோர் பெரும்பான்மையாக இருப்பார்கள். 
இவர்கள், இணையத்தில் புதிய, பயனுள்ள நல்ல பரிமாணங்களை ஏற்படுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கலாம். 
=============================================================================================
இன்று,
டிசம்பர்-19.
  • கோவா விடுதலை தினம்

  • தமிழக  தலைவர் க.அன்பழகன் பிறந்த தினம்(1922)
  • முதல் இந்தோ-சீன போர் துவங்கியது(1946)
  • போர்ச்சுகீசிய குடியேற்ற நாடான டாமன் மற்றும் டையூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக் கொண்டது(1961)


=============================================================================================
முகநூல்.

வாத்தியார்:இங்குள்ள முட்டாள்கள் அனைவரும் எழுந்து நில்லுங்கள்.
சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை.

பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.

வாத்தியார்:அவனை பார்த்து ஏளனமாகச் சிரித்துக் கொண்டே நீ முட்டாள் என்று எப்படி உனக்கு தெரியும்?
மாணவன்:அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது.அதனால் தான் நானும் எழுந்து நின்றேன்.
















இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?