இடுகைகள்

ஏப்ரல், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மே -1. உழைப்பாளர் தினம்.

படம்
உலகில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் [கை நீட்டி அல்லது ஏ.டி.எம்.அட்டை மூலம் சம்பளப்பணம் பெறும்] உழைப்பாளர் தின வாழ்த்துக்கள். கருத்தாலும் -கரத்தாலும் உழைக்கும் அனிஅவ்ருக்கும் இனிய வாழ்த்துக்கள். ‘அதிகாலை முதல் அந்திசாயும் வரை’ என்பதுதான் அப்போதெல்லாம் வேலைநாள். இதனால் ஏற்பட்ட மனக்குமுறல்களை அமெரிக்கத் தொழிலாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே வெளிக்காட்டினர்.  பதினாறு, பதினேழு ஏன் பதினெட்டு மணிநேர வேலை என்பதெல்லாம் அப்போது சாதாரண விஷயங்கள், 1806-ம் ஆண்டு பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களின் தலைவர்கள் மீது சதி வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது தொழிலாளர்கள் பத்தொன்பது, இருபது மணி நேரங்கள் வேலை வாங்கப்பட்டார்கள் என்ற விஷயம் வெளியே வந்தது. 1820 மற்றும் 30-களில் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று பற்பல வேலைநிறுத்தங்கள் நிகழ்ந்தன. பத்து மணி நேர வேலைநாள் என்ற கோரிக்கை பல தொழில் மையங்களில் முன் வைக்கப்பட்டது.  பிலடெல்பியா நகர இயந்திரத் தொழிலாளர்களின் சங்கம்தான் உலகின் முதற் தொழிற்சங்கமாக கருதப்படுகிறது.  இந்

மூர் விதி

படம்
ஒரு கம்ப்யூட்டர் வேகமாகவும், சரியாகவும் இயங்க, அதில் பயன்படுத்தப்படும் சிப் முக்கிய பங்கு வகிக்கிறது.  இவற்றை, ஐ.சி. (integrated circuit) அல்லது “ஒருங்கிணைந்த மின் சுற்று கொண்ட சிப்” என அழைக்கலாம்.  இந்த சிப்கள் பணியை மேற்கொள்கையில், செயல்பாட்டின் துல்லியமும், விரைவுத் தன்மையும், சிப்களில் பதிக்கப்படும் ட்ரான்சிஸ்டர்களே நிர்ணயம் செய்கின்றன.  எனவே, அறிவியல் உலகம், இந்த சிப்களில் தொடர்ந்து கூடுதலான எண்ணிக்கையில், ட்ரான்சிஸ்டர்களைப் பதிப்பதிலேயே தன் முழுக்கவனத்தையும் செலுத்தி, ஆய்வினை மேற்கொண்டு வருகிறது. 1965 ஆம் ஆண்டு, இந்தப் பெருக்கத்தினைக் கண்ணுற்ற, இந்த சிப் துறையில் செயலாற்றிய விஞ்ஞானி கார்டன் மூர் (Gordon Moore) ; "ஒவ்வோர் ஆண்டும், சிப் ஒன்றில் பதிக்கப்படும் ட்ரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டைக் காட்டிலும் இரு மடங்காக உயரும் "  என்று, ஏப்ரல் 18, 1965 அன்று, கருத்து வெளியிட்டார்.  இதனையே கம்ப்யூட்டர் உலகம் ” மூர் விதி (Moore's Law)” எனப்  பெயரிட்டு அழைத்தது. இந்த விதி உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த விதியின் தாக்கம் டி

கொண்டைக்கடலை.

படம்
சத்து மிக்க கடலை பற்றி பார்க்கலாம்.அதை பற்றி இன்று கடலை போடாலாம் நாம். இந்தியாவில் அதிகம் உபயோகிக்கும் முழுப் பயறுகளில் முக்கியமானது கொண்டைக்கடலை.  இதில் வெள்ளையாக உள்ளது ஹிந்தியில் ‘சன்னா’ என்றும், ஆங்கிலத்தில் ‘பெங்கால் கிராம்’ (Bengal gram) என்றும் அழைக்கப்படுகிறது.  வங்காளத்தில் அதிகம் விளைவதால் இந்தப் பெயர்..  வங்கத்தில் இதை பச்சையாகவும் சுட்டும் சாப்பிடுகிறார்கள். . உலர வைப்பதற்கு முன் பட்டாணியைப் போல பச்சை நிறத்தில் இருக்கிறது. அதை வேர்க்கடலையை வறுப்பது போல வண்டிகளில் வறுத்து விற்கிறார்கள். தமிழ்நாட்டில் இப்படிபச்சையாக கிடைப்பது இல்லை. உலர வைக்கப்பட்டு கிடைப்பதிலேயே பல வகை உண்டு. சிறியதாக பச்சை நிறத்திலும் பிரவுன் நிறத்திலும் கிடைக்கிறது.  இதை  நாம் சுண்டல் செய்ய பயன்படுத்துகிறோம்.  பிரவுன் நிறத்தில், கொஞ்சம் அளவில் பெரியதாகவும் கிடைக்கிறது.  அளவில்  அதைவிட பெரியதாக வெண்மையாக இருப்பதை ‘காபூலி சன்னா’ என்று அழைக்கிறோம்.  பிரவுன் கொண்டைக்கடலையை  தோல் நீக்கி, உலர வைத்து கடலைப் பருப்பாக தினசரி சமையலில் உபயோகிக்கிறோம்.  இதை மாவாக்கி, கடலை மாவாக பஜ்ஜி  உள்பட பல பண்டங்களி

மீண்டு[ம்] வந்த ஆச்சார்யா!

படம்
பி.வி. ஆச்சார்யா. ஜெயலலிதா தனது வழக்கின் மேல் முறையீட்டு வழக்கில் முன்பு அரசு வழக்குரைஞராக இருந்து கொண்டு குற்றவாளியான தனக்கு ஆதரவாக வாதாடிய பவானிசிங்கையே அரசு வழக்குரைஞராக நியமித்துக்கொண்டார். பேராசிரியர் அன்பழகன் கர்நாடக அரசு வழக்கில் தமிழகம் எப்படி அரசு வழக்குரைஞரை  நியமிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடினார்.இதனால் பவானி சிங் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டது செல்லாது என உச்ச  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சர்யாவை கர்நாடக அரசு நியமித்துள்ளது. இதற்கான அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது. பி.வி. ஆச்சார்யா.  நாட்டின் மூத்த, முக்கியமான வழக்கறிஞர்களில் ஒருவர்.  80 வருட வாழ்க்கையில், 60 வருடங்களைச் சட்டப் புத்தகங்களோடு கழித்திருப்பவர்.  ஐந்து முறை அட்வகேட் ஜெனரல், பார் கவுன்சில் தலைவர், இந்திய சட்ட ஆணைய உறுப்பினர் உள்பட பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில், முன்னதாக அரசுத் தரப்பில் வாதாடி, ஜெயலலிதா மிரட்டல் மற்றும் பல தொடர் நெருக்கட