பள்ளிக்கூடம் போகாமலே

படிப்பறிவு இல்லாமல் எந்த தொழிலும் செய்து முன்னேறலாம். 
தொழிலதிபர்களாகவும் உருவாகலாம். ஆராய்ச்சி செய்தோ,அல்லது ஏதாவது ஒரு பல்கலைக்கழம் தரும் சிறப்பு டாக்டர் பட்டம் சிலர் வாங்கிஇருக்கலாம்.
ஆனால் படிக்காமலேயே தாங்களாகவே தங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுத்துக்கொண்டு மருத்துவமும் பார்த்து    பல லட்சங்களை பார்த்து வருகின்றனர் சிலர் .
இவர்கள் எப்படி டாக்டர் ஆனார்கள்? 
 வைத்தியம் பார்த்து பல லட்சங்களை பார்க்கும் இவர்களால், பலர் சத்தமின்றி இறந்துவருவது யாருக்கும் அவ்வளவு எளிதாக தெரிவதில்லை. 
தமிழகத்தில் குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாதவர் முதல் பி.காம், பி.ஏ, லேப் டெக்னீஷியன் படித்தவர்கள் வரை டாக்டர் என அறிவிப்பு பலகையை தைரியமாக போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் போலிகளின் தொல்லை கணிசமாக உள்ளது. 
டாக்டர்களை போல் தோரணை காட்டும் இவர்கள், தங்களிடம் வரும் (சிக்கும்!) நோயாளிகளிடம் கனிவுடன் பேசி ‘கவர்’ செய்கின்றனர். 
சாதாரண காய்ச்சலுக்கு மஞ்சள் நிற மாத்திரை, வயிற்று வலிக்கு சிவப்பு நிற மாத்திரை, சளி, இருமலுக்கு பச்சை நிற மாத்திரை என சம்பந்தமே இல்லாமல் வெறும் நிறத்தை பார்த்து பிரித்து டப்பாக்களில் அடைத்து நோயாளிகளுக்கு வழங்கி வருகின்றனர். 

இதேபோல் காய்ச்சல் என்று வந்துவிட்டால் ஊசி நிச்சயம். அதுவும் ஒருவருக்கு செலுத்திய ஊசியை, சரிவர கூட சுத்தம் செய்யாமல் அதே ஊசியை பலருக்கும் போடுவதும் கொடுமையின் உச்சம். இதற்கெல்லாம் பெறப்படும் கட்டணம் குறைவுதான். 
இதில் ஒருசிலருக்கு உடனடியாக குணமாவதால் மக்கள் கூட்டம் அலைமோதும் .ஆனால் கிடைக்கப்போகும் பாதிப்புகள் அதிகம் என்பதை யாரும் உணர்வதில்லை. போலிகளிடம் சிகிச்சை பெறும் கிராம மக்கள், ஒருவேளை உடல் நலம் சரியாகவில்லை என்றால் மீண்டும் அவர்களை நாடிச்செல்கின்றனர். அதற்கும் அவர்கள் ‘டோஸ்’ அதிகரித்து தருகின்றனர்.அப்படியும் நோய் குணமாகாமல் மிகவும் சீரியசான நிலையில் அவர்களை வேறு மருத்துவமனைக்கு செல்லும்படி போலிகள் கூறுகின்றனர். 
ஆனால்  தனக்கு என்னென்ன பாதிப்பு ஏற்பட்டது என அறியாமல் அவர்கள் பரிந்துரைக்கும் மருத்துவமனைக்கு செல்கின்றனர். இதுபோன்ற நிலைமையில் அந்த போலிகள் சர்வசாதாரணமாக தப்பித்து விடுகின்றனர். 
இதனால் பெரிய மருத்துவமனைகளுக்கு அவசர கதியில் செல்லும் நோயாளிகள், இதற்கு முன் எங்கு? யாரிடம் சிகிச்சை பெற்றோம்? என்பதை சொல்ல அஞ்சுகின்றனர். 
விளைவு? விலை மதிப்பற்ற உயிரை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். 

இதுபோன்ற சம்பவங்கள் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அவ்வப்போது வரும் புகார்களின்பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து ரெய்டு நடத்தி போலி டாக்டர்களை கைது செய்கின்றனர். 
 ஒரு சில இடங்களில் ரெய்டுக்கு வரும் முன்னரே தகவல் அறிந்து சிலர் தப்பிவிடுகின்றனர். ஒரு சில போலி டாக்டர்கள் மட்டுமே சிக்குகின்றனர். இவர்களும் சில நாட்களுக்கு பிறகு வெளியே வந்து தொடர்ந்து கிளினிக் வைத்து நடத்தி வருகின்றனர். 
இதை அறியாத மக்கள் பலர் இதுபோன்ற போலி டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று பணத்தை இழப்பதுடன் பல்வேறு வியாதிகளுக்கு ஆளாகின்றனர். கடந்த வாரம் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த  விவசாயி லோகன் என்ற லோகநாதன்(47) கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். அதேபகுதியில் கிளினிக் நடத்தி வரும் கோவிந்தசாமி(40) என்பவரிடம் சிகிச்சை பெற்றார். அவர் கொடுத்த மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு வந்தார். 

இந்நிலையில் லோகநாதனுக்கு திடீரென கை, கால்கள் செயலிழந்து விட்டது. இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக லோகநாதனை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மருத்துவமனையில் டாக்டர்கள் விசாரித்தனர். இதில் லோகநாதனுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து லோகநாதன், உமராபாத் போலீசில் புகார் கொடுத்தார். 
அதன்பேரில், போலீசார் மற்றும் மருத்துவத்துறையினர் தனியார் கிளினிக் சென்று கோவிந்தசாமியிடம் விசாரணை நடத்தியபோது தான் குட்டு அம்பலமானது. அவர் பி.காம் படித்துவிட்டு கடந்த 2 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்த உண்மை தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். 
உடலநலம் பாதித்த லோகநாதன் கடந்த 28ம் தேதி இறந்தார்.  வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, களம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் போலி டாக்டர்கள் சத்தமில்லாமல் இன்றும் சிகிச்சை அளிப்பதாக கூறப்படுகிறது. 
வேலூர், தி.மலையில் கடந்தாண்டு (2015) மட்டும் போலி டாக்டர்கள் சுமார் 35 பேர் பிடிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.மாவட்டத்தில் போலீசார் நடத்தும் ரெய்டில் சிக்கி கைதாகும் பெரும்பாலானர் போலி டாக்டர்கள், வெளியே வந்தபிறகு மீண்டும் தங்களது போலி சிகிச்சை பணியை தடையின்றி செய்கின்றனர். 
இதனை கண்காணித்து பணத்தை குறி வைத்து மனித உயிர்களோடு விளையாடும் இதுபோன்ற போலி டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
============================================================================================ 
நாம் வங்கிகளில் நமது பொருளாதார நிலையால் வாங்கும் ,கல்விக்கடன்,வீடு கட்டும் கடன்,நகைக்கடன் போன்றவற்றை தவணை கட்ட தாமதமானால் படத்துடன் விளம்பரம் போட்டு அவமானப்படுத்தி பணத்தை பிடுங்கி செழிக்கும் வங்கிகளில் நாட்டின் ஒவ்வொரு அசைவையும் தீர்மானிக்கும்  பகாசுர பணமுதலைகளாக வலம் வருபவர்கள் வாங்கி இன்றுவரை திரும்ப வட்டி கூட கட்டாமல் தங்கள் தொழில் சாம்ராஜ்யத்தை வளர்த்து கொண்டுவருபவர்கள் வாங்கிய கடன் விபரம்.

பேரிடர் நிவாரணம்:-
மம்மி ஸ்டைல்.
ந்த மழையும் வெள்ளமும் ஜெயலலிதா அரசைப் பற்றி இதுகாறும் நாம் அறிந்திராத பரிமாணம் எதையாவது காட்டியிருக்கின்றதா? 
இல்லை. 
ஜெ.அரசு என்று அழைக்கப்படும் இந்தக் கொள்ளைக்கூட்டம், ஆபாசம், வக்கிரம், ஆணவம், பித்தலாட்டம், செயலின்மை ஆகிய அனைத்தையும் தனது பிறவிக் குணங்களாகவே கொண்டிருந்த போதிலும், இதனைக் காணத்தவறியவர்களுக்கும் காண மறுத்தவர்களுக்கும் அதன் கோர முகத்தை அம்பலப்படுத்திக் காட்டியிருக்கிறது. 
சினிமா நடனத்தின் ஆபாசத்தை மேலும் விகாரமாகக் காட்டும் மழைக்காட்சியைப் போன்றது இது.
02-flood-victimsநடிப்புக்காகக் கூட கருணையைக் கண்களில் வரவழைக்க இயலாத அம்மா”, பருவ மழையின் சீற்றம் தொடங்கிய பின்னர் வேறு வழியின்றி மலையிலிருந்து இறங்கினார். 
மூன்று மாத மழை ஒரே நாளில் பெய்து விட்டதாகக் கூறி, கடலூர் மக்களைக் காட்டாற்று வெள்ளத்துக்குக் காவு கொடுத்த தனது அரசின் தடித்தனத்தை நியாயப்படுத்தினார். 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காமல் அலட்சியம் செய்தார். பின்னர், எதிர்க்கட்சிகளின் விமரிசனத்துக்குப் பயந்து, கண்ணாடிக் கூண்டு வண்டிக்குள்ளிருந்தபடி விஜயம் செய்தார். 
டிசம்பர் துவக்கத்தில் சென்னையே மூழ்கிய பின்னரும், போயஸ் தோட்டத்தை விட்டு அசைய மறுத்தார். மோடியின் விளம்பர விஜயம் பற்றி அறிந்தவுடனே பீதியுற்று, ஹெலிகாப்டரில் பறந்தார். 
“பத்து இலட்சத்து மூவாயிரத்து மூணு தயிர்சாதம், மூவாயிரத்து நாலு சாம்பார் சாதம்” என்று அதிகாரவர்க்கம் எழுதிக் கொடுத்த புள்ளி விவரத்தை வெள்ள நிவாரணம் என்ற பெயரில் வாசித்தார் -இதுதான் ஜெயலலிதா.
எதைத் திருடுவது என்பதை மட்டுமே ஒவ்வொரு நொடியும் சிந்திக்கும் கும்பலாக ஒரு கட்சி; மக்கள் மீது அக்கறையோ, பொறுப்போ, நிர்வாகத் திறமையோ, அறிவோ, சுயமரியாதையோ இல்லாத, அடிமைத்தனத்தையும் களவாணித்தனத்தையும் மட்டுமே தமது முழுமுதல் தகுதியாகக் கொண்ட அமைச்சர்கள்; 
அம்மா ஆணையிடும் குற்றச்செயல்களைக் கூச்சமில்லாமல் செய்து முடிக்கும் கூலிப்படையாக சிறப்பு ஆலோசகர்கள், தலைமைச் செயலர், உயர் போலீசு அதிகாரிகள் உள்ளிட்ட விசுவாச அதிகார வர்க்கம்; இந்தக் கேவலங்கள் அனைத்தையும் சீவிச் சிங்காரிக்கவும், குற்றங்களை நியாயப்படுத்தவும், திசை திருப்பவும் தொழில் முறையில் பயிற்சி பெற்ற, பார்ப்பன, கார்ப்பரேட் ஊடகங்கள் – இதுதான் ஜெயலலிதா ஆட்சி.
இதுதான் தமிழக மக்களுக்கு எதிரான பேரிடர். 
இந்தப் பேரிடர் அகற்றப்படாமல் நீடிப்பதன் விளைவுதான் வெள்ளப் பேரழிவு. 
செம்பரம்பாக்கம் ஏரியின் நீரைச் சிறிதுச் சிறிதாக வெளியேற்ற வேண்டுமென்ற பொறியாளரின் எச்சரிக்கையைப் பொதுப்பணித்துறை செயலரும், தலைமைச் செயலரும் ஐந்து நாட்கள் கிடப்பில் போட்டனர்.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி டிசம்பர் முதல் நாள் நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரித் திறக்கப்பட்டுஒரு இலட்சம் கன அடிக்கு மேற்பட்ட தண்ணீர் சுனாமியைப் போல எழுந்து வந்து இலட்சக்கணக்கான வீடுகளை மூழ்கடித்து, நூற்றுக்கணக்கான மக்களைக் கொலை செய்தது. அவர்கள் சிறுகச் சிறுக கட்டியெழுப்பிய வாழ்க்கையை கண நேரத்தில் அழித்து அநாதைகளாக்கியது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டதும், உணவு – தண்ணீர் வழங்கிக் காப்பாற்றியதும், நிவாரணம் வழங்கியதும் மக்களேயன்றி, இந்த அரசு அல்ல. 
பேரழிவைப் பரிசாகத் தந்திருக்கும் ஒரு வளர்ச்சிப் பாதை, தோற்று நிலைகுலைந்துவிட்ட ஒரு அரசமைப்பு, இவற்றால் சீரழிக்கப்பட்ட மக்கள் மீது பிணந்தின்னிகளைப் போல மொய்க்கும் அ.தி.மு.க. கும்பல் – இதுதான் வெள்ளச் சேதத்தின் வழியே விளக்கம் பெறும் அரசியல். 
அழிவிலிருந்து மீட்கும் முயற்சியாக மக்கள் அளிக்கும் நிவாரணப் பொருட்களின் மீது “அசிங்கத்தை ஒட்டு” என்று மிரட்டுகின்றனர் அ.தி.மு.க. காலிகள். 
அழிவைக் காட்டிலும் கொடியது இந்த அவமானம். 
தமிழ் மக்களின் தலையில் ஒட்டிக் கொண்டுவிட்ட அவமானத்தை, தமிழ்ச் சமூகத்தை மறித்து நிற்கும் இந்தப் பேரிடரைத் துடைத்தெறிவதற்கான வாய்ப்பை இந்த வெள்ளப் பேரழிவு வழங்கியிருக்கிறது.
நன்றி.
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2015
====================================================================================================
இன்று,
ஜனவரி-02.
  • கல்கத்தா நகரம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது(1757)

  • முதலாவது செயற்கை கோளான லூனா 1, விண்ணுக்கு ஏவப்பட்டது(1959)
  • ரயில் பாதைகளில் நேரத்தை அளவிடும் குரோனோமீட்டர் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன(1893)
  • ரஷ்யாவும் புரூசியாவும் போலந்தை பங்கிட்டன(1793)
====================================================================================================
வலிப்பு வருவதெப்படி?
மூளையின் நரம்பணுக்கள் நியூரான்ஸ் (Neurons) என்று அழைக்கப்படுகின்றன. 
மூளை, நரம்புகள், நரம்பணுக்கள் போன்றவற்றில் மின்னோட்டம் சென்று கொண்டிருக்கும். இது இயல்பு. தானாகவோ, காரணமே இல்லாமலோ, அதிகப்படியான மின்னோட்டம் நரம்பணுக்களில் பாய்ந்தால், வலிப்பு வரும். 
அதாவது நரம்பணுக்களின் இயல்பான நிலையிலிருந்து அதிகப்படியான மாற்றங்கள் ஏற்பட்டால், அதுவே வலிப்பு நோய்.
கை, கால், வாய் போன்றவை கோணலாக இழுத்துக்கொள்வது மட்டும் வலிப்பு அல்ல. ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று இரண்டு நிமிடங்கள் எல்லாம் மறந்து, நாம் எங்கு, என்ன செய்கிறோம் என யோசித்து பின் நினைவுக்கு வந்தால், அதுவும்கூட வலிப்புதான். 
கண் முன்னால் வண்டி ஓடுவதுபோல தெரிவது, திடீர் வெளிச்சம் வருவது என வலிப்பு வெவ்வேறு வடிவத்தில் வரலாம்.
அடிக்கடி வலிப்பு வந்தால் மட்டுமே, அவர் வலிப்பு நோயாளி. ஒரே ஒருமுறை வலிப்பு வந்தால், அவர் வலிப்பு நோயாளி கிடையாது.
இரும்பைக் கையில் கொடுத்தால், வலிப்பு சரியாகிவிடாது. அதிகப்படியான மின்னோட்டம் பாய்வது சில நிமிடங்களே நீடிக்கும், அதன் பின்பு தானாகவே சரியாகிவிடும். மின்னோட்டம் சரியாகும்போது வலிப்பு நின்றுவிடும்.
* வலிப்பு வந்தவரை ஒருபக்கமாக திரும்பிப் படுக்க வைக்க வேண்டும். மல்லாந்து படுக்கவைத்தால், வாயில் நுரை தள்ளினாலோ, வாந்தி எடுத்தாலோ, அவை நுரையீரலுக்குச் சென்று உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே, கவனம் தேவை.
* கை, கால்களை அழுத்திப் பிடித்தல், நோயாளியின் மேல் ஏறி உட்காருதல், வாயில் எதையாவது அடைத்து வைத்தல், இரும்புப் பொருட்களை பிடிக்கக் கொடுத்தல் போன்றவற்றை செய்யவே கூடாது.
* அருகில் நோயாளியைக் காயப்படுத்தும் சூழல் இருந்தால் மட்டுமே, நோயாளிக்கு ஆதரவாக மென்மையாகப் பிடித்து அவரை நகர்த்தலாம். இறுக்கமான ஆடைகளைத் தளர்வுபடுத்தலாம்.
* சுற்றிலும் கூட்டமாக நின்று, சுவாசிப்பதை சிரமப்படுத்தக் கூடாது. வீடு எனில் கதவு, ஜன்னல் அனைத்தையும் திறந்துவைக்கலாம்.
* முகத்தில் தண்ணீர் தெளிக்கக் கூடாது. மயக்கத்தில் இருக்கும்போது குடிக்க எதுவும் கொடுக்கக் கூடாது. நினைவுக்கு வந்த பின்னர் தண்ணீர் கொஞ்சம் கொடுக்கலாம்.
                                                                                                                                     
திலோத்தம்மாள்,                                                                                                                                           நரம்பியல் மருத்துவர்,
========================================================================================================
முகநூல்.











இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?