இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

செவ்வாய், 12 ஜனவரி, 2016

மறைக்கப்பட்ட பைல்களைக் காண...,

நம் கம்ப்யூட்டர்களில், போல்டர்களில், சில பைல்கள் மறைக்கப்பட்டே கிடைக்கின்றன. 
நாம் யாரும் இவற்றைப் பார்ப்பது இல்லை. 
நம் பைல் மேனேஜரில், இந்த மறைக்கப்பட்ட பைல்களைக் (Hidden Files) காட்டும்படி செட் செய்தால், ஒவ்வொரு போல்டரிலும் சில பைல்களைக் காணலாம். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் thumbs.db மற்றும் desktop.ini என்னும் பைல்களை உருவாக்குகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டம் .DS_Store என்னும் பைல்களை உருவாக்கித் தருகிறது.
பெரும்பாலான பயனாளர்கள், இந்த பைல்களைக் காண்பதில்லை. இவை மறைக்கப்பட்ட பைல்கள் என்றே அழைக்கப்படுகின்றன. நாமாகப் போய், இவற்றைப் பார்த்தே ஆக வேண்டும் என முயற்சி எடுத்தால், இவற்றைக் காணலாம். 
ஆப்பரேட்டிங் சிஸ்டம் தன் இயக்கத்தினை விரைவுபடுத்த, இந்த பைல்களை உருவாக்கி இயக்குகிறது. இருந்தாலும், நாம் விரும்பினால், இவை உருவாவதைத் தடுக்கவும் செய்திடலாம். 
முதலில் இவை ஏன், எதற்காக உருவாக்கப்படுகின்றன என்று பார்க்கலாம்.
இந்த மறைக்கப்பட்ட பைல்கள் மற்றும் போல்டர்களைக் காட்டும்படி செய்வதற்கு, கீழே தந்துள்ள செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.
1. முதலில் Start> Control Panel> Appearance and Personalization எனச் சென்று, Folder Options என்பதைத் திறக்கவும்.
2. தொடர்ந்து View டேப் மீது கிளிக் செய்திடவும்.
3. அடுத்து, Advanced settings என்பதில், Show hidden files and folders என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து ஓகே என்பதில் கிளிக் செய்திடவும்.
4. இனி, அனைத்து மறைக்கப்பட்ட பைல்களும் காட்டப்படும். அவை குறித்த விளக்கங்களை கீழே தருகிறேன்.

 thumbs.db பைல்
இது ஒரு டேட்டா பேஸ் பைல். இதன் பெயர் குறிப்பிடுவது போல பட பைல்களில் உள்ள படங்களின் “thumbnail” அளவிலான படங்கள் இதில் அமைக்கப்படுகின்றன. 
விண்டோஸ் எக்ஸ்புளோரரில் அல்லது பைல் எக்ஸ்புளோரரில், போல்டர் ஒன்றைத் திறக்கும்போது, அதில், படங்கள் கொண்ட பைல்கள் இருந்தால், விண்டோஸ் அவற்றின் நக அளவிலான தோற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. இவை thumbs.db என்ற பைலில், குறிப்பிட்ட அந்த போல்டரில் சேமிக்கப்படுகின்றன. 
இதனால், அடுத்த முறை, இந்த போல்டர் திறக்கப்படுகையில், ஏற்கனவே அமைத்து வைக்கப்பட்ட இந்த சிறிய அளவிலான படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த செயல்பாடுகள் நம் கண்களுக்குத் தெரியாது. ஏனென்றால், இந்த பைல் மறைக்கப்பட்ட பைலாகவே உள்ளது. இது கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு நல்லதுதான். ஆனால், சில வேளைகளில் இவை குழப்பத்தினை உண்டாக்குகின்றன. இணையத்தில் உள்ள வெப் சர்வர் ஒன்றுக்கு, டைரக்டரிகளை அப்லோட் செய்திடுகையில், இந்த thumbs.db பைல்களும் இணைந்தே அனுப்பப்படுகின்றன. இந்த செயல்பாட்டினை யாரும் தடுப்பதில்லை. 
இந்த பைல்கள் உருவாக்கப்படுவதனைத் தடுக்க வேண்டும் எனில், நாம் Registry Editor வழியாக, ரெஜிஸ்ட்ரியில் மாற்றங்களைக் கவனமாக மேற்கொள்ள வேண்டும். அல்லது Group Policy Editor பயன்படுத்த வேண்டும்.
Group Policyயில் இதனை மேற்கொள்ள, விண்டோ மற்றும் R கீயை அழுத்தி ரன் டயலாக் பாக்ஸ் பெற வேண்டும். இங்கு, “gpedit.msc” என டைப் செய்து எண்டர் அழுத்த வேண்டும். 
அடுத்து கிடைக்கும், User Configuration > Administrative Templates > Windows Components > File Explorer எனச் செல்ல வேண்டும். இது விண்டோஸ் 10/ 8/ 8.1 சிஸ்டத்தில் இயங்குபவர்களுக்கு. நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துபவராக இருந்தால், User Configuration > Administrative Templates > Windows Components > Windows Explorer எனச் செல்லவும். 
இங்கு, “Turn off the caching of thumbnails in hidden thumbs.db files” என்பதில் டபுள் கிளிக் செய்து, “Enabled” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
ரன் விண்டோவில், “regedit”, என டைப் செய்து, ரெஜிஸ்ட்ரி எடிட்டரைப் பெறவும். ரெஜிஸ்ட்ரி கிடைத்தவுடன், அதில் “HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\ Explorer\Advanced” என்ற வரிக்குச் செல்லவும். வலது புறப் பிரிவில், “DisableThumbnailCache” என்ற இடத்திற்குச் சென்று, அதன் மதிப்பினை, “1” ஆக அமைக்கவும். 
 
desktop.ini பைல்
 விண்டோஸ் இயக்கம் desktop.ini என்ற பெயரிலும் பைல்களை உருவாக்குகிறது. 
இவை கூடுதலான கவனத்துடன், மறைக்கப்பட்ட பைல்களாக வைக்கப்படுகின்றன. 
இவை மறைக்கப்படுவது மட்டுமின்றி, பாதுகாக்கப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்களாகவும் அமைக்கப்படுகின்றன.
இவற்றைப் பார்க்க வேண்டும் என்றால், பைல் எக்ஸ்புளோரர் அல்லது விண்டோஸ் எக்ஸ்புளோரரில், “Hide Protected Operating System Files (Recommended)” என்பதை Disable என்ற நிலையில் அமைக்க வேண்டும். 
Folder Options விண்டோவில் இந்த செட்டிங்ஸ் கிடைக்கும்.
இந்த desktop.ini பைலை விண்டோஸ் எதற்குப் பயன்படுத்துகிறது? 
ஒரு போல்டர் எப்படிக் காட்டப்பட வேண்டும் என்பதற்கு, விண்டோஸ் இந்த பைலைப் பயன்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக, விண்டோஸ் இயக்கத்தில், சில போல்டர்களை நகர்த்துகையில், ”இது சிஸ்டம் போல்டர்; இதனை நீங்கள் நகர்த்தக் கூடாது”என உங்களை விண்டோஸ் இயக்கம் எச்சரிக்கும். 
சில போல்டர்களுக்குத் தனியான முறையில் ஐகான்கள் அமைக்கப்படும். இந்த செயல்பாடுகள் எல்லாம், desktop.ini பைல் மூலம் விண்டோஸ் மேற்கொள்கிறது.
இந்த பைல்கள் உருவாக்கப்படாமல் இருக்க எந்த வழியும் விண்டோஸ் இயக்கத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. பாதுகாக்கப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்களைக் காட்டாமல் இருக்குமாறு, விண்டோஸ் இயக்கத்திற்குச் சொல்லலாம்.

.DS_Store பைல்: 
ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஓ.எஸ். எக்ஸ் சிஸ்டம் .DS_Store பைல்களைத் தன் இயக்கத்தில் உருவாக்குகிறது. 
இவை, ஒவ்வொரு போல்டரிலும் உருவாக்கப்பட்டு, விண்டோஸ் இயக்கத்தின் desktop.ini பைல்கள் போலச் செயல்படுகின்றன. இந்த பைல்களின் பெயரின் தொடக்கத்தில் “.” இருக்கும். எனவே, இவை மறைக்கப்பட்டு இருக்கும். 
யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் மறைக்கப்பட்டே இருக்கும். இவை, மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், சாதாரணமாகத் தெரியாது.
நடைமுறை வழிகள் அல்லாமல், வேறு வழிகளில் சென்றால் மட்டுமே இவற்றைக் காண முடியும். இவை வழக்கமான Finder அல்லது அதனைப் போன்ற பயன்பாடுகளில் காட்டப்பட மாட்டாது.
இந்த பைலில் தான், போல்டர் ஒன்றில், ஐகான்கள் எந்த இடத்தில் அமைக்கப்பட்டு இருக்கின்றன என்ற தகவல் அமைக்கப்படுகிறது.
 போல்டரின் பின்புல படம் மற்றும் பிற தகவல்களும் இங்கு பதியப்படுகின்றன. Finder வழியாக, போல்டரை நீங்கள் திறக்கும்போது, Finder இந்த பைலைப் படித்து, போல்டரில் உள்ளவற்றை எப்படிக் காட்ட வேண்டும் என்று அறிந்து கொண்டு செயல்படுகிறது.
நாம் இந்த செட்டிங்ஸ் அமைப்பினை மாற்றுகையில், Finder அதனை .DS_Store பைலில் பதிந்து வைக்கிறது. 
இதில் மாற்றங்களை ஏற்படுத்தினால், அதாவது, இவை உருவாக்கப்படாமல் அமைத்தால், நெட்வொர்க் அமைப்பில் செயல்படுகையில், மிக மோசமான வகையில் சிக்கல்கள் ஏற்படும். 
எனவே, இவற்றை மேக் ஓ.எஸ். உருவாக்க விடுவதே நல்லது.
                                                                                                                                                            - நன்றி:தினமலர்,

==================================================================================================
இன்று,
ஜனவரி-12.


  • இந்திய ஆன்மிகவாதி சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்(1863)
  • முதல் முறையாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈஃபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது(1908)
  • நைஜீரியாவில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது(1970)


==================================================================================================
முகநூல்,