நெட்பிளிக்ஸ் என்பது... ?


 இணையத்தின் அடிப்படையில் இயங்கும் விடியோ பட சேவையை, அனைத்து டிஜிட்டல் சாதனங்கள் வழியாகவும் தரும் சாதனமே நெட்பிளிக்ஸ்
நம் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பி.சி., பிளே ஸ்டேஷன் என அனைத்திலும், நெட்பிளிக்ஸ் வழியாக நாம் பெறலாம். நெட்பிளிக்ஸ் திட்டங்களில், நாம் தேர்ந்தெடுக்கும் திட்ட அடிப்படையில், இவற்றில் எந்த சாதனங்கள் வழியாக எல்லாம், நாம் விடியோ படங்களைப் பெறலாம் என்பதை வரையறை செய்து கொள்ளலாம். திரைப்படங்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு பாகமாகக் கருதும்  இந்திய மக்களுக்கு நெட்பிளிக்ஸ் தற்போது அறிமுகமாகியுள்ளது. 
விடியோ ஸ்ட்ரீமிங் மூலம் தற்போது திரைப்படங்க்களைத்தரும்   மற்ற வைகள் Hotstar, Spuul, BigFlix, Hooq, BoxTV எனப் பல உள்ளன. 
ஆனால், இவை எதுவும், நெட்பிளிக்ஸ் போன்ற தரமான காட்சியுடன் கூடிய படங்களைத் தருவதில்லை. 

மக்களை, திரைப்பட அரங்குகளிலிருந்து விடுவித்து, வீடுகளிலேயே விருப்பப்பட்ட நேரத்தில் பார்க்கும் வசதிக்கு நெட்பிளிக்ஸ் கொண்டு வருகிறது. திரைப்படங்களை திருட்டு வி.சி.டி. பயன்படுத்திப் பார்க்க விரும்பும் நம் மக்களிடம், கட்டணம் வாங்கிக் கொண்டு படங்களைக் காட்டும் நெட்பிளிக்ஸ் எடுபடுமா? 

மற்ற இணைய சேவை நிறுவனங்களைப்போல் நேட்பிளிக்சும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டுஇயங்குகிறது. விடியோ படங்களைத் தொடர்ந்து காட்டுவதில், உலகில் முதல் சேவை நிறுவனமாக இது இடம் பிடித்துள்ளது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவில் பல நாடுகளிலும், இது  மக்களிடையே பிரபலமானதாகும். 
தொடக்கத்தில், தபால் மூலம் டிவிடிக்களை வழங்கும் நிறுவனமாகத் தொடங்கி, இன்று விடியோ படங்களைத் தானே தயாரித்தும், பழைய படங்களை இணையம் வழி வழங்கும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. 
தற்போது இந்தியா உட்பட 130 நாடுகளில்தன் தளத்தை விரிவுப்படுத்தியுள்ளது நெட்பிளிக்ஸ் .. சிங்கப்பூர், ரஷ்யா, தென் கொரியா ஆகிய நாடுகள்  இந்தப் புதிய நாடுகள். இதன் மூலம், நெட்பிளிக்ஸ், ”உலகத் தொலைக் காட்சி” ஆக மாறியுள்ளது . இதன் பின்னால்தான் புகழ் பெற்ற யூடியூப் வருகிறது.

உலக இணைய சேவையினை நெட்பிளிக்ஸ் தன் வசம் கொண்டுவந்துள்ளது . 
இணையத்தின் 34.7% பங்கினை, நெட்பிளிக்ஸ் பயன்படுத்துகிறது. 
யூடியூப்  16.88% கொண்டுள்ளது. 
பேஸ்புக் 2.51%,
 பிட் டாரண்ட் 4.35% என்று இணையத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன.. 
இணையம் வர்த்தக ரீதியாக வரும் முன், 1991ல், இணையத் தொடர்பு, கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டோர் மட்டுமே பயன்படுத்தும் ஒரு சாதனமாக இருந்தது. 
தற்போது விடியோ படங்கள் பார்க்கவே, அதிகம் பயன்படுகிறது. இந்த வகையில் நெட்பிளிக்ஸ் பெரும்பாலான அலைவரிசையைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இது இன்னும் அதிகரிக்க உள்ளது.
தற்போது  8 கோடி பேர் இதன் வாடிக்கையாளர்கள். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
190 நாடுகளில் நெட்பிளிக்ஸ்  சந்தாதாரர்கள் உள்ளனர்.
இணையம் இன்று பரவலாக மக்களிடையே இடம் பிடித்துவிட்ட நிலையில், குறிப்பாக இந்தியா அந்த வகையில் இரண்டாவது இடத்தைக் கொண்டுள்ள சூழ்நிலையில், நெட்பிளிக்ஸ் இந்தியாவில் தனது முழுக்கவனத்தையும் தற்போது செலுத்திவருகிறது.

4ஜி சேவை அனைத்து நிறுவனங்களாலும்,பலத்திட்டங்கள்  தரப்படும். இந்த சூழ்நிலையை நெட்பிளிக்ஸ் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிடுகிறது. நெட்பிளிக்ஸ் இணைப்பு பெற நமக்குத் தேவை ஓர் இணைய இணைப்பும், நெட்பிளிக்ஸ் அக்கவுண்ட்டும் தான். 
கட்டணம் செலுத்துவதைப் பொறுத்து, ஒரே நேரத்தில் நாம் நான்கு சாதனங்களில் கூட, நெட்பிளிக்ஸ்  படங்களைப் பார்க்கலாம்.
இன்று இந்தியா உட்பட, 190 நாடுகளில், நெட்பிளிக்ஸ் இணைப்பு உள்ளது . இதன் தாயகமான அமெரிக்காவைக் காட்டிலும், மற்ற நாடுகளில் தான் இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடுதலாக விரிய இருக்கிறது. 
விரைவில், இந்நிறுவனத்தின் வருமானம், மற்ற நாடுகளில் இருந்து ஈட்டுவதுதான் கூடுதலாக இருக்கப் போகிறது. 
எனவே, நெட்பிளிக்ஸ் பயன்படுத்துவதன் மூலம், நாம் உலகளவிலான திரைப்படங்களைப் பார்க்கலாம் எ ன்பது ஒரு குறிப்பிடந்தகுந்த வசதி.. உலகலவிலான  படங்களைத் தருவதற்கென, நெட்பிளிக்ஸ் பல விருதுகளை  பெற்றுள்ளது. 
 உலக அளவில் நெட்பிளிக்ஸ் என்ன தருகிறதோ, அவை இந்திய வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். 
ஏற்கனவே, இந்த நிறுவனம் பெற்ற உரிமங்கள் அடிப்படையில், இந்தியாவிலும் இவை தரப்படும். இந்தியப் டங்கள், அவற்றின் உரிமை பெற்று தரப்படும். 
நெட்பிளிக்ஸ் பயனாளர் கணக்கினைத் திறக்கும்போதே, அவர்கள் வயது 18 என உறுதி செய்யப்படும். மேலும், சிறுவர்கள் பார்க்க இயலாத வகையில், தனியே தடைப் பூட்டு அமைக்கும் வசதியும், குறிப்பிட்ட நீல வகை படங்களுக்கு வழங்கப்படும்.
வாடிக்கையாளராக விரும்பினால், Netflix.com/in என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தை அணுகி, உங்களுக்கென ஓர் அக்கவுண்ட்டினை உருவாக்கிக் கொள்ள வேண்டும் . 
உங்களுக்கு வசதிக்கேற்ற  கட்டணத் திட்டம் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். கிரிடிட் அட்டை மூலம் கட்டணம் செலுத்தலாம் . 
வழங்கப்படும்  திட்டங்கள் மூன்று வகைப்படும், அவை Basic, Standard மற்றும் Premium. 
முதல் திட்டமான Basic ஒரே ஒரு சாதனத்தில் நெட்பிளிக்ஸ் படங்களைப் பார்க்க அனுமதி தருகிறது. 
அடுத்த இரண்டு திட்டங்களும் இரண்டு மற்றும் நான்கு சாதனங்களில் பார்க்க அனுமதி தருகிறது.  படங்கள் ஹை டெபனிஷன் மற்றும் அல்ட்ரா ஹை டெபனிஷன் தரங்களில் துல்லியமாக தரப்படுமாம் .
 உங்கள் இணைய இணைப்பு வேகத்தினைப் பொறுத்து வேகமாகப் படங்கள்பார்க்க கிடைக்கும்  .
இதனைப் பயன்படுத்த, இணைய இணைப்பு ஒழுங்கான வேகத்தில் இருக்க வேண்டும். விநாடிக்கு 3 மெகா பிட்ஸ் வேகமும், ஹை டெபனிஷன் படம் பார்க்க, விநாடிக்கு 5 மெகா பிட்ஸ் வேகமும் கொண்ட இணைய இணைப்பு தேவைப்படும். 
எனவே, நெட்பிளிக்ஸ் பயன்படுத்த பலர் தங்கள் இணைய இணைப்பினை, கூடுதல் வேகத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டியதிருக்கும். 
பழைய ரெளட்டர்களுக்குப் பதிலாக, அதி வேக இணையத்திற்கு ஈடு கொடுக்கும் ரெளட்டர்களுக்கு மாறிக் கொள்ள வேண்டியதிருக்கும். மேலும், இங்கு இணையப் பயன்பாடு, ஸ்மார்ட் போன்கள் வழியாகவே பெரும்பாலானவர்களால் மேற்கொள்ளப்படுவதால், நெட்பிளிக்ஸ் சேவையினையும் ஸ்மார்ட் போனிலேயே பயன்படுத்த மக்கள் விருப்பப்படலாம். 
 , திட்டத்திற்கு ஏற்றபடி, ரூ.500, ரூ. 650 மற்றும் ரூ.800 ஆக மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகை உள்ளது. 
முதல் மாதம் நம் பயன்பாட்டிற்கான கட்டணம் ஏதுமில்லை. இலவசமாக நெட்பிளிக்ஸ் படங்கள் கிடைக்கும். இந்த இலவச மாதப் பயன்பாடு முடியும் முன்னர், நீங்கள் செலுத்த வேண்டிய பணம் குறித்து மூன்று நாட்களுக்கு முன்பாக, மின் அஞ்சல் அனுப்பப்படும். 
எப்போது வேண்டுமானாலும் , நம் சந்தாவை  ரத்து செய்திடலாம். அல்லது திட்டத்தை மாற்றிக் கொள்ளலாம்.
 மொபைல் இணைய சேவைக்கு அதிக பணம் செலுத்த வேண்டியதிருக்கும். திரைப்படம் மற்றும் டி.வி. நாடகங்கள், நிகழ்ச்சிகளைப் பார்க்க, ஒரு மணி நேரத்தில் ஒரு கிகா பைட் டேட்டா செலவாகும். அதன்படி பார்க்கையில், தற்போது நீங்கள் மொபைல் இணைய இணைப்புக்கு  செலுத்தும் பணத்தைக் காட்டிலும், கூடுதலாக 30% செலுத்த வேண்டியதிருக்கும். 
அதிகப்பட்சமாக 50 ரூபாய் கொடுத்து திருட்டு விசிடி மூலம் பிடித்த  படத்தை வாங்கி நினைத்தப்போதேல்லாம் பார்க்கும் வழக்கம் உள்ள நமக்குஇவ்வளவு பணம் கொடுத்து அவர்கள் தரும் ப டங்களை மட்டும் பார்க்க முடியுமா என்ற கேள்வி  எழுகிறது.
சீனா போல, கிரீமியா, வட கொரியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளிலும் நெட்பிளிக்ஸ் சேவை இல்லை. இதற்குக் காரணம், அமெரிக்க அரசின் தடை சட்டங்களாகும்.அதனால் பெரும் சந்தையான  சீனாவில் இன்னும் நெட்பிளிக்ஸ் தன் வர்த்தகத்தினைத் தொடங்கவில்லை. அரசியல் ரீதியாகத் தன் நிர்வாகக் கட்டமைப்பினை எதிர்க்கும் தகவல்களைச் சீன அரசு கட்டுப்படுத்துகிறது. 
எனவே, நெட்பிளிக்ஸ் சேவைக்குத் தடை விதிக்கவே சீனா விரும்பும். ஆனால் அமெரிக்க நிறுவனங்களுக்கே உரித்தான குறுக்கு வழியினை கண்டறிந்து  நெட்பிளிக்ஸ்  சீன அரசிடம் அனுமதி பெற்றுவிடும் என்றே  தெரிகிறது . 

ஆங்கிலம் உட்பட உலகின் 17 மொழிகளில் நெட்பிளிக்ஸ் சேவை தருகிறது. இந்திய மொழிகளில் இதன் சேவை விரைவில் தொடங்கும் .
 நெட்பிளிக்ஸ் பட்டியலில் தற்போது 80 இந்தியப் படங்கள் இருக்கிறது  . இந்திய டி.வி.நிகழ்ச்சிகளும் உள்ளன. ஆனால் இவை னைத்தும்  இந்தியில்  தயாரிக்கப்பட்டவைகளே . 
தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை, மணி ரத்னம் படமான ''ஓ.கே. கண்மணி'' ஒன்றுதான் வைத்துள்ளது.. 
பரவலாக அனைத்து மாநில மொழிப் படங்கள் இல்லாமல், குறிப்பாக திரைப்படங்கள் வாயிலாக தங்கள் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் தமிழ் நாட்டில் தமிழ்ப்படங்கள் இல்லாமல் நெட்பிளிக்ஸ் வெற்றி பெறுவது சிரமமே. 
============================================================================================
இன்று,
ஜனவரி-20.


  • முதலாவது அதிகாரபூர்வமான கூடைப்பந்தாட்டம் மசாசூசெட்சில் இடம்பெற்றது(1892)
  • பேர்ள் துறைமுகத்தை கடற்படைத்தளமாக பயன்படுத்த அமெரிக்க செனட் சபை அனுமதியளித்தது(1887)
  • வெளிப்புறக் காட்சிகளைக் கொண்ட முதலாவது முழு நீள திரைப்படம் திரையிடப்பட்டது(1929)
============================================================================================
மின் அஞ்சல்கள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

1. ஒவ்வொரு நாளும், குத்து மதிப்பாக, 20,500 கோடி மின் அஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. அதாவது, ஒவ்வொரு விநாடியிலும், 24 லட்சம் அஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. 
இதில் 90% ஸ்பேம் மெயில்கள் என எடுத்துக் கொண்டாலும், மிஞ்சி நிற்கும் அஞ்சல்களின் எண்ணிக்கை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

2. மின் அஞ்சல் பயன்படுத்துபவர்களில், 91% பேர், தினந்தோறும் ஒரு முறையாவது தங்கள் அஞ்சல் கணக்கைக் காண்கின்றனர். இணையம் பயன்படுத்தாமல் உங்களால் இருக்க முடியுமா? 
முடியாது. இந்த வகையில், மின் அஞ்சல்கள் சரியான இடத்தைப் பிடித்துள்ளன. 

3. மின் அஞ்சல் பயன்படுத்துபவர்களில், 75% பேர் தங்கள் ஸ்மார்ட் போன்களையே பயன்படுத்துகின்றனர். இந்த தகவல் தான், மக்கள் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகியுள்ளனர் என்பதைக் காட்டியது.

4. ஜிமெயில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ நூறு கோடியை எட்டிவிட்டது. இந்த உலகின் ஜனத்தொகை 700 கோடியை எட்டியுள்ளது. இவர்களில், இன்னும் பெரும்பாலானவர்களுக்கு, இணைய இணைப்பு கிடைக்காமல் உள்ளது. எனவே, இணையம் பயன்படுத்தும் அனைவரும் ஜிமெயில் பயன்படுத்துகின்றனர் என்பது, பெரும் வியப்புக்குரிய செய்தியே.

5. நல்ல திறமையுடன் மின் அஞ்சல்களை, வர்த்தகப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தினால், நாம் செலவழிக்கும் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கும், ரூ.4,500 லாபம் ஈட்டலாம். அதனால் தான், நாம் பல ஸ்பேம் மெயில்களை, நாள்தோறும் பெறுகிறோம்.
==================================================================================================
என்றும் 16 பா ஆடியவருக்கு 
வந்த 16 வகையான தவறுகள்.

 ஜெயலலிதா சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் நீதியரசர்[?]குமாரசாமி தவறாரன கணக்கி காட்டி தப்பான தீர்ப்பை வழங்கி நீதித்துறையையே மற்றவர்கள்  விட்டார் .
தற்பொது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு நடக்கிறது.அங்கு கர்நாடக அரசு சார்பில் வக்கீல் ஜோசப் அரிஸ்டாட்டில் 7 பக்கங்கள் கொண்ட மனுவை தாக்கல் செய்தார். 
அந்த மனுவில் குமாரசாமி தீர்ப்பில் தவறாக கையாளப்பட்ட 16 பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

அந்த 16 குறிப்புகள் பின் வருமாறு:

1.  கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பில் 939வது பக்கத்தில், மொத்த மதிப்பு சுமார் ரூ.24 கோடியே 17 லட்சத்து 31,274 என்பதற்கு பதிலாக ரூ.10 கோடியே 67 லட்சத்து 31,274 என குறிப்பிடப்பட்டுள்ளது. 998வது பக்கத்தில் வருமானத்துக்கு அதிகமான சொத்து ரூ. 16 கோடியே 32 லட்சத்து 36,812 என்பதற்கு பதிலாக ரூ.2 கோடியே 82 லட்சத்து 36,812 என குறிப்பிடப்பட்டுள்ளது. சரியாக கணக்கிட்டால் வருமானத்துக்கு அதிகமாக 76.7 சதவீதம் சொத்து சேர்த்துள்ளது தெரிய வந்திருக்கும். ஆனால், கணக்கில் ஏற்பட்ட தவறால் இது 8.12 சதவீதம் என்று உயர் நீதிமன்றத்தால் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கூட்டல் கணக்கில் ஏற்பட்ட தவறுதான் ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்ய வகை செய்துள்ளது. 

சரியான கணக்கீடு இருந்திருந்தால் அவர்களுக்கு தண்டனை கிடைத்திருக்கும்.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிலிருந்து பெறப்பட்ட கடன்களை விசாரணை அதிகாரிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அவை வருமானத்தில் சேர்க்கப்படவில்லை. ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி இந்த கடன் தொகைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு அவற்றை சொத்து மதிப்பில் கழித்துள்ளார்.

2. வழக்கில் தண்டனை பெற்ற 4 பேரும் தாக்கல் செய்த அப்பீல் மனுவில் கர்நாடக அரசை ஒரு பார்ட்டியாக சேர்க்காமல் அப்பீல் மனுவை தாக்கல் செய்ய முடியுமா?. உச்ச நீதிமன்றத்தில் க.அன்பழகன் தாக்கல் செய்த மனுவின் மீது உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில் கர்நாடக அரசை பார்ட்டியாக சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடக அரசை இந்த வழக்கில் சேர்க்காமல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இதுபோன்ற சரிசெய்யக்கூடிய குளறுபடிகளை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்வரை கவனிக்கத் தவறிவிட்டது.

3. அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீலுக்கு வாதிட உரிய வாய்ப்பு தராமல் ஒரே ஒரு நாள் மட்டும் எழுத்துபூர்வமாக  வாதிட அனுமதித்தது சட்டப்படி செல்லாததாகும்.


4.  க.அன்பழகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவுக்கு மாறாக ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் அப்பீல் மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரித்துள்ளது.  

5. இந்த வழக்கில் அரசு வக்கீலின் வாதம் இல்லாமல் தீர்ப்பு வழங்க முடியுமா? 

6.  வழக்கில் கூட்டுச்சதி மற்றும் குற்றத்துக்கு உடந்தையாக இருந்த விஷயங்கள் குறித்து கர்நாடக உயர் நீதிமன்றம்  கூறிய கருத்துக்கள் முரண்பாடுகள் நிறைந்ததாக மட்டுமல்லாமல் வழக்கில் உள்ள சரியான ஆவணச் சாட்சிகளுக்கு எதிராகவும் உள்ளது.

7.  குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் சொத்துக்களை அவர்களின் சொத்துக்கணக்கில்  சேர்க்காமல் தீர்ப்பளித்ததில் முரண்பாடுகள் 
உள்ளன.

8.  ஊழல்தடுப்பு சட்டப் பிரிவின்படி ஜெயலலிதாவின் பெயரில் உள்ள சொத்துக்கள் மட்டுமல்லாமல்  மற்றவர்கள் பெயரில் சேர்க்கப்பட்ட சொத்துக்களும் சேர்க்கப்பட வேண்டும். இதை கர்நாடக உயர் நீதிமன்றம் கவனிக்காமல் தீர்ப்பளித்துள்ளது.

9.  கர்நாடக உயர் நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொண்ட சொத்துக்களின்படி வருமானத்துக்கு அதிகமாக 34.5 சதவீதம் சொத்து சேர்க்கப்பட்டுள்ளது ஆனால், உத்தரவில் 8.2 சதவீதம் என்று தவறாக கூறப்பட்டுள்ளது.

10. அசையா சொத்துக்களை வாங்கியதில் 146 விற்பனை ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், அதை 97 என்றே கர்நாடக உயர் நீதிமன்றம் கணக்கில் எடுத்து தீர்ப்பளித்துள்ளது.  விற்பனை ஒப்பந்தங்கள் ரூ.16 கோடியே 19 லட்சத்து 3,301 என்று இருக்கும்போது அதை ரூ.6 கோடியே 24 லட்சத்து 9120 என கர்நாடக உயர் நீதிமன்றம் கணக்கில் எடுத்து தீர்ப்பளித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் சாட்சியத்தில் கட்டுமானப் பணிகளுக்கு ரூ.8 கோடியே 60 லட்சத்து 59,261 என்று கூறப்பட்டிருந்த நிலையில் இந்த தொகையை ரூ.5 கோடியே 10 லட்சத்து 54 ஆயிரம் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கணக்கிட்டது தவறானது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி அடுக்குமாடி கட்டிடங்களுக்கான கட்டுமானப் பணிகளுக்கு மதிப்பிட்ட தொகையை உயர் நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது.

ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு வந்த வருமானம் ரூ.1 கோடியே 15 லட்சத்து 94 ஆயிரம் என்று கணக்கிட்ட நிலையில் அந்த தொகையை ரூ.4 கோடி என்று உயர் நீதிமன்றம் கணக்கிட்டது தவறானதாகும்.சுதாகரன் திருமணச் செலவை குறைத்து மதிப்பீடு செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது சரியானதல்ல. சூப்பர் டூப்பர் டிவி நிறுவனத்தின் வருமானம் ரூ.1 கோடி என்று கணக்கிட்டிருப்பது மனக்கணக்கு மட்டுமேயாகும். 

11.  பரிசுப் பொருட்கள் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது சட்டத்துக்கு விரோதமாக வந்த ரூ.1 கோடியே 50 லட்சத்தை சொத்துக்குவிப்பு வழக்கில் சேர்த்துள்ளது தவறானதாகும்.

12.  வருமானத்துக்கு அதிகமாக 10 சதவீதத்திற்கும் குறைவாக சொத்து இருந்தால் விடுதலை செய்யலாம் என்று உயர் நீதிமன்றம் கருதியது தவறானதாகும்.

13. விசாரணை நீதிமன்றமான சிறப்பு நீதிமன்றம் அனைத்து சாட்சியங்களையும் தீர விசாரித்து ஆய்வு செய்து, தண்டனை வழங்குவதற்கான அனைத்து காரணங்களையும் குறிப்பிட்டு தீர்ப்பளித்ததை உயர் நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது.

14. மேல் முறையீட்டு தீர்ப்பில் உயர் நீதிமன்ற நீதிபதி தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டார் என்பதையே இந்த தீர்ப்பு வெளிக்காட்டுகிறது. 

15. ஆவணங்களையும், சாட்சியங்களையும் தீர ஆய்வு செய்யாமல் தீர்ப்பளித்தது சட்டப்படி தவறானதாகும், கறைபடிந்த ஒரு தீர்ப்பாக எடுத்துக்கொள்ளப்படும். 

16. வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை மதிப்பீடு செய்ததில் உயர் நீதிமன்ற நீதிபதியின் நடைமுறை நீதிபரிபாலனுக்கு முரணானது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவின் அடிப்படையில், ஜெயலலிதா விடுதலையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்ய வேண்டும் என்றும் மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?