இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

திங்கள், 25 ஜனவரி, 2016

"ஃப்ரீ பேசிக்ஸ்" : ஒரு மோசடி திட்டம்


இணையத்துடன் நாம் தொடர்புகொண்டுவிட்டால், தகவல் களைப் பெறுவதற்கும் தருவதற்கும் கட்டணம் கிடையாது. முற்றிலும் இலவ்சம்தான்.
 பெறு வதற்கும் தருவதற்கும் வாயில் காப்போர் இல்லாததால்தான் மக் களின் படைப்பாற்றல் இந்தளவுக்கு வெளிப்பட முடிந்திருக்கிறது என் கிறார் இணையத்தில் சமவாய்ப்பு கோட்பாட்டின் தந்தை என அறி யப்படும் டிம் வூ. 
ஆனால் இணைய சேவை வழங்குவோர்  சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள்  ஆகியோரின் கட்டுப்பாட்டுக்குள் இணையம் வந்துவிட்டால், இணை யம் தகவல் பரிமாற்றத்திற்கான பொது வழியாக இருக்காது. 
குறிப்பிட்டஇணையதளங்களை குறிப்பிட் டவர்கள் மட்டும் பயன்படுத்தும் நிலைஉருவாகிவிடும். இணையத்தின் எந்தப்பகுதியை அல்லது எந்தெந்த இணை யதளங்களை நாம் பயன்படுத்த முடியும் என்பதை இணையதள சேவை வழங்குவோரோ, தொலைத் தொடர்பு நிறுவனங்களோ தீர்மா னிக்க முடியாது என்பதைத்தான் இணையத்தில் சமவாய்ப்பு கேட்டுப்போராடுபவர்கள் சுட்டிக் காட்டு கின்றனர். 
தங்களது தளங்களை மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டிய நிலை வரவேண்டும் என்றுஃபேஸ்புக் போன்ற இணைய தளங்கள் விரும்புகின்றன.
முழுக்கமுழுக்க ஃபேஸ்புக்கின் கட்டுப்பாட் டில் உள்ள தளம்தான் ஃப்ரீ பேசிக்ஸ். 
அது ஃபேஸ்புக் மற்றும் அதன்கூட்டாளிகளாக உள்ள சில இணையதளங்களை மட்டுமே பார்வையிட நம்மை அனுமதிக்கும். ஆனால் இணை யதள சமவாய்ப்பினை தான் மீற வில்லை என ஃபேஸ்புக் கூறுகிறது. 
இதில் நாம் கவனிக்க வேண்டியது “இணையதள சமவாய்ப்பு” என்ற சொற்றொடருக்கு முற்றிலும் வேறு பட்ட ஒரு தன்னிலை விளக்கத்தை அது தருகிறது. 
ஃப்ரீ பேசிக்ஸ் தளத்தில் உள்ள இணையங்களிடையே எந்தபாகுபாட்டையும் காட்டப் போவதில்லை என ஃபேஸ்புக் கூறுகிறது. ஆனால் ஃப்ரீ பேசிக்ஸ் தளத்தில் உள்ள சில தளங்களைத் தவிர மற்றஎல்லா தளங்களையும் நம் பார்வை யிலிருந்து அகற்ற முனையும் உண் மையை ஃபேஸ்புக்-ரிலையன்ஸ் கூட்டுமறைக்கிறது. இது இணையதள சம வாய்ப்பினை மீறுவதைத் தவிர வே றில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இணையதள சம வாய்ப்பு என் பதை அடிப்படைக் கட்டுப்பாட்டுக் கோட்பாடாக ட்ராயும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இணையசேவை வழங்குவோரை வாயில்காப்போராக செயல்பட அனுமதிக்க முடியாது என்றும் அது அறிவித்திருக்கிறது. 
பல்வேறு சேவைகளை அளிப்ப தாக உறுதியளித்து ஒட்டுமொத்த இந்திய அரசையே விழுங்கத் திட்டம்தீட்டியுள்ளது சிலிக்கன் பள்ளத் தாக்கு என்கிறார் டிஜிட்டல் தொழில்நுட்ப விமர்சகர் எவ்கனி மோ ரொசவ். 
குடிநீர், போக்குவரத்து சேவைமுதல் தகவல் தொடர்புவரை அனைத் தையும் அளிக்க வேண்டியது அரசின்பொறுப்பு என்பதுபோய் சிலிக்கன் பள்ளத்தாக்கில் உள்ள சில முதலாளிகளே அனைத்தையும் கொடுத்துவிடுவார்கள் என மக்களை நம்ப வைக்கும் விளம்பரத்தையே ஃபேஸ்புக் நிறுவனர் சக்கர்பெர்க் செய்துகொண் டிருக்கிறார். 
இணையம் பொதுதளமாக இல்லாமல் தனியார் ஏகபோகமாக மாறுவதை இந்தியா அனுமதிக்கக்கூடாது. அப்படி அனுமதிக்கப் பட்டால், அது மக்களிடையே ஒருபுதிய டிஜிட்டல் பிளவினை ஏற்படுத்தி விடும். ஃபேஸ்புக் அனுமதிக்கிற தளங்களைப் பயன்படுத்துவோர் நாளடைவில் இணையம் என்றாலே அது ஃபேஸ்புக்தான் என்று நம்பத் தொடங்கிவிடுவார்கள். 
எல் லோரையும் உள்ளே அனுமதிக்கிற இணைய சேவையைச் சுருக்கிவிட்டு, அனைவரையும் இணையத்தால் இணைக்கிறோம் என்று பிரச்சாரம் செய்வது மிகப் பெரிய மோசடி என்பதில் சந்தேகம் இல்லை. 
கடல்களைத் தன் கட்டுப் பாட்டில் கொண்டுவந்ததன் அடிப்படையிலேயே ஆங்கிலேய சாம்ராஜ்யம் அன்று உலகம் முழுதும் வியாபிக்க முடிந்தது. 
இன்று தகவல்கள் என்ற கடல்களை யார் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களோ அவர்கள் தான் உலகப் பொருளாதாரத்தையும் ஆட்டிப் படைக்கிறார்கள்.
தகவல்களைக் கைப்பற்றும் சிலிக்கன் பள்ளத்தாக்கின் முயற்சி காலனி ஆதிக்கத்தின் ஒரு புதிய வடிவம் அன்றி வேறல்ல. 
இதற்கெதிராக நாம் நெட்டிசன்களாக மட்டும் அல் லாமல் சிட்டிசன்களாகவும் போராட வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.

===========================================================================================
இன்று,
ஜனவரி-25.
  • இந்திய தேசிய வாக்காளர் தினம்
  • ரஷ்யா மாணவர் தினம்
  • மாஸ்கோ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1755)
  • இந்தியாவின் 18வது மாநிலமாக இமாச்சல பிரதேசம் ஏற்றுக் கொள்ளப்பட்டது(1971)
===========================================================================================
                                                                   கிளீன் இந்தியா ?

         மக்களுக்காகவே நான்.மக்கள் வேறு ,நான் வேறு கட்சி வேறு அல்ல. உண்மைதான்.