இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

புதன், 6 ஜனவரி, 2016

மோடியின் ஒன்றரை ஆண்டு

ஓ தெய்வங்களே,இது வியப்பில் ஆழ்த்துகிறது என்னை.நம்பமுடியாத எரிச்சலூட்டுபவனாகஇத்தகைய ஒருமனிதனா?ஆக்குங்கள் இந்தப்பெருமித உலகைபுல்மரங்களை மட்டுமேதாங்குவதாக.-                                                                                               ஷேக்ஸ்பியர், (ஜூலியஸ் சீஸர்)
பிரதமர் நரேந்திரமோடி அறநெறிபிறழ்ந்த சில்லறைப்பேர்வழிகளுக்குக் கடிவாளமிடுவார் என எதிர்பார்ப்பது வீண்முயற்சி. 
ஏனெனில் அவர்கள்தான் அவரது கொள்கைத்தொகுப்பின் மையமாக அமைந் துள்ளார்கள். அவர்களைக் கட்டுப்படுத்த அவரால் முடியாது; அதை அவர் விரும்பவும் மாட்டார்.2014 மே 26ல் இந்தியாவின் பிரதமராகி, ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் இந்திய மக்கள் நரேந்திரதாஸ் தாமோதரதாஸ் மோடியின் குணாம்சக்குறைபாடுகளைக் கண்டறியத் துவங்கி உள்ளார்கள். 
ஒரு காலத்தில் ஜவஹர் லால் நேரு வீற்றிருந்த இருக்கையில் அமர்ந் திட, தான் தகுதியற்றவர் என்பதை மோடியும் நிரூபித்துவிட்டார்.நேரு நாட்டை ஒன்றுபடுத்தினார்: மோடி யோ பிளவுவாதத்தின் முழுமையானசின்னம். அவர் பிரதமராவதற்கு முன்பே தனதுவண்ணங்களை அனைவரும் பார்க்கு ம்வகையில் தனது பாய்மரத்தில் பூசிக் கொண்டார். 
அதை நிகழ்த்தியமுறை திகைப் படையவைக்கும்.”ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் ஒருநேர்காணலில் “நீங்கள் 2002ல் சரியானதைத் தான் செய்தீர்கள் என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்கப்பட்டார். அவர் பதிலளித்தார்: “நிச்சயமாக”. 
அவர் மேலும்கேட்கப்பட்டார்: “மக்கள் உண்மையான மோடி யார் என்று அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். இந்துதேசியத் தலைவரா? அல்லது வணிகத்துக்கு ஆதர வான முதல்வரா?”. மோடி மிகவும் விளக்கமாகப் பதிலளித் தார்: “ நான் ஒருதேசியவாதி: நான் தேசப்பற்று உள்ளவன். தவறு ஏதும் இல்லை. நான் ஒரு பிறவி இந்து. தவறு இல்லை. ஆகவே நான் இந்து தேசியவாதி. 
இதனால் நீங்கள் கூறலாம், நான் ஒரு இந்து தேசியவாதி என்று. ஏனெனில் நான் ஒருபிறவி இந்து.” -(இந்தியன் எக்ஸ்பிரஸ் 2013 ஜூலை 3)யார் தனது நம்பிக்கைகளை மோடியின் மீது வைத்து அவரை “வழங்குபவர்” என்றுகூறினார்களோ அவர்களால் மோடி வாரி இறைத்த உறுதிமொழிகளை அவ்வாறு வழங்குவதற்கான சிறிய அடையாளத் தைக்கூடக் காணமுடியவில்லை.
அவரால் உறுதியளிக்கப்பட்ட ‘அச்சே தின்’ (நல்ல நாள்) ஏமாற்றும் கானல்நீராக மாறிவிட்டது. ‘பூரே தின்’ (கெட்ட நாள்) இப்போது நம்மீது மிகுந்த ஆற்றலோடு மதவாத அறிவிப்புக்களாகவும், குற்றச்சாட்டுக்களாகவும், திட்டமிட்ட வெளியேற்றுதல்களாகவும், கலாச்சார மற் றும் கல்வி நிறுவனங்கள்மீது பாய்கிறது. 
கொலைசெய்தல், கூட்டுக்கொலை போன்றவை இந்த நாட்டின் தலைமை நிர்வாகியால் கண்டனம் ஏதும் இன்றி நடக்கின்றன. அர்த்தமுள்ள அவரது தொடர்ந்த மௌனத்தை சாதகமான ஓர்அடையாள சமிக்ஞை என்று சிலர் புரிந்து கொண்டுள்ளார்கள். 
இந்த சில்லறைப் பேர் வழி களை, வெறுப்பை விதைப்பவர்களை மோடிகட்டுப்படுத்துவார்; உரத்துக் கண்டிப்பார்; கொலைகளைச் செய்பவர்களை, சகிப்புத் தன்மை இல்லாதவர்களை தடுப்பார் என்று அவரது புகழ்பாடிகள் விரக்தியுடன் வேண்டி நிற்கிறார்கள். 
ஆனால் மோடி அசையவேயில்லை. ஏனெனில் இந்தப்பேர்வழிகள்தான் அவரது கொள்கைத்தொகுப்பின் மையமாக, முதுகெலும்பாக இருப்பவர்கள்.
முழுவதுமாக ஆய்வுசெய்யப்பட்ட ஆவணப்பதிவுகள் இன்று அவரது தலைக்கு மேல்என்ன உள்ளது என்ற ஏராளமான எச்சரிக்கை களைத் தருகின்றன.

இந்த நாட்டுக்கு தனது பிரதமரைத் துல்லிய மாக மதிப்பிடுவது மிகவும் முக்கியமானது. குஜராத்தில் அவரது நாட்களில் பலரை வெளியேற்றிய முதல்வர் மோடியிலிருந்து இன் றைய பிரதமர் மோடி ஒருதுளியும் மாறவேஇல்லை. 
அவரது கண்காணிப்பில் நடந்த கொ டூரப் படுகொலைகள் மிகவும் மோசமானவை.
இப்போதும்கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதில் அவரது இரக்க மற்றநடத்தை இன்றும் நீடிக்கிறது. 
இந்தமனிதரைப்பற்றிய அதிர்ச்சி தரத்தக்க ஒரு மதிப்பீட்டைப் பத்தாண்டுகளுக்கு முன்பே ஒருதூதர் செய்திருந்தார். 
பத்திரிகைப் பத்தி எழுத்தாளர்கள், தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள், வணிக நிறுவனங்கள் போன்றோரின் கட்டுப்பாடற்ற, உணர்ச்சியூட்டும் கை தட்டல் களிலிருந்து விலகி நின்று, அறிவார்ந்த முறையில், ஆழமான பார்வைகொண்ட அந் தத் தூதரின் வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள்: “ மோடி தன்னை ஊழலற்றவராக, திறமைமிக்க நிர்வாகியாக, ஆழ்ந்த வணிகக் கலாச்சாரம் கொண்டவராக, வியாபாரிகளுக்கு உகந்தவராக, முட்டாள்தனமான சட்டம்-ஒழுங்கு அரசியல்வாதி அல்லாதவராக, இந் தியப்பெரும்பான்மையினரின் நலன் காப்ப வராகத் தன்னை வெற்றிகரமாக அடையாளப் படுத்திக்கொண்டார். 
பா.ஜ.க.விலுள்ள மோடி யின் ஆதரவாளர்கள் இந்தசாதகமான அம்சங் கள்மூலம் மோடி நாடுமுழுவதுமுள்ள வாக் காளர்களைக் கவர்ந்திழுப்பார் என்று தங்கள்கட்சித்தலைவர்களை ஒப்புக் கொள்ள வைக்கமுடியும் என்று நம்புகிறார்கள்.
சில வாக்காளர்கள் மோடியின்பிறதகுதிகளைப் பாராட் டக் கற்றுக்கொள்ளும்போது, இரத்தம்சிந்திய 2002ல் மோடியின் பங்குபற்றி மன்னித்து மறந்துவிடுவார்கள் என்று நம்புகிறார்கள்.”
“பொதுஇடங்களில் தோன்றுவதில் மோடி கவர்ச்சிகரமானவராகவும், விரும்பத்தக்கவராகவும் உள்ளார். எப்படி இருந்த போதிலும், எல்லாக்கணக்குகளின்படியும் மோடி பிறருடைய கருத்துக்களுக்கு மதிப் பளிக்காதவர், ஆர்வம்காட்டாத குறுகிய மனப்பான்மை கொண்டவர். ஒருசிறிய ஆலோ சனைக்குழுவை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தும் யாரையும் நம்பாத ஒருமனிதர். இந்தச்சிறிய உள்வட்டம் அமைச்சர்களுக்கும், கட்சிக்கும், முதலமைச்சருக்கும் இடையிலான மோதல்களைக் குறைக்கும் அமைப்பாகச் செயல் பட்டது. 
அவரது ஆட்சி எல்லாரையும் உள்ளடக்கியதாக, கருத்தொற்றுமை கொண்டதாக இருக்கவில்லை; அச்சஉணர்வை ஊட்டுதல், மிரட்டித் தனது விருப்பத்தை ஏற்கவைத்தல் மூலமாக நடைபெற்றது.
முரட்டுத்தனமாக, தானே உயர்ந்தவர்என்று நடந்து கொள்ளும்போக்கு உயர்நிலையில் உள்ள கட்சி மற்றும்அரசு அலுவலர்களிடமும் செல்லு படியாக்கப்பட்டது. 
அவர் எல்லா அதிகாரங்களையும் தனது கைகளில் குவித்துக் கொண்டார். முடிவெடுக்கும்போது அடிக்கடி தனது அமைச்சர்களை உறை நிலையில் வைத்திருந்தார். அது அந்த அமைச்சர்களின் துறைகளைப் பாதித்தன.”-இதை எழுதியவர் மும்பையில் உள்ள அமெரிக்க கவுன்சில் ஜெனரல் மைக்கேல் எஸ்.ஓவன். 
மோடி பிரதமராக வந்தபின் “குஜராத்மாடல்” என்ற தனது கனவைத் தேசிய அளவில்துல்லியமாக நடைமுறைப்படுத்த முயன்ற போது, இந்தக் கம்பிவடச் செய்தி மீண்டும் மிகத் தெளிவாக விரைவில் எழுதப்பட்டது. மோடி மத்திய அமைச்சரவை முறையை குஜராத்தில் செய்தது போலவே வலுவிழக் கச்செய்தார். அமைச்சர்களின் தரம் குறைக் கப்பட்டது. 
அரசு அதிகாரிகள் மேலுக்கு வந்தார்கள். பா.ஜ.க.வின் தலைவராக அமித்ஷாநியமிக்கப்பட்டார். கட்சியின்பிடி முழுவதும்கைக்குள் வந்தது. 
குஜராத்தில் நடந்தது போலவே கட்சிக்குள் இருந்த எதிராளிகள் ஓரம்கட்டப் பட்டார்கள்.
(மேலும் விளக்கமாக அறிய“ஜனநாயகத்தை மோடிமயமாக்குதல்” என்ற ஏ.ஜி. நூரணியின் கட்டுரை, ப்ரண்ட்லைன், 2015 ஜூலை 11 இதழ்)முன்னாள் கப்பல்படைத்தளபதி அருண் பிரகாஷ் 2015 நவம்பர் 12ல் குறிப்பிட்டார்: “ கடந்த ஆறுமாதங்களாக மக்கள்பணி-இராணுவப்பணி உறவுகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 
சீனாவோ, பாகிஸ்தானோ எதை யாவதுசெய்தால் நாங்கள் எதையும் தொடங்கும்நிலையிலோ, அல்லது எதிர்க்கும் நிலையிலோ இல்லை.”(ஜோஸி ஜோசப்: ‘தி இந்து’ 2015 நவம்பர் 13) “அயலுறவுச் செயலாளர்களுக்கிடை யேயான பேச்சுவார்த்தைகளையும், அதுபோலவே தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் களின் பேச்சுவார்த்தைகளையும் மோடி கிடப்பில் போட்டதால் பாகிஸ்தானுடனான உறவு மிகவும் தாழ் நிலையை அடைந்துவிட்டது. 
நேபாளம், சீனாவின் உதவியைநாடத் தள்ளப்பட்டு விட்டது. ஏனெனில் மோடி அந்தநாட்டுடனான உறவுகளை எதிர்பாராதவகையில் ஆபத் தானதாக்கிவிட்டார்.” பிரதமரின் 2014 மே பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தெற்குஆசிய அண்டைநாடுகளுக்கு விடுத்த அழைப்பு, பின்நோக்குப்பார்வையில் ‘ஐந்தாம் ஜார்ஜ் தர்பார்’ போல உள்நாட்டுப் பிரமுகர்களும் ஒன்றாகக்கொண்டுவரப்பட்டு “பேரரசரைப்” பாராட்டுவது போல இருந்தது.
இந்தியாவின் நீண்டகால நண்பரான கனக்மணி தீக்‌ஷித் அவர்களின் விமர்சனங்கள் இவை யெல்லாவற்றையும் கூறுகின்றன.

மிகவும் பொருத்தமான இன்னொரு பாடம்குஜராத்திலிருந்து வருகிறது. அதைக் கற்றுக்கொள்ள மோடி மறுத்துவருகிறார். அவரது இரண்டு நோக்கங்கள் செயலாற் றல் மிக்கவை. ஒன்று-அங்கு மறுவாழ்வுப் பணிகள் அதன்பெயருக்கு ஏற்றவகையில் ஏதும் நடக்கவில்லை; 
இரண்டு- புதுதில்லியில் உள்ள இங்கிலாந்தின் உயர்நிலைக்குழுவின் முதன்மைச்செயலாளர் பீட்டர் ஹாலண்ட் கண்டறிந்தது: “
அந்த வன்முறைகள் திட்டமிடப்பட்ட ஒன்று..... மாநில அரசின் ஆதரவுடன்.” இதன்நோக்கம் ‘இந்து பகுதிகளிலிருந்து’ முஸ்லிம்களை வெளியேற்றுவதே. அவரது அறிக்கை மேலும்கூறுகிறது: “இந்துக் களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்துவது இந்த முதலமைச்சர் (மோடி) அதிகாரத்திலிருக்கும்வரை சாத்தியமில்லை.”
 அதனால்தான் அங்கு மறுவாழ்வுப் பணிகள் நடக்கவில்லை.
இந்தப்படுகொலைகள் நடந்துமுடிந்த வெறும் ஆறுமாதகாலத்துக்குள் 2002 செப்டம் பர் 9ல் பெச்சாரண் என்ற இடத்தில் மோடி பேசினார்: 
“குஜராத்தின் சுயமரியாதைக்கு அச்சுறுத்தலாக இருந்த எல்லாத் தீயசக்திகளையும் முத்திரைபதித்து அவர்களை நாம் அழிக்க முடிவு செய்தோம்.... எங்கள்மீது இங்கே குற்றச்சாட் டுக்கள். நாங்கள் இந்துத்துவாவாதிகளாம்! 
ஓ, சகோதரர்களே, பெச்சாராஜி கோவி லின் வளர்ச்சிக்காக நமதுஅரசு ரூ.8 கோடியைஒதுக்கியது. இது நாங்கள் செய்தகுற்றமா? அவர்கள் கூறுகிறார்கள், ‘இந்த நரேந்திரபாய் நர்மதா தண்ணீரை சபர்மதி ஆற்றுக்குக் கொண்டு வந்தார்: இந்தமனிதர் மிகவும்புத்திசாலியாக சரவணமாதத்தில் (இந்துக்களின் புனித மாதம்) தண்ணீரைக் கொண்டுவந்தார்’ என்று. 
இங்கேநாங்கள்(பா.ஜ.க.என்ற பெருமை) இருப்ப தால் தண்ணீரைச் சரவணமாதத்தில் கொண்டுவந்தோம். நீங்கள் அங்கே இருந்தால்அதை ரம்தான்மாதத்தில் (முஸ்லிம்களின் புனித மாதம்) கொண்டுவரலாம்....
என்ன சகோத ரர்களே நாம் நிவாரண முகாம்களை நடத்தவேண்டுமா? 
நான் இங்கு குழந்தைகளை உற் பத்தி செய்யும் மையங்களை (இந்தநிவாரணமுகாம்களில்) ஆரம்பிக்கவேண் டுமா? நாம் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை மிகத்திட்டவட்டமாக நடைமுறைப்படுத்தி வளர்ச்சியை அடைய விரும்புகிறோம். நாம் ஐந்துபேர். 
நம்முடையவர்களோ 25பேர்.(அமே பாஞ்ச். அமாரா பச்சிஸ் என்று–முஸ் லிம்களின் பலதாரத் திருமணங்களைக் குறிப்பிடுகிறார்) இத்தகைய வளர்ச்சி யாருடைய பெயரால் தொடர்கிறது? 
யாருடைய தயக்கம் நமது பாதையில் குறுக்கிடுகிறது? 
எந்த மதப்பிரிவு நமது வழியில் வருகிறது?”அவர் மேலும் தொடர்கிறார்: “ நாம் கட்ச் (மாவட்ட) மதரஸாக்களிலிருந்து உன்னிப்பாகக் கவனித்துவருகிறோம்.... நாம் குஜராத்தில் மரணவியாபாரிகளைச் சுதந்திரமாகச்செயல்பட அனுமதிக்கமுடியாது. .
குஜராத்தை அழிக்கவும், அப்பாவிகளுக்குத் தீங்கு விளைவிக்கவும் இந்தச்சதிகாரர்களை அவர்களது திட்டங்களைச் செயல்படுத்தவும் நான் அனுமதிக்கமாட்டேன். 
இந்த இத்தாலியின் மகள் (சோனியா) நாம் மகாத்மா காந்தியின், சர்தார்படேலின் புனிதபூமியை அவமதித்துவிட்டோம் என்று வெளிப்படை யாகவே சான்றிதழை நமக்குத் தருகிறார். இந்த விஷயத்தில் நான் உங்களுடைய பதிலை வேண்டுகிறேன்.
 ... நீங்கள் மரண வியாபாரிகளைத் தடுத்துநிறுத்த வேண்டு மானால் நாம் சர்தார் படேலின் பாதை யைப் பின்பற்றவேண்டும். நமது இலட்சி யம் சர்தார்படேலின் பாதையைப் பின்பற்றுவது தான்.”“...நாம் ஐந்துகோடி குஜராத்தியர்களின் சுயமரியாதையையும், ஒழுக்கநெறிகளையும் உயர்த்திப்பிடித்தால் இந்த அலிகள். மலிகள், ஜமாலிகள் (முஸ்லிம்களைக் குறிப்பிடுகிறார்) நமக்கு எந்தவித தீமைகளையும் செய்வதில் வெற்றி பெற முடியாது.”
 முரட்டுத் தனமான, பிறரைப் பழிக்கிற, மத வெறியைத் தூண்டும் பகட்டான, இதே போன்ற வெறியூட்டும் பேச்சுக்கள் நரேந்திரமோடியின் தனித்துவமாக 2014லிலும், அண்மையில் பீகாரிலும் வெளிப்பட்டன.
குஜராத்தில் நிவாரணமுகாம்கள் முன்கூட்டியே 2002 மே மாதத்தில் மூடப் பட்டன. 
தன்மீதான விமர்சனங்களுக்கு தாக் குதல் தொடுப்பதையே அவர் தொடர்ந்து மேற்கொண்டார். ‘கௌரவ யாத்திரை’ என்று அழைக்கப்பட்ட ஒருபிரச்சாரத்தை அவர் துவக்கினார். 
அந்த கௌரவயாத்திரையின் சாலையோரநிகழ்வுகளில் 
அவர் கிராம மக்களிடம் ‘ஒருரயில்வண்டியில் 60 இராம பக்தர்கள் உயிரோடு எரிக்கப்பட்ட செய்தி யைக் கேள்விப்பட்டீர்களா?’ என்று கேட் டார். 
கூட்டத்தினருடன் சேர்ந்துபேசும் தனதுமகத்தான ஆற்றலைப் பயன்படுத்தி அவர் களை இது போன்ற கேள்விகளுக்குப் பதில் கூறத் தூண்டினார்:
நரேந்திரமோடி: உங்களில் யாராவது ஒருவர் எவரையாவது கத்தியால் குத்தினீர் களா?
கூட்டத்தினர் பதில்: இல்லை.
நரேந்திரமோடி: உங்களில் யாராவது ஒருவர் எவருடைய தலையையாவது துண்டித்தீர்களா?
கூட்டத்தினர் பதில்: இல்லை.நரேந்திரமோடி: உங்களில் யாராவது ஒருவர் எந்த ஒரு சகோதரி அல்லது மகளின் பெருமையைக் குலைத்தீர்களா? பாலியல் வன்புணர்வு செய்தீர்களா?
கூட்டத்தினர் பதில்: இல்லை.
நரேந்திரமோடி: இருந்தபோதிலும் குஜராத்தின் எதிரிகளால், கிராமம் கிராமமாக தீ பற்றியெரிகிறது; கிராமம் கிராமமாக மக்கள் கொல்லப்படுகிறார்கள்; கிராமம் கிராமமாக மக்களின் தலைகள் உருள்கின்றன என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ‘
அவர்கள்’ குஜராத்தை அவமதித்துவிட்டார்கள். 
‘அவர்கள்’ எல்லோருக்கும் பதிலளிக்கவே நான் இந்த கௌரவயாத்திரையை மேற்கொண்டுள்ளேன்.
குஜராத் படுகொலைகளை மோடியாலோ அல்லது அவரது புகழ்பாடிகளாலோ மறைக்கமுடியாது. களத்தில் உள்ள நிலவரங்கள், அவை இன்னும் தொடர்கின்றன என்பதைஅங்குஎழும் கூக்குரல்கள் வெளிப்படுத்து கின்றன.
இரண்டு கேள்விகள் பெருந் தன்மையோடு எதிர்கொள்ளப்படவேண்டும். 
முதலாவதாக, ‘இத்தகைய பின்னணிகொண்ட ஒரு நபரிடம் அவரது விசுவாசிகள் ஏன் கண்களை மூடிக்கொள்கிறார்கள்?’ 
இரண்டாவ தாக, ‘இத்தகைய பெரும் கயமைகளைக் கொண்ட ஒரு நபரால் மதசார்பற்ற நாட்டின் பிரதமராகப் பணியாற்ற முடியுமா?

                                                                                                                  ’நன்றி: ப்ரண்ட்லைன் 2015 டிசம்பர் 25 இதழ்தமிழில் சுருக்கம்: செ.நடேசன்
===============================================================================================
இன்று,
ஜனவரி-06.

  • ஈராக் ராணுவம் உருவாக்கப்பட்டது(1921)
  • மெக்சிகோ, அமெரிக்காவின் 47வது மாநிலமானது(1912)
  • சாமுவேல் மோர்ஸ், மின்னியல் தொலைத் தந்தியை முதன் முறையாக வெற்றிகரமாக சோதனை செய்தார்(1838)
  • கலாஷேத்திரா, சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது(1936)