ரூ.7 லட்சம் கோடி இழப்பு,

தென்னை மரத்துக்கு தேள் கொட்டினால் பனை மரத்துக்கு நெறி கட்டியதாக சொல்லுவார்கள்.
அதை உண்மை என்றுதான் காட்டுகிறது பங்கு சந்தை.
இன்று  பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவால்  அநேக பங்குகள் சரிவுடன் முடிந்தன. 
இதனால் இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.3 லட்சம் கோடி இழப்பீடு பங்கு சந்தை வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ளது. 
கடந்த நான்கு நாட்களில் ஏற்பட்ட சரிவால் இதுவரை  ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

இன்றைய வர்த்தகத்தில் 2343 நிறுவன பங்குகள் சரிந்தும், 342 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 93 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.
சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்த நிலையில், இன்று (பிப்.11ம் தேதி) கடும் சரிவை சந்தித்தன. ஒரே நாளில் சென்செக்ஸ் 807 புள்ளிகளும், நிப்டி 239 புள்ளிகளும் வீழ்ச்சி அடைந்தன. 
இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.3 லட்சம் கோடி இழப்பாகியுள்ளதாக சந்தை கண்காணிப்பாளர்கள்  தெரிவித்துள்ளனர்.
இந்திய பங்கு சந்தையின் இவ்வீழ்ச்சிக்கு இந்திய பொருளாதாரம் காரணமில்லை.உலக சந்தைதான் காரணமாம்.
இன்றைய வர்த்தகம் துவங்கும் போது சந்தை மிக வளர்ச்சியுடன்,மகிழ்ச்சியுடன் தான் துவங்கியது.
சென்செக்ஸ் 148.20 புள்ளிகள் உயர்ந்து 23,610.70 ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 29.50 புள்ளிகள் சரிந்து 7,186.20-ஆகவும் இருந்தது. 
ஆனால் ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சுணக்கம், குறிப்பாக ஹாங்காங் பங்குச்சந்தை 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4 சதவீதம் சரிந்தது. 

என்ற காரணங்களைச்சொல்லி  மதியத்திற்கு மேல் பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்தன. வர்த்தகம் முடியும் போது மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 807.07 புள்ளிகள் சரிந்து 22,951.83-ஆக சரிந்தது.
தற்போதைய பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு கீழ்க்கண்ட காரணிகளே பொறுப்பு.
* அந்நிய முதலீடுகள் அதிகளவில் வெளியேறியது.* தொடர் சரிவை கண்டு பயந்த முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது* அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தப் போவதாக வெளியான தகவல்...கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்குஹாங்காங் பங்குச்சந்தை  சரிவானது.* ரூபாயின் மதிப்பு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரூ.68.29ஆக வீழ்ந்தது...

ஒரு வாரத்திற்கு மேலாகவே உலகளவில் பங்குச் சந்தைகளில் மந்தமான சூழலே நிலவி வருகிறது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் மந்தமாக இருந்து வந்தன. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிந்த நிலையில், இன்றும் சரிவு நிலை தொடர்ந்தது.


இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவாகும். 
கடந்த நான்கு நாட்களில் மட்டும் சென்செக்ஸ் 1665 புள்ளிகள் சரிந்துள்ளது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 239.35 புள்ளிகள் சரிந்து 6,976.35-ஆக முடிந்ததுடன் 7000 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது.

இந்த நிலையில் முக்கிய காரணமக அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை திரும்ப எடுத்து தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டனர்.அதனால் தங்கம் விலை ஏறியும் ,பங்கு சந்தை வீழ்ந்தும் உள்ளது.
அந்நிய முதலீட்டாளர்களை நாடு,நாடாக போய் முதலீடு செய்ய இந்தியாவுக்கு அழைத்தும்,அவர்கள் முதலீடு செய்ய லாபம் தந்த பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்றதும் அதனால் இந்தியா பொருளாதார வளர்ச்சியடையும் என்றும் சொல்லி வந்த மோடி  இந்த வீழ்ச்சிக்கும் அந்நிய முதலீட்டாளர்களே காரணம் என்பதை உணரும் நிலையில் இருக்கிறாரா?அவர் இப்போது எந்த நாட்டில் இருந்தாலும்.இந்த 7 லட்சம் கோடி பங்கு சந்தை இழப்பு செய்தி எட்டியிருக்கும்தான்.அதற்கு அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை அவசரமாக எடுத்ததும் காரணம் என்பதும் தெரிந்திருக்கும்தானே?
============================================================================================








இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?