இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

புதன், 10 பிப்ரவரி, 2016

அழிவு வரும் வழி?கேரள மாநிலம், கொச்சி யில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு  எரிவாய்வு எடுத்து செல்லும் திட்டம், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களின் விவசாய நிலங்களின் வழியாக 310 கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணியினை மேற்கொள்ள கெயில் என்னும்  இந்திய  அரசு நிறுவனம்  திட்டமிட்டது.  
இத்திட்டத்தை  செயல்படுத்த 310 கிலோ மீட்டர் நீளத்திற்கும், 20 மீட்டர் அகலத்திற்கும் எரிவாயுக் குழாய்கள் பதிக்கப்படுவதற்காக  5,842  நபர்களுக்கு சொந்தமான 1,491 ஏக்கர் நிலத்தினை கையகபடுத்த  கெயில் நிறுவனம் நடவடிக்கை  எடுத்தது.
இதனை ஏழு மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் சமுக இயக்கங்கள் தமிழகமெங்கும் உள்ள  சூழலில், அரசியல் இயக்கங்கள் எதிர்த்தனர்.  
நிலத்தில் விவசாயம் செய்யமுடியாததும் மற்றும் அருகில் உள்ள நிலங்களை மேம்படுத்த முடியாத சூழல் ஏற்படும் என்பதாலும் விபத்துக்கள் ஏற்படும் போது ஒட்டுமொத்த நிலமும் பயனற்று போவதாலும் மக்கள் இதனை எதிர்த்தனர்.
விவசாயிகளின் நிலங்களில் எரிவாயுக் குழாய் பதிக்கப்படும் பகுதியில் ஆழமாக வேரூன்றும் மரங்கள் வளர்க்கக் கூடாது என கெயில் நிறுவனம் தடை செய்வதால்  மரங்களை சார்ந்துள்ள இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அஞ்சினர். இந்த குழாய்களுக்கு வேரேதும் பாதிப்புகள் ஏற்ப்பட்டாலும் அது விவாசயிகளுக்கு மரண தண்டனை வழங்கும் அளவிற்காண ஆபத்துள்ள சட்டங்களை கொண்டுருப்பதாலும் இதனை ஆராம்பத்திலேயே அனுமதிக்கக் கூடாது என்பதில் மக்களும் இயக்கங்களும் தெளிவாக இருந்தது.
பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். குழாய்ப் பதிபதை நேரடியாக சென்று தடுக்க முற்பட்டனர்.
     எரிவாயுக் குழாய்களை அமைக்க காவல்துறை பாதுகாப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது கெயில் நிறுவனம்   இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய்களை பதிப்பதற்கு காவல்துறையின் பாதுகாப்பு கேட்கக் கூடாது என்று தீர்ப்பு கூறினார். இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தது கெயில் நிறுவனம். 
மேல் முறையீட்டு மனுவில் விவசாய சங்கங்களும் தங்களை இணைத்துக்கொண்டனர்.
நீதிமன்றத்தில் விவசாயிகளுடைய கோரக்கை எரிவாயு குழாயகளை மாற்றுப் பாதையாக தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்லலாம் என்பதே. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கொண்ட அமர்வு நீதிபதி சந்துரு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தனர்.
மேலும் தலைமை நீதிபதி கொண்ட அமர்வு  எரிவாயு குழாய்களை அமைக்க மாற்றுப் பாதையை தேர்வு செய்ய “பொதுக் கருத்துக் கேட்பு கூட்டம்” நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பு கூறியது. 
ஆனால் கருத்து கேட்பு கூட்டம் நடத்தபடவில்லை மாற்றுப் பாதையை கணக்கில் கொள்ளாமல் குழாய் அமைக்கும் பணியை தொடர்ந்து செய்தது இதனால் விவசாயிகள் மீண்டும் நீதிமன்றம் சென்றனர். அதனை  தொடர்ந்தே கருத்து கேட்க்கும் கூட்டத்தை தமிழக அரசு ஏற்பாடு செய்த கூட்டத்தில்  விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தமிழக அரசு மாற்று பாதையில் செயல்படுத்த சொன்னது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கெயில் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஏற்கெனவே திட்டமிட்ட பாதையில் எரிவாயு குழாய்களை கெயில் நிறுவனம் பதிக்கலாம் என்று 2013-ம் ஆண்டில் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.  
சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடைபெற்றது. இவ் வழக்கில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதி ஏ.கே. சிக்ரி, நீதிபதி பானுமதி  அடங்கிய  அமர்வு  செவ்வாய்க்கிழமை  தீர்ப்பு  வழங்கியது.
தமிழகத்தில் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட பாதையில் கெயில் நிறுவனம் எரிவாயு  குழாய்களை  பதிக்கலாம்  என்று  நீதிபதிகள்  தீர்ப்பளித்தனர். எரிவாயு  குழாய் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று கெயில் நிறுவனத்துக்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர்.
எனினும் தற்போதைய சந்தை மதிப்பை கருத்தில் கொண்டு விவசாயிகள், நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டை  உயர்த்தி  வழங்க  வேண்டும்  என்றும்  நீதிபதிகள்  உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் நெடுஞாலை வழியாக எடுத்து செல்ல சாத்தியமில்லை என  கெயில் நிறுவனம் சொல்லுகிறது ஆனால்
கெயில் நிறுவனம் கொச்சி – பெங்களூரு எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தைத் தேசிய நெடுஞ்சாலை வழியாகத்தான் கொண்டு செல்கிறது;
மராட்டியத்தில் மஹிம்-தாசிர் எரிவாயுத் திட்டத்தை மகாநகர் கேஸ் நிறுவனம் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே நெடுஞ்சாலை வழியாகவும்;
குஜராத்தில் அகமதாபாத் – பகோதரா மற்றும் காந்திநகர் – சார்கட்ஜ் எரிவாயுத் திட்டத்தை அதானி கேஸ் நிறுவனம் நெடுஞ்சாலை வழியாகவும்;
உத்திரப்பிரதேசத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் பரோனி -கான்பூர் நெடுஞ்சாலை வழியாகவும்;
குஜராத் மாநிலத்தில் ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி.எல்., இந்தியன் ஆயில், ஜி.எஸ்.பி.சி. போன்ற நிறுவனங்கள் 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகமதாபாத் – வதோதரா நெடுஞ்சாலையில் குழாய் பதித்தும்தான் எரிவாயு எடுத்துச் செல்கின்றன.
தமிழகத்தில் நெடுஞ்சாலலையில் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளிக்காது என்று கெயில் நிறுவனம் சொல்லுகிறது இந்த மாநிலங்கலில் சாதியமானது இங்கு மட்டும் ஏன் முடியாது  என்று மக்கள் கேட்கிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் நெடுஞ்சாலையில்  குழாய்கள் அமைக்க குழி எடுக்கும் போது பாறைகள் இருந்தால்  வெடி வைக்க நேரிடும் இதனால்  இரண்டு கிலோ மீட்டர் போக்ககுவரத்து பாதிக்கும் என்று சொல்ல பட்டுள்ளது அப்படியான் விவசாய நிலங்களில் பாறை இருக்குமானால் இரண்டு சதுர கி.மீ  அளவு விவசாய வேலைகள் குடியிருப்புகள் பாதிக்க படுமே என்றும் மக்கள் அச்சம் தெரிவிகின்றனர்.

2011 இல் மத்திய அரசு கொண்டுவந்த பெட்ரோலியம் மற்றும் கனிமங்கள் குழாய் பதிக்கும் சட்டத் திருத்தத்தில், (P & MP Act 1962 Amendment), எரிவாயு குழாய்கள் சேதம் அடைந்தால் அவை பாதிக்கப்பட்டு இருக்கும் நிலத்தின் உரிமையாளர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், இதற்காகக் மரண தண்டனை வழங்க இடம் உண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டம் நெடுஞ்சாலையில் கொண்டு செல்வது விரிவான பணிகளில் சுணக்கம் ஏற்படுத்தும் என்று கெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது இதனால் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு பெரும் அச்சத்தை  கொடுத்துள்ளது. இது மீத்தேன் திட்டத்தை  செயல்படுத்தும் போது அதனை எடுத்து செல்வதற்க்காகதான் என்றும் சொல்லப்படுகிறது
sethupathi
ஆந்திராவில், கெயில் நிறுவனத்துக்கு சொந்தமான எரிவாயு குழாய் வெடித்து தீப்பிடித்ததில்  21 பேர் பலியானதை நாம் கண்கூடாக பார்த்தோம்.
திருவாரூர் மாவட்டம் ஊச்சி மேடுவை  சேர்ந்த ஆனந்தராஜ் ஒ. என் ஜி சி எண்ணைக்குழாய் வெடித்து இறந்துள்ளார் அவர் நண்பர் சேதுபதி உடல் முழுவதும் தீக்காயத்தோடு உயிர் தப்பியுள்ளார்.
கண் முன்னால்  உயிர்பலிகள் நிகழ்ந்து கொண்டு இருக்கும் போது கண்ணை மூடி கொண்டு  அழிவுத்திட்டங்களை ஆதரிப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா?
நீதிபதிகள் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்புகளை வழங்க வேண்டும் என்று ஏதாவது விதிகள் உள்ளனவா?
கொச்சியில் இருந்து கர்நாடகாவுக்கு தமிழ்நாட்டுக்கு வராமலேயே எரிவாயு கொண்டு செல்ல வழி இருந்தும் தமிழ் நாட்டின் வழியாகத்தான் கொண்டு செல்வேன் என்று கெய்ல் அடம் பிடிப்பது எதற்காக?
இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மனித  உயிர்களை ,விவசாய நிலங்க்களை கணக்கில் கொள்ளாமல்,விவசாயிகள் பற்றி எண்ணாமல் மொத்தத்தில் மனிதநேயம் இல்லாமல் ஒரு தீர்ப்பு.இது மனித வாழ்க்கைக்கு வைக்கப்பட்ட நெருப்பு.
============================================================================================
இன்று,
பிப்ரவரி-10.
1355 – இங்கிலாந்து, ஒக்ஸ்போர்டில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் 63 மாணவர்களும், 30 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.
1763 – பிரான்ஸ் கியூபெக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு அளித்தது.
1798 – லூயி அலெக்சாண்டர் பேர்த்தியர் ரோமைக் கைப்பற்றி அதனை பெப்ரவரி 15 இல் ரோமன் குடியரசாக அறிவித்தான்.
1815 – கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.
1846 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பஞ்சாபின் சீக்கியருக்கும் இடையில் இடம்பெற்ற போரில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர்.
1863 – அலன்சன் கிரென் தீயணைக்கும் கருவியின் காப்புரிமம் பெற்றார்.
1931 – புது டில்லி இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது.
1954 – வியட்நாம் போர்: அமெரிக்க அதிபர் டுவைட் ஐசன்ஹோவர் வியட்நாம் மீது ஐக்கிய அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என எச்சரித்தார்.
1964 – ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கரையில் HMAS மெல்பேர்ன் என்ற விமானந்தாங்கிக் கப்பலும் HMAS வொயேஜர் என்ற காடற்படைக் கப்பலும் மோதிக் கொண்டதில் 82 பேர் கொல்லப்பட்டனர்.
1969 – தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு. கருணாநிதி தெரிவு செய்யப்பட்டார்.
2009 – தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன.

எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த ராண்ட்ஜன்

எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த ராண்ட்ஜன்  மறைந்த தினம் இன்று  . இளம் வயதில் அறிவியலின் மீது தீராத ஆர்வம் கொண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார் . ஜெர்மனியில் பல்வேறு பல்கலைகழங்களில் வேலைபார்த்த அவர், அமெரிக்காவின் ஐயோவா பல்கலைகழகத்திற்கு பேராசிரியர் பணி செய்ய டிக்கெட் எல்லாம் எடுத்து கிளம்பும் பொழுது உலகப்போர் வந்து விட்டதால் ஜெர்மனியிலேயே இருந்துவிட்டார் .
பேரியம் பிளாடினோ சயனைட் பூச்சு பூசிய திரை,மற்றும் க்ரூக்ஸ் குழாய் ஆகியவற்றை கருப்பு கார்ட்போர்டில் சுற்றி வைத்துக்கொண்டு கேதோட் கதிர்களை பற்றி ஆய்வு செய்கிற பொழுது திரையில் மங்கலான பச்சை ஒளிரலை அவர் கண்டார் . அதற்கு காரணமான கதிரை எக்ஸ் கதிர் என அழைத்தார் . அந்த கதிரின் பண்புகள் புரியாததால் அவர் அப்படி அழைத்தார். அவரின் பெயரையே அதற்கு சூட்டவேண்டும் என்று பிறர் சொன்ன பொழுது ,"எத்தனையோ பேர் கடந்து வந்த பாதையை பின்பற்றி இந்த கதிர்களை கண்டிருக்கிறேன் நான். அதற்கு என் பெயரை வைப்பது சரியல்ல !" என்று அழுத்தமாக மறுத்தார்.
அவை புத்தகங்கள் ,வழியாகவும் மனித உடல்களின் வழியாகவும் கடந்து போவதை கண்டார் ;நடுவில் இந்த கதிர்களின் மீது மனைவியின் கைபட்டு அவரின் எலும்புகள் அப்படியே பதிவான பொழுதுதான் எலும்புகளை கடந்து எக்ஸ் கதிர்கள் செல்லாது என்பதும் அதைக்கொண்டு  குண்டுகள் ,ஏதேனும் குறைகள் மற்றும் எலும்பு முறிவுகள் இருப்பின்  கண்டறிய பயன்படுத்தலாம் என உணர்ந்து அதை செயல்படுத்தினார் . பியரி கியூரியை போலவே தன் கண்டுபிடிப்புகளை அவர்
காப்புரிமை செய்யவில்லை .மனித குலத்துக்கே அவை பயன்படட்டும் என உறுதியாக இருந்தார் .
அவருக்கு இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டது ;அதில் கிடைத்த பணத்தை தான் வேலை பார்த்த பல்கலைகழகத்திற்கே கொடுத்து விட்டார் . உலகப்போர் சமயத்தில் ஜெர்மனியில் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டு அவரும் பசியால் பல நாட்கள் வாட நேர்ந்தது. அவரின்  நிலையறிந்து வெளிநாட்டு விஞ்ஞானி ஒருவர் நிறைய வெண்ணெய்  கட்டிகளை அனுப்பிவைத்தார். அதை உடனிருந்த எண்ணற்ற சகாக்கள் மற்றும் ஏழைகளுக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டே இவர் நிறைவடைந்தார்.  பல்வேறு அயனிகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளை பற்றி தொடர்ந்து ஆய்வு செய்த இவர் இதே நாளில் மறைந்தார் .அவரின் பெயரில் தனிம அட்டவணையின் 111 வது தனிமம் வழங்கப்படுகிறது.

- பூ.கொ.சரவணன்
============================================================================================
ஆண்ராய்டு ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் பலரும் சிறிதுநேரம் ஓய்வு கிடைத்தாலும், மொ பைல் போன் வழியாக இணையத் திற்கு சென்று உலாவுவதை வழக்கமாககொண்டிருக்கின்றனர். 
இன்னும் சிலர்சிறிது நேரம் கூட ஓய்வின்றி எப்பொ ழுதும் மொபைல் வழியே இணையத் திற்குள் மூழ்கியே இருப்பார்கள். 
ஆனால் இன்னும் பலர் மொபைல் போன் மூலம் சில வீடியோக்களை பார்க்கும் போது அதனை தரவிறக்கம் செய்து சேமித்து வைக்க வேண்டும் என ஆர்வம் கொள்வார்கள். 
இதில் சிலர் அறிவுப்பூர்வமாக பயனுள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய வேண்டும் என விருப்புவர். சிலர் காமெடி வீடியோக்களையும், சிலர் சினிமா பாட்டு வீடியோக்கள், சிலர்அறிவியல், தொழில்நுட்பம் என பல் வேறு வகைப்பட்ட வீடியோக் களையும் தரவிறக்கம் செய்ய வேண் டும் என விரும்புவர். இது அவரவர் ரச னையை பொறுத்து அந்த விருப்பம் இருக்கும்.
ஆனால், அதனை எப்படி தரவிறக்கம் செய்வது என தெரி யாமல் தவிப்பவர்களும் உண்டு. அவர் களுக்கு தீனி போடும் வகையில் தற் போது ஒரு மென்பொருள் உருவாக் கப்பட்டிருக்கிறது. 
அதுவும் குறிப்பிட்ட சில இணைய தளங்களில் இருந்து தரவிறக்கமே செய்ய முடியாத அளவில் வீடியோ கோப்புகள் இருக்கும். இது போன்ற வீடியோ கோப்புகளையும் கையில் இருக்கும் ஆண்ராய்ட் போன் மூலம் ஸ்நாப்டியூப் என்ற மென்பொருளை மொபையில் இணைத்து கொண்டு தர விறக்கம் செய்து கொள்ளலாம். 

அது வும் இந்த மென்பொருள் மிக முக்கிய மான வீடியோ தளங்களான யூடியூப், பேஸ்புக், டெய்லிமோவுன், வைன், லைவ்வீக்,மேடாகேப், மூவிவிலா, சாங்ஸ்லிலோ உள்ளிட்ட 27 வகை யான வீடியோ இணைப்புகளை பகிரகூடிய தளங்களில் உள்ள வீடியோக் களையும் எளிதாக தரவிறக்கம் செய்துகொள்ளும் அளவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஸ்நாப்டியூப் என்ற மென் பொருள் வழக்கமாக ஆண்ராய்டு மொபைலுக்கு தரவிறக்கம் செய்யும் கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலிஇருக்காது. 
 அதன் இணையத்திற்கு சென்றுதான் தரவிறக் கம் செய்து பயன்படுத்த வேண்டும். முதல் முறையாக தரவிறக்கம் செய்த பின்னர் அந்த மென்பொருளை ஆண் ராய்டு மொபைளில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். 
அப்படி செய்ய முய லும் போது, ஒரு பாக்ஸ் வரும். 
அதில் உள்ளபகுதியை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும். 
அதில்  இருக்கும் பாக்ஸை டிக் செய்த பின்னர் அதனை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
இதன் பின்னர் பேஸ்புக் மற்றும் யூடிப் போன் இணைய தளங்களில் சென்று அதில் பிடித்தமான வீடி யோ கோப்புக்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 
குறிப்பாக பேஸ் புக்கில் உள்ள வீடியோ கோப்பு களை பதிவிறக்கம் செய்ய வேண்டு மென்றால், அந்த வீடியோ பதி வேற்றம் செய்த நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். 
அதன் அரு கில் கர்சரை கொண்டு சென்றால் தரவிறக்கம் செய்யும் குறியீடு அருகில் தோன்றும் அதனை பயன்படுத்தி தரவிறக்கம் செய்யலாம். 
மேலும் யூடிப் போன்ற தளம் உள்ளிட்ட பல்வேறு வீடியோ பகிரக்கூடிய தளங்களின் இணைய முகவரியையும் பயன்படுத்தி சம் பந்தப்பட்ட வீடியோவை தரவிறக் கம் செய்து கொள்ளலாம்.
கணினி யில் நாம் பயன்படுத்தும் தரவிறக்கம் மென்பொருள்களில் உள்ள இடை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு வசதி கள் இந்த ஸ்நாப்டியூப் ஆண்ராய்டு மென்பொருளிலும் இருக்கிறது. 
அப்படி தரவிறக்கம் செய்து கொள்ளும் நபர்கள் தங்களின் ஆண் ராய்டு மொபைல் போனில் உள்ள மெமரியின் அளவை பொறுத்து கையாளலாம். 
அல்லது எஸ்டி கார்டு ( தனியான மெமரி கார்டு ) இருப்பின் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று தரவிறக்கம் செய்யும் வீடியோக்கள் இந்த மெமரி கார்டில் இறங்குமாறு மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.