இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

ஞாயிறு, 27 மார்ச், 2016

இ{ந்திய}ணைய வேகம்.


இண்டர்நெட் வேகம் குறித்த பிரபல சர்வதேச புள்ளிவிபரத்தின்படி இலங்கைதான்  தென்னாசியாவில் அதிக  வேகம் கொண்ட இண்டர்நெட் வசதி கொண்ட நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த அகமை டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆண்டு தோறும் இந்த புள்ளிவிபர அறிக்கையை வெளியிடுவது வழக்கம். 

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இண்டர்நெட் வேகம் எவ்வாறு உள்ளது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள இந்த புள்ளிவிபரம் முக்கியான ஒன்றாக கருதப்படுகிறது.

உலக அளவில் இண்டர்நெட்டின் சராசரி வேகம் 23 சதவீதம் அதாவது 5.6 எம்.பி.பி.எஸ். அதிகரித்துள்ளது. 

குறிப்பாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தென் கொரியா அதிகபட்சமாக 26.7 எம்.பி.பி.எஸ் வரை இண்டர்நெட் சேவையை வழங்கியிருக்கிறது. 

மிகக்குறைந்த  வேகத்தில் இண்டர்நெட் சேவையை கொண்டிருக்கும் நாடாக இந்தியா உ ள்ளது.

மொபைல் இண்டர்நெட் சராசரி வேகத்தில் பிரிட்டன் 26.8 எம்.பி.பி.எஸ். வேகத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளது. 

ஸ்பெயின் 14 எம்.பி.பி.எஸ் வேகத்துடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. 

ஈரான் மற்றும் வியட்நாம் நாடுகள் மிகவும் குறைந்த வேகத்தில் மொபைல் இண்டர்நெட் சேவையை வழங்குகின்றன.

அதிகபட்ச இண்டர்நெட் வேகத்தின் சராசரியில் சிங்கப்பூர் (135.7 எம்.பி.பி.எஸ்) முதலிடத்திலும் இந்தியா (21.2 எம்.பி.பி.எஸ்) கடைசி இடத்திலும் உள்ளன. 

தென்னாசியாவில்  குறைந்த வேக இண்டர் நெட் சேவையை வழங்கும் நாடாக ஆப்கான் உள்ளது. ஆனால் அலைக்கற்றை ஒழுங்கின் பிரகாரம் இந்தியாவை விட அந்நாட்டின் இணையத்தள வேகம் அதிகமாக உள்ளது  குறிப்பிடத்தக்கது.
=========================================================================================
ஓசிடி (Obsessive Compulsion Disorder)
ஒரு செயலைத் திரும்பத் திரும்பச் செய்வது மட்டுமல்ல, ஒரே சிந்தனையில் ஆழ்ந்து போவதும் ஓசிடிதான்.
நகர வாழ்க்கையில் பொழுதைக் கழிக்கும் பெரும்பாலானோருக்கு, ஓசிடியைப் பற்றித் தெரியும். மனதை ஆட்டிப்படைக்கும் ஒரு வகையான நரம்பியல் குறைபாடே ஓசிடி. மூளையில் இருக்கும் செரட்டோனின் என்னும் வேதிப்பொருள் பற்றாக்குறையால் இந்தக் குறைபாடு ஏற்படுகிறது. செரட்டோனின் குறையும்போது சிந்தனையைக் கட்டுப்படுத்தும் சக்தி வெகுவாகக் குறைகிறது. சிந்தனை நரம்பியல் மண்டலத்தோடு தொடர்புடையது என்பதால், இது சிந்தனையை வெகுவாகப் பாதிக்கிறது. இதை ஒரு வகையான மனக்குறைபாடு எனலாம்.
மனதை ஊடுருவித் துளைக்கும் தேவையில்லாத எதிர்மறை எண்ணங்களால் இது ஏற்படுகிறது. மிகைப்படுத்தப்பட்ட எண்ணங்களால் உண்டாகும் ஓசிடி, பயம், கோபம், எரிச்சல், பதட்டம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்துகிறது.
இந்த நோய் குறித்தும், அதன் அறிகுறிகள் மற்றும் வகைகள் குறித்தும் நம்மிடம் பேசினார் மனநல மருத்துவர் மோகன்.
"அலுவலக இலக்கு, மேலதிகாரியின் கோபம், சத்தில்லாத உணவு, வேலை, குடும்பப் பராமரிப்பு, சம்பள பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகளால், சுமார் 65 சதவீதப் பேருக்கு, 25 வயதுக்கு முன்னாலேயே இந்த பிரச்சனை எழுகிறது. பொதுவான இயல்பான மக்களுக்கு, கோபம் பதற்றம், எரிச்சல் ஆகியவை சில நிமிடங்களுக்கே இருக்கும். ஆனால், ஓசிடி பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட பண்பு பல மணி நேரங்களுக்கு தொடர்ந்து நீடிக்கும். ஓசிடியின் தீவிரத்தைப் பொருத்து, மருந்துகள் கொடுக்கப்படும், கவுன்சலிங் மூலமும் சிகிச்சை அளிக்கப்படும். சில சமயங்களில் இரண்டு முறையும் பயன்படுத்தப்படும்.
ஓசிடி வருவதைப் பொருத்து, அவற்றில் பலவகைகள் உள்ளன.
செயல்கள் குறித்த பயம்
இந்த வகை ஓசிடியில், சந்தேகங்களும், கவலைகளும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். வீட்டுக் கதவைப் பூட்டினோமா, அடுப்பை அணைத்தோமா என்று யோசித்துக் கொண்டே இருப்பார்கள். பணம் சரியாக இருக்கிறதா என்று தொடர்ந்து எண்ணிக்கொண்டே இருப்பார்கள்.
சுத்தத்தைக் குறித்த பயம்
இவர்களுக்கு தூசு, புகை போன்ற மாசுக்களால் அழுக்காகிவிடும் என்ற பயம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். பொருட்களை வெறும் கையால் தொட பயப்படுவார்கள். சோப்புப் போட்டு கைகளைக் கழுவிக் கொண்டே இருப்பார்கள்.

இந்த வகை ஓசிடியில், குறிப்பிட்ட சில குடும்ப, அலுவலக நபர்கள் அல்லது நண்பர்கள் நம்மைத் தாக்கிவிடுவார்களோ என்ற அச்சம் இருக்கும். அடிக்கடி நாம் பத்திரமாக இருக்கிறோமா, நம் சொந்தங்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.

இவர்கள், எல்லாவற்றிலுமே அதிகப்படியான ஒழுங்கை எதிர்பார்ப்பார்கள். வேலையிலும், வீட்டிலும் அவர்களின் எதிர்பார்ப்பால் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகும்..

ஏதாவது ஒரு பொருள் பழையதாகி, பயன்படுத்த முடியாமல் போனாலும் கூட, அதைத் தூக்கிப் போட அவர்களுக்கு மனது வராது. அதை அப்புறப்படுத்த முயற்சிக்கும், மற்றவர்கள் மீதும் தேவையில்லாமல் கோபப்படுவார்கள்.

அடிக்கடி தனக்கு தெரிந்த நபர்களின் முகம், பாலியல் உணர்வுகளோடு மனதில் வந்துபோகும். அது தவறு என்று தெரிந்தாலும், எண்ணங்களை அவர்களால் கட்டுப்படுத்தவே முடியாது. குற்ற உணர்ச்சியால் இந்த வகையினர் அதிகம் பாதிக்கப்படுவார்கள்" என்று கூறுகிறார்.
ஓசிடிக்கான சிகிச்சை குறித்து சித்த மருத்துவர், ஜெரோம் சேவியரிடம் பேசினோம்.
"சித்த மருத்துவம் மன நோய்களை பல விதமாக வகைப்படுத்துகிறது. இதில் ஓசிடி என்பது உன்மத்தம் (உடலில் செயல்படும் இயக்கங்களான வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்புகளால் மனநிலையில் ஏற்படும் பாதிப்பு) என்ற வகைப்பாட்டில் வருகிறது. இதற்கு கவுன்சலிங் அவசியம் என்றாலும், அத்தோடு வேறு சிலவற்றையும் பார்க்க வேண்டும்,
கவுன்சலிங்குக்கு முன், உடலில் சீர்கெட்டிருக்கும் வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றை சரியாக்க சிகிச்சை அளிக்க வேண்டும். நோயாளியின் நிலையை முதலில் கண்டறிந்து, அதற்கான மருத்துவம் செய்த பின்னர் கவுன்சிலிங் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஓசிடி  சிகிச்சை 
1. வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமப்படுத்த சிகிச்சை அளிக்கவேண்டும்.
2. உடலில் உள்ள தாதுக்களின் வலிமை குறைந்தாலும் கோபம், எரிச்சல், பயம் உண்டாகி, மனநிலை பலவீனமடையும். இதை வலிமைப்படுத்த வேண்டும்.
3. மனநிலையைச் சரிசெய்ய வேண்டும். இதற்கு மூச்சுப் பயிற்சி, சில யோக ஆசனங்கள், தியானம் ஆகியவை அடங்கிய எட்டு வகையான பயிற்சிகள் உள்ளன. நோயாளியின் தேவைக்கும், மனநிலைக்கும் ஏற்ற வகையில் தேவைப்படும் பயிற்சியை கற்றுக் கொடுக்க வேண்டும்.
4. கவுன்சலிங் கொடுக்க வேண்டும்.
நோய்க்கு, வெறும் கவுன்சலிங் மட்டுமே முறையான தீர்வாகாது. மேலே சொன்ன இயக்கங்களான வாதம், பித்தம், கபம் மற்றும் தாதுக்களை சமப்படுத்தி, மனப்பயிற்சி கொடுத்த பிறகே, கவுன்சலிங் கொடுக்கப்பட வேண்டும். இயந்திரமயமாகிவிட்ட இந்த சூழலில், கொஞ்சம் குடும்பத்தோடும், இயற்கையோடும் இயைந்து வாழ்ந்தாலே போதும், எந்த நோயையும் குணப்படுத்தி விடலாம்" என்கிறார் நம்பிக்கையுடன்.
                                                                                                                                              -  க.சே. ரமணி பிரபா தேவி[தமிழ் இந்து வில்] ================================================================================================================
இன்று,

மார்ச்-27.


 • யூரி  ககாரின்
 • சர்வதேச  நாடக  தினம்
 • மல்தோவா, பேசராபியா ஆகியன ருமேனியாவுடன் இணைந்தன(1918)
 • ஜுவான் பொன்ஸ் டி லெயோன், வட அமெரிக்காவை கண்டுபிடித்தார்(1513)
 • யூரி அலெக்சியேவிச் ககாரின்
 • விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் ஏப்ரல் 12, 1961 அன்று சோவியத் ஒன்றியத்தின் வஸ்டொக்- 1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.

  யூரி ககாரின் மாஸ்கோ மாநகருக்கு மேற்கே க்ஸாட்ஸ்க் பகுதியில் உள்ள குளூஷினோ என்னும் இடத்தில் மார்ச் 9. 1934-ல் பிறந்தார். இப்பகுதி பின்னர் ககாரின் எனப் பெயரிடப்பட்டது. இவரது பெற்றோர் கூட்டு விவசாயப் பண்ணை ஒன்றில் கடமையாற்றியவர்கள். 

 • சரடோவ் உயர் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சி பெற்று அங்கு மென் விமான ஓட்டுநராக பகுதிநேரங்களில் பயிற்சி பெற்றார். 1955-ல் ஒரென்பூர்க் விமா ஓட்டுநர் பாடசாலையில் (Orenburg Pilot's School)-ல் இணைந்து மிக்-15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்று வெளியேறினார். அங்கு வலென்டினா கொர்யசோவா என்பவரை சந்தித்து 1957-ல் திருமணம் புரிந்தார். அவரது முதல் பணி நார்வே எல்லையிலுள்ள மூர்மன்ஸ்க் பகுதியில் உள்ள இராணுவ விமானத்தளத்தில் ஆரம்பமானது.

  1960-ல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோவியத் விண்வெளித் திட்டத்தில் இணைந்துகொண்ட 20 விண்வெளி வீரர்களில் ஒருவரானார் யூரி. இவர்களுக்கு அங்கு உடலியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மிகவும் கடுமையான பயிற்சி கொடுக்கப்பட்டது. கடும் பயிற்சிக்குப் பின்னர் ககாரின், கெர்மன் டீட்டோவ் ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்குத் தேர்வானார்கள். இவர்களில் ககாரின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீடத்தால் விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்புவதற்காகத் தேர்வு செய்யப்பட்டார்.

  ககாரின் ஏப்ரல் 12, 1961-ல் வஸ்தோக் 3KA-2 (வஸ்தோக் 1) விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டார். விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்தார். அவரது விண்கலம் 1:48 மணி நேரம் பறந்து, பூமியைக் குவிமையப்படுத்தி நீள்வட்ட வீதியில், நெடுஆரம் 203 மைல், குறுஆரம் 112 மைல் உச்சியில் சுற்றி வந்தது.

  இவர் 1968-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி மரணம் அடைந்தார்.
 • =================================================================================================================


ஓர் அலசல்!

திமுக ஊழல் கட்சியா? 

திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றனவே தவிர எந்த வழக்கிலும் இதுவரை தண்டனை பெற்றதில்லை.
சர்க்காரியா ஊழல் வழக்குகள் குறித்து எம் ஜி ஆருக்காக விசாரணை நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று இந்திரா காந்தியே கூறித்தான் பிறகு கூட்டணி வைத்தார்
அதிலும் சாட்சியம் கூறிய எம்ஜிஆர் கேள்விப்பட்டேன் பேசிக்கொண்டனர் எனக்குத் தெரியாது என்றுதான் பல இடங்களில் கூறினார் அவரால் உறுதிப்படுத்த முடியவில்லை என்பதும் இன்றுவரை எந்தக் குற்றச்சாட்டிலும் தண்டனை பெற்றதில்லை என்பதும் உண்மை!


நள்ளிரவில் நாட்டைவிட்டு ஓடிவிட்டால் என்னசெய்வது? 

என்பதுபோல துரத்தித் துரத்தி வயதையும் முன்னாள் முதல்வர் என்பதையும் பாராமல் தலைவர் கலைஞரைக் கைது செய்த வழக்கு ----தளபதி மு.க.ஸ்டாலின் மீது போடப்பட்ட வழக்கு என்ன தெரியுமா? 
சென்னையில் பாலங்கள் கட்டியதில் ஊழல் என்று! 
இப்போதுவரை அந்த வழக்கு என்ன ஆயிற்று? 
எனக்குத் தெரிய இராயப்பேட்டை பாலத்தை ஏழு அடிகள் வரை தோண்டிப்பார்த்த
ும் தலைவரையும் தளபதியையும் முதல் எதிரிகளாக நினைக்கும் ஜெயலலிதாவால் ஒரு குற்றத்தையும் ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே உண்மை! 

ஆனால் திமுக ஊழல் கட்சி என்றுதான் பிம்பத்தை உருவாக்கி தொடர்ந்தும் வருகின்றனர்!
சரி! அடாவடித் தனமாக நிலத்தைக் கையகப்படுத்தியத
ை மீட்டுத் தருகிறோம் என்று ஜெயலலிதா ஒரு சட்டம் கொண்டுவந்து
# நிலஅபகரிப்புச்சட்டம் என்ற பெயரில் ஏராளமான திமுகவினரைக் கைது செய்தார்களே ஒன்றிலாவது எந்தத் திமுகவினராவது தண்டனை அடைந்தார்களா? 

எல்லாம் அந்தந்த நேரத்துப் பரபரப்புச் செய்திகளுக்கும் திமுக மீதான பழிக்கும்தான் என்பதை நடுநிலைவாதிகள் யோசிக்க வேண்டாமா?
சரி இறுதியாக 2ஜி வழக்குக்கு வருவோம்!
திருஆ_ராசாவோ‬ திருமதி
கனிமொழியோ வாய்தா வாங்கி விசாரணைக்குச் செல்லாமல் ஓடி ஒளிந்துஒளிந்து கொண்டனர் என்று செய்தி வந்திருக்கின்றதா? 

நல்லபடியாக விசாரணைக்கு ஒத்துழைக்கின்றனர் என்று நீதியரசர் பாராட்டியது எத்தனை பேருக்குத் தெரியும்?
எத்தனை ஊடகங்கள் வெளிப்படுத்தின? 

பாராட்டுகின்றன?
அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்களே என்பதுதான் மிகப்பலருடைய வாதம்! விசாரணைக்காக சிபிஅய் அலுவலகம் சென்றவர்களை அங்கேயே கைதுசெய்து வெளியில் விட்டால் சாட்சிகளைக் கலைத்துவிடுவார்கள் என்று காரணம் சொல்லி அப்படியே சிறைக்குள் வைக்க அனுமதியும் பெற்றுவிட்டனர்! 

விசாரணைக்குச் செல்லாமல் நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் படுத்துக்கொண்டு தப்பிக்காததே அவர்கள் செய்த குற்றம்!
இன்னும் விசாரணை நடந்துகொண்டுதான் இருக்கின்றது!
பதினெட்டு ஆண்டுகள் விசாரணையிலிருந்து தப்பித்க்கப் புதுப்புது வழிகளைக் கண்டறிந்து நூறு கோடி ரூபாய் அபராதம்-- நான்காண்டு சிறைத் தண்டனை!-

- சொத்துக்கள் பறிமுதல்! 
என்றெல்லாம் தண்டனை பெற்றவர்கள் பதினைந்து நாட்கள் ஊதுபத்தி உருட்டியதொடு வெளியே வந்துவிட்டால் நல்லவர்கள்!
வழக்கே முடியாமல் பிணை (ஜாமீன்) கேட்கமாட்டேன் என்று பொறுப்புடன் சட்டத்தை மதித்துக் காத்திருந்தவர்கள் குற்றவாளிகள்! அப்படித்தானே?
நடுநிலைவாதிகள் யோசிக்கலாமே? 

மாட்டார்கள்!
சரி!
ஆ.ராசாவின் மீது சொத்துக்குவிப்பு வழக்கிட்டு சோதனை போட்டார்களே
ஒன்றும் ஆவணங்கள் கிடைக்கவில்லை என்று திரும்பிச் சென்றார்களே
அது எத்தனை கோடிரூபாய்க்கான குற்றச்சாட்டு தெரியுமா?
எழுபது கோடி ரூபாய்களை ஆ.ராசா வைத்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு! அப்படியானால் அவர்கள் கூற்றுப்படி மீதம் ஒரு இலட்சத்து எழுபத்தி அய்யாயிரம் கோடியே தொண்ணூற்று ஒன்பது இலட்சத்து முப்பது கோடி சொத்து என்ன ஆயிற்று? 

எங்கே போயிற்று?
நடுநிலை ஊடகங்கள் கேள்விகள் எழுப்பாது!
நடுநிலைவாதிகள் யோசிக்க மாட்டார்கள்!
இன்னொரு பக்கத்தில் 2ஜியே 1,76,000 கோடிக்குப் போயிருக்க வேண்டும் என்றால்
3ஜி , 4ஜி எல்லாம் எத்தனை கோடிக்கு விலை போயின;
நாட்டுக்கு ஓர் அய்ந்து இலட்சம் கோடியாவது வருமானம் வந்ததா என்று
ஏன் எவரும் கேட்கவில்லை?
வரவில்லை என்றால் அதற்குக் காரணமானவர்களை
ஏன் திகார் சிறையில் அடைக்கவில்லை?

என்ன ஆயிற்று? 

எங்கே போயிற்று?
நடுநிலை ஊடகங்கள் கேள்விகள் எழுப்பாது!
நடுநிலைவாதிகள் யோசிக்க மாட்டார்கள்!
திமுக ஊழல் கட்சியா? 

நாமாவது யோசிப்போம்!
                                                                                                            நன்றி : -கார்த்திகை நிலவன் வலைப்பூ
======================================================================================