இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

திங்கள், 7 மார்ச், 2016

திருட்டு நிரல்கள் உங்கள் அலைபேசியில் ?

கூகுள் ப்ளே ஸ்டோரில், ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் கூடுதல் வசதிகளைத் தரக்கூடிய பல புரோகிராம்கள் ஆயிரக்கணக்கில் இலவசமாகக் கிடைக்கின்றன. 

இவை, கூகுள் ஆண்ட்ராய்ட் பிரிவின் அனுமதி பெற்றே, கூகுள் ப்ளே ஸ்டோரில் இடம் பெற்றாலும், பல அப்ளிகேஷன் புரோகிராம்கள், பயனாளர்களின் போன்களைத் தங்கள் வியாபார நோக்கங்களுக்குப் பயன்படுத்துகின்றன.பயனாளர்களுக்கு  தீங்கு விளைவிப்பதாகவும் மற்றும் தனிப்பட்ட  தகவல்களைத் திருடி அதன் மூலம் பணம் சம்பாதிப்பவையாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது.. 

இது போன்ற அப்ஸ்கள் பற்றி தெரியவருகையில், கூகுள் அவற்றை ஆய்வு செய்து, தன் கூகுள் ப்ளே  தளத்திலிருந்து நீக்குகிறது. 

தற்போது  இது போன்று செயல் பட்டு மாட்டிக்கொண்ட 13 ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் நீக்கப்பட்டுள்ளன. 

ஸ்மார்ட் போன்கள் இயக்கப் பாதுகாப்பு குறித்துத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் கிறிஸ், இந்த புரோகிராம்கள் பாதுகாப்பற்றவை. 

திருட்டுத்தனமாக செயல்படுகின்றன என்று கண்டறிந்து, கூகுள் நிறுவனத்திற்கு அறிவித்தார். 

இந்த புரோகிராம்கள், பயனாளர்களுக்குத் தெரியாமல், அவர்களின் ஆண்ட்ராய்ட் போனில் பல புரோகிராம்களைத் தேவையற்ற வகையில் பதிக்கின்றன. இதனால் அந்த போன்கள் எப்போதும் இயங்குவதாகவும் அதன் மூலம் தேவையற்ற பிரச்னைகள் உண்டாகிவருவதுடன்,போனின் பேட்டரியும் விரைவில் தீரும்  நிலையும் உண்டாகிறது.


மேலும் இந்த போன்கள் பிரச்னைக்குள்ளாகும்போது, அவற்றில் உள்ள அனைத்து அப்ஸ்களையும் அழித்து  “தயாரித்து வெளியிட்ட நிலைக்கு” மீட்டு அமைத்தாலும் (Factory Default), இந்த புரோகிராம்கள் மட்டும் அழியாமல் போனில் தங்கி வினை புரிகின்றன. 

அண்மையில், கூகுள் நிறுவனம் நீக்கிய புரோகிராம்கள் பின்வருமாறு: 

Honeycomb, Just Fire, Cake Blast, Crazy Block, Drag Box, Tiny Puzzle, Jump Planet, Ninja Hook, Piggy Jump, Eat Bubble, Hit Planet, Cake Tower, மற்றும் Crazy Jelly. 

பயனாளர்கள் யாரேனும், இவற்றைத் தங்களின் போனில் பதிந்திருந்தால், அவைகளை உடனே நீக்கிவிடவும். 


அத்துடன், போனைத் தயாரித்து அளித்த நிறுவனத்தின், ரீட் ஒன்லி மெமரியையும், புதிதாக அமைக்க வேண்டும். 

சென்ற ஆண்டு, Shedun என்ற பெயர் கொண்ட அப்ளிகேஷன் புரோகிராம் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டது. 


பயனாளர்களுக்குத் தெரியாமல், இது பல அப்ளிகேஷன் புரோகிராம்களை சில அலைபேசி நிறுவனங்கள் தங்கள் போனில் பதிந்தது விற்பது தெரியவந்தது. தாங்கள் விற்கும் அலைபேசியில் அதிக அளவு புரோக்கிராம்கள் இருப்பதாக காண்பிக்கவே அவைகள் அவ்வாறு செய்வதும் தெரிகிறது.

இதே போல பாதிக்கப்பட்ட மற்ற மொபைல் போன்களுடன் இந்த புரோகிராம்கள் தகவல்களைப் பகிர்ந்து வந்ததும் கண்டறியப்பட்டது. 

பின்னர், இந்த புரோகிராமும், அது பதிந்த மற்ற புரோகிராம்களும் நீக்கப்பட்டன.
மேலே கண்ட நிரல்கள் இருக்கும் அலைபேசிகளை வாங்குகையில் அவைகலை அவர்களையே நீக்கி தரச்செய்து வாங்குவது நல்லது.


========================================================================================
இன்று,

மார்ச்-07.
  • அல்பேனியா ஆசிரியர் தினம்
  • ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது(1798)
  • அலெக்சாண்டர் கிரகாம்பெல் தொலைப்பேசிக்கான காப்புரிமம் பெற்றார்(1876)
  • பாலஸ்தீனத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது(1996)

கலாபவன் மணி 
பிரபல மலையாள திரைப்பட நடிகரும், தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்தவருமான கலாபவன் மணி மரணம் அடைந்தார். 
அவருக்கு 45 வயது .
கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் தொடர்பான கோளாறுகள் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
தமிழில் 'ஜெமினி' படம் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமான  கலாபவன் மணி, உலக நாயகன் கமல்ஹாசனின்  'பாபநாசம்' படத்தில் கொடுர காவலராக நடித்து  பரபரப்பை ஏற்படுத்தினார். "பந்தா பரமசிவம்"படத்தில் பிரபுவுடன் இணை நாயகனாக நடித்து கலக்கினார்.
கலாபவன் மணி யின் மனைவி பெயர் நிம்மி, மகள் வாசந்தி லக்‌ஷ்மி.
கலாபவன் மணியின் பெயருக்கு முன்னால் உள்ள கலாபவன் என்பது, கழுத்தையும் உடலையும் வளைத்துப் பலவிதமாக மிமிக்ரி செய்ய அவருக்குக் கற்றுக்கொடுத்த கலைப் பள்ளியின் பெயராகும். இது கொச்சியில் அமைந்துள்ளது.
சாலகுடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநராக வாழ்க்கையை துவக்கிய  மணி, கலாபவன் மணியாக மாறி தென்னிந்திய சினிமாவில் அறியப்பட்ட முகமாக, கலாபவன் கலைப்பள்ளிதான் காரணம். 
தன்னை கலைஞனாக்கிய பள்ளியின் பெயரையே தன் பெயருக்கு அடையாளமாக மாற்றினார். மிருகங்களின் குரல்களை மிமிக்ரி செய்வது கலாபவன் மணியின் சிறப்பு.
அக்‌ஷரம் என்ற படம் மூலம் அறிமுகம் ஆனாலும், திலீப்புடன்  நடித்து மிகப் பெரிய வெற்றி பெற்ற சல்லாபம் என்ற படத்தில் தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ததன் மூலம் மலையாள திரை உலகில் முக்கிய நடிகராக மாறினார்..
'வாசந்தியும் லக்ஷ்மியும் பின்னே ஞானும்' என்ற படத்துக்காக 1999-ல் சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருதை வென்றார். 
அதே படத்துக்காக 2000-ல் சிறப்பு பிரிவில் தேசிய விருதையும்  பெற்றுள்ளார்.
========================================================================================