குமாரசாமிகள் பெருகி விட்டனர்?

இன்றைய காலக்கட்டத்தில் நீதியைத்தேடி நீதிமன்றம் போவோர்களைப்பார்த்து பரிதாபம் தான் கொள்ளத் தோன்றுகிறது .
காரணம் குமாரசாமிகள் இன்று நீதித்துறையில் பல்கிப் பெருகி விட்டதுதான்.
முன்பு கூட சில தவறான நீதியரசர்கள் தாங்கள் யார்  சார்பாக செயல் பட்டு குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்க வேண்டியதிருக்கிறதோ அவர்களுக்கு ஆதரவாக சட்டத்தின் சந்து,பொந்துகளைத்தேடி கண்டு பிடித்து குற்றவாளிக்கு ஆதரவாக அவற்றை கூறி நீதியை பெயரளவுக்காவது வழங்கினர்.

ஆனால் குமாரசாமி போட்ட தப்புக்கணக்கு தீர்ப்புக்கு பின்னர் குற்றவாளியை பகிரங்கமாகவே சும்மாவேனுக்கும் தீர்ப்பை எழுதி விடுதலை செய்யும் அளவு காலம் கேட்டு விட்டது.
இன்று மதுரை மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் சட்டத்தை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக 2 நீதிபதிகள் மீது கடும் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரில் கிரானைட் முறைகேடு வழக்கில் சிக்கிய மாபியா  பழனிச்சாமி மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி உத்தரவிட்டார். 

நீதியரசர் பூபதி குற்றச்சாட்டை தள்ளுபடி செய்து தீர்ப்பை மட்டும் வழங்கியிருந்தால் கூட மக்கள் வெறும் புலப்பத்துடன் சென்றிருப்பார்கள் .

ஆனால் பொதுமக்கள் புகாரினை அடுத்து அரசு சார்பாக  ஆதரவாக இந்த வழக்கு தொடுத்த மதுரை ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டதுதான் பலத்த எதிர்ப்பை பலமுனைகளிலும் இருந்து எழச்செய்து விட்டது. 

இது நீதித்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள் குழு விசாரித்து இன்று சஸ்பெண்ட் செய்தது.

இது போல் தர்மபுரி மாவட்டத்தில் கிட்னி மோசடி வழக்கில் சம்மந்தப்பட்ட டாக்டர் கணேசன் என்பவருக்கு அவசர, அவசரமாக ஜாமின் வழங்கிய மாவட்ட செசன்ஸ் நீதிபதி அன்புராஜ் இன்று பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 
கிரானைட் மாபியா பி.ஆர்.பி.வழக்கு மோசடி.
மதுரையை சுற்றியுள்ள கிரானைட் குவாரிகளை முறைகேடாக பயன்படுத்தியதாக பி. ஆர். பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது, வெடிபொருள் பயன்படுத்தியது, கனிம வளங்களை கொள்ளையிட்டது ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளாமல், சாதாரண திருட்டு வழக்கு பிரிவான செக்‌ஷன் 379-ஐ மட்டும் நீதிபதி மகேந்திரபூபதி விசாரித்து வருவதாகவும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கில் குற்றவாளிகள் தப்பித்துவிடும் ஆபத்து இருப்பதால், அனைத்து பிரிவுகளையும் விசாரிக்கும்படி மேலூர் நீதிபதிக்கு உத்தரவிடவேண்டும் என, அரசு வழக்கறிஞர் ஷீலா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
 பி. ஆர். பழனிச்சாமி 
இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கிரானைட் மோசடி வழக்கில் அனைத்து பிரிவுகளின் கீழும் விசாரணை மேற்கொள்ளும்படி நீதிபதி மகேந்திரபூபதிக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட பிறகும் செக்‌ஷன் 379-ஐ மட்டுமே நீதிபதி மகேந்திரபூபதி விசாரித்து வருவதாக கூறி, மீண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார் வழக்கறிஞர் ஷீலா.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரகாஷ், “தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. மேலூர் நீதிபதி தூங்குவதுபோல் நடிப்பவர்” எனக்கூறி, அவர் மீது நீதிபன்ற அவமதிப்பு வழக்கு அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிடையே, மேலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மகேந்திர பூபதி, கிரானைட் முறைகேடு வழக்கில் பி.ஆர்.பி.மற்றும் அவரது சாகக்களை விடுத்தார். மேலும் அப்போதைய மதுரை ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அவர் கிரானைட் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் புகார் அளித்தனர். இந்நிலையில் புகார் குறித்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட நீதிபதி உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் நேரில் விசாரணை நடத்தினார். நேற்று மேலூர் நீதிமன்றத்தில் ஆய்வு செய்த நீதிபதிகள், மகேந்திர பூபதியின் முந்தைய தீர்ப்புகள் குறித்து விரிவாக விசாரணை நடத்தினர். அவரிடம் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று நீதிபதி மகேந்திர பூபதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மேலூர் நீதிபதியாக பாரதிராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
கிட்னி மோசடி வழக்கில் நடந்த மோசடி : 
தமிழகத்தில் கடந்த 2013 ம் ஆண்டில் கிட்னி மோசடி விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. 
தமிழகம் முழுவதும் ஏழைகளை குறிவைத்து ஏமாற்றி கிட்னியை திருடி மோசடி செய்த சம்பவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சென்னையிலும் புரோக்கர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இங்குள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் தொடர்ந்து கிட்னியை திருடி அதனை அதிக விலைக்கு விற்று மற்றவர்களுக்கு பொறுத்தியதும் தெரியவந்தது. டாக்டர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். 

வறுமையில் வாடும் நடுத்தர வர்க்கத்தினரை தேடிச் சென்று கிட்னி புரோக்கர்கள் அவர்களுக்கு வலை விரித்தனர். வசதியான ஒருவர் கிட்னி பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். உங்களது கிட்னியை கொடுத்தால் பணம் வாங்கி தருகிறோம் என்று ஆசை காட்டி, அவர்களை வலையில் வீழ்த்தினர். 

கிட்னி பாதிப்பால் அவதிப்படும் வசதி படைத்தவர்கள் அதற்காக எவ்வளவு பணமும் கொடுக்க தயாராக இருப்பதை புரிந்து கொண்ட புரோக்கர்களும், டாக்டர்களும் லட்சணக்கணக்கான ரூபாயை அவர்களிடம் இருந்து வாங்கினர். கிட்னியைகொடுக்கும் பரிதாபத்துக்குரிய ஏழை, நடுத்தர வர்க்கத்தினருக்கு சில ஆயிரங்களை மட்டுமே கொடுத்து விட்டு, மீதி பணத்தை அவர்கள் சுருட்டியதும் தெரிய வந்தது. 

உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமானதான கிட்னியை நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே தானமாக கொடுக்க முடியும். விற்பனை செய்ய முடியாது என்பது மருத்துவ சட்டமாகும். இதன் காரணமாகவே அதனை விலை பேசும் டாக்டர்கள், புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது போன்ற கிட்னி மோசடி விவகாரம் தர்மபுரி மாவட்டத்திலும் கடந்த 2013-ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கிட்னி மோசடி வழக்கு தொடர்பாக அய்யாவு என்பவர் அம்மாவட்டத்தில் அப்போது கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் கணேசன் என்ற டாக்டரும் கிட்னி விவகாரத்தில் சிக்கினார். அவரையும் போலீசார் கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னர் டாக்டர் கணேசன் ஜாமீன் கேட்டு, தர்மபுரி முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் மனு தாக்கல் செய்தார். 
டாக்டர் கணேசன்
நீதிபதி வணங்காமுடி ஜாமின் மனு மீதான விசாரணையை, ஜூன் 25-ந் தேதிக்கு தள்ளி வைத்திருந்தார். அவர் விடுப்பில் சென்ற போதுமற்றொரு நீதிபதியான அன்புராஜ், முதன்மை செசன்ஸ் நீதிபதி பொறுப்பை கவனித்தார். அப்போது மிகவும் அவசரமாக செயல்பட்டு டாக்டர் கணேசனின் ஜாமின் மனுவை முன்கூட்டியே விசாரித்து அவருக்கு ஜாமின் வழங்கினார். 

விடுமுறை முடிந்து திரும்பிய நீதிபதி வணங்காமுடி இதை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தார். 
அவர் உடனடியாக டாக்டர் கணேசனின் ஜாமீனை ரத்து செய்தார். 
நீதிபதி அன்புராஜ் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். 

மேலும் நீதிபதி அன்புராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டுக்கு புகார் அனுப்பினார். 
. கிட்னி மோசடியால் பாதிக்கப்பட்டவர்களும் இது பற்றி முறையிட்டனர். 
இது குறித்து விசாரித்த குழு நீதிபதி அன்புராஜ் மீது இருந்த தவறு கண்டு பிடிக்கப்பட்டது. இன்று ( 1 ம் தேதி ) அன்புராஜ் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 
இவை பரபரப்பான வழக்குகளாக இருந்ததால் மோசடி பளிச்சென தெரிந்து நடவடிக்கை எடுக்க முடிந்தது.
சாமானியர்கள் வழக்குகள் எத்தனையோ இது போன்று நீதிக்கும்,மனசாட்சிக்கும் மாறாக தீர்ப்புகள் வழங்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.அவை பாதிக்கப்பட்ட சாமானியனின் வயிற்றெரிச்சலுடன் சந்திக்கு வராமலேயே முடிந்து விடுகின்றன.
 நீதியரசர் ?மகேந்திரபூபதி

==========================================================================================

உலக நாயகன் கமலஹாசன் நடிப்புக்கு பல விருதுகள் கிடைத்துள்ளது. 
இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாது, திரைத்துறையை சேர்ந்த பல துறைகளிலும் இவரது பங்களிப்பை செலுத்தி வருகிறார். 
இந்திய சினிமாவில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி இந்திய சினிமாவை உலகளவில் இடம் பெற செய்தவர்களில் இவருக்கு முக்கிய பங்குண்டு.
இந்நிலையில் இந்திய சினிமாவுக்கு உலகநாயகன் கமல் செய்த பெரும் பங்களிப்பிற்காக பிரான்ஸ் நாடு ஹென்றி லாங்லாய்ஸ் விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

ஹென்றி லாங்லாய்ஸ் என்பவர் பிரான்ஸ் நாட்டின் பிரபலமான சினிமா வரலாற்று ஆசிரியர். ஆஸ்கர் விருது பெற்றவர்.மேலும் இவர் ஒரு திரைப்பட ஆவணத் தொகுப்பாளரும் கூட. 
இவர் 1977ஆம் ஆண்டில் மரணம் அடைந்தார்.  அவரது பெயரில் சினிமா சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விருது குறித்து உலகநாயகன் கமல் கூறும் போது, "‘பாரிஸில் ஹென்றி லாங்லாய்ஸ் விருதைப் பெற்றுள்ளேன். இந்த விருதை நான் பெறும்போது என் குரு அனந்து சார் இருந்திருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டேன். காரணம் அவர்தான் ஹென்றி லாங்லாய்ஸ் என்ற பெயரையே எனக்கு தெரியப்படுத்தியவர்” என்று கூறினார்.

========================================================================================









இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?