தாரை வார்த்தவர்கள்...!

கச்சத் தீவு.
இந்தியாவை சேர்ந்த கச்சதீவை, மற்றொரு நாடான இலங்கைக்கு கொடுக்க, ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு அதிகாரம் கிடையாது..
 ஆனால் இன்றைய அரசியல் சாணக்கியர்கள் "அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி தான் கச்சத்தீவை தாரை வார்க்கக் காரணம் " என்று கச்சைக்கட்டி சொல்லிக்கொண்டு உள்ளார்கள்..

1974 இல் மாநில திமுக அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்திரா காந்தி தலைமையிலான மத்திய காங் அரசாங்கம், இலங்கைக்கு அந்த தீவை கொடுத்தது..
 மாநில சட்டசபையில் எதிர்த்து தீர்மானம் போட்டு, போராட்டம் நடத்தினார் கலைஞர்..
 அப்போது காங்கின் கூட்டணி கட்சி எம்ஜிஆர் தலைமையிலான  அதிமுக.கச்சத் தீவு தாரை வார்ப்புக்கு எதிராக வாயை திறக்கவே இல்லை.

1974 இல் கச்சத் தீவு இந்திய அரசால் இலங்கைக்கு கொடுக்கப்பட்டபோது தமிழ் நாடு மாநில காங்கிரஸ் தலைவராக (1973-1979) இருந்தவர் இன்றைய ஈழ வியாபாரி  நெடுமாறன். 
இவருடைய முழு ஆதரவுடன்தான் கச்சத் தீவை மத்திய காங்கிரஸ் அரசு இலங்கைக்குத் தாரை வார்த்தது. 
அன்று இந்திரா காந்தி செய்தது தவறு என்று நெடுமாறன்  தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தாரா?இல்லை தவறு என்று முனங்கவாவது செய்தாரா.இல்லை. 

"கச்சதீவு ஒப்பந்தம் இந்திரா காந்தியின் சிறந்த ராஜதந்திரத்தை காட்டுகிறது” என்று பாராளுமன்றத்தின் மக்களவையில் பாராட்டு பத்திரம் வாசித்தவர்  பூபேஷ்குப்தா (வ.கம்.)   
வலது, இடது கம்யூனிஸ்டு கட்சிகள் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க, பாராளுமன்றத்தில் தங்களின் முழு ஆதரவை  தெரிவித்தார்கள்.
ஆனால் இலங்கைக்கு கச்சத் தீவை  தாரை வார்த்ததை பாராட்டியவர்கள் இன்று இந்திரா காந்தியை கொடுக்கச் சொன்னதே கலைஞர் தான் என்பது போல் அறிக்கைகள் விடுகிறார்கள்.

ஆனால் அன்று கச்சத் தீவை இலங்கைக்கு கொடுக்கக் கூடாது என்று சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றி இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்த. திமுக  மூலம் ஊர்வலம் நடத்திய ,கலைஞர்  இன்று கச்சத் தீவை தாரை வார்த்தவராக வர்ணிக்கப்படுகிறார்.
அதையும் வரலாறு தெரியாத ஒரு அறிவுஜீவிக் கூட்டம் வழி மொழிகிறது.


முல்லைப் பெரியாறு

முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு துரோகம் செய்ததே அதிமுகவும் எம்.ஜி.யாரும் தான்
. 1979-80 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த அதிமுக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருகும், அப்போதைய கேரள முதலமைச்சர் அச்சுதமேனனுக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. அது வரை 152 அடியாக இருந்த முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க அப்போது ஒப்புக்கொள்ள பட்டது. 
அணையை பலப்படுத்திய பிறகு மீண்டும் 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்று முடிவெடுக்க பட்டது.
இந்த ஒப்பந்தம்   தமிழகத்தைச் சேர்ந்த மலையாள ஐ.ஏ.எஸ் கள்,கேரளா அதிகாரிகள் முதல்வர் எம்ஜிஆர்.கேரள முதலமைச்சர் அச்சுதமேனன் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில்தான்  இறுதி முடிவு எடுக்கப்பட்டு கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் எம்ஜிஆர் கையெழுத்து இட்டார். 

அந்த ஒப்பந்தத்தில் தான் தமிழ் நாட்டுக்கான பல்வேறு உரிமைகள் விட்டு தரப்பட்டன. 
அதில், அவர்களுக்கான சம்பளத்தை நாம் கொடுக்க வேண்டும் என்று விரோதமான சரத்தும் அதில் இருந்தது. 
தமிழர்கள் படகு விடும் உரிமை அப்போது தான் நம்மிடம் இருந்து பறி போனது.

அன்று குமுளியில் இருந்து அணை வரை உள்ள சாலை முழுவதும் தமிழகத்தின் கட்டுபாட்டில் தான் இருந்தது. அதையும் எம்ஜிஆர் விட்டு கொடுத்தார். 
முல்லை பெரியாறில் மீன் பிடிக்கும் உரிமையையும் அப்போதுதான் தமிழகம் இழந்தது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரம்தான் "எம்.ஜி.ஆர் மலையாளி என்பதால்தான் இந்த தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் முல்லை பெரியாறு   ஒப்பந்தம் கேரளாவுக்கு ஆதரவாக கையெ ழுத்தாகி உள்ளது" என்று இந்த ஒப்பந்தம் மூலம் தமிழகம் தன உரிமைகளை இழக்கும் விவசாயிகளுக்கு பாதிப்பு வரும் என்று கோபத்தில் கருணாநிதி பேசினார்.
மற்ற நேரங்களில் கருணாநிதி எம்ஜிஆரை மலையாளி என்று குறிப்பிட்டதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.


======================================================================================
இன்று,
ஏப்ரல்-12.

  • சர்வதேச விண்வெளி பயண தினம்
  • இந்தியா அக்னி 3 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது(2007)
  • ஐக்கிய நாடுகள் கொடி, பிரிட்டனின் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது(1606)
நடு நிலை ஊடகம் என்பதன் அர்த்தம்?
விருத்தாசலத்தில் ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தில் கடும் வெயில் மற்றும் தள்ளுமுள்ளு ஆகியவற்றால்  இருவர் உயிரிழந்தனர். 
அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் தேர்தல் பிரச்சார கூட்டம் விருத்தாசலம் அருகே  நடைபெற்றது. 
இதற்காக விருத்தாசலம்- சேலம் சாலையில் உள்ள அழிச்சிக்குடி கிராமத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு 50 ஏக்கர் விவசாய நிலம் சமன்படுத்தப்பட்டு  மேடை அமைக்கப்பட்டது. 
மேடை முழுக்க 4 ஸ்பிலிட் ஏ.சி,10 இரண்டு தன் ஏசி வைக்கப்படிருந்ததால் மேடையின் வெளிப்பக்கம் வரை குளிச்சியாக இருந்தது.
ஆனால் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்  கடுமையான் வெயிலில் அமர வைக்கப்பட்டனர்.
மாவட்டம் முழுக்க் இருந்து கூட்டி வரப்பட்டவர்கள்  12  மணி முதலேயே  சவுக்கட்டு அடைப்புக்குள் உட்கார வைக்கப்பட்டனர்.  
கடும் வெயிலை தாங்க முடியாமலும் தண்ணீர், குடிக்க முடியாமலும் மதியம் பிரியாணி பொட்டலம் தருவதாக 200 க்கு கூட்டி வந்தவர்கள் சொன்னதால் சாப்பிட பிரியாணி பொட்டலம் கேட்டும்  மக்கள் வெளியேற முயன்றனர். 
ஆனால் வழிகள் அடைத்து வைக்கப்பட்டதாலும்,அழித்து வந்தவர்களும்,காவல் துறையும் அவர்களை இடத்தை விட்டு நகர அனுமதிக்காததாலும் வெயில்,தாக,பசி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குடிநீர் பாக்கெட்டுகள் கேட்டு அலைபாய்ந்த்தால் கடும்  தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 
இதில் 15க்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்தனர். 
ஆனால் காவல் துறையினர் மயங்கியவர்களுக்கு சிகிச்சை கொடுக்க வெளியெ செல்லக் கூடாது ,
அவர்களை அப்புறப்படுத்தினால் கூட்டத்திற்கு இடையூறு ஏற்படும்  என்று தடுத்ததால் ஜெயலலிதா பேசி முடிக்கும் வரை மயங்கி கிடந்தவர்கள் அங்கேயே  கிடந்தனர்.பலர் அரை மயக்கத்தில் புலம்பிக்கொண்டு இருந்தனர். 
ஜெயலலிதா கூட்டம் முடிந்த போன பிறகுதான் மயக்கத்தில் இருந்தவர்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.ஆனால் அவர்கள் ஒரே மருத்துவமனையில் சேர்க்காமல் பிரித்து இருவர் ,இவர்களாக பல்வெறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இது பற்றி எந்த ஊடகங்களும் செய்தி வெளியிடக் கூடாது என்று ஊடகத்தினர் அன்பாக?கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
ஆனால்  சிதம்பரம் 31வது வட்டம் தெற்கு வாணியதெருவை சேர்ந்த அதிமுக உறுப்பினர் கருணாகரன்(61)  கூட்டத்துக்கு 200 ரூபாய் பிரியாணி என்று அழித்து வரப்பட்ட விவசாய கூலி ராதாகிருஷ்ணன் (42) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மருத்துவர்கள் "இருவரும் மயக்க நிலையில் கடும் வெயிலில் இருந்ததே அவர்கள் உயிர் இழக்க காரணம்.உடனே கொண்டு வந்திருந்தால் 100% அவர்கள் உயிர் பிழைத்திருப்பார்கள்.கடும் வெயில்,தாகம்,பசி,உடல் நீர் வற்றியது போன்றவையே உயிர் இழப்புக்கு காரணம்" என்றனர்.
இன்னும் 20க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
கேரளா புட்டிங்கல் வெடி விபத்தையும்,மின்கம்பியில் துப்பாக்கி சூடு பட்டு அறுந்து விழுந்து 12 பேர்கள் உயிரிழந்ததையும்  மாய்ந்து மாய்ந்து சொல்லும் தமிழ் நாட்டு ஊடகங்கள் அம்மையாரின் இந்த தேர்தல் பிரச்சார உயிரிழப்புகளை கண்டு கொள்ளவே இல்லை.கலைஞர் ,சன், கேப்டன் தொலைக்காட்சிகளில் மட்டுமே செய்தி வந்தன.
தாங்கள்தான் செய்திகளை முன்பாகத் தருகிறோம்.விருப்பு வெறுப்பற்ற நெருப்புச் செய்திகள் என்ற நடு நிலை {?}தந்தி,பாலிமர்,புதிய தலை முறை ,சத்தியம் , , போன்ற யாருமே கண்டுகொள்ளவில்லை.
மூன்று பேரை கூப்பிட்டு வைத்து சந்திர குமார் ,கருணாநிதியை சந்த்தித்ததை பற்றி மணிக்கணக்கில் இந்தியாவின் எதிர்காலமே அந்த சந்திப்பில்தான் மறைந்திருப்பது போல் விவாதிக்கும் தொலைக்காட்சிகள் இந்த உயிரிழப்பை பற்றி விவாதிக்க வேண்டாம் .சின்ன அளவில் செய்தியாக  சொல்லியிருக்கலாமே?
உங்களை தடுத்தது யார்?காவல் துறையா?அரசு அதிகாரிகளா?அதிமுக மேலிடமா?இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு பயந்து சேலைத்தலைப்பில் ஒழியும் உங்களுக்கு பெரிய ஊடகன் போன்று கொட்டு,சூட்டு எதற்கு?முதலில் நடுநிலையான செய்திகள் என்கின்ற பம்மாத்து எதற்கு?
சில நாட்களுக்கு முன்னர் வைகோ கலைஞரை சாதி,ஆதித்தொழில் செய் என்று கூறி அருவெறுப்பான சைகைகள் செய்த செய்தியை கூட இந்த நடுநிலைகள் சொல்லவே இல்லை.அதைத்தொடர்ந்து வைகோ கொடும்பாவி ஊரெங்கும் எரித்ததையும் காட்டவில்லை.
இவை எல்லாம் பரபர செய்திகள் இல்லையா?மக்களிடம் அரசியல் தரகரின் சுரூபத்தை கொண்டு செல்ல விடாமல் தடுத்தது யார்?
இதே நடுனிலைகள் ஜெயலலிதா சிறைக்கு சென்றவுடன் அதிமுகவினர் செய்த மறியல்,கருணாநிதி படம் உடைப்பு-கொடும்பாவி எரிப்பு,பேருந்து மறியல்,தாக்குதல்களை 24x 7 நேரமும் காட்டவில்லையா?ஜெயலலிதா வெளியெ வந்தவுடன் நடந்த பால்காவடி,பன்னீர்காவடி ,யாகம் பொன்றவற்றை காட்ட வில்லையா?
இவர்கள் இன்னமும் ஏன் நடுநிலை ஊடகங்கள் என்றும் ஒவ்வொரு பெயரில் ஊடகங்கள் நடத்துகிறார்கள்.
நமக்கு நாமே பயணத்தில் ஸ்டாலின் ஒருவரை தள்ளி விட்டார்,அட்டோக்காறரை  அடித்துவிட்டார் என திரும்ப திரும்ப காணொளியை போட்டு,போட்டு செயல் முறை விளக்கம் தந்த அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஒளிபரப்பிய ,ஏய்.ஆர்.சரஸ்வதி,நாஞ்சில் சம்பத்,மாலன்,சுதாங்கன் என்ற அரசியல் மேதைகள்,சமூக ஆர்வலர்களை வைத்து விவாத மேடை நடத்திய  ஊடகங்கள்....

நேற்று ஜெயா பிரச்சாரத்தில் குடிக்க தண்ணீர் இல்லாமல் நடுவெயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிர் போனதை பற்றி திரும்ப திரும்ப ஒளிபரப்பவில்லையே ஏன்....?
அதிமுக சின்னத்துடன் நடத்தலாமே?ஜெயா-பி,ஜெயா-சி.ஜெயா-டி என்று தங்கள் தொலைக்காட்சிகளை பெயரை மாற்றிக்கொள்ளலாமெ?அதை அவர்கள் மேலிடமும் ஒத்துக்கொள்ளுமெ .



=======================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?