ஊடகங்கள் திணித்த கறைகள்.

சென்ற 2011 தேர்தலில் திமுகழக ஆட்சிக்கு எதிராக அதிகம் பேசப்பட்டவை ஈழப்படுகொலைகளை கருணாநிதி தடுக்கவில்லை,அறிவிக்கப்பட்ட நான்குமணி நேர மின்வெட்டு,2 ஜி ஊழல்.
து போன்ற அரசை கிண்டலடிக்கும் கார்டூன்கள் ஜெயலலிதா ஆட்சியில் தினமலர் உட்பட
எந்த ஊடகத்திலும் வரவில்லை என்ன காரணம்?உணர முடியவில்லையா?
இவைகள்தான் திமுகவை எதிர் கட்சித்  தலைவர் பதவியை கூட தட்டிப்பறித்தவை.
இதற்கு முன்னரும் கூட திமுக எதிர்க் கட்சித்தலைவர் பதவியை இழந்திருக்கிறது.4 இடங்கள் மட்டுமே வென்ற காலங்களும் உண்டு.ஏன் திமுகவை உருவாக்கிய அறிஞர் அண்ணாவே திமுக சந்தித்த முதல் தேர்தலில் தோற்றிருக்கிறார்.
ஆனால் அங்கிருந்துதான்  கலைஞர் தனது இன்றையவரையுலுமான வெற்றிக்கணக்கை துவக்கினார்.
ஈழப் போரில் தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப் பட்ட போது கலைஞர் முதல்வர் அவ்வளவுதான் .இந்திய அரசு,மட்டுமல்ல சர்வ வல்லமை படைத்த அமெரிக்கா ,பிரிட்டன் ஏன் ஐ.நா சபையே அக்கொலைகளை எதிர்த்தும் தடுத்து நிறுத்த முடியாத நிலை வெறும் ஒரு மாநில முதலமைச்சர் எப்படி நிறுத்த முடியும்?
தமிழ் நாடு முதல்வர் கட்டுப்பட்டிலா இந்திய அரசின் வெளிநாட்டு உறவுத்துறை,பாதுகாப்புத்துறை இருக்கிறது.
ஆனாலும் தமிழக மக்கள்  கலைஞர் ஈழப்படுகொலைகளை தடுக்காத துரோகத்தை மட்டுமல்ல ஜெயலலிதாவை ஈழத்தாய் என்றும் நம்ம வைக்கப்பட்டார்கள்.அதற்கு கடுமையாக உழைத்தவர்கள் நெடுமாறன்,வைகோ,சீமான் போன்ற ஈழப் போராளிகள்.இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றார்கள்.
ஆனால் அந்த போராளிகள் சாயம் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து கொஞ்ச நாள்களில் முள்ளிவாய்க்கல் நினைவு முற்றத்தை ஈழத்தாய் ஜெயலலிதா இடித்தவுடனே வெளிறி விட்டது.
மின் வெட்டு ஜெயலலிதா ஆட்சிசெய்த ஐந்தாண்டு காலமும் தீர்க்கப்படவே இல்லை.அதிகரித்து கோவை,திருப்பூரில் லட்சக்கணக்கானோர் வேலையிழப்பைத்தான் தந்தது.
திமுக ஆரம்பித்த மின் உற்பத்தி திட்டங்கள் சத்தமே இல்லாமல் மூடப்பட்டன.
ஐந்தாண்டுகளாக அதிக விலைக்கு வெளியில் தனியாரிடம் மின்சாரம் வாங்கி ஆயிரக்கணக்கான கோடிகள் மின்துறைக்கு இழப்பை ஏற்படுத்தி வைத்ததுடன்.ஆயிரக்கணக்கான கோடிகள் ஆட்சியாளர்கள் ஊழல் செய்யவும் வாய்ப்புகள் உருவானது.
வெளியில் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி விட்டு தமிழ் நாடு மின் மிகை மாநிலம் என்று ஜெயலலிதா அறிவித்த வேடிக்கைதான் நடந்துள்ளது.
அடுத்து வருவது 2ஜி .அதை பற்றி அய்யா சுப,வீரபாண்டியன்  அவர்கள் சொல்வதை கீழே தருகிறோம்.
தவறான கணக்குகளால் சிலர் தற்காலிகமாகத் தப்பித்தனர் - அது பெங்களூருவில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கு. தவறான கணக்குகளால் சிலர் சிறை சென்றனர் -அது 2ஜி வழக்கு!
தேவை ஏற்படும் போதெல்லாம் அல்லது தேர்தல் வரும் போதெல்லாம் சிலர் 2ஜி வழக்கு பற்றிப் பேசுவார்கள்.
 இப்போது அந்த ‘சீசன்’ தொடங்கியுள்ளது.
2ஜி வழக்கு பற்றிப் பேசுகின்றவர்கள் மிகுதி. அந்த வழக்கு பற்றிய உண்மைகள் அறிந்தவர்கள் சிலர், மிக மிகச் சிலர். 2ஜி பற்றி நெடு நேரம் பேசுகின்றவர்களிடம் ஒரே ஒரு சின்னக் கேள்வியை முன்வையுங்கள். அவர்களின் அறியாமையை நாம் அறிந்து கொள்ளலாம். வேறொன்றுமில்லை, 1.76 லட்சம் கோடி என்று தொடர்ந்து இந்த வழக்கில் ஒரு தொகை பேசப்படுகிறதே அது எப்படி வந்தது என்று மட்டும் கேளுங்கள். அடுத்தததாக, அந்தத் தொகை அந்த வழக்கின் குற்றப் பத்திரிகையில் எங்கும் காணப்பட வில்லையே ஏன் என்று கேளுங்கள். இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை தெரியாதவர்கள்தாம் 2ஜி பற்றி நிறையப் பேசிக் கொண்டுள்ளனர்.
பணிவோடு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன், 2ஜி குறித்துக் காரசாரமாக மேடைகளில் பேசும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலருக்கே கூட இந்த விளக்கம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சரி, அந்த உண்மைகளைச் சின்னக் கணக்குகளின் மூலம் நாம் பார்த்து விடுவோம். ஆ. ராசா அவர்கள் மத்திய அமைச்சராக இருந்தபோது, இரண்டாம் தலைமுறை (2ஜி) அலைக்கற்றைகள் விற்பனைக்குக் கொடுக்கப்பட்டன. இன்றிருப்பது போல் அன்று பலரிடம் கைத் தொலைபேசி இல்லை. எனவே 52.75 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றைகள் மட்டுமே விலை போயின. ஒரு மெகா ஹெட்ஸ் 276 கோடிக்குப் போயிற்று. அதன்மூலம் அரசுக்குக் கிடைத்த வருமானம் 14,559 கோடி.
வினோத் ராய்
தலைமைத் தணிக்கைக் கணக்காளராக அன்று இருந்த வினோத் ராய் கற்பனையில் ஒரு கணக்குப் போட்டார். 
அவர் 2008 முதல் 2013 வரை அப்பதவியில் இருந்தார்.
 ‘முதலில் வருபவருக்கு முதலில்’ என்று இல்லாமல் அலைக்கற்றைகளை ஏலத்துக்கு விட்டிருந்தால் ஒரு மெகா ஹெட்ஸ் 3350 கோடிக்கு விற்பனையாகி இருக்கும் என்பது அவர் கணக்கு. 
அது அவருடைய கற்பனைக் கணக்கு. அதன்படி பார்த்தால், 1,76,712 கோடி ரூபாய் வருமானம் வந்திருக்கும் என்றாகிறது. 
போனால் போகிறது என்று 712 கோடியை விட்டுவிட்டு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டுள்ளனர். 
இப்படித்தான் அந்த 1.76 என்னும் தொகை வந்தது.
இங்கும் கூட இரண்டு செய்திகள் கவனிக்கப்பட வேண்டியவை. 
வினோத் ராய் கணக்குப் படியும் அது ஊழல் அன்று, அரசுக்கான இழப்புத் தொகை. அவ்வளவே. 
இரண்டாவது, 1.76 இல் வரப்பெற்ற 14ஆயிரம் கோடியைக் கழிக்க வேண்டும் இல்லையா? 
அதனைக் கழித்துவிட்டு 1.62 லட்சம் கோடி என்றாவது சொல்லியிருக்க வேண்டும்.
இந்த வழக்கில் ஆ. ராசா, 2011 பிப்ரவரி 2 ஆம் நாள் கைது செய்யப்பாட்டார். 
அதாவது, தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு! 
2011 ஏப்ரல் 2 ஆம் தேதி குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 
அதில் 1.76 லட்சம் கோடி என்ற தொகை எங்கும் குறிக்கப்படவில்லை. தணிக்கையாளரின் கணக்கை சி.பி.அய் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் ஒரு கணக்குப் போட்டு 32 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றனர்.
தணிக்கையாளர் கூறியது போல், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் 2ஜி மற்றும் 3ஜி அலைக்கற்றைகள், ஏலத்துக்கே விடப்பட்டன. 
ஆ. ராசா
2008ஆம் ஆண்டே ஒரு மெகா ஹெட்ஸ் 3350கோடிக்கு விற்றிருக்க வேண்டுமென்றால், 6 ஆண்டுகளுக்குப் பின் எவ்வளவு கோடி ரூபாய் கூடுதலாக விற்பனை ஆகியிருக்க வேண்டும்? 
ஆனால் 367.2 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றை ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய்க்குத்தான் ஏலம் போனது. அதாவது ஒரு மெகா ஹெட்ஸ் 297 கோடி ரூபாய். 
அவ்வளவுதான்.
ஏலத்துக்கு விட்டும், 6 ஆண்டுகளுக்குப் பின் ஒரு மெகா ஹெட்ஸ் 21 கோடி ரூபாய்தான் கூடுதல் விலைக்குப் போயுள்ளது. வினோத் ராய் கணக்குப்படி 3350 கோடிக்கே விற்பனை ஆகியிருந்தால், 11 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வந்திருக்க வேண்டும் 
ஆனால் வந்ததோ வெறும் ஒரு லட்சத்து ஒன்பது ஆயிரம் கோடிதான். 
அப்படியானால் இப்போது 10 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று கூறலாமா? 
மோடி உட்பட எல்லோரையும் கைது செய்யலாமா?
தலைமைத் தணிக்கைக் கணக்காளர் போன்ற மிக உயர்ந்த பதவியில் இருந்தவர்கள் ஓய்வு பெற்றபின், அவர்களுக்கு வேறு அரசு பதவிகள் வழங்கக்கூடாது என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால் இப்போது ஓய்வு பெற்றபின், வினோத் ராய், இன்னொரு பெரிய பொறுப்பில் (UN panel of external auditors and honorary advisor to the railways) அமர்த்தப்பட்டுள்ளார்.
புரிய வேண்டிய கணக்குகள் இப்போது புரிந்திருக்கும்!
ஆக திட்டமிட்டே  மக்களுக்கான ஆட்சியை நடத்திய திமுக,திமுகத்தலைவர் மீது  அடிப்படையே இல்லாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு பழி வாங்கப்பட்டுள்ளார்.
கலைஞர் ,திமுக மீதான குற்றச்சாட்டுகள் என்றால் எட்டுகாலச்செய்திகளாக வெளியிடும் இந்திய ஊடகங்கள் அதற்கு திமுக தரப்பில் இருந்து வரும் விளக்கங்களை மட்டும் வெளியிடுவதில்லை.
இதில் வட மாநில,தமிழக ஊடகங்கள் அனைத்தையும் கலைஞர் எதிர்ப்பு ஒன்றுமட்டுமே இணைக்கிறது.
அதற்கு சாதியியல் மட்டுமே காரணமாக இருக்கிறது.இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய ஊடகங்கள்,தொலைக்காட்சிகள் அனைத்துமே குறிப்பிட்ட மேல் சாதியினர் கையில் மட்டும்தான் உள்ளது.
தப்பித்தவறி மற்ற இனத்தவர்கள் நடத்தும் புகழ் பெற்ற ஊடகங்களிலும் தலைமை பொறுப்பில் அந்த வகையினரே உள்ளனர்.[உதாரணமாக :தந்தியில் பாண்டே,ஹரிஹரன் ] 
ஆனாலும் மாயாவதி,பாஸ்வான்,இவர்களைப்போல் கலைஞரை இந்த ஊடகங்கள் ஓரங்கட்ட முடியவில்லை.
93 வயதிலும் இவர்களை ஒரு கை பார்த்து வருகிறார்.
கலைஞர் .திமுக இல்லாமல் தமிழ் நாட்டில் அரசியல் இருந்ததில்லை.இனி இருக்கப் போவதும் இல்லை.கலைஞர் தனக்கு சரியான வாரிசை கைகாட்டியுள்ளார்.
===================================================================================

  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?