வைகோ =சுற்றாத பம்பரம்,


2009, 2014 நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியைத் தழுவியவர் வைகோ. அதற்கு முன்பு விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அதிலும் தோல்வியைத் தழுவியவர் வைகோ.


2014 தேர்தலில் தோல்வி அடைந்த வைகோ பாஜக மத்தியத் தலைமையிடம் ராஜ்யசபா எம்.பி.பதவி கோரினார். ராஜ்யசபாவை பற்றி  நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்று கறாராகத் தெரிவித்து விட்டது பாஜக மத்தியத் தலைமை. 
இதனால் அதிருப்தி அடைந்த வைகோ பாஜக கூட்டணியை விட்டு விலகினார். இது வரலாறு.
கே.ந.கூட்டணி  தொகுதிப் பங்கீட்டின்போது, மிகவும் முரட்டுத் தனமாக நடந்து கொண்டு, கம்யூனிஸ்டுகளுக்குச் செல்வாக்கு உள்ள கோவில்பட்டி தொகுதியை அவர்களிடமிருந்து தட்டிப் பறித்தார் வைகோ.
இருக்கிற தொகுதிகளிலேயே அதுதான் தனக்கு அதிக வெற்றி வாய்ப்புள்ள,தனது சாதிக்காரர்கள் அதிகம் உள்ள  தொகுதி என்று கணித்த வைகோ அதில் போட்டியிட முடிவு செய்தார்.

வேட்புமனு தாக்கலுக்கு ஓரிரு நாட்கள் முன்பு கோவில்பட்டி தொகுதியின் களநிலவரத்தை ஆராய்ந்த வைகோ அதிர்ச்சி அடைந்தார். களம் முற்றிலும் தமக்குச் சாதகமாக இல்லை என்ற உண்மை அவரை உறுத்தியது. 
எவ்வளவு போராடினாலும் மூன்றாவது இடம் மட்டுமே கிட்டும் என்ற யதார்த்தம் அவரைச் சுட்டது.

அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜு, இந்தத் தொகுதியைக் குறிவைத்து முன்னமே காய் நகர்த்தி வந்தார். தாம் வேட்பாளராக அறிவிக்கப் பட்டதுமே,தொகுதியில் உள்ள தமது சுயசாதி நாயக்கர், நாயுடுகள் சமூகத்தின் செல்வாக்குள்ள பெரிய மனிதர்களின் ஆதரவை உறுதி செய்து கொண்டார்.நாயுடு சமூகத்தின் வாக்குகளை கிட்டத்தட்ட ஏகபோகம் செய்து கொண்டார் என்றே கூறலாம்.

திமுக வேட்பாளர் சுப்பிரமணியன் தேவர் சமூகத்தவர்.தமது சமூகத்தவரின் பெருவாரியான ஆதரவை உறுதி செய்து கொள்வதில் அவரும் குறிப்பிடத்தக்க வெற்றி அடைந்து விட்டார்.

தாமதமாகத் தொகுதிக்கு வந்த வைகோ, நாயுடு சமூக ஆதரவை கோரியபோது, ஏமாற்றமே மிஞ்சியது. அதிமுகவின் கடம்பூர் ராஜு வை ஆதரிப்பதாக முடிவு செய்து விட்டதாகவும், அந்த முடிவை மாற்ற இயலாது என்றும் நாயுடு சமூகத் தலைவர்கள் கறாராகக் கூறி இட்டனர்.

கடந்த காலங்களில் கோவில்பட்டி தொகுதியில் உள்ள நாயுடு சாதியைச் சேர்ந்த எவர் ஒருவரையும் முன்னுக்கு வரவிடாமல்தடுத்தவர் வைகோ என்ற கசப்பு வைகோ மீது நாயுடு சமூகத்தவர்க்கு இருக்கிறது. எனவே வைகோவுக்கு ஆதரவு தர அவரின் சொந்த சமூகத்தவர் தயாராக இல்லை. அவர்களின் ஆதரவு இல்லாமல் வைகோ வெற்றி பெறுவது என்பது குதிரைக் கொம்பு. 
இதை உணர்ந்த 
வைகோ தனது தலைவர் பிம்பத்தையும் கட்சியையும் காப்பாற்றிக் கொள்ள போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்து விட்டார்.தன் மீசையில்  வில்லை என்பதை காட்ட சாதியை எடுத்துக்கொண்டார்.

வீம்புக்குப் போட்டியிட்டுத் தோற்றுப்போனால்,அவரது தலைமை அதலபாதாளத்தில் சரிந்து விடும். அதன் விளைவாக, மக்கள் ஆதரவு இல்லாத வெறும் லெட்டர் பேடுத் தலைவர்களின் வரிசையில் வைகோ இடம் பெறுவார்.

தமது பலவீனம் அம்பலப் பட்டுப் போகும் நிலைமையை எப்படியேனும் தவிர்த்து விட வேண்டும் என்று தீர்மானித்த வைகோ,போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். இந்த முடிவால் அவர் மீதான நம்பகத் தன்மை மேலும் சரிந்து  போய் விட்டது.
தனக்கு இந்த கோடை வெயிலில் நீர்க்கடுப்பு வந்து மூத்திரம் வாராவிட்டால் கூட அதை திமுகவின் சதி என்று முழங்கும் மனவியாதியின் கொயும் தாக்குல் பாதிப்புக்கு ஆளானவர் வைகோ.

அவரை தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டியவர்கள் நடிகர் கருணாசின் முக்குலத்தோர் புலிப்படையினர்.

இவரகள் சென்ற முறை வைகோ வந்த போது கூட ஆர்ப்பாட்டம் செய்து 35 பேர்கள் கைதாகியுள்ளனர்.
இந்த முறையும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

நடிகர் கருணாஸ் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக பினாமியாக இத்தேர்தலில் திருவாடானை தொகுதியில் போட்டியிடுகிறார்.இதில்  திமுக வை குற்றம் சாட்ட வைகோவுக்கு என்ன நியாயம் உள்ளது.இவர் முன்பு நடந்த ஆனவக்கொலை ஒன்றில் தேவர் இனத்தை கொலைகாரர்கள் என்று வாய்க்கொழுப்பின் உச்சத்தில் வைகோ திட்டியதை எதிர்த்துதான் இந்த இரண்டு ஆர்ப்பாட்டத்தையும் செய்ததாக புலிப்படையினர் கைது செய்த காவல்துறையினரிடம் கூறியுள்ளனர்.
வைகோ திட்டமிட்டே இதை செய்துள்ளார் என்பதற்கு ஆதாரம்?
இதை நீங்களே யோசித்துப்பாருங்கள்.

அர்ப்பாட்டம் நடக்கும் இடத்தில் இருந்து முதலில் வாயை மூடிக்கொண்டு வேனில் ஓடுகிறார்.பின் சிலருடன் திரும்பி வந்து பேட்டை ரவுடி போல் வேல் கம்புடன் வாங்கடா.மோதிப்பார்ப்போமா என்கிறார் மைக்கில்.
காவல்துறையினர் வந்து ஆர்ப்பாட்டக் காரர்களை கைது செய்தவுடன் வேட்பு மனுத்தாக்கலுக்கு செல்கிறார்.மனுத்தாக்கல் முடிந்ததும் வெளியே வந்து "தான் போட்டியிட வில்லை என்றும்,ராமானுஜம் போட்டியிடுவதாகவும்"சொல்லிவிட்டு கையில் 5 பக்க அறிக்கையை எடுத்து மைக்கில் படிக்கிறார்.முழுக்க,முழுக்க தேவர் இனத்துக்கு தான் செய்த நன்மைகள் தேதி,ஆண்டு குறிப்பிட்டும்,திமுகவினால் தனக்கு எதிராக சாதிக்கலவரம் தூண்டி விடப் படுவதாகவும் "அந்த அறிக்கையில் உள்ளது.
பின் இன்னொரு இரண்டு பக்க அறிக்கை.அதில் தான் போட்டியில் இருந்து விலகுவதாக மதிமுக நிர்வாகிகள் 10பேர்கள் பெயரை( மல்லை சத்யா,நாசரேத் துரை உட்பட)வாசித்து அவர்களுடன் தற்போதுதான்  கலந்து பேசி ஒப்புதல் பெற்றதாகவும் வாசிக்கிறார்.
ஆர்ப்பாட்டம் நடந்து உடனே மனுத்தாக்கல் முடிந்துதான் வெளியே வருகிறார்.அதற்குள் எப்படி ம.தி.மு.க.லெட்டர் பேடில் 5+2 பக்க அறிக்கை கணினி அச்சில் தயாராக்கி கொண்டு வந்தார்.
 மேலும் இந்த விலகல் அவரது கூட்டணிக் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக தெரியவில்லை.திருமாவும்,தி.கே.ரங்கராஜனும் மட்டுமே அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தயாரித்தாரா.அதற்கும் போதுமான காலம் இல்லையே.அப்படியென்றால் ஏற்கனவே அவர் தயாராகக் கொண்டு வந்துதான் நாடகமாடுகிறார் என்று அர்த்தமாகிறது?
திமுக மீது குற்றம்சாட்ட அதன் வேட்பாளர் தேவரினத்தைச்சார்ந்தவர் என்ற காரணம் ஒன்றுதான்.
வைகோ சமீபகாலமாக மைக் கிடைத்தால் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் வாய்க்கு வந்ததை பேசுகிறார்.மனதில் சாதி பிடிப்பு உள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் வாய்களில் இருந்து சாதி தொடர்பான பேச்சுகள் வருவதில்லை.வராது.

திமுக,கருணாந்தி,ஸ்டாலின் என்ற பெயர்களை கேட்டாலே வைகோவுக்கு பித்து பிடித்த நிலை வந்து விடுகிறது.அதானால்தான் தனது தாயார் மாரியமமாள் இறப்புக்கு வந்த ஸ்டாலின்,கனிமொழியைக் கூட அசிங்கமாக திட்டினார்.சுற்றாத பம்பரம் வைகோ 

இதற்கெல்லாம் காரனம் அவரது கையாலாகத்தனம்.திமுகவை அழிக்க எண்ணி கட்சி ஆரம்பித்து 26 ஆண்டுகளாகியும் மதிமுகதான் கரைந்து போயுள்ளதே தவிர திமுக ஸ்டாலின் பொறுப்பில் இளமையுடன் வளவதை அவரால் பொறுக்க இயலவில்லை.

இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.திமுகவுக்கு ஆதரவாக ஜெயலலிதா அரசுக்கு எதிரான வாக்குகள் போய் சேர்ந்து வெற்றி பெற்று விடக் கூடாது என்பதற்காக அதிமுகவின் பி டீம் என்பதை உருவாக்க 1500 கோடிகள் உளவுத்துறை மூலம் வழங்கப்பட்டதாகவும் அந்தப்பணி முற்றுப்பெற்று விட்டதால் வைகோ தன் தொகுதியில் தோல்வியடைவதை தவிர்க்கவும்,அதிமுக வேட்பாளர்  கடம்பூர ராஜு வெற்றி பெறவுமே இது நடத்தப்பட்டதாகவும்,மேலும் கரூர்,எழும்பூர் என்று பல இடங்களில் பிடிபடும் அதிமுகவின் 500,200 கோடிகள் மக்கள் மனதிலிருந்து திசை திருப்பவுமே இந்த நாடகம் என்றும் வைகோ அறிக்கை உளவுத்துரை மூலம் தயாரிக்கப்பட்டது என்றும் செய்திகள் உலாவுகிறது.
எதுவானாலும் சில ஆண்டுகளுக்கு முன் வரை கம்பீரமான அரசியல் வாதியாக உலா வந்த வைகோ என்ற பிம்பம் இன்றி மண்குதிரையாக மாறி கரைந்து கொண்டிருக்கிறது என்பது உண்மை.
வயாதானவர்களைப் பாதிக்கும் குழப்ப நோய் 70 வயதுக்கு மேலான வைகோவை மட்டும் விட்டு விடுமா என்ன?
=======================================================================================

இன்று,
ஏப்ரல்-26.
========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?