"சூடான" செய்தி



இன்றைய சூடான செய்தி உண்மையிலேயே அனல்பறக்கும் செய்திதான்.இன்றைய கோடை வெப்பத்தின் அளவு 106 முதல் 110பாரன்ஹீட் செல்லலாம்.
அதனால்  காற்றில் வெப்ப அலை வீசி உங்களை ஒரு வழி செய்து விடலாம் என்பதுதான் அச்செய்தி.இந்தஎச்சரிக்கையை மாவட்ட ஆட்சியாளர்களே வெளியிட்டிருப்பதால் கவனம் கண்டிப்பாக தேவை.
கோடை தொடங்கிய சில தினங்களிலேயே சுட்டெறிக்கும் வெயில் அனைவரையும் வாட்டி வதைக்கிறது. இந்திய வானிலை மையத்திலிருந்து வெப்ப அலை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. 
எச்சரிக்கை வந்தாலும், வெப்பத்தைப் பற்றிய தகவலை சரியாகத் தெரிந்து கொண்டு அதை எப்படி சமாளித்து, பாதுகாப்பாக்காக நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும் என்பதை தெரிந்து கொள்வதும் மிகவும் அவசியம். 
வெப்ப அலை பற்றியும் அதை சமாளிப்பது எப்படி என்பது பற்றியும் சில குறிப்புகள் இதோ...

வெப்ப அலை 

இந்திய தேசிய பேரழிவு நிர்வாக ஆணையத்தின்படி வெப்ப அலை என்பது ஒரு அசாதாரணமான அதிகபட்ச வெப்பநிலையாகும். வழக்கமான கோடை நாட்களில் காணப்படும் வெப்பநிலையைவிட அதிகபட்சமான வெப்பநிலை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காணப்படும். மார்ச் மாதம் தொடங்கும் இந்த கோடைக்காலம் ஜூன் மாதம் வரை இருக்கும். சில சமயங்களில் ஜூலை வரையும் நீடிக்கும்.

உடலில் நீர்குறைந்து வறட்சி ஏற்படுதல் (dehydration) வெப்பத்தினால் ஏற்படும் பிடிப்புகள், சோர்வு மற்றும் ஸ்ட்ரோக் போன்றவை வெப்பநிலை அதிகரிப்பதால் ஏற்படும் சில பொதுவான உடல் உபாதைகளாகும்.

அறிகுறிகள்

 102 டிகிரி வரையிலான காய்ச்சலுடன் எடிமா எனப்படும் வீக்கமும் சின்கோப் எனப்படும் மயக்கமும் காணப்படும்.
 சோர்வு, பலவீனம், தலைச்சுற்றல், தலைவலி, குமட்டல், வாந்தி, தசை பிடிப்பு, வியர்வை போன்றவை அறிகுறிகளாக தென்படும்.
 104 டிகிரிக்கும் அதிகமான காய்ச்சல் அத்துடன் வலிப்பு, சித்தபிரமை, கோமா போன்ற நோய்தாக்கங்கள் ஏற்படும். அத்துடன் உயிரிழக்க நேரிடும் அபாயமும் உள்ளது.

அதிகமான வெப்பநிலையில் உடலுழைப்பை அதிகரிப்பது உங்கள்  உயிரிழப்பை உண்டாக்கி விடும்.

வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளையும் அதன் விளைவுகளையும் குறைப்பதற்கு கீழ்கண்ட முறைகளை பின்பற்றலாம்:
* வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்கவும். குறிப்பாக 12 முதல் 3 மணி வரை.
* அடிக்கடி தண்ணீர் குடிக்கவும். தாகமாக இல்லையென்றாலும் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும்.
* அதிக கனம் இல்லாத சற்றே தளர்வான ஆடைகளை அணியவும். காற்றோட்டம் மிகுந்த காட்டன் ஆடைகளே சிறந்தது.
* வெயிலில் வெளியே செல்லும்போது கண்ணாடி அணியவும். குடை அல்லது கேப் உபயோகிக்கவும். ஷூ அல்லது சப்பல் அணியலாம்.
* டீ, காபி, மது மற்றும் குளிர்பானங்களை தவிர்க்கவும்.
* குழந்தைகளை அடைச்சலாக இருக்கும் வண்டியில் அதிக நேரம் அமர்ந்திருக்க செய்யவேண்டாம். காற்றோட்டமான இடத்தில் இருப்பது நல்லது.
* ஏதேனும் உபாதை இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
* வீட்டில் தயாரிக்கும் எலுமிச்சை ஜூஸ், லஸ்ஸி, மோர் போன்ற நீராகாரங்களை உட்கொள்ளலாம்.
* விலங்குகளை நிழல் அதிகமாக இருக்கும் இடத்தில் தங்கவைக்கவும். தண்ணீர் அதிகமாக கொடுக்கவும்.
* வீட்டில் மெல்லிய திரைச்சீலைகளை பயன்படுத்தவும். ஜன்னல்களை திறந்து வைத்து காற்றோட்டமாக வைத்துக்கொள்ளவும்.
* குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கவும்.

சன்ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி 

* முதலில் பாதிக்கப்பட்டவரை நிழலான இடத்தில் படுக்க வைக்கவும்.
* ஈரமான துணியால் உடலை துடைத்து விடவும்.
* சாதாரண வெப்பநிலையிலுள்ள தண்ணீரை தலையில் மெதுவாக ஊற்றவும்.
* இவை அனைத்தும் உடலின் வெப்பத்தை மெல்ல மெல்ல குறைக்க உதவுவதால் இது அத்தியாவசியமானதாகும்.
உப்பு சர்க்கரை கரைசல் ,ORS, லெமன் சர்பத் போன்றவற்றை உட்கொள்வதால் உடலின் வறட்சி நீங்கும்.
* உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.
* அதிக வெப்பநிலையினால் ஏற்படும் ஸ்ட்ரோக்கின் தாக்கம் உயிரைக்குடிக்கும் அபயாமுள்ளதால் உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?