அதிரடி சட்டமன்ற கலைப்பும், தேர்தலும்

சட்டமன்றத் தேர்தல் வரலாறு
1991 ...



1989 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய முன்னணியுடன் இடதுசாரிகள் உடன்பாடு கொண்டு போட்டியிட்டது. 

மறுபுறம் தேசிய முன்னணி பாரதிய ஜனதா கட்சியுடனும் உடன்பாடு வைத்திருந்தது. 
இந்த தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய முன்னணியின் சார்பில் வி.பி.சிங் பிரதமரானார். 

மண்டல் குழு பரிந்துரைகளை அமல்படுத்தினார் வி.பி.சிங். 
இதையடுத்து அவரது அரசுக்கு பாஜக தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. 

அத்வானி தலைமையில் கலக யாத்திரை நடத்தியது பாஜக. 

அதுமட்டுமின்றி இடஒதுக்கீட்டை எதிர்த்து வன்முறை போராட்டங்களை நடத்தியது. இதனால் 1990ம் ஆண்டில் வி.பி.சிங் பிரதமர் பதவியை விட்டு விலகினார். 

இந்நிலையில் சந்திரசேகர் தேசிய முன்னணியை உடைத்தார். 

ராஜீவ் காந்தியின் ஆதரவோடு, சந்திரசேகர் பிரதமரானார்.

குறைந்த காலமே பிரதமராக இருந்தவர் என்ற சாதனையை இவர் படைத்தார். ஏழு மாதங்களே பிரதமராக இருந்த இவர் ஒரு பட்ஜெட்டைக் கூட தாக்கல் செய்யவில்லை. 

ராஜீவ் காந்தி ஆதரவை விலக்கிக் கொண்டதால் இவர் பதவி விலகினார்.

அவர் பதவி விலகுவதற்கு முன்னதாக, தமிழக திமுக அரசை, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் வற்புறுத்தலுக்குப் பணிந்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதாகக் கூறி கலைத்து குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார். 
அதன்படி ஜனவரி, 1991ல் திமுக ஆட்சி ,தமிழக சட்டமன்றம் கலைக்கப்பட்டது. 

இதையடுத்து 1991 மே,ஜூன் மாதங்களில் நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. 

21.5.1991 அன்று தமிழகத்தில் பிரச்சாரத்துக்கு திருப்பெரும்புதூர்  வந்த ராஜீவ் காந்தி மனித வெடி குண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழகத்தில் தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக நடந்த இக்கொலையால் எழுந்த அனுதாப அலையால் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. 

கூட்டணியில் இடம் பெற்றிருந்த இந்தியா காங்கிரஸ்(சோசலிஸ்ட்) கட்சியின் ஒற்றை வேட்பாளரான சஞ்சய் ராமசாமியும் வென்றார். 

ராஜீவ் காந்தி கொலைக்கு விடுதலைப்புலிகளுக்கு நெருக்கமான திமுகதான் காரணம் என்று இரு கட்சிகளும் பிரச்சாரம் செய்து வந்தன. 


ராஜீவ் காந்தியின் கொலைக்கு முன் இந்தியாவின் பிறபகுதிகளில் நடந்த தேர்தல்களில் தடுமாறிக் கொண்டிருந்த காங்கிரஸ் அனுதாப அலையில் மிதந்து வெற்றி பெற்றது. 
அந்த அனுதாப அலை தமிழகத்தில் அதிமுகவுக்கு உதவியது.



தேர்தலுக்கு முன்னதாக, இரு அதிமுகவும் இணைந்த போது அதை விரும்பாத திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், உக்கும்சந்த் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகினர். 



இவர்கள் திமுகவில் இருந்து விலகிய நடிகர் டி.ராஜேந்தர் தொடங்கிய தாயக மறுமலர்ச்சி கழகத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர். 


1980களில் வன்னியரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென போராடி வந்த வன்னியர் சங்கம் ராமதாஸ் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாறி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது.


திமுக, சிபிஎம், சிபிஐ, ஜனதா தளம், தாயக மறுமலர்ச்சி கழகம் ஆகியவை கூட்டணியாக நின்று தேர்தலைச் சந்தித்தன.அதிமுக 164 இடங்களையும், காங்கிரஸ் 60 இடங்களையும் பெற்றது. சஞ்சய் ராமசாமியையும் சேர்த்து இக்கூட்டணி 225 இடங்களைக் கைப்பற்றியது. 
திமுக 2,  சிபிஐ 1, சிபிஎம் 1, ஜனதாதளம் 1, பாமக 1, சுயேச்சை 1 ஆகியோர் வெற்றி பெற்றனர். 

ஜெயலலிதா முதல் முறையாக தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அதிமுகவின் ஜானகி அணி,ஜெ அணி என்ற இரு பிரிவும் இணைந்த பின் நடந்த முதல் தேர்தல் இதுவாகும். 


இதற்கு முன்னர் ஜெயலலிதா சேவல் சின்னத்தில் போட்டியிட்டு ஒட்டு மொத்தமாக தோற்றுப்போனார்.


அதன் பின்னர் ஜெயலலிதாவும், காங்கிரசும் கூட்டணி அமைத்து சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தல் இது.

முதல்வரானதும்' ராஜீவ் காந்தி கொலையுண்டதால் ஏற்பட்ட அனுதாப அலையால் தான் வெற்றி பெறவில்லை.தனது தனிப்பட்ட செல்வாக்கினால்தான் வென்றேன் " என்று தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான பின் ஜெயலலிதா தலைக்கனத்துடன் கூறியது இந்திய அளவில்  சர்ச்சையைக் கிளப்பியது. 

ஜெயலலிதாமீது அதிருப்தியை உருவாக்கியது.


அன்றிலிருந்து "ஜெயலலிதா தான் என்ற அகம்பாவமும் ,தான் வெற்றி பெற யாரை வேண்டுமானாலும் பயன் படுத்திக்கொள்வார்,அதன் பின் தூக்கி எறிந்து விடுவார் " என்பதும் அரசியல் உலகிற்கு பளிச்சென்று புலனாகியது.


தன்னை அரசியலில் வளர்த்த எம்ஜிஆரையே "செயல்பட முடியாமல் இருக்கிறார்.எனக்கு போதுமான ஆதரவு உள்ளது.
என்னை முதல்வாராக்குங்கள் "என்று அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதியவர்தானே  இந்த ஜெயலலிதா.
==================================================================================
இன்று,
ஏப்ரல்-18.
  • உலக பாரம்பரிய தினம்

  • ஈரான் ராணுவ தினம்

  • ஜிம்பாப்வே விடுதலை தினம்(1980)

  • ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது(1835)

  • அயர்லாந்து குடியரசு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது(1949)

  • உலக பாரம்பரிய தினம்
1982 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18ஆம் நாள் “சர்வதேச நினைவிடங்கள் தினமாக “International Day for Monuments and Sites” கொண்டாட பரிந்துரைத்தது. அடுத்த ஆண்டு யுனெஸ்கோ இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய தினமாக மாறியது.”World Heritage Day”.

இந்த நாளில் என்ன செய்யலாம் என்று அதே மாநாடு பரிந்துரைத்தது. அதன் படி இந்நாளில்
பாரம்பரிய நடனம் வழங்குபவர் காந்தியார்.

 - கட்டிட பெருமைகளைக் கண்காட்சிகள் அமைத்து விவரிப்பது

- கட்டணம் ஏதுமில்லாமல் இந்த ஒரு நாள் நினைவிடம், அரும் பொருளகம்(Monument), தலங்களுக்கு மக்களை அனுமதிப்பது

- இந்த நாள் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிப்பது

- பொது இடங்களில் விவாதங்கள் நடத்துவது

- புத்தகங்கள்,தபால் தலை முத்திரைகள்(Stamps), போன்றவற்றை அச்சிடுவது

- பாரம்பரியத்தை காப்பாற்றியவருக்கு சிறப்பு பரிசுகள் வழங்குவது

- பள்ளி மாணவர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் நிகழ்ச்சிகள் நடத்துவது என்று சில பரிந்துரைகளை வழங்கி உள்ளது.


====================================================================================





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?