இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

சனி, 21 மே, 2016

இந்தியா: அழிவை நோக்கி?

தேர்தலில் ஜெயலலிதாவே மீண்டும் வந்ததால் அமைச்சர்கள்,அதிகாரிகள் தன்மானத்துக்கு பெரும் இழிவு வந்தது போல் அடுத்த இழப்பு செய்தி வந்துள்ளது.
ஆனால் இது ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கு .
பருவநிலை மாற்றத்தால், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடல் மட்டம் அதிகரித்து, பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது என, ஐ.நா., ஆய்வறிக்கை தெரிவிக்கிறது..
இந்தியாவில், கோல்கட்டா, மும்பை உள்ளிட்ட நகரங்களில், 2050ம் ஆண்டிற்குள், நான்கு கோடி பேர், ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காடுகள் அழிப்பு, நச்சுகளின் அளவு அதிகரிப்பது போன்ற காரணங்களால், பூமியின் வெப்பநிலை, இயல்புக்கு மாறாக அதிகரித்து வருகிறது. 
மேலும், பருவநிலை மாற்றம் காரணமாக உலகின் சில பகுதிகளில் கடும் வறட்சியும், வேறு சில பகுதிகளில் வரலாறு காணாத மழையும் பெய்து வருகின்றன.
இதனால், பெரிய அளவில், இயற்கைச் சீற்றங்கள் நடைபெறுகின்றன. 
இதன் பாதிப்புகளை அறிந்து, முன்கூட்டியே தடுக்கும் வகையில், உலகளாவிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, ஐ.நா., சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு, கென்யா தலைநகர் நைரோபியில், அடுத்த வாரம் நடைபெறுகிறது. 

இந்நிலையில், ஐ.நா.,வின் சர்வதேச சுற்றுச்சூழல் சார்ந்த, ஆய்வறிக்கை ஒன்று, வெளியாகியுள் ளது. இதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளஅதிச்சி செய்திகள் :


* பசிபிக் மற்றும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பருவநிலை மாற்றம் காரணமாக, மோசமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன 

* சீனா, இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகள் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம் உள்ளது 
* இந்த நாடுகளில், கடல் பகுதியையொட்டியுள்ள நகரங்களில், வேகமாக நகரமயமாக்கலும், பொருளாதார வளர்ச்சி திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. 
* பெரும்பாலான கடற்கரை பகுதியில், நகர்ப்புறங்களில், மக்கள் அதிகமாககுடியேறி வருகின்றனர். நகரமயமாதலால், கடலோர பகுதிகள் பாதிப்படைகின்றன.

* வருங்காலங்களில் அந்த நகரங்களில் பாதிப்புகள் அதிக அளவு இருக்கும். இந்தியாவில், கோல்கட்டா மற்றும் மும்பையில், கடல் மட்டம் அதிகரித்து, கடல் நீர் உட்புகும் ஆபத்து உள்ளது.
 
* வரும், 2050ம் ஆண்டுக்குள், கடல்மட்ட அதிகரிப்பால், உலகளவில் அதிகமாக பாதிக்கப்படக் கூடிய, 10 நாடுகளில், ஏழு நாடுகள் ஆசிய பசிபிக் பகுதியில் உள்ளன.

 
* கடல் மட்டம் அதிகரிப்பால் பாதிக்கும் நாடுகளில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதனால், இந்தியாவில், நான்கு கோடி பேர், ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர் 
* அடுத்த படியாக வங்கதேசத்தில், 2.5 கோடி பேரும், சீனாவில், இரண்டு கோடி பேரும், பிலிப்பைன்சில், 1.5 கோடி பேரும் ஆபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. 


கடல் மட்டம் அதிகரிப்பதால், சீனாவில் ஷாங்காய், வங்கதேசத்தில் தாகா, மியான்மரில் யாங்கூன், தாய்லாந்தில் பாங்காக், வியட்நாமில் ஹோ - சி மின்நகரங்களும் பாதிப்படையும்.இந்நகரங்களில், பெரிய அளவில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், 2070ல், மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.

பெருவெள்ள ஆபத்து தொடர்பாக ஆய்வு செய்த, பிரிட்டனைச் சேர்ந்த, 'கிறிஸ்டியன் எய்டு' என்ற தன்னார்வ அமைப்பு ஏற்கனவே அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. 

'வெள்ளத்தால், 2060ம் ஆண்டிற்குள், 100 கோடி பேர் பாதிக்கப்படுவர்' என, அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. 

பெரிய அளவு வெள்ளச்சேதம் ஏற்படும், 10 நாடுகளின் பட்டியலில், சீனா, முதலிடத்திலும், இந்தியா, இரண்டாவது இடத்திலும் உள்ளன.வங்கதேசம், இந்தோனேஷியா, வியட்நாம், அமெரிக்கா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.


பருவநிலை மாற்றத்தால், அன்டார்டிகாவிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அங்கு, குளிர்ச்சி அளவு அதிகரித்து வருகிறது. இதனால், பனியின் அளவு, 2100ம் ஆண்டிற்குள், 1 மீட்டர் அளவுக்கு அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

 பசிபிக் கடல் பகுதியில் உள்ள சாலமோன் தீவுக் கூட்டங்களில், கடல் மட்டம் உயர்ந்து, ஐந்து தீவுகள் காணாமல் போயுள்ளது. 
இந்த ஐந்து தீவுகள் மறைவு அண்டார்டிகா பாதிப்பு உலக அளவில் வரைபடங்களில் கொண்டுவரப் போகும் மாற்றத்தை அபாயத்தை உண்மை என்று புரிய வைத்துள்ளது.
இந்த ஐந்து தீவுகள் மட்டுமல்ல மேலும்  ஆறு தீவுகள், கடல் அரிப்பால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. 
முன்பு மனிதர்கள் வசித்த இந்த தீவுகளை தற்போது அவ்வப்போது மட்டும் கச்சத் தீவைப்போல்  மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். 
இத்தீவுகளில், மக்கள் யாரும் நிரந்தரமாக வசிக்கவில்லை.இந்த தீவுகளும் கடலில் தனது வாழ்நாளை எண்ணி   சிறிது,சிறிதாக மறைந்து வருகிறது.
=======================================================================================
இன்று,
மே-22.
  • சர்வதேச பல்லுயிர் பரவல் தினம்
  • இலங்கை குடியரசு தினம்(1972)
  • ஏமன் தேசிய தினம்
  • விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது(1990)
  • ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தை பெற்றனர்(1906)
=======================================================================================
:'முதல்வர் காலில் விழுந்து வணங் குவது தான் பாரபட்சமற்ற நடவடிக் கையா?' என, தேர்தல் ஆணைய  அதிகாரிக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவரது அறிக்கை: 
"தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும், பணம் பட்டுவாடா நடைபெற்றிருக்க, இரண்டு தொகுதிகளில் மட்டும் ஒரு வாரத்திற்கு தேர்தல் ஒத்திவைப்பு என, தேர்தல் ஆணையம்  முதலில் அறிவித்தது.

தற்போது அதையும் தாண்டி, ஏதோ, பா.ஜ.பா.ம.க., கட்சிகள் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தது என்ற காரணத்தைக் கூறி, தேர்தல் ஆணையம்  மூன்று வாரங்களுக்கு விசாரணை நடத்துவதாகக் கூறி, அந்த இரண்டு தொகுதிகளி லும், மூன்று வாரங்களுக்குதேர்தலை ஒத்தி வைத்திருப்பதாக அறிவிக்கின்றனர் என்றால் என்ன நியாயம்?


இரண்டு தொகுதிகளில் பணப்பட்டுவாடா பற்றி விசாரிக்க, மூன்று வாரங்கள் தேவையா? 

அதுபற்றி அங்கே தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் கருத்துகளை அறிந்திட வேண்டாமா? 

பா.ம.க.,வும், பா.ஜ.,வும் நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர் என்றால், அவர்கள் எந்த நோக்கத்தோடு வழக்கு தொடுத்தனர். யாருடைய துாண்டுதலின் பேரில், வழக்குதொடுத்தனர்.

அதற்காக, இரண்டு தொகுதிகளின் தேர்தலை, மூன்று வாரங்களுக்குத் தள்ளி வைப்பதா; இவைகள் எல்லாம் யாரை ஏமாற்றுகிற காரியம். 
இதற்காகவா, ஒரு தேர்தல் ஆணையம்? 

தேர்தல் கமிஷன் என்றால் பாரபட்சமற்று நடக்க வேண்டாமா?

முதல்வர் காலில் விழுந்து வணங்குவது தான், பாரபட்சமற்ற நடவடிக்கையா? 

இப்படிப்பட்ட தேர்தல் கமிஷன்கள் இருக்கிற வரை நியாயம் கிடைக்காது, வெற்றி கிடைக்காது, நீதி கிடைக் காது, நீதியே நீ இன்னும் இருக்கின் றாயா? நீயும் அந்தக் கொலைக் களத்தில் விழுந்து மாண்டு விட்டாயா என்று தான் கேட்க வேண்டும். "
===============================================================================================

2016 தற்போதைய தமிழக அமைச்சர்கள் விவரம்:

**ஜெயலலிதா - முதலைமைச்சர் - பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி மற்றும் இந்திய காவல் பணி, வனப்பணி, மாவட்ட வருவாய், காவல் மற்றும் உள்துறை

**ஓ.பன்னீர்செல்வம் - நிதித்துறை


**திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை

**எடப்பாடி பழனிசாமி - பொதுப்பணித்துறை

**செல்லூர் ராஜு - தொழிலாளர் நலத்துறை மற்றும் கூட்டுறவு

**தங்கமணி - மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை

**வேலுமணி - உள்ளாட்சித்துறை மற்றும் சிறப்புத் திட்டங்கள்

**ஜெயகுமார் - மீன்வளத்துறை

**வி.சரோஜா - சமூக நலத்துறை மற்றும் சத்துணவு

**சிவி சண்முகம் - சட்டத்துறை

**காமராஜ் - உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை

**கேவி கருப்பண்ணன் - சுற்றுச்சூழல்

**ஒஎஸ் மணியன் - ஜவுளி மற்றும் கைத்தறி நூல் துறை

**விஜயபாஸ்கர் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை

**கேபி அன்பழகன் - உயர் கல்வித்துறை

**எஸ்பி சண்முகநாதன் - பால் வளத்துறை

**பெஞ்சமின் - பள்ளி, கல்வி, விளையாட்டுத்துறை

**உதயகுமார் - வருவாய்த்துறை

**எம்சி சம்பத் - தொழில்துறை

** உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதி

**துரைக்கண்ணு - விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை

**ராஜேந்திர பாலாஜி - ஊராக தொழில்துறை

**எம்ஆர் விஜயபாஸ்கரன் - போக்குவரத்துறை

**மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பம்

**வெல்லமண்டி நடராஜன் - சுற்றுலாத்துறை

**கேசி வீரமணி - வணிக வரித்துறை

**எஸ்.வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

**ராஜலட்சுமி - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்

**கடம்பூர் ராஜு - செய்தி மற்றும் விளம்பரத்துறை

ஜெயலலிதா காலில் விழுந்த ஐ.ஏ.எஸ்,க்கள் .இதற்கு இவ்வலவு படிக்க வேண்டுமா/இந்த அதிகாரிகளால் இந்திய குடிமைப்பணிக்குத்தான் அவமானம்.இதற்கு இவர்கள் அதிமுகவில் சேர்ந்து கரை வேட்டிக் கட்டிக்கொள்ளலாமே.மானங்கெட்ட பயல்கள்.[காலில் விழும் இவர்களுக்கு இனி மரியாதை ஒரு கேடா?]