இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

ஞாயிறு, 29 மே, 2016

சாதி இரண்டொ"ழிய"

திமுக தலைவர் கலைஞர் இந்திய பிரதமருக்கு மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி கடிதம் எழுதியுள்ளார். 

அக்கடிதம் முழுக்க தெரியாவிட்டாலும்,கலைஞர் கடிதம் எழுதிவிட்டார் என்பதற்காக பிரதமர் உடனே மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப் போவது இல்லை என்றாலும் ,  மீனவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது பற்றி நாம் கொஞ்சம் விவாதிக்கலாமே.

 மீனவர்சமுதாயம்பழங்குடியினர்பட்டியலில் சேர்ப்பதுஎன்பது சரியானசெயல் அல்ல.
தமிழகத்தில் நரிக்குறவர்கள் போன்று மீனவர்கள் என்று தனிசமுதாயம் அல்ல.

‪இன்றுவரை அந்த சாதியை,சேர்க்க வேண்டும் இந்த சாதியை சேர்க்க வேண்டும் என்று ஒவ்வொருவரையும்  பிற்பட்டோர்‬ பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று இன்று சைவ வேளாளர் ,பிராமணர் தவிர அனைத்து இனத்தினரையும் சேர்க்கப்பட்டுவிட்டனர்.


சைவ வேளாளர்களும்,ஓதுவார்களும்,பிராமணர்களும் இன்னும் சிறிது  நாட்களில் பிற்பட்டோர் ஆகி விடலாம்.யார் கண்டது.அங்குள்ளவர்களில்  மட்டும் அனைவரும் பண முதலைகளா?ஏழைகளே இல்லையா?
இதி ஒரு வேடிக்கை பிராமணர்,சைவ வேளாளர் ,ஒதுவார்  இவர்களுக்கு இனையான சைவர்களும் ,மேலும் ஒதுவார்,சைவ வேளாளர்களுடன் திருமணச்சம்பந்தம் வைத்துக்கொள்ளும் இணை சமூகமான சைவசெட்டி மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியாம்.

இது எப்படியானது?அச்சமுதாயத்தில் அப்போது பதவியில் இருந்த யாரோ ஒருவர் அரசானை திருத்தம்தான் காரணமாக இருந்திருக்கக் கூடும்.

அது போன்ற அதிகாரம் படைத்தப்பதவியில் அமர்ந்திருப்போர்கள் செய்யும் அரசாணை திருத்தங்கள்தான் இன்று வயது தளர்வு,மதிப்பெண்கள் குறைப்பு,கட்டணங்கள் இல்லாமை,காலிப்பணியிட ஒதுக்கீடுகள் குறிப்பிட்டவர்களுக்கு அதிகமாக ஒதுக்கீடு அதுவும் போக பொதுபிரிவிலும் பங்கு என்று அரசையே ஆட்டிப்படைத்து வருகிறது.

இப்போது பிற்பட்டோர் எல்லோரும் வன்னியர்கள் போல்  மிகவும் பிற்பட்டோர் பட்டியலுக்கு அனைவரும் நகர்ந்து முன்னேறி  வருகின்றனர்.

இப்போது பழங்குடியினரா?


மீனவர் தொழிலில் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மதத்தவர்,இனத்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பரதர்,நாடார்,முக்குவர்,இஸ்லாமியர,இந்துக்கள்,கிருத்தவர்கள் உட்பட்ட அனைவரும் பகுதிக்கு தக்கவாறு உள்ளனர்.

ஆனால்இந்தஇனமக்கள்அனைவரும்மீன்பிடித்தொழில் செய்வதில்லை.அதில் பரதர்,முக்குவர் மிகவும் பிற்பட்டோர் களாகவும்,இஸ்லாமிய ,நாடார் மீனவர்கள் பிற்பட்டோர் பிரிவிலும்தான் உள்ளனர்.
குறிப்பாக வணிகத்துறையில்தலை தூக்கிநிற்கும்நாடார் மக்கள் தூத்துக்குடிதருவை குளம்பகுதிகடற்கரைகளில் மீனவர்களாக தலை முறை,தலைமுறையாகஉள்ளனர்.

இப்போது பல்வேறு சாதி,மத மக்களாக பிரிவுக்குள்ளான இவர்களை சேர்ப்பது என்பது அரசுக்கு மிகப்பெரிய தலைவலியையும்,குழப்பத்தையும்,வீண் கலவரத்தையும்தான் உண்டாக்கும்.

இதை அரசியலாக்கி எதிர்கால தமிழத்தை குழபப்த்துக்கும் ,கலவரத்துக்கும் உட்படுத்த வேண்டாம்.

 பொறுப்பான ,மூத்த அரசியல் தலைவரான கலைஞர் இதை வேறுவடிவில்மீனவர்சமுதாயத்துக்கு நலன்களை உண்டாக்கும் திட்டங்களை கிடைக்கச்செய்யலாம்.

ஏற்கனவே மீனவர் சமுதாயத்துக்கு டீசல் மானியம்,மீன் பிடித்தடை காலத்துக்கு உதவித்தொகை அதிகரிப்பு,மீனவர் ஒய்வூதியம் என்று பல நலத்திட்டங்கள் உள்ளன .

மீன் துறை மூலம் மீனவர் அடையாள அட்டைவைத்திருப்பவர்களுக்கு அவை வழங்கப்பட்டும் வருகிறது.ஆனால் அவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு அவர்கள் சொல்லுவதுதான் விலை.அரசு நிர்ணயிப்பதில்லை.என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் .

விவசாயிகளைப் போல் ஆள்வைத்து உழுவது,உரம் வாங்குவது,விதை வாங்குவது  ,பயிரிட்டு அறுவடை வரை ஆட்களுக்கு வட்டிக்கு வாங்கி கூலி கொடுத்து பணி செய்யும் பழு இல்லை.

மீன்கள் வளப்பதற்கு அவர்கள் ஒரு துரும்பையும் கிள்ளி போட்டதில்லை.வேண்டுமானால் மீன் விருத்தி தடை காலத்திலும் ஒருவருக்கும் தெரியாமல் மீனை பிடித்துவரும் பணியைத்தான் செய்கிறார்கள்.

இன்று அவர்கள் பகுதியில் சொந்த வீடும்,வாகனமும் இல்லாதவர்களை அரசு கண்டு பிடித்தால் பரிசே வழங்கலாம் .


.அதே பகுதியில் வீடு ,வாசலின்றி ,வேலையும் இல்லாமல் தவிக்கும் சில சமுகத்தையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் .

மேலும் ஏதாவது உதவ வேண்டும் என்றால் உண்மையிலேயே பிற்பட்டோர்,ஒதுக்கப்பட்டோர்,நலிவுற்றொர்களை  போன்றவர்களை கண்டறிந்து அரசு உதவலாம். 

வெறும் சாதி,மதம் அடிப்படையில் மட்டும் சலுகைகள் வழங்குவது இன்னமும் சாதி ,மத பிளவுகளைத்தான் அதிகரிக்கும்.

அதற்கு முதல் கட்டமாக கலப்பு மணம் செய்து கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு  சாதி,மத சான்றுகளைப்பதிய வேண்டாம் என்று சொல்லுவோர்களிடமும் கண்டிப்பாக சாதிச்சான்றுகளை வேண்டும் என்று பள்ளி,கல்லூரிகளில் கேட்பதை நிறுத்தச் சொல்ல வேண்டும்.

சலுகைகள்,உதவித்தொகைகள் கேட்போர்கள் மட்டும் அந்தந்த விண்ணப்பத்தில் சாதிச்சான்றை இணைக்கச்சொல்லலாமீ?
===============================================================================================

இன்று,
மே-30.

  • அல்பேனியா தனி நாடாகியது(1913)
  • இந்தியாவில் கோவா தனி மாநிலமாகியது(1987)
  • பிராக் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது(1635)
  • திரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் வந்திறங்கினர்(1845)
===============================================================================================