இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

திங்கள், 30 மே, 2016

மின் கணக்கு

மாதம் 100 யூனிட்இலவசம் என்றதும் புளகாங்கிதமடைந்த பலருக்கு தாங்கள் உபயோகிக்கும்

மின்பொருட்கள் இயங்க எடுக்கும் மின்அளவு பற்றிதெரிவதில்லை.
அவர்களுக்காக சிறிய விளக்கம்.
"இரண்டு 60 வாட்ஸ் பல்புகள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால் மாதம் 18 யூனிட் செலவாகும்.   

ஆனால் அதுவே 60 வாட்ஸ் பல்புகளுக்குப் பதிலாக 15 வாட்ஸ் கொண்ட 2 சி.எப்.எல் பல்புகளை தினமும் 5 மணி நேரம் உப யோகித்தால் மாதம் 4.5 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும். 

அதுபோல 40 வாட்ஸ் திறன் கொண்ட 2 டியூப் லைட்கள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால், மாதம் 12 யூனிட் செலவாகும். 

750 வாட்ஸ் திறன் கொண்ட அயர்ன் பாக்ஸ் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 22.5 யூனிட் மின்சாரம் செலவாகும்.
150 வாட்ஸ் திறன் கொண்ட பிரிட்ஜ் தினமும் 12 மணி நேரம் இயங்கினால், மாதம் 54 யூனிட் செலவாகும்.

2 ஆயிரத்து 650 வாட்ஸ் திறன் கொண்ட 1.5 டன் ஏசி தினமும் 5 மணி நேரம் உப யோகப்படுத்தப்பட்டால் மாதம் 398 யூனிட் செலவாகும். 

அதுவே 200 வாட்ஸ் ஏர் கூலர் என்றால் மாதம் 30 யூனிட் செலவாகும். 

75 வாட்ஸ் திறனுள்ள 2 மின்விசிறி தினமும் 8 மணி ஓடினால், மாதம் 36 யூனிட் செலவாகும். 

400 வாட்ஸ் வாஷிங்மெஷின் தினமும் ஒரு மணி நேரம் உபயோகப்படுத்தினால் மாதம் 12 யூனிட் செலவாகும். 

100 வாட்ஸ் டிவி தினமும் 12 மணி நேரம் ஓடினால் மாதம் 36 யூனிட் செலவாகும்.
500 வாட்ஸ் மிக்ஸி தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 15 யூனிட் மின்சாரமும், 
300 வாட்ஸ் வெட் கிரைண்டர் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 9 யூனிட் மின்சாரமும் செலவாகும்.
200 வாட்ஸ் கம்ப்யூட்டர் தினமும் ஒரு மணி நேரம் இயங்கினால் மாதம் 6 யூனிட் மின்சாரமும், 
740 வாட்ஸ் குதிரை திறனுள்ள பம்பு மோட்டார் தினமும் ஒரு மணி நேரம் ஓடினால், மாதம் 22 யூனிட் மின்சாரமும் தேவைப்படும். 

7 வாட்ஸ் திறனுள்ள மொபைல் பேட்டரி சார்ஜர் தினமும் ஒரு மணி நேரம் பயன்படுத்தப்பட்டால் மாதம் 0.21 யூனிட் மின்சாரம் காலியாகும்.
இந்த மின் நுகர்வு கணக்கை வைத்து நீங்கள் உபயோகிக்கும் மின்சாரத்தை கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

அதிகமாக மின்சக்தியை செலவிடும் சாதனங்களை சிக்கனமாக உபயோகிக்கப்பாருங்கள்.

தேவையற்ற நேரங்களில் மின் சாதன சுவிட்சுகளை அணைத்து வையுங்கள்.

அதுதான் பாதுகாப்பு.


=====================================================================================
இன்று,
 மே-31.

  • உலக  புகையிலை எதிர்ப்பு தினம்

  • தென்னாப்பிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது(1910)

  • டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது(1911)

  • மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது(1962)

  • தென்னாப்பிரிக்க குடியரசு அமைக்கப்பட்டது(1961)

=====================================================================================