யாக யோகம்

தனது கட்சியை நிலை நிறுத்துவதற்காகவும், கட்சியினர் வேறு கட்சிக்கு தாவாமல் இருக்கவும் நிகும்பல பிரித்தியங்கர யாகத்தை கேரள ஜோதிடரின் ஆலோசனைப்படி,  விஜயகாந்த் நடத்தியுள்ளதாக தெரிகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி அறிவிப்பில் இருந்தே விஜயகாந்த் கடசி கலகலக்க ஆரம்பித்து விட்டது.
திமுக கூட்டணியுடன் தேர்தலை சந்தித்து நாமும் சட்டமன்ற உறுப்பினர்களாக மாறிடலாம் என்ற கடசியின் மா.தலைவர்கள் கனவில் பிரேமலதா துணையுடன் வைகோவின் 1500 கோடிகள் மதிப்புள்ள ராஜதந்திரம் போயஸ்தோட்ட மணலை அள்ளி தூவி விட்டது.
ம.ந.கூட்டணி கே.ந.கூட்டணியானாலும் வெற்றி மட்டும் நழுவி விட்டது.
மாற்று அணி என்று புறப்பட்ட அணியினர் மாற்று துணிக்கு கூட வழியின்றி படுதோல்வி அடைந்தனர்.
குதிரை மட்டுமல்ல  வைகோ வின் ராஜதந்திரமும் ம.ந.கூட்டணியினருக்கு குழி தோண்டி விட்டது.கிங் மேக்கராக இருக்கமாட்டேன் கிங்காகப் போகிறேன் என்று கிளம்பிய விஜய் காந்தை தேர்தல் காப்புத்தொகையைக் கூட இழக்கவைத்து விட்டார் வைகோ.
இவ்வளவு தன்னளவில் வைகோ விவரமாகத்தான் செயல் பட்டுள்ளார்.ம.ந.கூ தோல்வியடையும் என்று முன்பே எனக்குத்தெரியும் என்று இன்று திருவாய் மலரும் வைகோ அன்று தலைவர்களுக்கு அமைசர் பதவியை சதிஷ் பிரித்துக்கொடுக்கையில் கைத்தட்டினார்.ஆனால் தான் மட்டும் வாக்குப்பதிவு அலுவலர் அறை வரை சென்று விட்டு வேட்பு மனுத்தாக்கல் செய்யாமல் தப்பித்துக்கொண்டார். 
ஆனால் தேர்தல்   தோல்விக்கு பின் தேமுதிக,வாசன்  கட்சிகள்  கலகலத்துள்ளது.
 லட்சக்கணக்கான தொண்டர்கள் அறிவாலயம்,போயஸ்  தேடி ஓடிவிட்டனர். 
மற்றவர்களும் விஜயகாந்துக்கு நிதியாக கொடுத்தப்பணம்  ஏதாவது திரும்ப கிடைக்காதா என்று எதிர்பார்த்து ஓடத் தயாராகி வருகின்றனர். 
ஆனால்  கட்சியினரை தக்க வைப்பதற்கு உருப்படியாக முயற்சிகள் செய்யாமல் தோல்விக்கு காரணம் தேடி நிர்வாகிகள் கூட்டம் நடத்துகிறார் விஜயகாந்த் .
ஜெயலலிதாவை வீழ்த்துவதுதான் லட்ச்சியம் என்றவர் திமுக வுடன் கூட்டணி வைக்காமல் மனைவி ,வைகோ ஆகியோரின் பேட்சை க் கேட்டு கடைசி நேரம் மாற்றுக்கூட்டணிக்கு மாறியது பற்றி கடசியில் அப்போது பெருங் கூட்டமே எதிர் குறை எழுப்பியதே அதை பற்றி அறிய முடியாமல் ஆலோசனை எதற்கு?
மனைவி பிரேமலதாவை கடசி கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் தற்போது பார்த்துக்கொள்கிறார்.
பல மாவட்டத்தலைவர்கள் ,ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் ஒட்டிய பின்னர் லயத்தை மூடுவதால் என்ன பயன்.
இன்னமும் தினமும் கடசியினர் ஓடுவதை தடுக்க கடசியில் ஜெயலலிதா வழியை கடைசி கட்ட முயற்சியாக விஜயகாந்த் கையில் எடுத்துள்ளார்.
அது  கேரள ஜோதிடரின் ஆலோசனைப்படி, 'நிகும்பல பிரித்தியங்கர யாகம்' நடத்துவதுதான். 
ஏற்பட போகும் தீய விளைவுகளை தடுக்கவும், அரசியல் எதிர்காலம் சிறப்பாக அமையவும்,கோவையில் உள்ள தன் பண்ணை வீட்டில் இந்த யாகத்தை நடத்தியுள்ளார், 
கேரள மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட நம்பூதிரிகள் ஏழு பேர், இந்த சிறப்பு யாகத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. 
இந்த யாகம் நடத்த  விஜயகாந்துக்கு வழக்கமாக கோவையில் தொண்டர்கள் குவிந்து தரும் வரவேற்பு இம்முறை இல்லை.சிலர்  அல்லது கடசியில் எஞ்சியிருப்பவர்கள் விமான நிலையம் வந்துள்ளார்கள்.
அதை கண்டு விஜய் காந்த் குமுறியுள்ளார்.
இதற்கு எதற்கு யாகம்,யோகம் எல்லாம்.
தேர்தலுக்கு முன்னர் ஒவ்வொரு கூட்டத்திலும் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று விஜயகாந்த் கேட்ட போதெல்லாம் தொண்டர்கள் திமுக என்று குரல் எழுப்பியுள்ளார்கள்.உங்கள் ஆசைப்படியே நடக்கும் என்று  சொல்லியுள்ளார்.
ஆனால் கடைசி நேரம் மனைவி சொல்லே மந்திரம் என்று வைகோ வலையில் விழுந்தார்.
தொண்டர்கள் விருப்பத்துக்கு மாறாக கடைசியில் கூட்டணி வைத்தும் ,பாலை வைத்துக் கொண்டு வழக்கு விழ காத்திருந்தவரையும் ஏமாற்றி வைத்த கூட்டணியால் தான் இந்த நிலை என்பதை இன்னுமா விஜயகாந்த் உணரவில்லை.
அதை மாற்றி தொண்டர்கள் மனதுப்படி இனியும் நடக்காமல் யாகம் நடத்துவதால் ஏழு பேர்களைத் தவிர கடசிக்கு  என்ன பயன் கிடைக்கும்.ஒன்றும் இருக்காது.
பலன் கிட்டும் அந்த ஏழு பேர்கள் யார் என்கிறீர்களா? 
யாகம் நடத்த கேரளாவில் இருந்து வந்த நம்பூதிரிகள் ஏழு பேர்கள்தான் அவர்கள்.
=====================================================================================
இன்று,
ஜூலை-12.
  • போர்ச்சுகலுக்கும் நெதர்லாந்திற்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது(1641)
  • 16 ஜெர்மன் மாநிலங்கள்  ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்(1806)
  • செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது(1898)
  • நார்வே, வடக்கு கிரீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது(1932)
  • செனான் (ஆங்கிலம்: Xenon) 
  • ஒரு வேதியியல் தனிமம். 
  • தனிம அட்டவணையில் இதன் குறியீடு Xe. 
  • செனானின் அணுவெண் 54, மற்றும் இதன் அணுக்கருவில் 77 நொதுமிகள் உள்ளன. செனான் ஒரு நிறமற்ற, மணமற்ற, கனமான ஒரு நிறைம வளிமம். நில உருண்டையின் காற்று மண்டலத்தில் மிக மிகச் சிறிய இம்மியப் பொருளாக இது உள்ளது. 
  • நிறைம வளிமங்கல் பிற அணுக்களுடன் இணைந்துசேர்மம் ஆகாது என்று 20 ஆம் நூற்றாண்டுவரை நம்பி இருந்ததற்கு மாறாக முதல் நிறைம வளிம சேர்மத்தை செனான் வளிமம் வழி உருவாக்கப்பட்டது. 
  • செனான் வளிமம், ஐமேக்ஸ் (IMAX) போன்ற திரைப்படம் காட்டும் கருவிகளிலும் பிற உயர் வெளிச்சம் தரும் விளக்குகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. பொது மயக்கம் தரும் பொருளாகவும் இது விளங்குகின்றது.

    வில்லியம் ராம்சே (William Ramsay) மற்றும் மாரிச் டிராவெர்ஸ் (Morris Travers) ஆகியோர் ஜூலை 12, 1898 அன்று இப்பொருளைக் கண்டுபிடித்தனர். 
  • நீர்மமாக்கப்பட்ட காற்று மீண்டும் ஆவியாகும் பொழுது எஞ்சி இருந்த பொருளில் இருந்து கண்டறிந்தனர்.[13] சர் ராம்சே, அந்நியன் அல்லது வ் ஏற்றாள் என்னும் பொருள் கொண்ட கிரேக்கச் சொல்லான ξένον [செனாஸ்] என்பதில் இருந்து பெறப்பட்ட செனான் என்னும் பெயரை இந்த வளிமத்துக்குப் பெயராகப் பரிந்துரைத்தார். 
  • 1902 இல், புவியின் வளிமண்டலத்தில் காணப்படும் செனானின் அளவு 20 மில்லியனில் ஒரு பங்கு என ராம்சே மதிப்பிட்டார்.
  • =====================================================================================
அ.தி.மு.க எம்.பி. அன்வர் ராஜா (71)
அ.தி.மு.க எம்.பி. அன்வர் ராஜா (71) இவர் முதல் மனைவியை விவகாரத்து செய்துவிட்டு, தாஜிதா என்பவரை 2-வது திருமணம் செய்தார். 
தாஜிதா கடந்த ஆண்டு இறந்து போனார். 
அன்வர் ராஜாவுக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
 தற்போது அரியானாவை சேர்ந்த 35 வயது பெண்ணை 3-வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.புது மாப்பிள்ளைக்கு வாழ்த்துகள்.
படத்தில் உள்ளவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேத்யூ மாலோனி.இவர்  தனது வளர்ப்புப் பிராணியான எலியை கடித்து விட்டு மது அருந்திய காட்சியை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியதால்   மாட்டிக்கொண்டுள்ளார். இவர் மீது எலியை கடித்து கொடுமை படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், மேத்யூவிற்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அளித்து ஆஸி., நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இங்கு பலரை எலியால்  கடிவாங்கி  சிகிசை பெற்றுள்ளோம் அவர்களுக்காக வாதாட யாருமே இல்லையா?
=================================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?