மெட்ரோ: ஒரு விவகாரம்.

எல்லொருக்கும் பொய் சொல்ல உரிமை இருக்கிறது. வள்ளுவரே தேவையான இடங்களில் போய் சொல்லலாம் என்று அனுமதித்திருக்கிறார்.
ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வர் அடுக்கடுக்காக போய் சொல்லுவது சரியாக இருக்குமா.அதுவும் பதிவாக்கக்கூடிய சட்டமன்றம் ,அரசு விழா மேடைகளில் ?
110 விதிகளில் சொல்லப்பட்டவை,சொல்லப்படுபவை எல்லாமே அந்த கோயபல்ஸ் வரிசையில் இருப்பது ஒரு முதல்வருக்கு,கட்சித்தலைவருக்கு அழகா?
இன்று அவரின் பொய்யாய் அப்படியே உண்மை போல் அவரது ஆதரவான ஊடகங்கள் வெளியிடலாம்.உண்மையை மறைக்கலாம்.ஆனால் உண்மை உறங்காது என்றாவது வெளிவரும்.அதை அந்த முதல்வர் பொறுப்பில் இருப்பவர் உணர வேண்டும்.இது யாருக்காக என்று முழிக்கிறீர்களா?
நம் முதல்வர் ஜெயலலிதாவுக்காகத்தான் .
மெட்ரோ ரெயிலை திமுக அரசு கொண்டுவருகையில் சட்டமன்றத்திலும்,வெளியிலும் அதை கடுமையாக கண்டித்து பேசியவர் ஜெயலலிதா .மோனோ ரெயில்தான் சென்னைக்கு ஏற்றது மெட்ரோ திட்டம் பணம்விரையம் என்கிறார்.இன்று மெட்ரோ திட்டம் கொண்டு வந்தது ஜெயலலிதா என்று எழுதும் அதிமுக கடசிப்பத்திரிகையான தினத் தந்தியிலும் அது வெளியாகியுள்ளது.அன்று அது பொதுவான பத்திரிகையாக இருந்த காலம்.
 இன்று மெட்ரோ ரெயில் சென்னை மக்களுக்கு உதவியாக இருக்கிறது.
மெட்ரோ ரெயில் திட்டத்தை  திமுக சென்னைக்கு அரசு கொண்டு வரும் போது பலமாக எதிர்த்தவர் இதே ஜெயலலிதாதான்.
அரசு ஜப்பானில் கடன் வாங்கி பணத்தை வீணடிப்பதாகவும் சென்னைக்கு மெட்ரோ ஒத்து வராது.மோனோ ரெயில் திட்டம்தான் சரியானது என்று கூறியவரத்தான் ஜெயலலிதா.
அதுவும் சட்டமன்றத்தில் .எதிர்க்கட்சித்தளவையாக இருக்கையில்.அவர் அன்று சொல்லிய வார்த்தைகள் பதிவுகளாக சட்ட மன்ற குறிப்பில்  உள்ளன.
ஆனால் அவரே இன்று மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு வித்திட்டது அ.தி.மு.க. அரசுதான் என்ற பொய்யை ஜெயலலிதா  மீண்டும்,மீண்டும்  கூறி வருகிறார் 
ஒரு பொய்யையே திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற கோயபல்ஸ் தத்துவத்தைப் பின்பற்றுகிறார். 
மெட்ரோ ரெயில் திட்டத்தை செயலுக்குக் கொண்டு வந்தது யார் என்று சென்னை வாசிகளிடம்  கேட்டால் , மெட்ரோ என்றால் தி.மு.க. ஆட்சி என்றும், மோனோ என்றால் அ.தி.மு.க. ஆட்சி என்றும் கூறுவார்கள். 
ஜெயலலிதா, மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு வித்திட்டது அ.தி.மு.க. அரசுதான் என்ற பொய்யை எப்படியாவது பல முறை கூறினால் அது உண்மையாகி விடும் என்றே எண்ணிக்  கொண்டு பேசுகிறார்.

முன்பு சென்னையில் “மெட்ரோ ரெயில்” சோதனை ஓட்டத்தை முதல் அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். 14,600 கோடி ரூபாய்க்கான திட்டம் அது. 

அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. காரணம் அத்திட்டம் திமுக ஆரம்பித்த திட்டம் என்பதுதான்.
வெறுமனே பசைக்கோடி காட்டி விட்டார்.அன்றாடம் தலைமைச் செயலகத்தி லிருந்து “காணொலிக் காட்சிகள்” மூலமாக பல திட்டங்களைத் தொடங்கி வைப்பதைப் போல இல்லாமல், இந்தத் திட்டத்திற்கு நேரிலே வந்து தொடங்கி வைத்தார். 
அந்தத் திட்டத்தைப் பற்றி அதனைத் தொடங்கி வைக்கும் விழாவிலே பேசிட வேண்டுமென்றால், அந்தத் திட்டம் எந்த ஆட்சியில், எந்த ஆண்டு தொடங்கப்பட்டது என்பதைப் பற்றியெல்லாம் கூற வேண்டுமல்லவா? 
அதனால் அங்கே விழாப் பேருரை எதுவும் இல்லாமல் கொடி அசைத்து, மெட்ரோ ரெயிலின் சோதனை யோட்டத்தைத் தொடங்கி வைத்து விட்டார். 
அவர் அங்கே உரையாற்றாவிட்டாலும், அந்தத் திட்டத்தைப் பற்றிய குறிப்பு தமிழக அரசினால் தரப்பட்டது. அதிலே அந்தத் திட்டத்தைப் பற்றிய குறிப்புகள் விவரிக்கப்பட்ட போதிலும், கவனமாக அது எந்த ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்பதை விட்டு விட்டார்கள். 
சென்னையில் “மெட்ரோ ரெயில்” திட்டத்தைச் செயல்படுத்த தி.மு. க அரசு  2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக அமைச்சரவையில்  முடிவெடுக்கப்பட்டது. 
விரைவான, நம்பத்தக்க, வசதியான, திறன்மிக்க, நவீன மற்றும் சிக்கனமான பொதுப்போக்குவரத்து அமைப்பாகவும், பெருகிவரும் போக்குவரத்துத் தேவை களுக்கு ஒரு நீண்ட காலத் தீர்வாகவும் அமைந்த இத்திட்டம் குறித்து, ஒரு விரிவான திட்ட அறிக்கையினைத் தயாரிக்கக் அரசு ஆணையிட்டது. அ ந்தப் பணி டெல்லி மெட்ரோ இரயில் கழகத்திடம் அளிக்கப்பட்டது. 
இத்திட்டம் முதல்வர் கலைஞரின்  நேரடிக் கட்டுப் பாட்டின்கீழ் “சிறப்பு முயற்சித்” திட்டமாக அறி விக்கப்பட்டது. 
அதன் பின்னர் இத்திட்டம் துணை முதல்வர்   ஸ்டாலின் பொறுப்பிற்கு மாற்றப்பட்டது. 
விரிவான திட்ட அறிக்கை 1-11-2007இல் கிடைக்கப் பெற்று 7-11-2007 அன்று தமிழக அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
திட்டத்தை நிறைவேற்று வதற்காக “சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட்” என்கிற சிறப்பு வகை பொதுத் துறை நிறுவனத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி, இந்தியக் கம்பெனி கள் சட்டத்தின் கீழ் 3-12-2007 அன்று பதிவு செய்தது.

இந்தத் திட்டத்திற்கான மதிப்பீடு ரூ.14,600 கோடி. திட்டச் செலவில் 59 சதவிகிதம் ஜப்பான் அரசின் அனைத்து நாடுகள் கூட்டுறவுக்கான அமைப்பின் நிதி உதவி மூலம் மேற்கொள்ளப்படும். 

கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் மத்திய அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையே 

21-11-2008 அன்று டோக்கியோ நகரில் கையெழுத்தானது. 

அதுவும் தி.மு. கழக ஆட்சியிலேதான். 
மத்திய அரசு திட்டச் செலவில் 15 சதவீதத்தை பங்குத் தொகையாகவும், 5 சதவீதத்தைக் கடனாகவும் வழங்கும். மாநில அரசின் பங்கு 15 சதவிகிதம் மற்றும் 5.78 சதவிகித சார்நிலைக் கடனாகவும் வழங்கும். 
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, 28-1-2009 அன்று நடைபெற்ற கூட்டத்தில் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 
அதுவும் தி.மு. கழக ஆட்சியிலேதான். 
இந்த மெட்ரோ ரெயில் திட்டம் 45.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 வழித் தடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. வண்ணாரப்பேட்டை - சென்னை விமான நிலையம் இடையே 23.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் வழித்தடமும், சென்ட்ரல் - பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2-வது வழித்தடமும் அமைக்கப்படுகிறது. 
மெட்ரோ ரெயிலானது 2 வழித் தடங்களிலும், செல்வதற்கு ஒன்றும், வருவதற்கு ஒன்றுமாக இரண்டு பாதைகள் நவீன முறையில் அமைக்கப்படுகின்றன. 
இதையெல்லாம் அப்படியே மூடி மறைத்து விட்டு, அ.தி.மு.க. ஆட்சியிலேதான் மெட்ரோ திட்டத்திற்கு வித்திடப்பட்டது என்று ஜெயலலிதா வாய் கூசாமல் அரசு விழா மேடையிலேயே தவறான தகவல்களை சொல்லுகிறார்..
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இவ்வாறு முனைப்போடு முயற்சித்து தொடங்கப்பட்ட திட்டம்தான் “மெட்ரோ ரயில்” திட்டம். 
 ஜெயலலிதா 2011ல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் இதைப் பற்றி  பேசியவைகளே மெட்ரோ சென்னை வந்த வரலாறை வெளிச்சமாக்கி விடும்.

2011ஆம் ஆண்டில், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அ.தி.மு.க. அரசு 3-6-2011 அன்று ஆளுநர் 
 படித்தஅறிக்கையிலேயே,
 “சென்னை மாநகருக்கு தற்போதுள்ள போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட மோனோ இரயில் திட்டத்தை அரசு செயல்படுத்தும். 
முதற்கட்டமாக 111 கிலோ மீட்டருக்கு இத்திட்டம் செயல்படுத்தப் பட்டு, படிப்படியாக 300 கிலோ மீட்டர் வரை விரிவு படுத்தப்படும். கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி போன்ற மாநகராட்சிகளிலும் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்க “மோனோ ரெயில்” திட்டம் செயல்படுத்த உரிய ஆய்வுகள் மேற்கொள் ளப்படும்” என்று அறிவித்தார்.
 மெட்ரோ ரெயில் திட்டத்தைத் தொடங்கப்போவதாகக் கூறவேயில்லை.

அதற்குப் பிறகு 4-8-2011 அன்று படித்த நிதி நிலை அறிக்கையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், “மோனோ ரெயில்” திட்டத்தை விரைவில் தொடங்குவதற்குத் தேவையான நிதி ஆதாரம் இந்த ஆண்டிலேயே கண்டறியப்படும் என்றார். 

இது வரை கண்டறிந்தார்களா என்பது தெரியவில்லை.? 

மீண்டும் 30-1-2012 அன்று ஆளுநர் உரையில், “மோனோ ரெயில் திட்டத்தைச்” செயல்படுத்த ஒப்பந்தப் புள்ளி கோரும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்” என்று சொன்னார்கள். 

அதன் பிறகு 26-3-2012 அன்று படித்த நிதி நிலை அறிக்கையில், மோனோ ரெயில் 4 வழித் தடங்களில் இயங்கும் என்றும், எந்தெந்த வழித் தடங்கள் என்றும் விரிவாகப் படித்தார்கள். 

இன்னும் சொல்ல வேண்டுமேயானால், அன்றைய எதிர்க் கட்சித் தலைவர் ஜெயலலிதா பேரவையில் ஒரு முறை பேசும்போது, “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மெட்ரோ ரெயில் திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். சென்னை மாநகருக்கு எந்த வகையிலும் ஒத்து வராத, பொருந்தாத மெட்ரோ ரெயில் திட்டத்தைக் கொண்டுவரப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். மக்கள் பணத்தை ஏன் இப்படி வீணடிக்கிறீர்கள். 

மெட்ரோ ரெயில் போன்ற உருப்படாத திட்டத்தைச் செயல்படுத்த வேண்டா மென்று தி.மு.க. அரசுக்கு வலியுறுத்தக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
16-6-2012 தேதிய “தினமணி”யில் 34 இடங் களில் மோனோ ரயில் நிலையங்கள் என்றும், அமைச்சர் தலைமையில் 2 மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை என்றும் செய்தி வந்தது. 

மொத்தத்தில் “மோனோ” ரெயில் திட்டமே, தி.மு. கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட “மெட்ரோ” ரெயில் திட்டத்தினை ஏற்கக் கூடாது என்ற ஜெயலலிதா வின் வழக்கமான காழ்ப்புணர்ச்சி காரணமாக அறிவிக்கப்பட்ட போட்டித் திட்டம்.

“மோனோ” ரெயில் திட்டத்தை விட “மெட்ரோ” திட்டம்தான் சிறந்தது என்று ஆதாரங்களோடு மத்திய அதிகாரி ஸ்ரீதரன் போன்றவர்கள், வல்லுநர்கள் எல்லாம், இரண்டு திட்டங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிக்கையாக விடுத்தார்களே, அது கூட உண்மை இல்லையா?

சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்தையே இடையிலே அ.தி.மு.க. அரசு நிறுத்தி வைத்தது. அப்போதுதான் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் முதன்மை ஆலோசகரான திரு. இ.ஸ்ரீதரன் 11-4-2012 அன்று சென்னை யில் அளித்த பேட்டியில், “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தைக் கைவிட்டதன் மூலம் தமிழக அரசு மிக மோச மான தவறைச் செய்கிறது. 
மூன்று மாதங்களுக்கு முன்பு நான் இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்திற்கு இதுவரை அரசிடமிருந்து எந்தப்பதிலும் வரவில்லை. 
மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்தைக் கைவிடும் தமிழகஅரசின் முடிவு வருத்தம் அளிக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில் பணிகளை தொழில் ரீதியில் சிறப்பாகச் செய்து வருகிறது. விரிவாக்கத்தின் மதிப்பை அவர்கள் உணர்ந்துள்ளதால் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். 
மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம் நடைபெற வேண்டுமென்றால், அது குறித்த ஆய்வுகள் இப்போதே மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த ஆய்வுப் பணி 18 மாதங்களை எடுத்துக் கொள்ளும். மத்திய அரசு, நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழக அரசு ஆகியவற்றின் அனுமதிகளைப் பெற மேலும் 18 மாதங்கள் ஆகும். இப்படி மூன்றாண்டுகளுக்கு மேலாகும். 
முதல்கட்டத்துக்கும், இரண்டாவது கட்டத்துக்கும் இடையில் இந்த அளவிற்கு இடைவெளி விழுவது நல்லதல்ல” என்றெல்லாம் கூறியது,. இதுதான் மெட்ரோ திட்டத்திற்கு வித்திட்டதற்கு அத்தாட்சியா ?

இந்த “மோனோ” திட்டம் பற்றி 3-6-2014 அன்று “டைம்ஸ் ஆப் இந்தியா” இதழ், “ஜெயலலிதா மிகவும் ஆர்வத்தோடு செயல்படுத்த விரும்பும் “மோனோ” ரெயில் திட்டம் நகர மறுக்கிறது, இதற்காக ஒப்பந்தப் புள்ளி அளிப்பதற்காக குறிக்கப்பட்டிருந்த காலம் மே மாதம் இறுதியாகும். அதற்குப் பின்னரும்கூட ஒப்பந்ததாரர்கள் அந்தத் திட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை” என்றெல்லாம் எழுதியிருக்கிறது.

சேது சமுத்திரத் திட்டத்தையும், மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தையும், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தையும் முடக்கி வைத்திருப்பதைப்போல, இந்த மெட்ரோ ரெயில் திட்டத்தின் விரிவாக்கத்தையும் முடக்கி வைத்தார்கள். 

அவர்கள்தான் தற்போது மெட்ரோ ரெயில் திட்டத்தின் சோதனை ஓட்டத்தைத் தொடங்கி வைத்தும், தற்போது விரிவாக்கத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியும், தாங்கள்தான் அந்தத் திட்டத்திற்கே காரணகர்த்தா என்பதைப் போல பெருமை தேடிக் கொள்ள முயன்றிருக்கிறார்கள். 
ஆனால் தமிழ் நாட்டு மக்களுக்கு மெட்ரோ ரெயில் திட்டம் திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்ற உண்மை நன்றாகவே தெரியும்!

உண்மையில் திருவொற்றியூருக்கு மெட்ரோ ரெயில் திட்டம் எந்த ஆட்சியிலே அறிவிக்கப் பட்டது தெரியுமா?

 தி.மு. கழக ஆட்சியில் ஆளுநர் உரை7-1-2011 அன்று திரு. சுர்ஜித் சிங் பர்னாலா அவர்களால் பேரவையிலே படிக்கப்பட்டது. 
அந்த உரையில் பத்தி 21 இல், “சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து பாதுகாப்பான விரைவான பயணத்திற்கு வழி செய்ய ரூபாய் 14,600 கோடி செலவில் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஜப்பான் நாட்டு நிதி உதவியுடனும், மத்திய அரசு நிதி உதவியுடனும் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் அனுமதிக்கப்பட்டு மிக விரைவாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
தொடர்ந்து இந்த மெட்ரோ ரயில் இணைப்பு ரூபாய் 3001 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூர் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்தே உண்மை யைத் தெரிந்து கொள்ளலாம். 

ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே மெட்ரோ ரெயில் திட்டம் கூடாது என்றும், மோனோ ரெயில் திட்டத்தைத் தான் நடைமுறைப்படுத்தப் போவதாக வும் கூறியது உண்மைதான். 

ஆனால் பின்னர் நிலைமையை உணர்ந்து கொண்டு, ஆளுநர் உரையிலேயே, வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூருக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார்கள்.

“மெட்ரோ” திட்டத்தைத் தொடக்கத்தில் வரவேற்காத ஜெயலலிதா பின்னர் பிரதமரைச் சந்தித்த நேரத்தில், மெட்ரோ ரெயிலின் 76 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இரண்டாம் பாகப் பணிகளை நிறைவேற்ற 36 ஆயிரத்து 100 கோடி தேவைப்படும் நிலையில், மத்திய அரசின் முழு உதவி நாடப்படுகிறது என்று தெரிவித்தது உண்மைதான். 

 தி.மு. கழக ஆட்சியில் திட்டமிடப்பட்டு, அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு தொடங்கப்பட்ட மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில் தான் வித்திடப்பட்டது என்று கூறுவது, யாரோ பெற்ற பிள்ளைக்கு உரிமை கொண்டாடுவதைப் போல என்பதுதான் உண்மை. 
முதலில் மெட்ரோ திட்டத்தை ஏற்காத ஜெயலலிதா, பின்னர் வேறு வழியின்றி அதனை ஏற்றுக் கொண்டார் என்பதுதான் வரலாற்று  உண்மை.
மெட்ரோ விடயத்தில் முதல்வராக முக்கிய பொறுப்பில் உள்ள ஜெயலலிதா இப்படி பொய்யை கூறி பெயர் பெற நினைப்பது ஏன்?
வேறு அவர் பெருமையாக  சொல்லிக்கொள்ளும்படியான திட்டங்கள் அவர் ஆடசியில் ஒன்று கூட  அவர் திட்டமிட்டதே கிடையாதே .அதனால்தான் மற்றவர் பெற்ற குழந்தைக்கு தனது இன்ஷியலை வைக்கிறார். 
===================================================================================
இன்று,
ஜூலை-25.



  • முதல் சீன-ஜப்பானியப் போர் துவங்கியது(1894)
  • அஜினமோட்டோ கண்டுபிடிக்கப்பட்டது(1908)
  • சோவியத் செய்தி நிறுவனமான டாஸ் நிறுவப்பட்டது(1925)
  • துனீசியா குடியரசு தினம்(1957)
  • இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக பிரதிபா பாட்டீல் பதவியேற்றார்(2007)
===================================================================================




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?