இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வெள்ளி, 29 ஜூலை, 2016

மகதாயி கோவா காவிரி?


மகமாயி விவகாரத்தில் மன்னிக்கவும்.மகதாயி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கர்நாடகா-கோவா-மராட்டியம் ஆகிய மூன்று   மாநிலங்களை இணைத்து மகதாயி நதியும் அதன் கிளைகளும்  செல்கின்றன .  
இந்த நதிநீரை பங்கிடுவது தொடர்பாக மகதாயி நடுவர் மன்றத்தை மத்திய அரசு  அமைத்தது. 

நமக்கும்  கர்நாடகாவுக்கு இருக்கும் காவிரி பிரச்சனை போல் இந்த மூன்று மாநிலங்களுக்கிடையே மகதாயி  பிரசினை இருக்கிறது.
ம ராட்டியத்தில் இருந்து கோவா போய் அங்கிருந்து கர்நாடகாவை அடைகிறது.
அப்படியே தமிழ் நாடும் வந்திருந்தால் பிரசினை இன்னும் பலமாக இருந்திருக்கும்.
காவிரியில் இருந்து கர்நாடகா நமக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா பிரசினை செய்வது போல் 

 மகதாயி நதி நீர் பங்கீடு தொடர்பாக 3 மாநிலங்கள் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பான வழக்குகளை மகதாயி நடுவர் மன்றம் விசாரணை நடத்தி வருகிறது. 

 வடகர்நாடகத்தில் உள்ள தார்வார், கதக், பெலகாவி, பாகல்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மகதாயி நதியில் இருந்து 7.56 டி.எம்.சி தண்ணீர் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி மகதாயி நடுவர் மன்றத்தில் கர்நாடக அரசு இடைக்கால மனு தாக்கல் செய்தது.

இந்த  வழக்கு விசாரணை முடிந்து நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில், கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரித்தது. 
இந்த தீர்ப்பை கண்டித்து வடகர்நாடகாவில் 4  மாவட்டங்களில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. பல இடங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.

இரண்டு பேர்கள் விஷம் குடிக்க முயன்றனராம்.

இப்போது கர்நாடகாவினருக்கு வரும் அதே உணர்ச்சிதானே காவிரியில்  தண்ணீரை வைத்துக்கொண்டு  தமிழகத்துக்கு கொடுக்க அளவு வேண்டிய தண்ணீரை திறக்காமல் விளையாட்டு போடும் போது இங்குள்ள விவசாயிகளுக்கு வரும்,வந்திருக்கும்.

அடுத்தவன் துன்பத்தை உணருங்கள்.
======================================================================================
கொள்ளு அல்லது  கானம் .

குதிரைகள் பலமைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது நமக்கு தெரியும் . ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள். 

கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு ஊளைச்சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. 

குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து கொடுத்தால் சளி காணாமல் போய்விடும்.

அப்படி ஒரு அருமையான மருத்துவகுணம் இந்த கொள்ளுக்கு உண்டு. 

உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாம். குளிர்காலத்தில்தான் அதிகம் சளிபிடிக்கும். அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது. சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்கும். 


அதைவிட ராத்திரி ஒரு கைப் பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.
கொள்ளு ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். 

அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. 

கொள்ளு ஊற வைத்து சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம். கொள்ளுப் பருப்பை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். 
உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும்.

வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதாந்திர ஒழுங்கை சரிப்படுத்தும். 


பிரசவ அழுக்கை வெளியேற்றும். 

கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும். 

எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.
கொள்ளு பருப்பை ஆட்டி பால் எடுத்து அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளுவை அரைத்து பொடி செய்து வைத்துக் கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம். 

நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும். 

இப்படி செய்ய முடியாதவர்கள் கொள்ளு ரசம், கொள்ளு துவையல், கொள்ளு குழம்பு வைத்து அவ்வப்போது உண்டு வந்தாலும் உடல் எடை குறையும்.
======================================================================================
இன்று,
ஜூலை-29.
  • உலக  புலிகள் தினம்
  • தாய்லாந்து, தாய்மொழி தினம்
  • ருமேனியா தேசிய கீத தினம்
  •  அணுசக்தி முகமையகம் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது(1957)
  • அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா ஆரம்பிக்கப்பட்டது(1959)
  • ======================================================================================

அம்மா ராக்கெட், அம்மா ஏவுகணையெல்லாம் வேணும்னு கேளு... யாருகிட்ட கேக்குற ?மோடியண்ணன் கிட்டதானே...