உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது


இந்திய அளவில் தமிழர்களின் பெருமையை அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் மொழியில் ஜெயலலிதாவின் கொத்தடிமைகள் நாளத்தூரும் அதிகரித்து வருகின்றனர்.

பனிமலை செறிந்த காஷ்மீர் சில தீவிரவாத கும்பல்களால் தினமும் அல்லோகல்லம் பட்டுக்கொண்டிருக்கிறது.

வழக்கமான வாழ்க்கையை அங்குள்ள மக்கள் தொலைத்து விட்டு என்றுதான் இந்த போராட்டங்கள் ஒழியுமோ என்று ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லா இந்திய  நாளிதழ்கள் ,அரசியல் வாதிகள் இது பற்றி ஆவேசமாக பேசினாலும் அதை பொறுப்பாக கவனித்து கொள்கை முடிவுகளை சொல்ல வேண்டிய பிரதமர் பொறுப்பில் உள்ள நரேந்திர மோடி அவர்களோ இதுவரை காஷ்மீர் பற்றி,அங்கு நடக்கும் போராட்டங்கள் பற்றி எதுவும் வாயை திறக்கவில்லை.
கண்டு கொள்ளவில்லை.
அவர் அடுத்து செல்ல வேண்டிய நாட்டை உலக வரை படத்தில் தேடும் முக்கிய பாணியில்தான் இருப்பார் .அப்படித்தான் என்னத்த தோன்றுகிறது.

இப்படி எரியும் காஷமீர் பிரசனையை பற்றிய விவாதம் பாராளுமன்றத்தில் ஒட்டு மொத்த கட்சிகளும் உணர்வு பூர்வமாக பேசிக்கொண்டிருக்கையில் இது தொடர்பாக நம் தமிழகத்தில் இருந்து சென்ற அதிமுக உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் தனக்குகொடுக்கப்பட்ட வாய்ப்பை பயன் படுத்திய விதம்தான் இன்று பாராளுமன்ற உறுப்பினர்கலால் மட்டுமின்றி அனைத்து அரசியல்வாதிகளாலும் ,காஷமீர் தீவிர வாதிகள் குழுக்களாலும் பேசும்பொருளாக இருக்கிறது.

அவரை உரை ,பாடல் பொன்னெழுத்துக்களால் அவர் முதுகிலே பொறிக்கப்பட்ட வேண்டும்.
அதனை அவரை கொத்தடிமையாக வைத்துள்ள முதலாளி ஜெயலலிதாதான் செய்து முடிக்க வேண்டும்.
அப்படி என்ன நவநீதகிருஷ்ணன் சிறப்பாக செய்து விட்டார்.?என்ற மிகப்பெரிய கேள்வி தமிழக மக்கள் மனதில் எழும்.அவரின் அறிய பாடலை,உரையை சரியான முறையில் தமிழகத்தில் பரப்பாத நடுநிலை ஊடகங்கள் செயல் கண்டிக்கத்தக்கது.

 அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஆவேசமாக எழுந்த நவநீதகிருஷ்ணன் தனது கணீர் குரலால்.நெஞ்சை நிமிர்த்தி பாரதி போல் பாட ஆரம்பித்தார்.

"காஷமீர்,பியூட்டிபுல்  காஷமீர்.காஷமீர்  ஒன்டர்புல் காஷ்மீர் "
இது போன்ற தீவிரவாத செயல் செய்வோர்களை திருத்த எங்கள் புரடசித்தலைவர் எம்.ஜி.ஆர்.அன்றே பாடலை அறிவுரையாக பாடி சென்றுள்ளார்.
மீண்டும் பாடுகிறேன் கேளுங்கள் .
"காஷமீர்,பியூட்டிபுல்  காஷமீர்.காஷமீர்  ஒன்டர்புல் காஷ்மீர் "
     இந்த பாடலைக்கேட்டவுடன் அதுவரை சோகமான மனநிலையில் இருந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு கொஞ்சம் சிரிப்பு வர மக்களவையின் இருக்கம் குறைந்தது.

மாற்றமாநில உறுப்பினர்கள் நவநிதியை பார்த்து சிரித்தனர்.
அவரும் பதிலுக்கு சிரித்து அம்மா புகழ் தொடர்ந்தார்.
மற்ற உறுப்பினர்கள் சிரிப்பை பார்க்கையில் அது என்னவோ இந்த கிறுக்கர்களை தேர்ந்தெடுத்து அனுப்பிய தமிழக மக்களைப்பார்த்து சிரித்து துப்பியது போலத்தான் தெரிந்தது.
கொஞ்ச நாட்களுக்குமுன்னர்தான் இதே அதிமுக உறுப்பினர் சசிகலா புஷ்பா டெல்லி விமான நிலையத்தில் ஆராய்ந்தும்,மாநிலங்களவையில் "தமிழக முதல்வரை பற்றியும்,மகளிர்க்கு தமிழ் நாட்டில் பாதுகாப்பில்லை என்று பேசியும் தமிழ் நாட்டின் மானத்தை கப்பலேற்றியிருந்தார்.

அதை இன்று கொடியசைத்து  புறப்பட வைத்துள்ளார் நவநீதகிருஷ்ணன்.

இவர்தான் முந்தைய தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையக்குழு தலைவர் என்றால் இந்தியாவே சிரித்து துப்பும்.

இவரின் தேர்வில் வந்த அரசுப்பணியாளர் எந்த ஆக்கத்தில் இருப்பார்கள்.என்பது இன்றைய தமிழ அரசு அதிகாரிகள் செயல்பாட்டிலேயே வெளிப்படை.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக பொலிரோ ஜீப்பைத்தான் அந்த மாவட்ட ஜெயா தொலைக்காட்சி,நமது எம்.ஜி.ஆர்.நிருபர்கள் வைத்து மாவட்டத்தில் வலம் வருகிறார்கள்.பெட்ரோல் போட மட்டும்தான் அலுவலகம் வரும் ஜீப்பை ஓட்டுவது அரசு ஊர்தி ஓட்டுனர்தான்.

ஒரு மாவட்ட ஆடசியார் அம்மாவின் ஆணைக்கிணங்க மழை பெய்தது என்றார்.

இன்னொரு மாவட்ட ஆட்சியர் ஜெயலலிதா சிறைக்கு சென்று வந்ததற்கு யாகம் வளர்க்கிறார்.

இந்த தமிழ் நாட்டில் வாழ்வதற்கு நாம் என்ன புண்ணியம் செய்ததோமோ .
இதற்கும் புரட்ச்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.பாடல்தான் துணைக்கு வருகிறது.

"உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது.உன் செயலைப்பார்த்து ...''
இந்த பாடலை பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இனி அதிமுக உறுப்பினர்கள் பாடினால்..

அவர் இந்த பாடலை திருப்பி பாடுவார் அல்லவா?
========================================================================================
இன்று,
ஆகஸ்டு-11.
  • ஆர்மீனியா அமைக்கப்பட்டது(கிமு 2492)
  • மலேசியாவின் பெனாங்க்கில் கேப்டன் பிரான்சிஸ் லையிற் என்பவரால் பிரித்தானியக் குடியேற்றம் அமைக்கப்பட்டது(1786)
  • பிரான்சிடம் இருந்து சாட் விடுதலையை அறிவித்தது(1960)

========================================================================================
முகநூல்  

ஒரு சின்ன நீதிக் கதை.

அவன் அவன் மனைவியை விவாகரத்து செய்த பிறகு தன் வீட்டிற்கு வந்தான்.
தன் அறையின் ஒரு மூலையில் ஒரு பெட்டியில் கொஞ்சம் காலியான மது பாட்டில்கள் இருப்பதை அவன் பார்த்தான் .

அதில் இருந்து ஒரு பாட்டில் எடுத்து கோபத்தில் தூர எறிந்து கொண்டு அவன் கூறினான் :
" என் மனைவி என்னை விட்டு போகக் காரணம் நீ தான் ".
மீண்டும் அடுத்த பாட்டில் எடுத்து எறிந்து விட்டு அவன் கூறினான் : 
" எனக்கு குழந்தைகள் இல்லாததுக்கு காரணம் நீதான் ".

மறுபடியும் அடுத்த பாட்டில் எடுத்து எறிந்துவிட்டு அவன் சொன்னான் :
" என் வேலை போகக் காரணம் நீ தான் ".

மீண்டும் அவன் அடுத்த பாட்டில் எறிய எடுத்ததும் அவனுக்கு புரிந்தது, அது லேபிள்கூட கிழிபடாத சரக்கு உள்ள முழுப்பாட்டில் .

அப்ப அவன் சொன்னான் :
" நீ இந்த சைடு ஒதுங்கி நில்லு ..
எனக்குத்தெரியும், உனக்கு இந்த சம்பவத்துல ஒரு பங்கும் இல்லனு ....!"

இதிலிருந்து தெரியும் நீதி:-
"ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் கூட ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது."

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?