விஜய் கோயலுக்கு தங்கப்பதக்கம்.

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக் போட்டி கடந்த 5ம் தேதி துவங்கியது.
இதில்  207 நாடுகள் கலந்து கொண்டன. மொத்தம் 11,551 விளையாட்டு வீரர்கள் இப் போட்டியில் பங்கேற்றனர். 
கலந்து கொண்ட  நாடுகளில் பதக்கம் வென்ற   79 நாடுகளில் இந்தியா 2 பதக்கங்களுடன் 67வது இடத்தில் உள்ளது. 
ரியோ டி ஜெனிரோ:வில் நடை பெற்ற  ஒலிம்பிக் போட்டி கண்கவரும் நடனங்களுடன் நிறைவடைந்தது. அடுத்த ஒலிம்பிக் 2020ம் ஆண்டு ஜப்பானில் நடைபெறும்.
இந்த ஒலிம்பிக்கில் அமெரிக்கா 121 பதக்கங்கள் பெற்று தொடர்ந்து ‘நம்பர்–1’ இடத்தில் உள்ளது. 
இங்கிலாந்து, சீனா அணிகள் முறையே 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளன.  

 வாலிபால், 'ஹேண்ட்பால்', கூடைப்பந்துக்கான பைனல் போட்டிகள் நடந்தது. 

கடைசியாக மல்யுத்தத்திற்கான பதக்கத்துடன் ஒலிம்பிக் போட்டி முடிவடைந்தது. 

இந்த தொடர் துவங்கிய முதல் நாளிலிருந்தே அமெரிக்கா பதக்க வேட்டையை துவக்கியது. 

அமெரிக்காவுடன் சீனா போட்டி போட்டது. 
ஆனால், போட்டி துவக்கி ஓருசில நாட்களில் அமெரிக்கா யாரும் நெருங்க முடியாத வகையில் முன்னிலை பெற்றது. 

துவக்கத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த சீனாவை இங்கிலாந்து பின்னுக்கு தள்ளியது. ஒலிம்பிக் துவங்கிய காலத்தில் அதிக பதக்கங்கள் பெறுவதை வைத்துதான் தரவரிசை நிர்ணயம் செய்யப்பட்டது. இதுகாலப்போக்கில் மாறியது. 

தங்கம் வெல்வதை வைத்துதான் தரவரிசைப் பட்டியிலை ஒலிம்பிக் கமிட்டி வெளியிடுகிறது.

இதில்  அமெரிக்கா, 46 தங்கம் உள்ளிட்ட 121 பதக்கங்களுடன் வென்று முதலிடத்தில் உள்ளது. அதையடுத்து இங்கிலாந்தும் சீனாவும் அடுத்தடுத்த தரவரிசையில் உள்ளன.
 எல்லாநாடுகளும் தங்கம்,வெள்ளி,வெண்கலம் என பதக்கங்களை வென்ற  நேரத்தில் இந்தியா   ஒருபதக்கமாவது வெல்லுமா என்ற ஏக்கம் பரவத்தொடங்கியது.
 ஏங்கிய இந்தியாவுக்கு சிந்து (வெள்ளி), சாக்சி மாலிக் (வெண்கலம்)  இருவரும் தலா ஒரு பதக்கம் வென்று பெருமை சேர்த்தனர். 

கடைசி 7 ஒலிம்பிக்கில் அமெரிக்கா 6வது முறையாக 100க்கும் அதிகமான பதக்கங்களை கைப்பற்றி உள்ளது. 

1904ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கா அதிகபட்சமாக 239 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது, இதற்குப் பின் 1932 (லாஸ் ஏஞசல்ஸ், 103), 1968 (மெக்சிகோ, 107), 1984 (லாஸ் ஏஞ்சல்ஸ், 174), 1992 (பார்சிலோனா, 108), 1996 (அட்லான்டா, 101), 2004 (ஏதென்ஸ், 101), 2008 (பீஜிங், 110), 2012 (லண்டன், 103) பதக்கங்கள் கைப்பற்றி உள்ளன. 

இந்த நிறைவு விழா பிரேசிலின் ரோசா மகல்ஹேய்ஸ் என்ற பெண் இயக்குனர் தலைமையில் விழா நடந்தது. 

நார்வே எலக்ட்ரானிக் இசையமைப்பாளர் கைகோ பங்கேற்றார். 


நிறைவு விழா நிகழ்ச்சியில் நடந்த கொடி அணிவகுப்பில், மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக் இந்தியக் கொடியை ஏந்திச் சென்றார் . 
இந்த ஒலிம்பிக் போட்டியில் பார்வையிடவும் ,இந்திய வீரர்களை உற் சாகப்படுத்தவும் செல்வதாக சென்ற  அமைச்சர் விஜய் கோயல் ரியோ நகரில் நடந்து கொண்ட முறை உலக ஒலிம்பிக் குழுவால் கண்டிக்கப்பட்டது.
அதற்கு மேலும் அமைச்சர் விஜய் கோயல்அவருடன் சென்றவர்களும் நடந்து கொண்ட அநாகரிக முறையால் கோபம் கொண்ட ஒலிம்பிக் குழு கடுமையாக எச்சரித்து அடுத்த குற்றசாட்டு வந்தால் அமைச்சர் விஜய் கோயல் குழுவை ரியோ நகரை  விட்டே வெளியேற்றி விடுவோம் என்று அறிவிப்பை கையில் கொடுத்து விட்டது.

இப்படி அமைச்சர் விஜய் கோயல் அவர் குழுவினர் ஆடிய ஆட்டங்களுக்காவது ஒரு தங்கப்பதக்கம் கொடுத்திருக்கலாம்.
ஆனால் விளையாட்டு வீரக்கல் தாங்கள் சரியானபடி கவனிக்கப்படவில்லை,போட்டிகளின் போது தண்ணீர் கொடுக்கக்கூட இந்திய அரசு உதவிக்கு ஆட்களை அனுப்பவில்லை.
அமைச்சர் விஜய் கோயளுடன் இதற்கென ஆட்கள் வந்திருந்தும் இந்திய விளையாட்டு வீரர்களை யாருமே கண்டு கொள்ளவில்லை.பார்த்து பேசி உற்சாகப்படுத்தவில்லை.
இது போன்ற எல்லா உதாசீனங்களையும் மீறித்தான் இந்தியா வெள்ளியை பெற்றிருக்கிறது.

ஆனால் அமேரிக்கா முதல் 10லட்சம் பேர்களைக் கொண்ட குட்டிநாடுகள் கூட  தங்கள் விளையாட்டு வீரர்களை கொண்டாடியதை பார்க்கையில் இந்திய ஏன் உலக நாடுகள் விளையாட்டுப்போட்டியில் கடைசி இடம் பெறுகிறது என்பது தெரிகிறது.

ஒலிம்பிக்கில் இடம்பெற முடியாத கிரிக்கெட்டுக்கு இந்திய அரசு கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்ற விளையாட்டுகளுக்கு கொடுக்க வேண்டும்.

அல்லது மோடி அமைச்சர் விஜய் கோயலை பதவியை விட்டு தூக்கியாவது மரியாதை செய்ய வேண்டும்.

==============================================================================================
ரிலையன்ஸ் வங்கி?

மாணவர்களிடம் இருந்து கல்விக்கடன் வசூலிக்கும் பணியில் மாணவர்களை தற்கொலை வரை கொண்டுசெல்லவைத்துள்ளது ரிலையன்ஸ். 
இதனை எதிர்த்துத் தொடர் போராட்டங்களை பலநடந்தும்பயனில்லை.
ஸ்டேட் வங்கிக்குஇப்படியோசனையை வழங்கி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இந்த உத்தரவை வழங்கியதில் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் உர்ஜித் பட்டேல்க்கு முக்கிய பங்கு உள்ளது.
அதற்கு முக்கியகாரனம் உர்ஜித் முன்னாள் ரிலையன்ஸ் ஊழியர். நாட்டின் பொருளாதரத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்ற வேண்டிய உர்ஜித் இன்னமும் தன்னை அம்பானியின் அடியாளாக எண்ணிக் கொண்டு திட்டங்களை வகுப்பது இந்தியாவை எங்கேயோ கொண்டு போய்விடும்.
இனி அது ரிசர்வ் வங்கியாக இராது.ரிலையன்ஸ் வாங்கியாகத்தான் செயல்படும்.
ரகுராம்ராஜன் அம்பானி,அதானி யோசனைகளை ஏற்றுக் கொள்ளாததுதான் மத்திய அரசு அவரை ஓரங்கட்டியதற்கு முதல் காரணம்.ஆனால் தற்போதைய கவர்னர் அம்பானிக்காகவே திட்டங்களை தீட்டும் மனமுடையவர்.பிரதமர் மோடியோ அதானிக்காக உழைப்பவர் .ஆக இந்திய மக்களுக்காக திட்டம் தீட்டுபவர்களைத்தான் அரசியல்வாதிகளிலும்,அதிகாரிகளிலும் காணமுடியவில்லை.

=====================================================================================
இன்று,
ஆகஸ்டு-23.
  • மெக்சிகோ, ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அடைந்தது(1821)
  • ருமேனியா விடுதலை தினம்(1944)
  • உக்ரேன் கொடி நாள்
  • ======================================================================================
  • டொரண்ட் உள்ளிட்ட சட்ட விரோதமாக தகவல்களை பகிந்துகொள்ளும் இணையதளங்களை இந்திய அரசு தடை செய்துள்ளது. 
  • இந்த இணையதளங்கள் மூலம் பல்வேறு தரவுகள் மற்றும் தகவல்களை திருட்டுதனமாக பதிவிக்கம் செய்ய முடியும். இதனால் படைப்பாளிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.

    இந்த செயலானது இந்திய காப்புரிமைச் சட்டத்திற்கு ஏதிரானது. எனவே இந்திய அரசால் தடை செய்யப்பட்ட டொரண்ட் உள்ளிட்ட இணையதளங்களை பார்த்தாலோ அல்லது அதன் கோப்புகளாய் பதிவிறக்கம் செய்தாலோ மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், மூன்று லட்சம் அபதாரமும் வித்திக்கப்படும்.

    இந்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவு படி, இந்த தடைசெய்யப்பட்ட இணையதளங்களை பயன்படுத்துவோர் மீது காப்புரிமைச் சட்டப் பிரிவு 63, 63-A, 65 மற்றும் 65-அ வின் படி தக்க தண்டனை வழங்கப்படும்.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?