சும்மாயிப்பது சின்னவிசயமா ?

 சும்மா ஒரு இடத்தில் சொம்பலுடன் இருப்பது எவ்வளவு கடினமானது என்பதை வடிவேலு ஆதாரத்துடன் ஒரு திரைப்படத்தில் சும்மாயிருப்பவர்களின் பொறுப்பை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனாலும் சும்மா (சோம்பி)யிருப்பது என்ற விஷயம் உலக அளவில் தொற்று நோய் போல பரவிக்கிடக்கும்  நிலை.இந்தியாவில் மட்டும்தான் சோம்பேறிகள் இருப்பதாக எண்ண வேண்டாம்.பணக்கார நாடுகளில் இவர்கள் இன்னமும் அதிகம்.
இந்தியாவில் சும்மா இருந்தால் அடுத்த வேலை உணவுக்கு திண்டாட் டம்.அதற்காகவும் டாஸ்மாக்கிற்கு கொடுப்பதற்காகவும் கொஞ்சமாவது உழைக்க வேண்டியுள்ளது.ஆனால் பணக்கார நாடுகளில் ?
இதனால்  உலகுக்கு சுகாதாரச் செலவினங்களில் 2013ம் ஆண்டில்  54 பிலியன் டாலர்களையும், இழந்த உற்பத்தித் திறனால் சுமார் 13 பிலியன் டாலர்கள் என்ற அளவும் உலக நாடுகளுக்கு  செலவு வைத்தது என்று பிரிட்டன்  மருத்துவ மாதஇதழ்  'லேன்செட்'டில் சில ஆய்வாளர்கள் சும்மா இருந்து ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டுள்ளனர்..
ஓடியாடி சுறுசுறுப்பாக உழைக்காமல் சும்மா 'உட்கார்ந்தே' இருக்கும்  சிலரின் வாழ்க்கை யால்  அவர்கள் உழைப்பின்மையால்  ஆண்டுக்கு சுமார் 5 மில்லியன் பேர்கள்  இறப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
கண்டிப்பாக சும்மா இருப்பவர்களுக்கும் தினமும் ஒரு மணி நேர சுறுசுறுப்பான உடற்பயிற்சி தேவை.அதையாவது சோம்பி இருக்காமல் செய்தால் வாழ்நாள் கூடும்  என்று அவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இது உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த உடற்பயிற்சி நேரத்தை விட சுமார் மூன்று மடங்கு அதிகமானது.
சும்மா சோம்பி இருப்பது  வாழ்க்கை முறையால் ஏற்படும் பொருளாதாரச் சுமை, ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கே சுமையாகும் .
 மிக மேம்பட்ட சுகாதார அமைப்புகள் உள்ள பணக்கார நாடுகள்  இந்த சும்மா  பிரச்சனைக்கு அதிக விலை தரவேண்டியிருக்கிறது  என்றும்,அது  நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

=======================================================================================
சமூக வலைத்தள பாதுகாப்பு.

மின்னஞ்சல்களை விட சமூக வலைத்தளக் கணக்குகள்தான் அதிகமாக களவாடப்படும் வாய்ப்புகள் உள்ளவையாக இருக்கின்றன. 
ஃபேஸ்புக், டூவிட்டர், ஜி+, லிங்க்ட்இன் என எந்த ஒரு சமூக வலைத்தளக் கணக்காக இருந்தாலும் அதனை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு 5 வழிமுறைகளை தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பாஸ்வேர்டு அமைக்கும்போது நம்முடன் சம்பந்தமில்லாத வார்த்தைகள் மற்றும் எண்களை இணைத்து உருவாக்கவேண்டும். 
ஒரே பாஸ்வேர்டை அனைத்து கணக்குகளுக்கும் பயன்படுத்தாமல் வெவ்வேறாக அமைக்க வேண்டும்.மின்னஞ்சல், சமூக வலைத்தளம், டிக்கெட் முன்பதிவு எனப் பல இணைய தளக் கணக்குகள் வைத்திருப்பவர்கள் அவற்றை மறக்காமல் இருக்க, லாஸ்ட் பாஸ் (https://lastpass.com/) போன்ற ஆன்லைன் பாஸ்வேர்டு மேனேஜர் மென்பொருள்களைப் பயன்படுத்தலாம்.ஆனால், இத்தகைய பாஸ்வேர்டு மேனேஜர்களும்கூட ஹேக் செய்யப்பட்டதாக சில மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. 
எனவே, இவற்றில் பிரதான மின்னஞ்சல் மற்றும் வங்கிக் கணக்குகளைத் தவிர்த்து பொழுதுபோக்கு மற்றும் தற்காலிக பயன்பாட்டிற்காக உருவாக்கப்படும் இணையதளக் கணக்குகளை மட்டும் பதிந்து வைத்துக் கொள்வது நல்லது.
பாஸ்வேர்டு கடினமானதாக இருந்தாலும், இணையதளம் வழங்கும் மற்றொரு வசதியான மொபைல் போனுக்கு தற்காலிக கடவுச்சொல் அனுப்பும் வசதியையும் பயன்படுத்திக் கொள்ளவும். நம்முடைய பாஸ்வேர்டு கண்டுபிடிக்கப்பட்டாலும், நம்முடைய மொபைல்போனிற்கு வரும் தற்காலிக கடவுச் சொல் இல்லாமல் கணக்கினுள் நுழைய முடியாது. 
அதே சமயம் வேறு எவரேனும் பாஸ்வேர்டு கொடுத்து நுழைய முயற்சிக்கும்போது நமக்கு வரும் இந்த பாஸ்வேர்டு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கையடையலாம். நாம் பயன்படுத்தாத நிலையில் இது போன்ற தற்காலிக பாஸ்வேர்டு வருமானால் உடனடியாக நம் பாஸ்வேர்டை மாற்றிவிடவேண்டும்.
சமூக வலைதளங்களுக்குதனி மின்னஞ்சல் கணக்கு
சமூக வலைத்தளங்களில் இணையும்போது நம்முடைய தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்தாமல் அதற்கென புதிய மின்னஞ்சல் கணக்கை ஏற்படுத்திப் பயன்படுத்தவேண்டும். ஏன் என்றால் அனைத்துக் கணக்குகளுக்கும் ஒரே பாஸ்வேர்டு கொடுக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு என்பதுதான். 
ஒரு கணக்கில் நுழைந்தவர்கள் நம் தொடர்புடைய அனைத்து இணையதளக் கணக்குகளிலும் நுழைவது எளிதாகிவிடும். தனிப்பட்ட மின்னஞ்சல், வங்கிக் கணக்கு பற்றிய விபரங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம்.

உங்கள் வலைத்தளக் கணக்கின் பாஸ்வேர்டு மறந்து விட்டாலோ, ஹேக் செய்யப்படும் சூழல் உருவானாலோ அதனை மீட்டெடுக்க இரண்டு வசதிகள் உள்ளன. 
ஒன்று உங்கள் மின்னஞ்சல் கணக்கு மற்றொன்று மொபைல் எண். பல தவறான பாஸ்வேர்டுகள் கொடுக்கப்பட்டு கணக்கு திறக்கமுடியாத சூழலில் பெரும்பாலும் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் தற்காலிக பாஸ்வேர்டு ஒன்று அனுப்பப்படும். அதனைப் பயன்படுத்தித்தான் புதிய பாஸ்வேர்டை உருவாக்க முடியும். எனவே, மின்னஞ்சல் அல்லது சமூக வலைத்தளக் கணக்கில் நீங்கள் பயன்படுத்தும் மொபைல் எண்ணை ரெக்கவரி ஆப்ஷனில் பதிந்து வைக்கவும். 
சுய விபரங்களை வெளியிடுவதில் கவனம் தேவை.சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரை பிரைவஸி முக்கிய பிரச்சனை. நீங்கள் சினிமா பிரபலமாகவோ, சமூகத்தில் பலருக்கும் அறிமுகமான மனிதராகவோ இல்லாத பட்சத்தில் உங்கள் சுய விபரங்களை பதிவிடும்போது (பிரைவஸி) மீது தனிக் கவனம் செலுத்துங்கள்.
உதாரணமாக, ரெக்கவரி பாஸ்வேர்டு ஆப்ஷனில் உங்கள் வளர்ப்பு நாயின் கலர் என்ன என்ற கேள்விக்கு விடையை நீங்கள் எப்போதோ பதிவிட்டிருக்கும் நாயின் படத்தைப் பார்த்து பதிலளித்து கணக்கினுள் நுழைந்து விடலாம். 
இதே போலத்தான் உங்கள் குடும்பத்தார் பற்றிய விபரங்களை வெளியிடுவதும் பாதுகாப்பற்றதாகும்.மேற்கண்ட 5 பாதுகாப்பு விஷயங்களை எப்போதும் கவனத்தில் கொள்ளுங்கள். சமூகவலைத்தளங்கள் பாதுகாப்பிற்கு உரியவையல்ல. 
நீங்கள் சமூகத்தில் பிரபலமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களைப் பற்றிய தகவல்கள், படங்கள் எதுவாயினும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பிறகு பதிவேற்றவும். 
முகம் தெரியாத நபர்கள் நிறைந்த உலகத்தில் தனி நபராக இருக்கும் நீங்கள் பாதுகாப்பிற்கான முகமூடியுடன் இருப்பது அவசியம்.
===================================================================================================================================


புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று , அதற்குத் தேவைப்படும் ஆண்டிபயாடிக்குகளை (நுண்ணுயிர்க்கொல்லி) ஒரு அசாதாரணமான இடத்தில் கண்டறிந்துள்ளனர்.
அந்த இடம்  நமது  மூக்கு !
நமது மூக்குக்குள் வாழும் நுண்ணுயிரிகள் பல ஆபத்தான 'பேத்தஜென்' எனப்படும் நோய்க்காரணிகளைக் கொல்லகூடியவை. 

மிக ஆபத்தான கிருமியான எம்.ஆர்.எஸ்.ஏ உட்பட பல கிருமிகளை அவை கொல்லும் சக்தி படைத்தவை.
பெரும்பாலான நுண்ணுயிர்க்கொல்லிகள் மண்ணில் வாழும் பாக்டிரியாவிலிருந்து உருவாக்கப்படுகின்றன.
ஆனால் மேலும் மேலும் பல நோய்கள்,தற்போது இருக்கும் பல மருந்துகளை எதிர்த்து நிற்கும் வல்லமை பெற்றுவிட்ட நிலையில், ஆராய்ச்சியாளர்கள் மாற்று மூலாதாரங்களைத் தேடி வருகின்றனர்.
இந்த புதியகண்டுபிடிப்புக்குப் பின் உள்ள ஜெர்மன் விஞ்ஞானிகள் புதிய வகை நுண்ணுயிர்க்கொல்லிகளுக்கு இது முதல் உதாரணம்.
 ஆனால் இவை சக்தி மிக்க மருந்தாக மாற்றம் பெற இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும் .
=================================================================================================
இன்று,
ஆகஸ்டு-04.
  • அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிறந்த தினம்(1961)
  • சிட்னியில் மத்திய ரயில்நிலையம் திறக்கப்பட்டது(1906)
  • அப்பர் வோல்ட்டா ஆப்ரிக்கக் குடியரசு புர்கினா பாசோ எனப் பெயர் மாற்றம் பெற்றது(1984)
  • நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது(2007)
======================================================================================
போக்கிமானால்  ரூ.3.30 லட்சம் மொபைல் கட்டணம்.

பிரேசில் சென்றுள்ள ஜப்பானைச் சேர்ந்த ஒலிம்பிக் வீரர், போக்கிமான் கோ விளையாடியதால் ரூ.3.30 லட்சம் அலைபேசி  கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு வந்துள்ளார்.
ஜப்பானை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீரர் யுசிமுரா(27).   கடந்த 2012ம் ஆண்டு லண்டனில் நடைப்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் 
யுசிமுரா தங்க பதக்கம் வென்றுள்ளார். 
 சில நாட்களில் துவங்கவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்காக, தற்போது பிரேசில் சென்றுள்ளார்.

ஆனால், அவர் பிரேசிலிலும், தன்னுடைய ஜப்பான் மொபைல் நம்பரையே பயன்படுத்தி, போக்கிமோன் கோ விளையாட்டை ஆடிநேரத்தை போக்கியுள்ளார். 

 இந்த விளையாட்டில், யுசிமுரா பலமணிநேரத்தைஅலைபேசியில்  செலவிட்டுள்ளார்.
தற்போது  கடந்த ஜூலை மாதத்திற்கான மொபைல் பில் 
யுசிமுராவிற்கு  ஜப்பான் நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. 
அலைபேசி பில்லை பார்த்த யுசிமுரா  மயக்க நிலைக்கு  போய்விட்டார். 
ஆம், கடந்த மாத பில் மட்டும் 3,700 பவுண்ட் (50 ஆயிரம் யென்) என பில் வந்துள்ளது .
இது  இந்திய மதிப்பில் ரூ.3.30 லட்சம் ஆகும் .

ஆனால் அந்த ஜப்பான் நிறுவனம் வீரர்  
ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள யுசிமுரா க்கு அவர் ஜப்பானுக்கு பெருமை தேடி தந்ததற்காக ஒரு பெரிய சலுகையை வழங்கியுள்ளது.
  அலைபேசிக்கான  பில் தொகைரூ 3.30 லட்சத்தை மொத்தமாக  கட்டாமல்  தினமும் 22 பவுண்ட் என்ற விகிதத்தில் செலுத்தலாம் என ஜப்பான் மொபைல் நிறுவனம்  சலுகை வழங்கியுள்ளது. 
 இந்தியாவில் தற்போதுதான் போக்கிமான் கோ பைத்தியம் பிடிக்க ஆரம்பித்துள்ளது.
அவர்களுக்கு இப்படி ஒரு கட்டணம் வந்தால் எந்த சலுகையும் நமது அலைபேசி நிறுவனங்கள் தரப்போவதில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?