இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

காவிரி-ஜெயலலிதா-பாஜக..?

காவிரி பிரச்னை எப்போதும் உள்ளதுதான் எனினும் இந்த ஆண்டு அதிகமாக வன்முறை வெடிக்க காரணம்.
கர்நாடக விவசாயிகளோ ,வழக்கமாக காவிரியை வைத்து அரசியல் செய்யும் வாட்டாள் நாகராஜோ காரணமில்லை.
 கர்நாடக பா.ஜ.கட்சி ,மத்திய அரசு இவர்களை விட  முக்கியமாக   தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர்கள்தாம்.

முறையாக இதன் முன்னர் முதல்வர்களாக இருந்த கலைஞ்சர் ,எம்.ஜி.ஆர்.நேரடியாக விவசாய நீர்த்தேவை போது கர்நாடக முதல்வரை தொலைபேசியிலும் ,அரசு சார்பில் கடிதம் மூலமும் தொடர்பு கொண்டு  காவிரியில் நீரை திறந்து விடக்கூறுவார்கள்.

வாட்டாள் நாகராஜ் போல் சிலர் எதிர்க்க ,போராட கொஞ்சம் முரண்டு பிடித்து காவிரி நீர் வரும்.
ஆனால் ஜெயலலிதா முதல்வரான பின்னர்தான் இப்போராட்டங்கள்,எதிர்ப்பு அதிகமாகியுள்ளது என்பதை கவனிக்கலாம்.

காரணம் கர்நாடக முதல்வரிடம் காவிரி நீரை தமிழகத்துக்கு தேவையான அளவு திறந்து விடுங்கள் என்று முறையாக கேளாமல் நீதிமன்றத்தை மட்டுமே அணுகுவது.மூன்று முறை கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டு விட்டது.

ஆனால் இதுவரை தமிழ் நாட்டில் திமுக பல முறை வலியுறுத்தியும் அனைத்துக்கடசி கூட்டம் கூட்டப்படவில்லை சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் பேச அனுமதிக்கவில்லை.
ஒரு வேளை "காவிரியை வைத்துக் கொள் ,அம்மாவைத் தா "என்ற அவர் சிறைவாசம் பதாகை உண்மை என்கிறாரே.

அந்த அணுகு முறை கர்நாடக அரசை மட்டுமல்ல அங்குள்ள மக்களிடமும் தமிழகம் மீது அதிருப்தியை உண்டாக்கிவிட்டதுதான் உண்மை.

முன்பு கர்நாடகம் முரண்டு பிடித்தாலும் அவ்வப்போது திறந்து வீட்டா இன்னொரு காரணி வீரப்பன்.
வீரப்பன் தனது முறையில் கர்நாடகாவை எச்சரிப்பதும்,நீதிமன்றம் சொல்லியும் திறக்காத காவிரி திறக்கப்பட்டு விடும்.
ராஜ்குமார் போன்ற்வர்கள் கடத்தல் போன்ற கசப்பான அனுபவம்தான் காரணம்.விடுதலைப் புலிகள்கிருஷ்ண சாகர் அணையை குண்டு வைத்து  போவதாக அப்போது  எழுப்பப்பட்ட புரளி குட காரணம்தான்.

காவிரி நீரில் இவ்வளவு தீப்பிடிக்க காரணம் மத்திய ஆளும் பாஜ.கட்சிதான் .

”அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவினர் தண்ணீர் விடக்கூடாது என்றனர். நான் அதை புறந்தள்ளி விட்டு அரசியல் சாசனத்தைக் காக்க தமிழகத்திற்கு தண்ணீர் விடும் முடிவை எடுத்தேன். இப்போது அவர்கள் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள்.” 
என்று பிரதர் மோடிக்கு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எழுதிய கடிதத்தில் முதல்வர் சித்தராமையா,குறிப்பிட்டிருப்பதே அதை உண்மை என்கிறது. 

குஜராத் ஆட்சியை நீடிக்க ஒரு கோத்ரா ரெயில் எரிப்பை மோடியின் பாஜக கையாண்டதோ ,அதே போல் கர்நாடகாவில் எடியூரப்பாவுக்குப் பின் விட்ட ஆட்ச்சியை பிடிக்க காவிரியை கையாளுகிறது.

அதன் மூலம் குறுகிய கன்னட இன  உணர்வைத்தூண்டி கலவர கர்நாடகாவாக்கி காங்கிரசை ஆட்சியில் இருந்து அகற்றுவதே பாஜக நோக்கம்.அதற்கு அப்பாவி கன்னடர்கள் வெறி பிடித்து அலைகிறார்கள்.
இந்தியாவில் தமிழ் நாடும்,கர்நாடகாவுக்கு அண்டை மாநிலங்கள்.

அங்கு காவிரியில் வெள்ளம் வந்தால் அதை தமிழ் நாடு கேட்டா திறந்து விடுகிறார்கள்.
வறண்டு போனால் தமிழ் நாடு போல் கர்நாடகாவுக்கு காய வேண்டியதுதான்.

அவர்களுக்கு மின்தேவையை பூர்த்தி செய்து ஐ.டி ,வியாபார நிறுவனங்கள் மூலம் செல்வம் கொழிக்க வைப்பது தமிழ் நாட்டு நெய்வேலி உடைபட்ட மின் நிலையங்கள்தான்.இந்த அணு மின் நிலையங்கள் ஆபத்தை எதிர்பார்த்திருப்பதும்,எதிர் கொள்ள வேண்டிய கட்டாயமும் தமிழர்களுக்குத்தான்.
இதுவரை கர்நாடகாவுக்கு மின்சாரம் கொடுக்காதே என்று எந்த தமிழனாவது போராடி கன்னடர்களை தாக்கியிருக்கிறானா.

கர்நாடக கன்னடருக்குத்தான் ஒருத்துளி வியர்வைக்கு ஒரு பவுன் காசை முட்டாள் தமிழன் தன்  மனைவி தாலியை விற்று கொடுத்துக்கொண்டிருக்கிறான்.
கர்நாடக மக்களை அதனது அரசியல் நோக்கத்துக்காக பாஜக சீரழிவை நோக்கி தள்ளுகிறது.

காவிரியில் தமிழ் நாட்டுக்கு தண்ணீர் திறக்காதே என்று இதுவரை கர்நாடக விவசாயி கள் போராடவில்லை என்பதுதான் உண்மை.போராடுவது பாஜக, நாகராஜ் போன்ற அரசியல்வாதிகள் அமைப்புகள்தான்.

தமிழ் நாடும் கர்நாடகாவும் இந்தியாதான். அண்டை மாநிலங்கள்தான் .இந்தியா -பாகிஸ்தான் அல்ல.
நாளை குடகுமலையில் பூகம்பம் வந்து இயற்கை பேரிடர் வந்தால் அதில் இரண்டு மாநிலங்களும் பாதிப்பைதான்  பெறப்போகிறது.

கர்நாடகாவில் காவிரி உற்பத்தியானாலும்,அது அதிகம் பாய்ந்து வலுப்படுத்தியது தமிழ் நாட்டைத்தான்.அதில் குறுக்கே அணைக்கட்டியதால் மட்டும் காவிரி கர்நாடகாவுக்கு சொந்தமாக்கி விட்டது.
கர்நாடகா முதல்வர் ஐந்து நாட்களுக்கு முன்னரே அங்கு தமிழர்கள் தாக்கப்பட்டவுடனே தமிழக முதல்வருக்கும்,தலைமைசெயலருக்கு தமிழ் நாட்டில் உள்ள கன்னடர்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கடிதம் எழுதி தொலைபேசியிலும் பேசிவிட்டார்.
ஆனால் அங்கு தமிழர்கள் தாக்கப்படும்,தமிழக பேருந்துகள்,வாகனங்கள் எரிக்கப்படும் ,தமிழர்கள் சொத்துக்கள் சூறையாடப்பட்டு இதுவரை தமிழக முதல்வர் என்ற பொறுப்பில் இருக்கும் கன்னட அய்யங்கார் ஜெயலலிதா கர்நாடக அரசை தமிழர்களை பாதுகாக்க கோரவில்லை.மத்திய அரசையும் துணை ராணுவத்தை அனுப்ப சொல்லவில்லை.
அவ்வளவு ஏன் தமிழ் நாட்டில் முதல்வர்,அரசு என்று ஏதாவது இருக்கிறதா என்றே தெரிய வில்லை.
சித்தராமையா கடிதத்திற்கு பின்னர் முதல்வர் பொறுப்பில் ஜெயலலிதா காவல்துறை அதிகாரிகள் கூட்டம் கூட்டி கன்னடர்கள் வீடுகளுக்கும்,தொழில்களுக்கு பாதுகாப்பது போட சொல்லியுள்ளார்.
அதன்படி நடிகர்கள் ரஜினி காந்த் ,ரமேஷ் அரவிந்த்,பாபி சிம்கா ஆகியோர்கள் வித்துக்கள் முன்னாள் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

 இப் பிரசனையை சுமுகமாக்கி இரு மாநிலங்களையும் அமைதி படுத்த வேண்டிய மத்திய அரசு  இன்னமும் காவிரியில் கால் வைக்காதது ஏன்?

பிரதமர் மோடி தமிழ் நாடு முதல்வர் ஜெயலலிதா போலவே வாயைத்திறக்காமல் இருப்பது ஏன்?
ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கு மனக்குழப்பம்.

மோடிக்கு ?
பாஜக கையாளும் அரசியல் கலவரத்தை அதன் பயன் தெரியும் வரை விட்டு பிடிப்பதுதானோ?
=====================================================================================
ன்று,
செப்டம்பர்-13.

  • உலக சாக்லேட் தினம்
  • நியூயார்க் நகரம், அமெரிக்காவின் தற்காலிக தலைநகராக அறிவிக்கப்பட்டது(1788)
  • ஹனிபல் குட்வின், செலுலாயிட் புகைப்பட சுருளைக் கண்டுபிடித்தார்(1898)
  • ஐதராபாத், இந்திய ஆளுமைக்குள் வந்தது(1948)
======================================================================================

இதை இவ்வளவு தைரியமா செய்தது யாருடா?