உப்பின் அளவு


 சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அது தேவையான  அளவுக்குக் கீழே உணவில் உப்பின் அளவைக் குறைப்போருக்கு இதயத் தொடர்பான நோய்கள் வரும் என்பதுதான்.

சாதாரணமாக உணவில் உப்பின் அளவு அதிகமாக பயன்படுத்துவோருக்கு இரத்த அழுத்தம் தொடர்பான நோய்கள் உருவாவதோடு அதுவே மாரடைப்பு ஏற்படுவதற்கும் ஒரு காரணமாக அமைகிறது என்ற கருத்து மருத்துவர்களிடையே உள்ளது. 


இதனால் இரத்த அழுத்தம் தொடர்பான நோய்களுடன் வரும் நோயாளிகளுக்கு உணவில் உப்பின் அளவைக் குறைக்க மருத்துவர்கள் ஆலோசனை கூறுவர்.
ஆனால், மாரடைப்பு வராமல் தடுப்பதற்காக அவ்வாறு உப்பைக் குறைத்துக்கொள்வதே மாரடைப்பு முதலான இதய நோய்களை ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வுத்தகவல் பெரிய வெடிகுண்டை வீசியுள்ளது.
டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழக மருத்துவமனையில் 40,000 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 67 ஆய்வுகளின் முடிவில், உப்பைக் குறைத்துக் கொள்வோரின் உடலில் 2.5 சதவீதம் கொழுப்பு அதிகரிப்பதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
இவ்வாறு தொடர்ந்து உப்பைக் குறைத்து வந்தோரின் சிறுநீரகத்தில் ரெனின் என்ற புரதமும், அல்டோஸ்டிரோன் என்ற ஹோர்மோனும் அதிகளவில் சுரந்து, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளஹ்டு. இந்த ஆய்வு தொடர்பாக மருத்துவ ஆய்வாளர் நீல்ஸ் கிரெடல் கூறுகையில், “உப்பைக் குறைத்தால் அது இருதய நோயை ஏற்படுத்தும். 
அதற்குப் பதிலாக புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிக உடல் எடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
“நாளொன்றுக்கு உணவில் சராசரியாக 6 கிராம் அளவு உப்பைச் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்” என்று இருதய நிபுணர்கள் சங்கத்தின் அறிவியல் ஆலோசகர் கெய்த் பெர்டிணாண்ட் தெரிவித்துள்ளார். 
இது மேற்படி ஆய்வு முடிவிற்குச் சாதகமானதாகவே உள்ளது.
அதே சமயம், “உணவில் உப்பைக் குறைப்பதால் இருதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை” என்று பேராசிரியர் கிரஹாம் மெக்கிரிகோர் தெரிவித்துள்ளார்.
எது எப்படியிருந்தாலும் உணவில் தொடர்ச்சியாக உப்பின் அளவினைக் குறைத்துக் கொண்டு வருவது உடல் நலத்துக்கு ஆரோக்கியமானதில்லை என்பது மட்டும் உறுதி. 
அவரவர் உடல் எடைக்கேற்ப, தினசரி ஒரு குறிப்பிட்ட அளவாவது உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதே உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
=============================================================================
வடகொரியா குற்றவாளியா?
சோசலிச வடகொரியா என அழைக்கப் படும் கொரிய மக்கள் ஜனநாயக குடியரசு கடந்த செப்டம்பர் 9 அன்று மற்றொரு அணுசோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.இந்த தகவல் வெளியான உடனே அமெரிக்கஜனாதிபதி பாரக் ஒபாமா அதிர்ச்சியும், எரிச்சலும் அடைந்துள்ளார். 
“தெளிவாகச் சொல்கிறேன், வடகொரியா ஒரு அணு ஆயுத நாடு என்பதை அமெரிக்கா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது... தற்போது நடத்தப்பட்டுள்ள அணுசோதனை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களுக்கு எதிரானது ஆகும்; சர்வதேச விதிகளைவடகொரியா தொடர்ந்து மீறி வருகிறது; 
சர்வதேச சமூகத்தின் ஒரு பொறுப்புமிக்க உறுப்பினராக நீடிப்பதில் வடகொரியாவுக்கு ஆர்வமில்லை என்பதையே அதன் போக்கு காட்டுகிறது...” 
என்று ஒபாமா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.ஒபாமாவின் கண்டன அறிக்கையை நாம் மனதில் கொள்வோம்; அவரிடம் நாம்எழுப்பும் சில கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா என்று பார்க்கலாம்:
1. கொரிய மக்கள் ஜனநாயக குடியரசுவேறு ஏதேனும் ஒரு நாட்டின் மீது இதுவரையிலும் தாக்குதல் நடத்தியிருக்கிறதா? அருகிலிருக்கக் கூடிய தென்கொரியாவின் மீதாவது தாக்குதல் நடத்தியிருக்கிறதா?
2. ஐக்கிய நாடுகள் சாசனத்தின் பிரிவு51ன் படி உறுதி செய்யப்பட்டுள்ள தற்காப்புக்கான உரிமை என்பது ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒவ்வொரு உறுப்பு நாட்டிற்கும் பொருந்தும் அல்லவா?
3. பிற நாடுகளை தாக்குவதிலிருந்து அமெரிக்கா தன்னை சற்றேனும் சுயமாக கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறதா?
4. இராக், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் நடத்தப்பட்டு வரும் கொடூரத் தாக்குதல்களும், யுத்தங்களும் சர்வதேச விதிகளின் எந்தப் பிரிவின் கீழ் வருகின்றன என்று சொல்ல முடியுமா?
5. சர்வதேச சமூகத்தின் ஒரு பொறுப்புமிக்க உறுப்பினராக இருப்பதற்கான சிறுமுயற்சியையாவது அமெரிக்கா செய்திருக்கிறதா?
6. அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள்படிப்படியாக அந்த ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று சட்டப்பூர்வமாக நிர்ப்பந் திக்கிற அணு ஆயுதப் பரவல் தடை உடன் பாட்டில் கையெழுத்திட்டிருப்பினும், அந்தவிதிகளையெல்லாம் அமெரிக்கா பின்பற்றிநடக்கிறதா?
7. இராக்கும், லிபியாவும், சிரியாவும் அணு ஆயுத நாடுகளாக இருந்திருந்தால் அவற்றின் மீது அமெரிக்காவும், அதன்கூட்டாளிகளும் தாக்குதல் நடத்தியிருப்பார்களா?

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை போலவே ஒட்டுமொத்த மேற்கத்திய கார்ப்பரேட் ஊடகங்களும் வடகொரியா மீது ஆத்திரத்தை அள்ளி தெளித்து வருகின்றன. 
உதாரணத்திற்கு கனடாவின் அதிகாரப்பூர்வ ஊடகமான சிபிசி பத்திரிகையில் ஷாஷா பெட்ரிசிக் எனும் பத்திரிகையாளர் விரிவான ‘ஆய்வு’ என்ற பெயரில் எழுதியிருக்கிறார். “வேண்டுகோள்கள், கெஞ்சல்கள் அல்லது மிரட்டல்கள்... இவை எதையும் வடகொரியா மதிக்கவில்லை. அது தன் இஷ்டத்திற்கு அணு சோதனை நடத்திக் கொண்டிருக்கிறது” என்று தனது கட்டுரையில் பெட்ரிசிக் கூறியிருக்கிறார்.
அவருக்கு தெரியாது போலும், 1994ல் அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட செயல்வரையறை என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது பற்றி.அந்த ஒப்பந்தத்தின்படி வடகொரியா உடனடியாக தனது அணு உலை கட்டுமானப் பணிகளையும், செயல்பாடுகளையும் நிறுத்தி வைத்தது. 
உண்மையில் அந்த சமயத்தில் மின்சார உற்பத்திக்காகத்தான் வடகொரியா அணு உலைகளை தனதுநாட்டில் கட்டமைக்க முயற்சி மேற்கொண்டிருந்தது. 
ஆனால் அணு ஆயுதம்தான் தயாரிக்கிறார்கள் என்று கூறி அமெரிக்கா ஒப்பாரி வைத்தது. இதைத் தொடர்ந்து பிரச்சனை எழுப்பப்பட்டு, பேச்சுவார்த்தை நடந்து மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், வடகொரியா தனது அணு உலை கட்டுமானப்பணியை நிறுத்தினால் அதற்கு பதிலாக கதிர்வீச்சு அபாயம் இல்லாத - 
அணுஆயுதம் தயாரிக்க பயன்படுத்த முடியாத அணு மின் உலைகளை வழங்குவதாக அமெரிக்கா ஒப்புக் கொண்டது.
அதன்படியே வடகொரியா தனது பணிகளை நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் ஒப்புக் கொண்டபடி அமெரிக்கா நடக்கவில்லை. கிளிண்டன் காலத்தில் ஏற்பட்ட இந்த ஒப்பந்தத்தை, அடுத்து வந்த ஜார்ஜ் புஷ் நிர்வாகம் குப்பைக் கூடையில் தூக்கிப் போட்டது.இந்த உண்மைகள் தெரியாமல் பெட்ரிசிக் போன்ற மேற்கத்திய பத்திரிகையாளர் கள் விஷமத்தனமாக எழுதி வருகிறார்கள்.
“ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு மிக மிகக்கடுமையான தடைகள் விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட போதிலும் கூட, வடகொரியா திருந்தவில்லை; எனவே வடகொரியாவின் ஒட்டுமொத்த வர்த்தகத்தையும் தடுக்க வேண்டியுள்ளது; பியாங்யாங்கிற்கு தேவையான அனைத்தையும் தடுத்து நிறுத்த வேண்டியுள்ளது” என்று கனடா பத்திரிகையாளர் பெட்ரிசிக் விஷத்தை கக்கியுள்ளார்.
பொருளாதாரத் தடைகள், உணவுக்கும் மருந்துகளுக்கும் தடைகள் என்பதெல்லாம் உண்மையில் ஒரு நாட்டிற்கு எதிரானயுத்தமே. வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா நிரந்தரமாகவே இந்த யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த தடைகள், கொலைவெறி கொண்டவை என்றும், நாட்டையே நிர்மூலமாக்கும் நோக்கம் கொண்டவை என்றும் பேராசிரியர் நோம் சாம்ஸ்கி விமர்சிக்கிறார். 
அத்தகைய கொலை வெறியோடு அமெரிக்கா வடகொரியா மீது தடைவிதிப்பு தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறது. இவை அனைத்திற்கும் மேலாக,இன்றைக்கு வரைக்கும் வடகொரியாவுடன் அமைதி ஒப்பந்தம் எட்டுவதற்கு பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு கூட அமெரிக்கா மறுத்துக் கொண்டிருக்கிறது.
இவை அனைத்தையும் மறைத்துவிட்டு, பெட்ரிசிக் தனது கட்டுரையில், “தான் ஒரு அணுஆயுத சக்தியாக உருவாவதே நோக்கம் என்றும், அமெரிக்காவை அச்சுறுத்துவதற்காகவே அணுஆயுதங்களை உற்பத்தி செய்து கொண்டிருப்பதாகவும் வடகொரியா கூறுகிறது” என்று எழுதுகிறார்.
“வடகொரியா கூறுகிறது” என்று எழுதும்போது வடகொரியாவில் யார் கூறினார்கள், வடகொரிய அரசு கூறியதா, வடகொரிய ஜனாதிபதி கூறினாரா அல்லதுவடகொரியாவின் மக்களில் யாராவது கூறினார்களா என்று பெட்ரிசிக்கால் குறிப்பிட முடியவில்லை. 
இதுவே, இந்த தகவல் பொய்யானது என்பதை நிரூபிக்க போதுமானது.உண்மையில் செப்டம்பர் 9 அன்று அணு சோதனை முடிந்த பின்பு, வடகொரிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக என்ன சொன்னது?“இந்த சோதனையின் மூலம் எதிரிகளை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறோம் என்பதை அறிவிக்கிறோம்” என்று வடகொரியாவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி கூறியது.
எந்த இடத்திலும் அமெரிக்காவை அச்சுறுவதற்காக என்றோ அல்லது அமெரிக்காவை தாக்குவதற்காக என்றோ கூறவில்லை.
தாக்குவதற்காக அல்லது அச்சுறுத்துவதற்காக என்று சொல்வதற்கும், தாக்குதலை எதிர்கொள்வதற்காக என்று சொல்வதற்கும் மிக மிகப் பெரும் வித்தியாசம் உள்ளது என்பதை இந்த உலகம் அறியும்.
ஏனென்றால் எப்போதும் தாக்கப்படும் அபாயத்திலேயே வடகொரியா நிரந்தரமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த உலகின் ராணுவ சூப்பர் பவராக இருந்து கொண்டு ஆயிரக்கணக்கில் அணு ஆயுதங்களை குவித்து வைத்துக் கொண்டு அனுதினமும் மிரட்டிக் கொண்டே இருக்கும் அமெரிக்கா எங்கே? அந்த மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும், ஆக்கிரமிப்புக்கும் இரையாகிவிடக் கூடாது; எப்படியேனும் தற்காத்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் வெகுசில அணு ஆயுத சோதனைகளை நடத்தியிருக்கிற வடகொரியா எங்கே...?
கொரிய தீபகற்பத்தின் மீது வேட்கைகொண்டு, வடகொரியாவை எப்படியேனும் அழித்தே தீருவது என்ற நோக்கத்துடன் அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்கிறது அமெரிக்கா; இன்று வரையிலும் தென்கொரியாவில் உள்ளதனது ராணுவ தளங்களில் - வடகொரியாவின் எல்லைகளில் 28,500 ராணுவ துருப்புகளை அதிநவீன ஆயுதங்களுடன் தயார்நிலையில் வைத்திருக்கிறது அமெரிக்கா; இதுதவிர ஒவ்வொரு வருடமும் வடகொரிய கடல் எல்லைகளையொட்டி அமெரிக்காவும், தென்கொரியாவும் போர்ப் பயிற்சிகளை நடத்திக் கொண்டே இருக்கின்றன..
. பாவம் இந்த தகவல்கள் எல்லாம் பெட்ரிசிக் போன்ற மேற்கத்திய கார்ப்பரேட் ஊடகவியலாளர்களுக்கு தெரியாது போலும்.
எனவே, அமைதியை நிலைநாட்டுவது அமெரிக்காவின் கையிலிருக்கிறது கொரிய தீபகற்பத்திலிருந்து ஒட்டுமொத்த அமெரிக்கப் படைகளும் உடனே வெளியேற வேண்டும். 
வடகொரியா மீதான அனைத்து தடைகளும் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். அப்போதுதான் கொரிய தீபகற்பத்தில் அமைதிக்கான சூழலே பிறக்கும்.
                                                                                                                                         = கிம் பீட்டர்சன் 
====================================================================================

ன்று,
செப்டம்பர்-15.


  • உலக  மக்களாட்சி தினம்


  • இந்திய பொறியாளர்கள் தினம்
  • தமிழக முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை பிறந்த தினம்(1909)
  • தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த மறைமலை அடிகள் நினைவு தினம்(1950)
  • தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது(1981)
  • =
  • =======================================================================================
  • தாராள கொள்ளை மயம் 
    ஏசிசி, ராம்கோ, அல்ட்ராடெக், பினானிஉள்ளிட்ட 11 சிமெண்ட் நிறுவனங்கள் மற்றும் சிமெண்ட் உற்பத்தியாளர் சங்கத்துக்கு ரூ. 6ஆயிரத்து 714 கோடி அபராதம் விதித்திருக்கிறது. 
    நவீன தாராளமயம் நவீன வகையிலான கூட்டுக் கொள்ளைக்குத்தான் வித்திட்டிருக்கிறது. 
  • அதில் ஒன்றுதான் சிமெண்ட் நிறுவனங்கள் செயற்கையாக விலையை உயர்த்தி மோசடி செய்த விவகாரம்.ஒரு பொருளின் தேவை அதிகமாக இருந்துஅந்த பொருளின் உற்பத்தி குறைந்து, விநியோகமும் குறைந்தால் அப்போது அந்தப் பொருளுக்கான தட்டுப்பாடு ஏற்படும். 
  • அதைத் தொடர்ந்து இயற்கையாகவே அதன் விலையும் உயரும். அதே போல் ஒரு பொருளின் தேவை குறைவாக இருந்து அதன் விநியோகம் தேவைக்கு அதிகமாக இருந்தால், அப்போது அந்த பொருளின் விலை இயற்கையாகவே குறையும். தேவை மற்றும் விநியோகத்தின் அளவில் ஏற்படும் மாற்றங்களை பொருத்து விலையும் மாறுபடும். 
  • இப்படித்தான் ஒரு பொருளின் விலை உயர்வதும், குறைவதும் காலம் காலமாக இருந்து வருகிறது.ஆனால் 2012ல் சிமெண்ட் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தித் திறன் அளவிற்கு உற்பத்தி செய்யவில்லை. அதற்கு மாறாக சந்தையில் தேவை அதிகமாக இருக்கும் நிலையில், உற்பத்தியை செயற்கையாக குறைக்கும் வேலையில் ஈடுபட்டது. 
  • அதனால் சிமெண்டின் விலைபன்மடங்கு உயர்ந்தது. இதனால் கட்டுமானநிறுவனங்கள் மட்டுமல்ல, வீடு கட்டும் சாதாரண மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். 
  • அதேநேரம் சிமெண்ட் நிறுவனங்கள் பல்லாயிரங்கோடி கொள்ளை லாபம் அடைந்தன. இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு நிறுவனம் தனியாக இந்த மோசடி திட்டத்தை அரங்கேற்றவில்லை. சிமெண்ட் உற்பத்தியாளர் சங்கமே இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கிறது. 
  • குறிப்பாக 11 மிகப்பெரிய சிமெண்ட் நிறுவனங்கள் இதனை அரங்கேற்றியிருக்கின்றன. இதனை இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் தனதுவிசாரணையில் உறுதி செய்திருக்கிறது. அதனை தொடர்ந்தே சிமெண்ட் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் கடந்தாண்டு போட்டி ஒழுங்குமுறை தீர்ப்பாயம் இந்த அபராதத்தை தள்ளுபடி செய்தது. 
  • மேல்முறையீட்டில் சிமெண்ட் நிறுவனங்களின் மோசடியை நிரூபித்து அபராதத்தை உறுதிப் படுத்தியிருக்கிறது சிசிஐ. இங்கே கேள்வி என்னவென்றால், மோசடி வழியில் ஈட்டிய லாபத்தில் ஒரு பகுதியை அபராதமாக செலுத்துவதுதான் குற்றத்திற்கான தண்டனை என்று முடிவு செய்யப்படுகிறது. அப்படியென்றால் இதுபோன்ற மோசடிகள் எப்படிகுறையும்? 
  • இதே பாணியை மற்ற நிறுவனங்களும் சிண்டிகேட் அமைத்து கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டால் பொதுமக்களின் நிலை என்னவாகும்?. இது பொதுமக்களை மட்டுமல்ல அரசையும் ஏமாற்றும் நம்பிக்கை மோசடி ஆகும். 
  • இது போன்ற மோசடிகளில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  • தொழிலில் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற கார்ப்பரேட் மோசடிகளை கட்டுப்படுத்த முடியும்.
  • இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம்(சிசிஐ). இதன் பின்னணியில் சிமெண்ட் நிறுவனங்களின் கூட்டுச் சதி மற்றும் கூட்டுக் கொள்ளைஉறுதி செய்யப்பட்டிருக்கிறது. 
  • உலகமயம், தாராளமயம், தனியார் மயம் வந்தால் நாட்டில் ஆரோக்கியமான போட்டி ஏற்படும். அதன் மூலம் இந்திய மக்கள் சுபிட்சம் பெறுவார்கள் என வலதுசாரி பொருளாதார அறிஞர்கள் ஆருடம் கூறினர். 
  • ஆனால் நடைமுறையில் மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சி நிற்கிறது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?