உடல் பருமன்

ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. 
இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும். 
பெண்களைப் பொறுத்தவரை போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது.
இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது. 

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும். 
பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். 
இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேரையும் மற்றும் பெருஞ்சீரகத்தையும் பாலில் காய்ச்சிக் குடித்து வந்தால் உடல் எடை குறையும். 
சுரைக்காய் வாரத்திற்கு இரண்டு தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும்.
இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். 

இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும், உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கும்.
====================================================================================
இன்று,
செப்டம்பர்-03.

  • ஆஸ்திரேலிய கொடி நாள்
  • கத்தார் விடுதலை தினம்(1971)
  • உலகின் மிகச் சிறிய நாடான சான் மரீனோ  மரீனசினால் உருவாக்கப்பட்டது(301)
இன்று கோவையில் நடைபெற்ற சிறுவாணியில் கேரளா அரசு அணைக்கட்டுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் .ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

====================================================================================
தூதுவளை
தூதுளை, தூதுளம் என அழைக்கப்படும் அற்புதமான மருந்தின் தாவரப் பெயர் Solanum Trilubatum ஆகும்.
இது வெப்பம் உண்டாக்கி. கபம் நீக்கி. தமிழகம் எங்கும் தன்னிச்சையாக வளர்கிறது.
வீட்டுத் தோட்டத்திலும் வளர்ப்பதுண்டு.
இது ஊதாநிறப் பூக்களையும், உருண்டையான பச்சை நிறக் காய்கள் (சுண்டைக் காய் மாதிரி இருக்கும்) சிவப்புப் பழங்களையும் வளைந்த முட்கள் நிறைந்த தண்டினையும் உடைய ஏறு கொடி, வேர் முதல் பழம் வரை எல்லா பாகமும் பயன் உள்ளது.
இலை கோழையகற்றும், பூ உடலுரமூட்டும். காய் கோழையகற்றிப் பசியைத் தூண்டி மலச்சிக்கல் அறுக்கும். பழம் கோழையகற்றும்.
தூதுவளை இலையைப் பிழிந்து எடுத்து சாற்றை 1 அல்லது 2 துளி காதில் விட்டால் காதுவலி, காதில் சீழ் வடிதல் ஆகியவை குணமடையும்.

இலையை நெய்யில் வதக்கி துவையலாக, குழம்பாகக் கடைந்தோ சாப்பிட கபக் கட்டு நீக்கி உடல் பலமும் அறிவுத் தெளிவும் உண்டாகும். 
இலைச் சாற்றை சம அளவு நெய்யில் காய்ச்சிக் காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டுவர என்புருக்கிக் காசம் மார்புச் சளி நீங்கும். ஆஸ்துமா மூச்சுத் திணறலில் பழத்தூளைப் புகைபிடிக்கச் சளி இளகி குணப்படும்.
நாள்தோறும் 10 பூவைக் காய்ச்சிப் பால், சர்க்கரைக் கூட்டி ஒரு மண்டலம் (45 நாட்கள்) பருக உடல் பலம், முக வசீகரம், அழகும் பெறலாம்.
தூதுவளை இலையில் ரசம் வைத்துச் சாப்பிடலாம். 
தூதுவளை தோசை சாப்பிடலாம். தூதுவளை கசாயம் குடிக்கலாம்.
தூதுவளை உடல்வலிக் கோளாறு, நுரையீரல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.
காயை உலர்த்தி தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் நோய்கள் தீரும். அழற்சி தீரும். வாயு தொந்தரவு தீரும்.
பழம் 
இது மார்பில் இறுகிய சளியை நீக்கும். இருமல் நீக்கும்.பாம்பின் நஞ்சு நீக்கும்.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?