மருத்துகள் விலை வழிகாட்டல்......,



சாதாரண மக்களை விட்டு விலகி எட்டா உயரத்துக்கு எகிறிக்கொண்டிருக்கும்  மருத்துகள் விலையை ஓரளவுக்கு கட்டுப்படுத்த  மருந்துகள் உற்பத்தி, விலை உள்ளிட்டவை குறித்த ஒரு புதிய வழிகாட்டலை ஐ.நா. சுகாதார குழு   முன்மொழிந்துள்ளது.  

உலகம் முழுவதும் மக்கள், குறிப்பாக நடுத்தர வருவாய்க்குக் கீழே உள்ள மக்கள், சேமிப்புக்கே வழியில்லாமல் போகிற அளவுக்கு மருந்து மாத்திரைகளுக்குத் தான் அதிகமாகச் செலவிடுகிறார்கள். தற்போது மருந்துகள் விலை நடுத்தர மக்களையும் வாட்டி வதைக்கிறது.

ஆனால் அதற்கு வாய்ப்பில்லாத ஏழைகள் நோய்களின் கடும் நோவுகளுக்கும் இழப்புகளுக்கும் உள்ளாகிறார்கள். 

இந்நிலையில் ‘ஐக்கிய நாடுகள் மருந்துகள் வாய்ப்பு உயர்மட்டக் குழு  நியூயார்க்கில் வெளியிட்ட அறிக்கை, மக்களின் மருத்துவ உரிமைகளுக்கு பெரும்   துணையாக வெளி வந்துள்ளது.

மருந்து விலைகளை நிர்ணயிப்பதில் அறுந்து தயாரிப்பு நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மையை கடை பிடிக்க  வேண்டுமென வலி யுறுத்துகிறது அந்த அறிக்கை. 


பல நாடுகள் பல மருந்துகளை மக்களுக்குக் கட்டுப்படியாகிற விலைகளில் தயாரிப்பதற்குப் பெரும் தடையாக இருப்பது அறிவுசார் சொத்துரிமைச்சட்டம்தான். 

மருந்து தயாரிப்பில் வெறும் 5 பைசாவுக்கு தயாரிக்கப் படும் மாத்திரை ஒன்று  அதன் தேவை பொறுத்து பலமடங்குகள் விலையை வைத்து விற்கப்படுகின்றன.

அதாவது 5 பைசா தயாரிப்பு செலவான மாத்திரை சந்தையில் 50ரூபாயில் இருந்து,500ரூபாய் விலை வரை விற்கப்படுகிறது.

இதற்கு காரணம் அம்மாத்திரை தயாரிக்கும் நிறுவனம் சொல்லுகின்ற அறிவுசார் சொத்துரிமைச்சட்டம்தான்.
அமெரிக்கத் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்கள், காப்புரிமைச் சட்டங்கள் போன்றவற்றின் நிழலில்தான், இந்தியா போன்ற நாடுகள்  அம்மாத்திரையை குறைந்த விலையில் தயாரித்து மக்களுக்கு விற்க  முயலும் முயற்சிகளுக்கு தங்கள் அறிவுசார் சொத்துரிமைச்சட்டம்  பதிவின் மூலம் முட்டுக்கட்டை போடுகின்றன. 

ஐ.நா. உயர்மட்டக் குழுவின் அறிக்கை, மனித உரிமைகளுக்குத் தான் இப்படிப்பட்ட சட்டங்களையும் ஒப்பந்தங் களையும் விட மேலான முன்னுரிமை வழங்கப் பட வேண்டும் என்று கூறுகிறது.

பொதுவான அடிப்படை மருந்துகளைத் தயாரித்துத் தங்களுடைய மக்களுக்கு வழங்கும்
முயற்சிகள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்றன. 
அந்த மருந்துகளின் பெயரோடு வர்த்தக அடையாளப் பெயரை இணைத்து உலகச் சந்தையை ஆக்கிர மித்துள்ள நிறுவனங்களின் நிர்ப்பந்தங்கள் காரணமாக, அந்த நிறுவனங்களின் தலைமை யகங்கள் உள்ள நாடுகளின் அரசுகள், அவ்வாறு அடிப்படை மருந்துகளைத் தயாரிக்கக்கூடாது என்று கெடுபிடி செய்கின்றன. 

அவ்வாறு அச்சுறுத்தும் நாடுகள் மீது ஐ.நா. அமைப்பு கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கலாம் என்று குழுவின் அறிக்கை வலுவாக வாதிடுகிறது.

வர்த்தகம் சார் அறிவுச் சொத்துரிமை (டிரிப்ஸ்) உடன்பாட்டில் இந்தியா கையெழுத் திட்டபோது, அடிப்படை மருந்துகளுக்கான உரிமையை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது என்று இடதுசாரி இயக்கங்கள் வலியுறுத்தியது நினைவில் கொள்ளத்தக்கது.

மருந்துகள் தொடர்பான ஆராய்ச்சி, அவற்றில் செய்யப்படும் மேம்பாடுகள் ஆகிய வற்றைக் காரணம் காட்டி பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை, எளிய மக்களுக்கு எட்டாத உயரத்தில்வைக்கின்றன. 

சொல்லப் போனால், அந்த நிறுவனங்களின் ஆராய்ச்சிகளே, பரவலான மக்க
ளின் தேவைகள் அடிப்படையில் அல்லாமல், பெரும் லாபக் குவிப்பை நோக்கமாகக் கொண்டி
ருக்கின்றன. 



ஆகவே, நிறுவனங்கள் ஆராய்ச்சி யையும் மேம்பாட்டையும் மருந்துகளின் விலையோடு முடிச்சுப்போடக்கூடாது என்று ஐ.நா. குழு கூறியிருப்பது நோயாலும் அதற்கான மருந்து விலையாலும் நொந்து போயிருக்கிறவர்களுக்கு  ஆறுதலை தருகிறது. 

இத்தகைய ஆக்கப்பூர்வமான அம்சங்கள் இருக்கிற அதே வேளையில், இப்படிப்பட்ட ஐ.நா. முயற்சிகளைக்கூட தங்களது உலக ஆதாய வேட்டை க்குப் பயன்படுத்திக்கொள்ள பல பன்னாட்டு நிறுவனங்கள் முயலும். 
அமெரிக்கா போன்ற நாடுகளில் சந்தை தேக்கமடைந்துவிட்ட நிலையில் இந்தியா போன்ற விரிந்த சந்தைவாய்ப் புள்ள நாடுகளை அவை குறிவைக்கின்றன. 

சீன அரசு இது போன்ற பன்னாட்டு பகாசுர மருந்து நிறுவன தயாரிப்புகளை அதன் தயாரிப்பு விலைக்கு மேல் இவ்வளவு சதவிகிதம்தான் லாபம் வைத்து மக்களுக்கு விற்க வேண்டும் என்று  கறாராக ஆணையிட்டு விட்டது .

இதனால் இந்தியாவில் 60 ரூபாய்க்கும் மருந்து சீனாவில் 10ரூபாய்க்கும் குறைவாகத்தான் விற்கப்படுகிறது.அதை அந்த பன்னாட்டு மருந்து நிறுவனம்தான் விற்கிறது.

இந்த சீன அரசு ஏற்பாட்டைப்போல  பன்னாட்டு மருந்து கம்பெனிகள்  குறித்த எச்சரிக்கை யோடு இந்தியா இதை கையாள  வேண்டும்.

அப்போதுதான்  மக்களுக்கு அவர்களுக்கு கட்டுப்படியான விலைகளில் மருந்து பொருட்கள் கிடைக்கும்.
ஆனால் அமெரிக்க அடிவருடியாகிப் போன மோடியின் கட்சி ஆட்சி மருந்து நிறுவன முதலாளிகளுக்கு ஆதரவாகத்தானே நடந்து கொள்ளும்.இது உலகறிந்த உண்மையாயிற்றே. 
=======================================================================================
ன்று,
செப்டம்பர்-21.

  • உலக அமைதி தினம்
  • ஆர்மேனியா விடுதலை தினம்(1991)
  • மோல்ட்டார் விடுதலை தினம்(1964)
  • பிரான்சில் குடியரசு நிறுவப்பட்டது(1792)
  • பக்ரைன்,பூட்டான், கத்தார் ஆகின ஐ.நா.,வில் இணைந்தன(1971

=========================================================================================

எதற்கு ஆண் ,பெண் ,தனி,பொது இட ஒதுக்கீடு?யாருக்கு எங்கு செல்வாக்கோ அங்கு அவர்களைத்தான் அரசியல் கடசிகள் நிறுத்தும்,வெற்றியும் பெறுவார்கள்.அரசே தேவையின்றி இட  ஒதுக்கீடு  செய்வது தேவைதானா?
பெண் தொகுதி என்பதால் கட்சிக்காரன் காணாது மனைவி,உறவினர்களை நிறுத்தி நிழல் அதிகார மய்யம் ஆகிறான்.இதனால் குழப்பமும்,நிர்வாக சீர்கேடுகளும்தான் உண்டாகிறது.
அனந்த நாயகி,பொன்னம்மாள்,சத்தியவானி முத்து,ஜெயந்தி நடராசன் ,ஜானகி எம்.ஜி.ஆர்.வெண்ணிற ஆடை நிர்மலா முதல் ஜெயலலிதா,சசிகலா புஷ்பம் வரை பெண்களுக்கான இட ஒதுக்கீடு அரசியல்வாதிகளா என்ன?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?