இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

நிற்பது வே,நடப்பது வே,ஒடுவது வேகாலையிலும்,மாலையிலும் பலர் பொதுவான இடங்களில் வேகமாகவும்,மெதுவாகவும் நடை பயிற்சி மேற்கொள்ளுவதை பார்க்கலாம்.

‘வாக்கிங்’ எனப்படும் நடையும், ‘ஜாக்கிங்’ எனப்படும் மெல்லோட்டமும் எல்லோராலும் மேற்கொள்ள முடிகிற எளிய உடற்பயிற்சிகள். 

முன்பெல்லாம் ராமேஸ்வரம்,காசி என்று கால்நடையாக சென்றுவந்தவர்கள்தாம் நாம்.காரணம் அப்போது பேருந்து ,மகிழ்வுந்து போன்றவை புழக்கத்தில் இல்லாத காலம்.வேறு வழியும் இல்லை.
ஆனால் அப்படி சென்றுவந்தவர்களுக்கு புண்ணியம் கிடைத்ததோ இல்லையோ,நல்ல உடல் ஆரோக்கியம்  கிடைத்தது.
ஆனால் இன்று பக்கத்து தெரு கடைக்கு செல்லவே வாகனத்தை நாடுகிறோம்.அதுவும் மிதி வண்டியாக இல்லாமல் மோட்டார் சைக்கிளாக இருக்கிறது.

நடையை நம் வாழ்வில் இருந்து நடையை கட்டவைத்ததால் இளம் வயதிலேயே சர்க்கரை,நோய்,ரத்த அழுத்தம்.
கண்கெட்டபின்னர் சூரிய வணக்கம் போல் இளம்வயதில் வாகனத்தில் சுற்றியதற்கு பிற்காலத்தில் வேகு ,வேகு என்று பூங்காவை ,நடைபாதையை சுற்றி செக்குமாடுகள் போல் வர வேண்டியதிருக்கிறது பலருக்கு.
எப்போதும் நம்மால் நடக்க முடிந்த அளவுக்கு உள்ள தூரங்களுக்கு நடந்து செல்வதும்,கொஞ்சம் தொலைவுக்கு  மிதிவண்டியில் செல்வதும் உடலை நன்கு பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்.

இப்போது வேறு வழியின்றி நடப்போர்களுக்கு சில குறிப்புகள்.
நடை,மெல்லோட்டம் போன்றவற்றை காலையில் எழுந்து செய்தால் உடலும் மனமும் ஆரோக் கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

நடையும், மெல்லோட்டமும் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகளை அளிக்கின்றன என்று தெரிந்து கொள்வது நல்லது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே எளிதாக மேற்கொள்ளக்கூடிய நடைப்பயிற்சி, இதய நோய்கள் வருவதைத் தடுக்கும்.

மேலும், உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை சீராகத் தரும். உடல் எடையைக் குறைக்கும்.


மறதி நோய் வராமல் காக்கும். சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். எலும்புச் சிதைவு நோய் (ஆஸ்டியோபோரோசிஸ்) வராமல் தடுக்கும்.

வைட்டமின் டி அளவை உடலில் அதிகரிக்கச் செய்யும். எந்த நோய் ஏற்பட்டாலும் அதன் வீரியத்தைக் குறைக்கும்.

இனி 
மெல்லோட்டம் என்ற ‘ஜாக்கிங்’ , 

மெல்லோட்டமானது ஓடுவதைப் போலவும் இல்லாமல், நடப்பதைப் போன்றும் இல்லாமல்இரண்டும்கெட்டானாய்  மெதுவாக சீராக ஓடும் பயிற்சி ஆகும்.

எலும்புகளை உறுதியாக்கி தசைகளை வலுவடையச் செய்யும். இதயத் துடிப்பைச் சீராக்கும்.

உடல் எடையைச் சீராகப் பராமரிக்க உதவும். உடலெங்கும் சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி உடல் புத்துணர்ச்சி அடையச் செய்யும்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். உடலின் வளைந்துகொடுக்கும் தன்மையை மேம்படுத்தும்.

ஆனால், மூட்டு வலி உள்ளவர்கள் மெல்லோட்டப் பயிற்சியை மேற்கொள்ளாமல் தவிர்ப்பது சிறந்தது. 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நாவல்

    நாவற்பழம் நாம் அன்றாடம் சாப்பிடும் பழம் அல்ல. ஆனால் இப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் ‘பி’ போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
 

முற்றிய             மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவை.
நாவற்பழத்தின் விதைகள் நீரிழிவு நோயைக் குணப்படுத்த வல்லவை. இதன் விதைகளை நிழலில் உலர்த்தித் தூள் செய்து, தினமும் காலை, மாலை இரு வேளைகளில் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

நாவல் மரத்தின் பட்டைகளை எடுத்து பட்டையை நன்கு நசுக்கி, அரை லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, பின் அந்த தண்ணீரை ஒரு டம்ளர் சுண்டக் காய்ச்சி, பின் ஆற வைத்து குடிக்கவேண்டும். 

இவ்வாறு தினமும் இரண்டு வேளைகள் வீதம் 10 நாட்கள் குடித்து வந்தால், பெண்களுக்கு மாத விடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும்.

சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலை நிவர்த்திசெய்ய நாவல் பழங்களைப் பிழிந்து வடிகட்டிய சாற்றை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக் கொண்டு, அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்கவேண்டும்.

நாவல் மரத்தின் தளிர் இலைகளை நசுக்கிச் சாறு எடுத்து, ஒரு தேக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் பேதியைக் கட்டுப்படுத்தலாம்.

நாவல் மரத்தின் பட்டையை எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்துப் பின் இதமான சூட்டில் வாய் கொப்பளித்து வரவேண்டும். தொடர்ந்து ஓரிரு நாட்கள் இவ்வாறு செய்தால் குடல்புண், தொண்டைப் புண், தொண்டை அழற்சி குணமாகும்.

நாவற்பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதய தசைகள் வலுவடையும், இதய நோய்களில் இருந்து பாதுகாப்புப் பெறலாம். 
=======================================================================================
ன்று,
செப்டம்பர்-25.
 உடுமலை நாராயணகவி

 • மொசாம்பிக், பாதுகாப்பு படையினர் தினம்

 • தமிழ் நாடக எழுத்தாளர் உடுமலை நாராயணகவி பிறந்த தினம்(1899)

 • . ஏ.பி.பரதன் பிறந்த தினம் (1924)

 • அல்ஜீரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டது(1962)
 • ஏ.பி.பரதன்
 ஏ.பி.பரதன்
பிரிட்டிஷ் இந்தியாவில், வங்க மாநிலத்தில் பர்சாலில் பிறந்தவர், 
அர்தேந்து பூஷன் பர்தன் என்ற, ஏ.பி.பரதன்

இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கேற்றார். நாக்பூர் பல்கலையில் பயின்ற போது, மாணவர் இயக்கங்களில் பணியாற்றினார். 

அதன் தொடர்ச்சியாக, அப்போது தடை விதிக்கப்பட்டிருந்த, இ.கம்யூ., கட்சியில் சேர்ந்தார். 

1957ல், மஹாராஷ்டிர சட்டசபை உறுப்பினராக பணியாற்றினார்.
கடந்த, 1990ல், மாநில அரசியலில் இருந்து, தேசியத்திற்கு முன்னேறினார். 

அனைத்திந்திய தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலர், இ.கம்யூ., கட்சியின் துணைச் செயலர் என, படிப்படியாக முன்னேறி, 1996ல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலரானார். 

பக்கவாதம் காரணமாக, 2016 ஜன., 2ல் இறந்தார். 
 • ========================================================================================
 • உடுமலை நாராயணகவி
 • 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ம் நாள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள பூவிளைவாடி என்னும் பூளைவாடிச் சிற்றூரில் 24 மனைத் தெலுங்கு செட்டியார் இனத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி-முத்தம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் உடுமலை நாராயணகவி. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நாராயணசாமி என்பதாகும்.


 • இளம் வயதிலேயே தம் தாய், தந்தையரை இழந்த நாராயணசாமி வறுமையில் வாடினார். தனது சகோதரர் தனுஷ்கோடியின் ஆதரவில் வாழ்ந்தார். நான்காம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்ட நாராயணசாமி, கிராமியக் கலைகளான புரவியாட்டம், சிக்குமேளம், தப்பாட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில்கும்மி போன்ற கொங்கு மண்ணின் கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ஆர்வத்துடன் பங்கேற்றார்.

  விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்; முத்துசாமிக்கவிராயரின் மாணவர்; ஆரம்பக் காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார். இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன.

  1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தவர். நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டு கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர். • ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப்பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு `கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர்.

  அண்ணாத்துரை எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி போன்ற படங்களுக்கும் மு. கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா திரைப்படங்களுக்கும், பிரபாவதி, காவேரி, சொர்க்கவாசல், தூக்குத்தூக்கி, தெய்வப்பிறவி, மாங்கல்யபாக்கியம், சித்தி, எங்கள் வீட்டு மகாலட்சுமி, ரத்தக் கண்ணீர், ஆதிபராசக்தி, தேவதாஸ் போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர்.

  ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர். நேர்மையும், சொல்திறமையும் மிக்கவர். எவ்வகையிலும் தலை வணங்காத உறுதி உடையவர். பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர். திரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர்.

இந்த அதிமுக அல்லக்கை முட்டாள் அடிமைகளின் அலப்பறைக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.கமலஹாசன் இந்த நாட்டை விட்டு போவேன்னு சொன்னது ரொம்ப சரிதான்னு தோணுது.