இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

சனி, 1 அக்டோபர், 2016

றெக்கைகட்டி பறக்கிறது....

வதந்திகள் தற்போது தமிழக அரசாலும் ,காவல்துறையாலும்தான் பரவி வருகிறது.றெக்கைகட்டி பறக்கிறது.
ஒரு மாநில முதல்வர் உடல் நிலை பாதித்தால் அதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை அரசின் தலைமசெயலாளருக்கு உண்டு.
அவருக்கு மட்டும்தான் உண்டு.
ஆனால் தமிழ் நாட்டில் தலைமச்செயலாளர் முதல்வரை இதுவரை மருத்துவமனையில் சந்தித்ததே இல்லை.
தமிழக மக்களைப் போல் ,அதிமுகவினரைப்போல் அவரும் மருத்துவமனை வாசலுடன் திருப்பி அனுப்பப்படுகிறார்.
மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டிய ஆளுநரும் இதுவரை மூன்று முறை சந்திக்க முயன்றும் அனுமதிக்கப்படவே இல்லை.
இதை செய்கிறவர் யார்.

கட்சிக்காரர்கள் பார்க்க அனுமதி இல்லை சரி. மட்டுமின்றி அரசு அதிகாரிகள்,அதுவும் மாநில தலைமைச்செயலாளர் ,ஆளுநர் போன்றவர்களை கூட சந்திக்க விடாமல் தடுப்பது யார்.அவ்வளவ்ய் அதிகாரம் படைத்தவர் யார் இந்திய பிரதமரோ,குடியரசுத்தலைவரோ அல்ல.

சாதாரண போயசு தோட்ட ஜெயலலிதாவின் உதவியாளர் என்ரு சொல்லிக்கொள்ளும் உடன் பிறவா சகோதரி சசிகலா.
இந்த சசிகலா மருத்துவர்களையே ஜெயலலிதாவை பார்க்க விடுகிறாரா என்ரு தெரியவில்லை.

இந்த சகோதரை வார்த்தைக்கு கட்டுப்பட்டு முதல்வரை பார்க்காமல் இருக்கும் அரசு தலைமைச்செயலளர்,அரசு அதிகாறிகள் குறிப்பாக ஆளுநர் இவர்களைப்பற்றி என்ன சொல்ல.

அவர்களின் முதுகெழும்புக்கு அப்போலோவிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.
ஒருவராலும் பார்க்க முடியாத முதல்வர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை,பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% மிகை ஊதியம்,தேர்தல் அதிமுக வேட்பாலர் அறிவிப்பு எல்லாம் செய்கிறாராம்.

ஆனால் அவரை சந்தித்து விட்டு வந்ததாக சொல்லும் பாஜக அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தான் வராண்டாவிலெயே நின்று விட்டு வந்ததாக சொல்லுகிறார்.

ஆக கேப்பையில் நெய் வடிகிறது.அதை அப்போலோ போனால் வாங்கி வராலாம்.
அண்ணா மருத்துவ சிகிச்சை பெற்ற போது அதை தினசரி மக்களுக்கு அறிவித்தது தலைமச்செயளர்தான்.

அட்த்து எம்.ஜி.ஆர அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது இன்றைய முதல்வர் ஜெயலலிதா "அவர் உயிருடன் இருப்பதே சந்தேகம்.ஐஸ் பெட்டியில் வைத்திருக்கிறார்கள் "என்றார்.
ந்ன்கு கவனிக்கவும் சொன்னது எதிர்க் கட்சித்தலைவாரான கலைஞர் அல்ல.எம்ஜிஆர கட்சியை சார்ந்த அன்று கட்சியின் கொள்கை பரப்புச்செயலர் பதவி பிடுங்கப்பட்டு எம்ஜிஆரால்  ஒதுக்கி வைக்கப்படிருந்த ஜெயலலிதா.
அதை உடைத்து காட்டவே பாக்கியராஜ் எம்ஜிஆர் சந்திப்பு,புகைப்படங்கள்,காணொலி கள் தமிழகம் முழுக்க பரப்பப்பட்டன.அத்தேர்தலில் எம்ஜிஆரின் அதிமுக வென்றது.

ஆனால் இன்று...?

ஒரு மாநில முதலவர் ஜெயலலிதா  பலவேறு வதந்திகளுக்கிடையே மருத்துவமனையில் படுத்திருக்கிறார.
அவர நிலையை மக்களுக்கு  எடுத்துச்சொல்லவேண்டிய கட்டாயம் மாநில தலைமைசெயலாளருக்கு இருக்கிறது.

ஆனால அவரை கூட முதல்வரை பார்க்க விடாமல் தடுக்கிறார் எந்த அரசுப்பதவியும்,மக்கள் பிரதிந்தித்துவ பதவியிலும் இல்லாத  ஒரு சாதாரண பெண்மணி சசிகலா.

அவர வார்த்தைக்கு கட்டுப்பட்டு மருத்துவர்களில் இருந்து,அரசு அலுவலர்கள் வரை வராண்டாவில் காவல் காக்கிறார்கள்.

ஆனால் சசிகலாவோ"அக்காள் அப்படி சொன்னார்.அக்கா இதை அறிவித்தார் என்று சொல்ல அதிகாரிகளும்,கட்சியினரும் அவர்  வார்த்தையை தலைமேல் வைத்து ஆடுகிறார்கள்.

ஆக இன்று தமிழ் நாட்டை ஆள்பவர் ,அதிமுக கட்சியை நடத்திவருபவர் அம்மணி சசிகலாதான்.
இந்த போக்கைத்தான் முன்னாள் முதல்வர் கலைஞர் மிக அபாயகராமனது.மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.

அதிமுக கட்சியை சசிகலா நடத்திக்கொள்ளட்டும்.வேட்பாளர் பட்டியலை வெளியிடட்டும்.இல்லை தேர்தலில் இருந்தே ஒதுங்கிக்கொள்ளட்டும்.

ஆனால் முதல்வர் ஜெயலலிதாவை அதிகாரிகள் நேரில் சந்திக்கவிடாமல் அவர் இதை சொன்னார்,அதை சொன்னார் என்று ஆட்சியை நகர்த்த சசிகலாவுக்கு என்ன உரிமை இருக்கிறது,அவர் வார்த்தைக்கு அரசு இ.ஆ.ப ,அதிகாரிகள் எந்த அரசு விதிகளின் படி கட்டுப்படுகிறார்கள் என்றுதான் மக்களுக்கு புரியவில்லை.

அப்படி அதிகாரிகளுடன் ஜெயலலிதா கலந்துரையாடல் ,இடலி சட்னி தின்றார்,திரவ உணவு எடுத்தார் என்றால் அந்த படங்களை வெளியிடலாமே.அதற்கு யார் என்ன தடை போட்டார்கள்.அது அரசின் கட்டாய கடமை அல்லவா?
ஜெயலலிதா சாப்பிடுகிற படம் கூட  வேண்டாம்.
20% போனஸ் அறிவிப்பு கோப்பில் கையெழுத்திடுவது.அதிகாரைகளுடன் காவிரி பிரச்னையில் கலந்துரையாடியது படங்களை மட்டுமாவது வெளியிடலாமே.

அரசுக்கு அது கட்டாய கடமையும் அல்லவா?


இல்லையெனில் வதந்திகள் உலா வரத்தான் செய்யும்.அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அதை உருவாக்க மூலக்காரணமான சசிகலா,அரசு தலைமைச்செயலளர்,அதிகாரிகள்,காவல்துறை உயர அதிகாரிகள் மீதுதான் எடுத்தாக வேண்டும்.

இல்லையென்றால் தமிழச்சிகளுக்கு மட்டுமல்ல,தமிழன்களுக்கு சந்தேகங்கள் அடுக்கடுக்காக வரத்தான் செய்யும்.
========================================================================================
ன்று,
அக்டோபர்-01. 
  • உலக முதியோர் தினம்
  • உலக சைவ உணவு  தினம்
  • இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது(1854)


========================================================================================