இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

திங்கள், 3 அக்டோபர், 2016

என்னமோ நடக்குது...மர்மமாய் இருக்குது..

கலைஞர் என்ன கேட்டார்?
"முதல்வர் உடல் நிலை தொடர்பாக பல்வேறுவதந்திகள் தமிழ் நாட்டில் தினம்தோறும் புதுப்பிக்கப்படுகிறது.

ஆனால் முதல்வர் உடல்  நிலை தொடர்பாக யாரையும் சந்திக்க விடவில்லை.

அவரைப்பற்றி வதந்திகளுக்கு மத்தியில் அப்போலோ மருத்துவர்கள் பொதுவாக குணமாகிறார் என்று மட்டுமே சொல்லுகிறார்கள்.

குணமாகி விட்டார் நாளை விட்டு திரும்புவார் என்று 23ம் தேதி சொன்ன மருத்துவர்கள்தான்.

தற்போது லண்டன் ,அமெரிக்கா விலிருந்து சிறப்பு மருத்துவர்களை வரிசையாக அழித்து வந்து சிகிசை தருகிறதாக சொல்கிறது.

மூடு மந்திரமாக உள்ள இந்த விடயத்தில் ஒரு பக்கம் காவிரி பிரசினை தொடர்பாக ஜெயலலிதா அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தார்,20% மிகை ஊதியம் அறிவித்தார்.
அதிமுக உள்ளாடசி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் என்கிறார்கள்.
ஒரு புறம் குணமாகி விட்டார்.
மறுபுறம் மேலை மருத்துவர்கள் வருகை.
இன்னொருபுறம் கோமோ வதந்தி,
பின்பு அரசு அறிவிப்புகள் வெளியிடுவதாக வதந்தி.

ஆக அதிமுக கடசி தொண்டர்கள் மட்டுமல்ல,அவரை முதல்வராக வைத்துள்ள தமிழ் நாட்டு மக்களும்தான் குழப்பத்தில் உள்ளனர்.

அப்போலோ மருத்துவர்கள் அறிக்கை மட்டும் இவர்களை திருப்தி படுத்த காணாது.
முதல்வர் சிகிட்சை நலம்பெற்றுள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வையுங்கள் என்றுதானே கலைஞர் சொன்னார்.

அதற்கு அதிமுகவினர் கூட  இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.அவர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்.

ஆனால் முன்னாள் ஜெயலலிதா பாதுகாவலரும்,ஜெயலலிதாவை முதல்வராக அடித்தளமிட்டவரும்,இன்றைய காங்கிரசு தலைவருமான "பொன்மனம்"திருநாவுக்கரசர்  ,பாஜக தலைவர் தமிழிசை இருவரும் ஒற்றுமையாக ஜெயலலிதா படத்தை வெளியிட சொல்லுவது அநாகரிகம் என்கிறார்கள்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்.இதேபோல் உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிசை பெற்ற போது இன்றைய முதல்வர் ஜெயலலிதா ,திருநாவுக்கரசு (இன்றைய திருநாவுக்கரசர்)போன்றோர் திமுகவினர் சொல்லாத ஐஸ் பெட்டியி தலைவர் இருக்கிறார்.அதை ஜானகியும்,வீரப்பனும் மறைக்கிறார்கள் என்று கிளப்பி விட்டனர்.அதை எதிர்க்கடசியான திமுகவும் பிடித்துக்கொள்ள எம்ஜிஆர் மருத்துவமனை காணொலி ,புகைப்படங்கள் வெளியாயின.
நடிகர் பாக்கியராஜ் அமெரிக்கா சென்று பார்த்து வந்து மேடைகளில் பேசினார்.
அன்றைய தேர்தலில் திமுக எம்ஜிஆர் சிகிசை பெரும் படத்தை போட்டு "நண்பரின் நலிவு நீங்கிட வாழ்த்துக்கள்!நாட்டின் நலிவு நீங்க வாக்களியுங்கள் உதயசூரியனுக்கு"என்று சுவரொட்டிகளை ஓட்டினார்.

பதிலடியாக எம்ஜிஆர்.செயல்பாடுகளை காணொலியாக்கி வார்த்தைசித்தர் வலம்புரி ஜானின் கவித்துவ பின்னணி பிசுக்களுடன் நாடு முழுக்க ஒளி-ஒலி பரப்பியது.
தேர்தலில் வாக்கையும் சூடியது அன்றைய அதிமுக.

அதே திருநாவுக்கர(சு)சர்  இன்று படத்தை வெளியிட வேண்டாம் என்றும் அப்படி கேட்பது அநாகரிகம் என்று தனது கூட்டணி  கடசித்தலைவருக்கெதிராகவே அறிக்கை வெளியிடுகிறார்.
இது என்ன அரசியலோ?

இவர்கள்தான் இப்படியென்றால் அகில இந்திய கருத்து கந்தசாமியாக சுப்பிரமணிய சாமிக்கு போட்டியாக உருவெடுத்துள்ள மார்க்கண்டேய கட்ஜு அதேவார்த்தைகளை இன்னமும்கடுமையாக கலைஞரை விமர்சித்தே வெளியிடுகிறார்.

கட்ஜு வெறும் பத்திரிக்கை ஆட்ச்சிக்குழு தலைவர் மட்டுமல்ல முன்னாள் உட்ச நீதிபதி.
அதாவது வழக்குகளைவிசாரிக்கும் போது அதற்கு தக்க ஆதாரங்கள் இல்லாவிடில் தீர்ப்பை மாற்றி விடும் நீதிபதி.

வழக்கை விசாரிப்பதற்கான ஆதாரங்கள் ,ஆவணங்கள் ,புகைப்படங்கள்,காணொலியா க இருக்கலாம்.
அப்படி விசாரித்து தீர்ப்பு எழுதியவரே ஆதாரமாக புகைப்படம் வெளியிடக்கூடாது கேட்பவர் என்ன மனிதர் என்கிறார்?
இது மிகப்பெரிய கருப்பு நகைசுசுவை .

இவர் தமிழ் நாடு அரசியலில் திடீர் ,திடீரென கருத்துக்களை அள்ளி விடுவார் எல்லாம் கலைஞரை எதிர்த்துதான் இருக்கும்,கனிமொழி க்கு எதிரான சிபிஐ வழக்கை பற்றி விமர்சிப்பார்.தாக்குவார்.
ஆனால் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை பற்றி வாயைத்திறக்கமாட்டார்.

குமாரசாமி தப்புக்கணக்கு தீர்ப்பை பற்றியும் கருத்து தெரிவிக்கமாட்டார்.
இதன் பின்னாள் இழையோடுவது ஜெயலலிதா மீதான நூல் இழை  பாசம்தான்.அதை எந்த நூல் என்ற முடிவு உங்களுக்கே புரியும்.
ஒரு மாநில அமைசர்கள் ,தலைமை செயலர்,இ.ஆ.ப அதிகாரிகள்,இவரக்ள் சந்திக்க முடியாத நிலையில் உள்ளவர்,மாநில ஆளுநரே வார்டுவரை மட்டும் போய் மருத்துவர்கள் சொல்லுவதை மட்டும் கேட்டு வரும் நிலையில் இருப்பவர்,நலமடைந்து விட்டார் நாளை எதிர் பார்க்கலாம் என்று சொல்லிக்கொண்டே வெளிநாட்டில் இருந்தெல்லாம் மருத்துவர்கள் வந்து சிகிசை அளிப்பதாக கூறபடுபவர்,பிரான்சில் இருந்து கோமாவில் இருக்கிறார்,இன்று ஐஸ்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளார் என்றெல்லாம் வதந்தி கிளம்பக் காரணமானவர் பெயரில் அதிமுக வேட்பாளர் பட்டியல்,அரசு முடிவுகள் ,போனஸ்கள் வழங்கப்படுகின்றன.

ஆனால் அவர் மருத்துவமனை இருப்புப்படம் மட்டும் வெளியிடப்படவில்லை இவ்வளவு  வதந்திகளுக்கு முடிவுகட்ட  இருப்பு உறுதி செய்யப்படவில்லை.
இப்போது புகைப்படம் ஏன் கேட்கப்படுகிரது என்பது புரிகிரதா?

செயல் படா நிலையில் முதல்வர்.ஆனால் அவர் பெயரால் ஆட்சி,அதிமுக கட்சி நடத்தப்படுகிரது.தினசரி அறிவிப்புகள் வெளியானது.

"புகைப்படம் கேட்ட பின்னர் முதல்வர் பெயராலான அரசு அறிவிப்புகள் நின்று விட்டன.
அதன் மர்மம் என்ன?"
சிகிச்சை பெற்ற வார்டையும்,சிகிச்சை அளித்த மருத்துவர்களை மட்டுமே பார்த்து வந்த ஆளுநர்.
மருத்துவமனை வராண்டாவில் அனைத்து அமைச்சர்களும்,காவல்துறை அதிகாரிகளும் திடீர் கூட்டம் போட்டு கலைகின்றனர்..

அதன் பின்னர் முதல்வருடன் அமைச்சர்கள்.அதிகாரிகள் ஆலோசனை என்ற செய்தி ஊடகங்களில்
என்னதான் நடக்குது தமிழ் நாட்டில்.

அந்த முதல்வருடன் அமைச்சர்கல்,அதிகாரிகள் ஆலோசனை படத்தை கொடுக்க வேண்டியது சாதாரண நாளிலேயே அரசின் மக்கள் தொடர்பு துறையின்  கடமை.

இப்படிபட்ட காலக்கட்டங்களில் அது எவ்வளவு பெரிய தேவை?
அதை கலைஞர் கேட்டால் சிலர் அவர் மேல் பாய்கிறார்கள்.

ஒன்னுமே புரியல..என்னமோ நடக்குது...மர்மமாய் இருக்குது...

=====================================================================================
ன்று,
அக்டோபர்-03.

  • உலக வசிப்பிட தினம்
  • ஈராக் விடுதலை தினம்(1932)
  • கொஜொசியோன் நாடு(தற்போதைய கொரியா) டங்கூன் வாங்சியோம் என்பவரால் உருவாக்கப்பட்டது(கிமு 2333)
  • செர்பியா,குரொவேசியா,சிலவேனியா இணைந்து யூகோஸ்லாவியா என பெயரிடப்பட்டது(1929)


இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து உண்மையான அறிக்கை வெளியிட கோரி மனு தாக்கல் செய்துள்ளார். 

அவர் தனது மனுவில், தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்த உண்மையான அறிக்கையை வெளியிட வேண்டும். 

முதல்வரின் உடல்நிலை சரியாகும் வரை தற்காலிக முதல்வரை தமிழக ஆளுநர் நியமனம் செய்ய வேண்டும். 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 
======================================================================================

ஜெ உடல்நிலைய வச்சி கிண்டல் பண்றது மனிதமற்ற செயல்னு பொங்குறவங்களா ஆருனுநெனக்க மாறன் செத்தப்போ பட்டாசு வெடிச்சவங்கதே !