இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

செவ்வாய், 4 அக்டோபர், 2016

எல்லோரும் எம்ஜிஆர், ஆகிவிட முடியாது

"இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு"
இந்த பாடல் ஒலிக்காத இடமில்லை,நேரம் இல்லை.

காரணம் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்.உடல் நலமின்றி மருத்துவமனையில்,அமெரிக்காவில் சிகிசசை பெற்ற காலம்.
அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கட்சியினர் எந்தவித கட்டாயப்படுத்தலுமின்றி,ஏற்பாடுகள் செய்யாமலும் மக்களே எம்.ஜி.ஆர் .நலம் பெற வழிபட்டனர்.
[ஆனால் அதிமுக கட்சிக்குள்ளோ ஜெயலலிதா,திருநாவுக்கரசு போன்றோர் கட்சியை கைப்பற்ற முயன்று கொண்டிருந்தனர்.
செயல்படா முதல்வர்,இனி மீண்டு வந்தாலும் முன் போல் செயல் போடமுடியாது.கட்சிக்குள் இப்போது நான்தான் செல்வாக்கு மிக்கவர் என்று சிலரால் பரப்புரை செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.அது வேறு விஷயம்.]

எவ்வளவு கண்ணீர்கள்,எம்.ஜி.ஆர் படங்களை வைத்து வழிபாடுகள் தமிழகமே மத,இந வேறுபாடுகள் கடந்து எம்ஜிஆர் நலத்துக்கு வேண்டிக்கொண்டிருந்தது.அப்போதும் பல வதந்திகள் பரவிக்கொண்டிருக்கத்தான் செய்தது.

அதை பரப்பியவர்கள் அவரால் புதுவாழ்வு பெற்றவர்கள்தான்.

அந்த நினைப்பு இப்போது அடிக்கடி வருகிறது.
இன்றும் அதே சூழல் .
சாதாரண காய்சசல் என்று சேர்ந்தவர்,இன்று நலமாகி விட்டார்.நாளை விட்டு திரும்புவார்  என்று கூறப்பட்ட இன்றைய தமிழக முதல்வர் உடல் நலம் பற்றிய இன்றைய மருத்துவ அறிக்கை ஜெயலலிதா அபாயக்கட்டத்தை தாண்டி விட்டார் என்கிறது.

எவ்வளவு மூடு மந்திரம்.

அப்படி என்றால் இவ்வளவு நாள் அபாயக்கட்டத்தில்தான் ஜெயலலிதா இருந்தாரா?
பின் எதற்கு நன்றாக இருக்கிறார்.என்ற போய் அறிக்கை வெளியிட்டது அப்போலோ.
பின் எப்படி அதிகாரிகளுடன் காவிரி பற்றி கலந்தாலோசித்தார் ,உள்ளாடசி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் என்ற அரசுப்பணியில் நடந்தன.?

இப்படி உண்மை வெளிவரக்காரணம் கலைஞர்.

ஆளுநர் போய் முதல்வர் உடல் நிலை விசாரிக்க வேண்டும் என்ற பின்னர் ஆளுநர் மருத்துவமனை சென்று பார்வையிட்டேன்  வார்டு நன்றாக இருந்தது என்கிறார்.

ஜெயலலிதா நன்றாக இருந்தால் புகைப்படம் வெளியிட்டால் என்ன?
என்கிறார் கலைஞர்.
படம் வெளி வரவில்லை அதுவரை தினசரி வந்த அரசு ஆணைகள் ,நிர்வாக விவகாரங்கள் பற்றிய செய்தி நின்று போகிறது.
இப்போதுதான் பெருத்த சந்தேகம்.அபாய கட்டத்தில் இருந்து முன்னேற்றம் என்றால் இதுவரை ஜெயலலிதா அபாயக்கட்டடத்த்தில்தான் இருந்திருக்கிறார் என்று அர்த்தம் .

அப்படி இருக்கையில் அப்போலோ மருத்துவர்கள் எதற்கு இட்லி சாப்பிட்டார்,ஓய்வு எடுத்து விட்டு நாளை ஓய்வெடுக்க இல்லம் திரும்புவார் என்று பொய்யான தகவல்களை வெளியிட்டனர்.
அப்படி வெளியிட வைத்தது யார்.?

அரசு 20% மிகை உதயம்,காவிரி பிரசினை கலந்தாய்வு,முதண்மைக் கல்வி அலுவலர்கள் பலர் நியமனம் ,அதிமுக கடசி உள்ளாடசி வேட்பாளர் பட்டியல் இவைகளை வெளியிட்டது யார்.அதற்கான ஆணை முதல்வர் பெயரில் பிறப்பித்தவர் யார்.?

என்று பல கேள்விகள்.ஆனால் மக்களை அன்றாடம் சென்றடையும் நடுநிலை நாளேடுகள்,மின் ஊடகங்கள் இக்கேள்விகளை கிளப்பவே இல்லை.அது கூட பரவாயில்லை அவைகளின் அதிமுக ஆதரவு நிலை தெரிந்ததுதான்.
மக்கள் இவ்வழியில் சிந்தித்து விட கூடாது என்பதால் செய்திகளை கவனமாக வெளியிட்டன.வெளியிட்டு வருகின்றன.

இந்து பத்திரிகை மாலினி என்பவர் ஜெயலலிதா பூரண நலத்துடன் இருக்கிறார் என்று பெரிதாக செய்தி வெளியிடுகிறார்.அவர் நேரில் ஜெயலலிதாவை பார்த்தாரா என்றால் இல்லை பக்கத்து வீட்டு பாட்டி சொன்னது என்கிறார்.

.இவ்வளவு இக்கட்டான நிலையில் உள்ள ஜெயலலிதா வுக்கு இன்றைய பொதுமக்கள் அவர்களை விடுங்கள்   ஜெயா பறக்கும் ஹெலிகாப்டரை பார்த்துக் கும்பிடும் அ திமுக வினர் எங்காவது நாம பெற வழிபாடுகள் நடத்தியுள்ளார்களா?

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா வெளிவர எத்தனை அமைசர்கள் யாகம் வளர்த்தனர்,எங்கெல்லாம் நேர்த்திக்கடன் வைத்தார்கள்,மண் சோறு சாப்பிட்டார்கள் தமிழகத்தில் எந்த ஊரிலாவது பொதுமக்களை நிம்மதியாக இருக்க விட்டார்களா?
மொட்டை 500,அலகு குத்தினால் 1000,பறவைக்காவடி 10000 என்றும்,உண்ணாவிரதம் இருந்தால் பிரியாணி,100 ரூபாய்,ஆண்களுக்கு குவார்ட்டர் என்றும்,பால்கவடிக்கு குடம் என்றும் அதகளப்படுத்தினார்களே அவர்கள் எல்லோரும் இப்போது எங்கே?

இன்று கூட சில இடங்களில் அதிமுகவினர் தீக்குளிக்க முயற்சி என்று செய்தி வருகிறது.ஆனால் உள்ளாடசி தேர்தலில் நிற்க சீட்டு தராததால் என்று முடிவு வருகிறது.
தாரை தப்பட்டை,பிரியாணி,குவார்ட்டர் என்று அதிமுகவினர் அட்டகாசம் செய்கிறார்கள்.வாக்கு சேகரிப்பில் தீவிரமாக இறங்கி விட்டனர்.போட்டியிட வாய்ப்புக்கிடைக்காதவர்கள் அவர்களை தோற்கடிக்க வேளையில் இறங்கி விட்டார்கள்.

அப்போலோ வின் முன்னாள் கூட்டம் காலி.
எம்ஜி.ஆர்  உடல்நலமின்னை,ஜெயலலிதா உடல் நலமின்மையில் கடசியினர்,மக்கள் செயல்பாடுகளை ஒத்து பார்ப்பது தவறுதான்.

ஆனால் ஜெயலலிதா நன்றாக செயல்படும்வரை அவரின் கார் டயரை கும்பிட்ட ,குனிந்தும் ,தவழ்ந்தும் என்று கும்பிட்டவர்கள் நிறைய மனநிலையை சுட்டிக்காட்டவே இப்பதிவு.
எம்.ஜி.ஆரை வீட்டா தான் கட்சிக்காரர்கள் ,மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றவர் என்ற எண்ணம் ஜெயலலிதாவுக்கு எப்போதும் உண்டு.

சமீபகாலமாக தான்தான் ஒரே தலைவர் எதிர்க்கட்சிகளே காணாமல் போய்விட்டது என்ற எண்ணமும் அதிகரித்து விட்டது.

அவர் நம் பெற்று வந்த பின்னால் இன்றைய நிலையை ஆலோசிக்க வேண்டும்.அவரை அப்படி ஆலோசிக்க விடாமல் கனவுலகிலேயே வைத்திருப்பார்கள்தான்.

அப்படி இருந்தாலும் தன்னை புத்திசாலி என்று தானே பாராட்டிக்கொள்ளும்ஜெயலலிதா அப்படி உண்மையில் இருந்தால் இதை சிந்தித்தாக வேண்டும்.

சிந்தித்தால் தான் தனது கதை "தாசில்தார் வீட்டு நாய் இறந்தால் வரும் கூட்டம் ,அந்த தாசில்தார் இறந்தால் வராது "அது எதற்கு என்ற உண்மை புரியும்.

எல்லோரும் அண்ணா,எம்ஜிஆர்,  ஆகிவிட முடியாது.
=======================================================================================
ன்று,
அக்டோபர் -04.
  • உ லக வன விலங்குகள் தினம்
  • மெக்சிகோ குடியரசானது (1824)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த தினம்(1884)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பிறந்த தினம்(1904)
  • முதலாவது செயற்கை கோள் ஸ்புட்னிக் 1 பூமியை சுற்றி வர விண்ணுக்கு அனுப்பப்பட்டது(1957)

=========================================================================================
இந்த வருடத்துக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு, ஜப்பான் நாட்டை சேர்ந்த யோஷினோரி ஓஷுமிக்கு வழங்கப்பட உள்ளதாக நோபல் கமிட்டி அறிவித்தது. 

ஆட்டோபேஜி(Autophagy) எனப்படும் செல் தொடர்பான நிகழ்வின் செயல்பாடுகளை துல்லியமாக கண்டறிந்ததற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஆட்டோபேஜி என்றால் தன்னைத்தானே உண்ணுதல் என்று பெயர். யோஷினோரி ஓஷூமி ஜப்பான் நாட்டில் இருந்து நோபல் பரிசைப் பெறும் 23-வது நபர். ஜப்பான் நாட்டில் இருந்து, மருத்துவத்துறைக்காக பெறும் 6-வது நபர் ஆவார். பயோமெடிக்கல் துறையில் தீவிர ஆராய்ச்சியில் இருக்கும் பிரிவுகளில் ஒன்று, இந்த ஆட்டோபேஜி. அதில் மிக விரிவான ஆராய்ச்சியை நடத்தியிருக்கிறார் ஓஷூமி. 

ஓஷூமி 1945ம் ஆண்டு ஜப்பானில் பிறந்தவர். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் 1974-ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றவர். டோக்கியோ தொழில்நுட்ப கல்லூரியில் 2009-ம் ஆண்டு முதல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 

ஆட்டோபேஜி என்பது நமது உடல் செல்கள் தன்னைத்தானே உண்பது. இது ஆரோக்கியமற்ற விஷயமாக தெரிந்தாலும், இதுதான் நமது உடலின் மிக முக்கியமான தற்காப்பு நடவடிக்கை. பழைய செல்களை அழிப்பதற்கும், புதிய செல்களை உருவாகவும் இதுதான் உதவுகிறது. இந்த ஆட்டோபேஜி முறையில் நடக்கும் குளறுபடிகள்தான் பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக அமைகின்றன. இப்படி ஆட்டோபேஜி முறையினை தடுக்கும் ஜீன்களை ஓஷூமி கண்டறிந்திருக்கிறார். இவை பெரும்பாலான நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு விடையாக அமைந்திருக்கின்றன. ஆட்டோபேஜியானது பார்க்கின்சன், டைப் 2 சர்க்கரை வியாதி,பரம்பரை வியாதிகள் உட்பட பல வியாதிகளுடன் தொடர்புடையது. இந்த ஆட்டோபேஜியை குறிவைத்து மருந்துகள் தயாரிக்க, தற்போது பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. U 

நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நேரத்தில் தனது ஆய்வகத்தில் ஆராய்ச்சியில் இருந்திருக்கிறார் ஓஷூமி. "எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. நான் எனது லேப்பில் இருந்தேன்" என்கிறார் ஓஷூமி.