இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வெள்ளி, 21 அக்டோபர், 2016

டயாபடிக் நியூரோபதி னா என்ன?


ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது அது மிக நுண்ணிய ரத்தக் குழாய் சுவர்களை பாதிப்படையச் செய்கிறது. இதனால் நீரிழிவு நோயாளிகள் அனைவருக்கும் ,நரம்புகளுக்குப் போதுமான அளவு பிராண வாயு மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை.  

நாள்பட்ட நீரிழிவு தொடரும் போது நரம்பு இழைகள் மற்றும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுவதன் பெயர்தான்  டயாபடிக் நியூரோபதி. 
சர்க்கரை நோயால் சிறுநீரகம் பாதிக்கப்படுவது  ‘ டயாபடிக் ரெட்டினோபதி ’ எனப்படுகிறது.

டயாபடிக் நியூரோபதியில் பெரிபெரல் நியூரோபதி, ஆடானமிக் நியூரோபதி, பராக்ஸிமல் நியூரோபதி, போகல் நியூரோபதி என, நான்கு வகைகள் உள்ளன.

நீரழிவு நோயாளர்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதன் மூலம் இப்பாதிப்புகளிலிருந்து தப்பலாம்.


சுரன்20161021
 நமது சிறுநீரகங்கள்180 மி.கிராம் வரை சர்க்கரையை சேமிக்கும் திறன் கொண்டவை. இந்த அளவைத் தாண்டும் பொழுது, மைக்ரோ அல்புமின் எனப்படும் புரதம் வெளியேறத் துவங்கும். 
300 மி.கிராமிற்கு மேல் புரதம் வெளியேறினால் சிறுநீரகங்களை பாதிக்கும்.

புகை பழக்கம் உள்ளவர்களுக்கு சிகரெட்டில் உள்ள நிகோடின் ரத்தக் குழாய்களின் உட்புற சுவரில் படிந்து, ரத்தக்குழாய் சுவர்களை சுருங்கச் செய்கிறது. 

இதனால், கால் பாதங்களுக்குச் செல்லக் கூடிய ரத்தத்தின் அளவு குறைந்து, காலில் ஏற்படும் காயங்கள், புண்கள் சரியாவதில் சிக்கல் ஏற்படுகிறது.

கால் மரத்துப் போகும், கால் பாதங்களில் ஊசி குத்தும் உணர்வு, பாதம் மென்மையான பொருள் மீது நடப்பது போல் இருக்கும். காலில் ஏதாவது பொருட்கள் குத்தினால் கூட உணர்வு இருக்காது.
மது, புகைப் பழக்கத்தை கைவிடுவது, உடல் எடையை கட்டுக்குள் வைப்பது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதுதன் மூலம் இதை கட்டுப்படுத்தலாம் . 
அத்துடன்  தினமும் உடற்பயிற்சி செய்வதின் மூலமும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு வகைகளை கடை பிடிப்பதின் மூலமும்  டயாபடிக் நியூரோபதி வராமல் தடுக்கலாம் . 
சுரன்20161021
டயாபடிக் நியூரோபதி வந்துவிட்டால் அலோபதி  மருத்துவ முறையில் வேறு தீர்வு இல்லை. 

டயாபடிக் நியூரோபதி வராமல் தடுக்க ஒரே வழி  மேற்சொன்னவாறு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதே. தவறாமல் மருத்துவரின் அறிவுரையின் படியே மருந்துகள் எடுக்க வேண்டும்.

டயாபடிக் ரெட்டினோபதி

குடும்பத்தில் யாருக்கேனும், சர்க்கரை நோய் இருந்து, அது பரம்பரையாகக்  கடத்தப்பட்டிருந்தால், ‘ ரெட்டினோபதி ‘ பாதிப்பு ஏற்படலாம்.

எந்தவொரு பிம்பத்தையும் பார்ப்பதற்கு விழித்திரை அவசியம். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, விழித்திரைக்கு செல்லும் நுண்ணிய ரத்தக் குழாய்கள் பதிக்கப்படும். ரத்தக் குழாய்களில் கசிவு ஏறப்டும். புதிது புதிதாக ரத்தக் குழாய்கள் வளர ஆரம்பிக்கும். அதனால் பார்வை மங்கலாகத் தெரியும். ஒரு கட்டத்தில் ரெட்டினா முழுவதையும் மறைக்கும் அளவுக்கு ரத்தக் கசிவு ஏற்படும். இதனால் பார்வையே பறிபோய்விடும்.
பார்வையில் ஏதேனும் சிறு குறைபாடு இருப்பதை உணர்ந்தாலும், கண் அழுத்த அளவை பரிசோதிக்க வேண்டும். கண்ணில் சொட்டு மருந்தை விட்டு,’ இன்டைரக்ட் ஆப்தல்மோஸ்கோப்பி ‘ என்ற பரிசோதனை மூலம் ரத்தக் குழாயில் விரிசல், ரத்தக் கசிவு இருக்கிறதா என பரிசோதித்து, சிகிச்சை அளிக்கப்படும்.
டயாபடிக் ரெட்டினோபதியில் 10 விதமான நிலைகள் உள்ளன. முதல் 5 நிலைக்குள் இருக்கும் பட்சத்தில்,எந்தவிதமான சிகிச்சையும் தேவையில்லை.சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் ‘டயாபடிக் ரெட்டினோபதி’யின் தீவிரத்தை தடுக்க முடியும்.
ஆறு முதல் பத்து நிலைகளில் இருந்தால், ரத்தக் குழாய்கள் விரிசல் அடைந்துள்ளதா, ரத்தம் எவ்வளவு கசிகிறது, ரத்தக் குழாய்கள் வளர்ந்துள்ளனவா என்பதைக் கண்டறிந்து அதன் அடிப்படையில், லேசர் முறையில் கண்ணுக்குள், வெள்ளைப் பகுதியில் 0.5- 0.7 மி.மீ. அளவுக்கு மிகச் சிறிய துளையிட்டு நுண்ணிய அறுவை சிகிச்சை செய்யவேண்டும்.
சுரன்20161021
முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலமும் , ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் மூலமும் மீதமிருக்கும் பார்வைத் திறனைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக சர்க்கரை நோய் இருப்பின் , மருத்துவர்கள் பரிந்துரையோடு, கண் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். இந்தப் பிரச்சினையை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம். பார்வை இழப்பை தடுக்கலாம்.

எந்த பொருளாக இருந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து. எனவே புரதச் சத்து, மாவுச் சத்து, இரும்புச் சத்து, வைட்டமின் போன்ற சத்துக்கள் அடங்கிய உணவு வகைகளை, சரிவிகிதத்தில் எடுத்துக்கொண்டாலே போதுமானது.
சிறிது நேரமாவது சிறிய  அளவிலாவது உடற்பயிற்சிகள் தொடர்ந்து செய்து வர வேண்டும்.உணவு முறையில் கட்டுப்பாடுகள் வேண்டும் .இதை மீண்டும் சொல்வதன் மூலம் இவற்றின் அவசியம் உங்களுக்கு நன்கு புரியும்.டயாபடிக் நியூரோபதி அளவுக்கு செல்லாமல் வாழ வாழ்த்துகள்.
======================================================================================
ன்று,
அக்டோபர்-21.
முத்துசுவாமி தீட்சிதர் 


  • ஜோசப் ஆஸ்டின், போர்ட்லண்ட் சிமெண்டிற்கான காப்புரிமம் பெற்றார்(1824)

  • நோபல் பரிசை ஏற்படுத்திய ஆல்பிரட் நோபல் பிறந்த தினம்(1833)

  • கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் இறந்த தினம்(1835)

  • தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பிறந்த தினம்(1925)

=======================================================================================
தைராய்டு பிரச்னைக்கு காரணம் அயோடின் சத்து குறைபாடுதான் . சைவ உணவு சாப்பிடுபவர்களில், 63 சதவீத பெண்களுக்கும்; 36 சதவீத ஆண்களுக்கும் அயோடின் குறைபாடு இருப்பதாக, 'பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் மெடிசின்' என்ற சர்வதேச மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வு தெரிவிக்கிறது. 

அயோடின் சத்து நிறைந்த மீன், கடல் உணவுகள், முட்டை, இறைச்சி, பால் தவிர, அயோடின் கலந்த உப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 
உலர் கொட்டைகள், முழு தானியம், வெங்காயம், பூண்டு, காளான் போன்றவற்றை உணவில் சேர்ப்பது அவசியம்.

 சோயா, பிரிகோலி, முட்டைகோஸ், முளைக்கட்டிய பயிறுகள், காலிபிளவர் போன்றவற்றை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.காரணம் அதிலிருக்கும் காய்ட்ரோஜன் (goitrogen) என்ற வேதிப் பொருள் தைராய்டு பிரசனைகளை உண்டாக்கும் தன்மை கொண்டது.
========================================================================================