இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

சனி, 22 அக்டோபர், 2016

பட்டினியின் பிடியில் ....,,

பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் பாகிஸ்தானோடு போர்த்தொடுக்கஇந்தியா தயாராக இருப்பதாக சவால்விட்டார்.
போர்ப் பதற்றத்திற்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டனர். 

மறுபுறம் வறுமையின் சுழலிலிருந்து மீள முடியாத நிலையில் இந்திய மக்கள் இருப்பதை பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.இந்நிலையில், உலக பட்டினி குறியீடு - 2016 ஆய்வினை சர்வதேச உணவுக் கொள்கைஆய்வு நிறுவனம் (IFPRI) வெளியிட்டுள்ளது. 

இந்த அறிக்கை பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை வெளிப்படுத்துகிறது. 
குறிப்பாக, பாகிஸ்தான் நிலையை விட மிகவும் கீழான நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளதும் தெரியவருகிறது.
5 வயதிற்கு உட்பட்ட இந்திய குழந்தைகளின் உயரத்திற்கும், எடைக்கும் சம்பந்தமேஇல்லாத அளவிற்கு 15 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியுள்ளதாகவும் அறிக்கை கூறுகின்றது. 

பாகிஸ்தானோடு ஒப்பிடும்போது 10 சதவீத குழந்தைகளே வளர்ச்சி குன்றியுள்ள குழந்தைகளாக உள்ளனர். வெளிவந்துள்ள ஆய்வு முடிவுகள் இந்தியாவின் மிக மோசமான நிலையை வெளிப்படுத்தியுள்ளன. 
பெனின், தோகோ, நைஜீரியா, உகாண்டா மற்றும் காம்பியா ஆகிய சிறிய நாடுகளை விடவும் கீழானநிலையில் இந்தியா இருக்கிறது என்பதும், பட்டினிக் குறியீடு 2016 அறிக்கை வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் மொத்தமுள்ள 118 நாடுகளில் இந்தியா 97வது இடத்தைப் பிடித்துள்ளது என்பதும் மிகுந்த கவலைக்குரிய அம்சம்கள் ஆகும்.

உலக பட்டினிக் குறியீடு என்பதை, ஒருநாளைக்கு 1800 கலோரிக்கும் குறைவாக உணவு உட்கொள்ளும் குழந்தைகளின் அடிப்படையிலேயே சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனம் வரையறுத்துள்ளது.
2011 முதல் 2016 வரையில் பல வகையான கூறுகளையும் ஆய்வு செய்தே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.மூன்றில் இரண்டு குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் சற்று குறைந்திருக்கிறது. உலக பட்டினி குறியீட்டில் குறிப்பிட்டுள்ள குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதி குழந்தைகள், உயரம் மற்றும் எடை குறைந்து ஊட்டச்சத்து குறைவால் கொடும் நோய்களுக்கு ஆட்பட்டுள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.7 கோடியே 95 லட்சம் மக்கள் உலக அளவில் ஒவ்வொரு நாளும் பட்டினி கிடக்கின்றனர். 

இது உலக மக்கள் தொகையில் 7 பேருக்குஒருவர் உணவு கிடைக்காமல் பட்டினி கிடக்கின்றனர் என்று பொருள்படும். 50 நாடுகளில், கடும் வறுமையால் பட்டினி கிடக்கிறார்கள். 
இது பயங்கரமான பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.உலக அளவில் உலக பட்டினி குறியீடுகடந்த காலத்தைவிட 30 சதவீதம் குறைந்துள்ளது. 22 நாடுகளில் 50 சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளது, 5 வயதிற்குட்பட்ட மூன்றில் ஒரு இந்திய குழந்தை அதாவது, 40 சதவீதம் குழந்தைகள் வளர்ச்சி குன்றியுள்ளனர். 

உயரம் மற்றும் எடைகுறைந்து ஊட்டச்சத்தில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.உலக பட்டினி குறியீட்டின்படி மத்திய ஆப்பிரிக்க குடியரசு மோசமான நிலையில் உள்ளது. 
அதற்கு இணையாக ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் உள்ளன.

உலக அளவில் 1991-92 ஆம் ஆண்டு ஆய்வின்படி வளர்ச்சி குன்றிய குழந்தைகள் 60 சதவீதமாக இருந்தனர். கிட்டத்தட்ட மூன்றில்இரண்டு பங்கு குழந்தைகள் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டு இருந்தனர். 
2006 - 10 ஆம் ஆண்டு ஆய்வின்படி 48 சதவீதமாக குறைந்துள்ளது. தற்போது 38 சதவீதமாக உள்ளது.இந்திய குழந்தைகள் 5 வயது முடிவதற்குள் இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரை, இராக் நாட்டை ஒப்பிடும்போது உடல் மெலிந்த ஒல்லியான குழந்தைகளாக இறக்கின்றனர். 
பெரும்பாலும் ஊட்டச்சத்தின்மையாலும், உடல் நல ஆரோக்கியம் இல்லாததாலும், தூய்மை இல்லாததாலும், கர்ப்பிணி தாய்மார்கள் ஆரோக்கியமற்று இருப்பதாலும் இந்த குழந்தை மரணங்கள் நிகழ்கின்றன.

2015 ஆம் ஆண்டு கணக்கின்படி 5 சதவீதகுழந்தை மரணங்கள் இந்தியாவில் நிகழ்கின்றன.பாகிஸ்தானில் குழந்தை இறப்பு விகிதம் 8 சதவீதமாக உள்ளது.
2014-16 ஆம் ஆண்டின்படி இந்திய மக்கள்தொகையில் 15 சதவீதம் பேர் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சீனாவில் மக்கள் தொகையில் 9 சதவீதம் பேரும், பிரேசில் மக்கள் தொகையில் 1.6 சதவீதம் பேரும் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
இந்தியாவில் 1991 - 92 இல் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் 22 சதவீதம் இருந்தது. டொமினிகன் குடியரசில் 32 சதவீதமாக இருந்தது. 

தற்போது, 12 சதவீதமாக குறைந்திருக்கிறது.கடந்த 2000 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது இந்தியா 25 சதவீதம் அளவிற்கு முன்னேறியுள்ளது. 
இது மிக குறைந்த வளர்ச்சியே.எத்தியோப்பியா, அங்கோலா, கேமரூன் மற்றும் கென்யா போன்ற நாடுகள் கூட 40 சதவீதம் அளவிற்கு முன்னேறியுள்ளன.

வங்கதேசம், ஜிம்பாப்வே மற்றும் காங்கோ குடியரசு கூட 30 சதவீதம் அளவிற்குமுன்னேறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
                                                                                                                                                                                   தொகுப்பு : ஜோ.ராஜ்மோகன்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS)(கழுத்து,முழங்கை,முன்கை மணிக்கட்டு,கீழ்முதுகு வலி,முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி),சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது.

இதை வாத நோய்கள் என்பார்கள். பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார்.
நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன். அதை விளக்கிக் கூறவும் கேட்டேன்.அவரால் விளக்க முடியவில்லை.
ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.
ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3 அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXIGEN,02) அளவு குறைந்துவிடும்.
இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார். பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும்.
வேகத்தாலும்( சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும், தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.
அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது, உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க, சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது.
அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது. தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது.
இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது. எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்ற அழைக்கப்படுகிறது.
சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.
நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.
மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது. இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.
இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது.
மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.
இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது. மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது.
இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது.
இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள்.
========================================================================================
ன்று,
அக்டோபர்-22.
  • இந்திய வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1828)
  • அர்ஜெண்டினாவிற்கு முதல் தொலைதொடர்பு ஏற்படுத்தப்பட்டது(1875)
  • மாலி, பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது(1960)
  • பல்கட்சிக் குழு கனடாவின் கொடிக்கான வடிவமைப்பை முடிவு செய்தது(1964)
  • இந்தியா தனது முதல் ஆளில்லா செயற்கைகோளான சந்திராயன் 1-ஐ விண்ணில் செலுத்தியது(2008)

=========================================================================================
அனைவருக்கும் தீப “வலி” வாழ்த்துக்கள்.?

2015 ஆண்டு கருத்துப்படம்.இதை இந்தியாவில் எப்போதும் பயன் படுத்தலாம்.
==============================================================================================